Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நிறம் மாறும் உறவுகள் (Niram maarum uravugal)

நிறம் மாறும் உறவுகள்

(Niram maarum uravugal)

முன்னொரு காலத்தில் குழந்தைகள் இறைவன் தந்த வரமாகவும் , மிக பெரிய சொத்தாகவும் கருதப்பட்டிருந்தார்கள். கிட்டத்தட்ட எல்லா குட்ம்பங்களிலும் ஒரு கிரிக்கெட் டீமே இருந்தன. சங்கரன் அரசாங்க வெலையில்த் தான் இருந்தான். அவர் மனைவி கோகிலா வீட்டை நிர்வாகம் பண்ணி வந்தாள். அவங்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகளும்' மூன்று பெண் பிள்ளைகளும் இருந்தார்கள். அந்த காலத்தை பொறுத்தவரையிலும் அது ஒரு சின்னஞ்சிரு குடும்பமாகத்தான் கருதப்பட்டிருந்தது. பெண்கள் எல்லோருமே சுறுசுறுப்பாக இருந்தார்கள்.சங்கரனுக்கு அயிநூறு ரூபா தான் மாச சம்ப்பளம் இருந்தது. அன்று காய் கனிகள் மிகவும் மெலிவான விலையில் ஏராளமாக கிடைக்கும் காலம்,சுபீக்ஷ காலம். ஒன்றுக்கும் பஞ்சம் இல்லாத காலம். ஊரெங்கும் பூ வாசம் போன்ற மகிழ்ச்சியின் அலைகள் ஓயாமல் அலை பாய்ந்தது. ஊரில்

எல்லோரும் ஒருவருக்கு ஒருவராக சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். இன்று கணினி அலைபேசி இருந்தும் மகிழ்ச்சி அரிதாக தென்பெடுகிறது.

என்றாலும் சங்கரன் குடும்பத்தை மகிழ்ச்சியாக நடத்தி வந்தார்.

ஆறாவது பிரசவத்தில் கோகிலா காலமாகிவிட்டாள்.

சங்கரனின் பசங்க, பிள்ளை ஆறு பிறந்தாச்சு இந்த ஊரு

பெருத்தாச்சு, அம்மா இருந்தால்த்தான் சும்மா இன்னும் பிறக்காதோ என்று அவரை கேலி செய்வார்கள். பிள்ளைகள் ஆறு என்றாலும் ஆறில் ஐந்து பேரும் நன்றாங்க படித்து முன்னுக்கு வந்தார்கள். சமூகத்துக்கும் சரி வீட்டிற்க்கும் சரி நிஜமாகவே அவர்கள் ஒரு பெரிய சொத்தாகத்தான் இருந்தார்கள்.கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். இரவுணவை.

எல்லோரும் சேர்ந்துதான் சாப்பிடுவார்கள். ஒருவருக்கொருவர் அவ்ளவ்

அன்யோன்யம். அந்த மகிழ்ச்சியின் ஈவு எல்லையற்றது. இஞ்சி மிட்டாய், பஞ்சு மிட்டாய் பாலைச், நொங்கு, இளநீர் ஆகியவையை எல்லோருமா சேர்ந்து சாப்பிடுவதிலும், பாண்டி, கண்ணாமுச்சி விளையாடுவதிலும்

ஒரு தனிப்பட இன்பம் இருந்தது. அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி என்பதைவிட அவர்களுக்கிடையில் ஒரு இனம் புரியாத நட்ப்பு என்றும் இருக்கத்தான் செய்தது. ஒருவருக்கொருவர் இருந்த அன்பு ஆதரவு பாசம் நேசம் மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. சீரான குடும்பம்., தைவ நிலை தந்த வசந்தம். என்றும் அப்படி தான் இருப்பார்கள் என்று சரவணன்

நம்பினான். அவ்ளவ் பணம் இல்லை என்றாலும் மகிழ்ச்சிக்கு எந்த குறையும்

இருக்கவில்லை. மகிழ்ச்சியின் அலை தாண்டவமாடியது. அவர்கள் தினசரி கோயிலுக்கு ஒன்றாகத் தான்.சென்று வருவார்கள். அவன் மனம் பூரித்து போனது. போட்டி போட்டுகொண்டு படிப்பார்கள்.அந்த இனிப்பான வாழ்க்கையை இன்று ஆசைப் போட்டு மட்டும் தானே பார்க்க முடியும். வாழ்க்கையில் ஒன்றும் நிரந்தரம் இல்லையே. அவர்கள் பட்ட படிப்பை முடித்து ஒவ்வொருத்தராக வேலைக்கி ஆயத்தமானார்கள். இறக்கைகள் முளைக்கும் வரை தானே குருவிகளும் கூட்டுக்குள் இருக்கின்றது.

பெண்கள் மூவரும் அரசாங்க வேலையில்த் தான் இருந்தார்கள். காலத்துக்கு

ஏற்ப கம்பீரம், நாகரீகம் அறிந்த பெண்கள். பெரியவள் மோகனா நன்றாக பாடி

இசைக்கு ஒரு குயில் என்று பேரெடுத்தாள்.

முதல் பய்யன் மோகன் ஒரு தனியார் நிறுவனத்தில்த் தான் பணி புரிந்து வந்தான். பெரிய அண்ணி மரகத்துக்கோ பிடிவாதம் ஜாஸ்தி. எல்லா விஷயங்களிலும் தான் பிடித்த முயலுக்குத் தான் மூன்று கால் என்றிருப்பாள். அவளுக்கு அடாவடித்தனமும், ஆணவமும் மிகவும் உச்சாணி கொம்பில் இருந்தது. பட்டு வண்ண ரோஜாவாக இருந்தாலும் முள் இருக்கத்தானே செய்கிறது. தன் கணவரின் துன்பத் துயரங்களுக்கு கை கொடுக்க மாட்டாள். பக்கபலமாக இருக்க மாட்டாள். அடங்கா பிடாரி. தான் சொல்வதையே வேதவாக்காக நினைப்பவள். யாரிடமும் அக்கறை இல்லாதவள். பத்திரகாளி, பிரம்மா ராக்ஷஸி. பிரச்சனைகள் வந்தால் பொறந்த வீட்டுக்கு சென்றுவிடுவாள்.அவள் ஒரே வாரிசு என்பதால் மிக செல்லமாக வளர்ந்து வந்தவள். அதனாலேயே அண்ணனும் பொறுத்துக்கிட்டு போனார். அவருக்கோ தன் அலுவலகத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனைகள். இருக்கிறதும் பற்றாது என்று அண்ணியின் தினசரி அட்டகாசம். தாளாமல் தடுமாறினான். பெண் துணிந்துவிட்டால் படைத்த பிரம்மனால்க்கூட கட்டுப்படுத்தமுடியாது என்பார்கள்.மோகனுக்கு வீட்டிலும் சரி அலுவலகலத்திலும் சரி அழுத்தம், மிரிதங்கத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்ரபோல் மிகவும் ஏராளமாக இருந்தன. வீட்டையும் அலுவலகத்தையும் சமாளிப்பதுற்குள் அவனுக்கு போதும் போதும் என்றாகி விட்டது. அவனுக்கு

வேலை இனிமேலும் தொடருமா என்ற சந்தேகம் எழுந்தது. அவனுக்கு வேலையை சரிவர கவுனிக்க சிரமமாக இருந்தது . அவன் சோர்வாக இருந்தான். அவனுக்கு வாழ்க்கையின் எதிர்காலமே மழைமீர் மேகம் போன்ற

இருளாக தெரிந்தது. அவன் தன் எதிர்காலம் பாழாகி விடுமோ என்று வியந்தான். அவனுக்கு வாழ்க்கையே ஒரு எதிர்நீச்சலாகத் தான்

தெரிந்தது. கடவுளின் சோதனைக்கு அளவே இல்லையா என்று எண்ணினான்.

அவனுக்கு வாழ்க்கையே ஒரு சோதனை ஆகிவிட்டது போன்ற தோன்றியது.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று நினைத்து

தனக்குத் தானே ஆறுதல் அளித்து கொண்டான். அவன் வேலையில் தொடர்வது சந்தேக நிலைக்கு வர, மரகதம் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் தன் வீட்டுக்கு சென்றுவிட்டாள். மோகன் அதுவும் ஊர்வசியின் சாபம் உபகாரம் என்ற போல் நல்லதுக்கென்றே நினைத்தான். அவள் எல்லா விஷயங்களிலும் முட்டுக்கட்டையாகத் தான் இருந்தாள். அவள் கொஞ்சம் நாள் தன் வீட்டுக்கு மூட்டையை கெட்டி சென்றது அவனுக்கு தற்காலிகமாக நிம்மதியை தந்தது. அவனுக்கும் நிதானமாக யோசிக்க ஒரு வாய்ப்பு கிடைத்து விட்டது. கொஞ்சம் நாள் அப்படியே போகட்டும் என்று நினைத்தான்.

கொஞ்சம் நாள் உரலாக ஒரு பக்கம் மட்டும் ஒதையை வாங்கிக்கொண்டான். எல்லா ஆட்டத்துக்கும் ஓர் முடிவு இருக்கும். ஒரு நாள் இல்லை என்றால் ஒரு நாள் கண்டிப்பா அவள் திருந்தி திரும்பி வருவாள் என்று நம்பினான். யாரையும் மதிக்கும் குணம் அவளுக்கு என்றும் இருந்ததில்லை. கொஞ்சம் விட்டு பிடித்தால் எல்லாம் சரியாகிடும் என்று நம்பினான்.

அவன் எதிர்பார்த்தபடியே ஒரு நாள் அவனை வேலையில் இருந்து நீக்கம் செய்தார்கள். கம்பனியின் செலவை குறைக்கும் முற்சியில் புறக்கணிக்கப்பட்டான். இனியும் ஏதையும் பேசி வேலையை மீட்க முடியும் என்று அவனுக்கு தோணவில்லை. அவனுக்கு கண்ணை கெட்டி காட்டில் விட்டது போல் தோன்றியது. நேரம், காலம் சரியில்லை என்றால் அனுபவித்துத் தானே ஆகணும்.

நடந்து முடிந்ததையெல்லாம் கெட்டக் கனவாக நினைத்து பொருட்படுத்தாமல் மேற்கொண்டு என்ன செய்ய முடியம் என்பதை யோசித்தான் .மேற்கொண்டு ஏதாவது வியாபாரம் சைய்யலாம் என்று முடிவெடுத்தான். அதை தவிர அவனுக்கு வேறு வழியொன்றும் இருக்கவில்லை. அவன் வாழ்க்கைப்போக்கின் இறுதி பாலத்தில் இருந்தான்.வயதானதினால் வேலை வாய்ப்புகளும் அவனுக்கு இருக்கவில்லை.

வாழ்க்கை என்றால் துன்பத்துயரஙகள் இருக்கத்தானே செய்கிறது. அவன் குடும்பத்தின் படகு அளவில்லாத வெள்ளம் கண்டால் ஆடும் ஓடம் போல் ஆடியது. புதிய திட்டத்தில் தடம் பெற, நாய் படாத பாடு பட்டான். எல்லாத்துக்கும் கொடுப்பினை வேண்டுமே. அவன் பிசினஸ், லாபத்தை கடை பிடிக்கும் வரை கொஞசம் பரபரப்பாகத் தான் இருந்தான். மனதை திடப்படுத்திக்க முயன்றான்.தன் வேலையில் கவுனம் செலுத்தினான்.

இரண்டாவது பய்யன் பிரசாதுக்கு ஒரு அரசாங்க நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டது. அப்ப எல்லாம் ஒரு பட்டதாரி என்றாலே பெரிய விஷயம். பிரசாதுக்கு மூன்று வீடுகள் சொந்தமாக இருந்தன. மூன்று வீடுகள் இருந்தாலும் ஒன்றில்த் தானே குடியிருக்க முடியும். மற்ற இரண்டு வீடுகளையும் வாடகைக்கு விடலாம் என்று நினைத்தான். ஆனால்

குடியிருக்க சரியான நம்பிக்கை வைக்கும் படியான நபர்கள் கிடைக்கவில்லை. அவனுக்கு வீடுகளை பூட்டி போடுவதை தவிர

வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. அவனுக்கு தைவம் வரம் தந்தாலும், அந்த வரத்தை பெற பூசாரி தடையாக நிற்பது போன்ற தோன்றியது. வீடுகளை விற்கலாம் என்றால் அதற்கும் விலை கட்டுப்படியாகவில்லை. அப்படியே ஒன்றுக்கு மூன்று வீடுகள் இருந்தும் நிம்மதியை இழந்து தடுமாறினான். பணம் இருந்தால் மட்டும் அமைதி என்றும் கிடைப்பதில்லை. மெத்தையை வாங்கலாம் ஆனாலும் தூக்கத்தை வாங்க முடியாதே என்றபோல் ஆகி விட்டது அவன் நிலைமை. பணம் வரும் போது தலை கால் புரிவதில்லை.தனக்கு கீழே உள்ளவர் கோடி என்று நினைத்து யாரும் நிம்மதியை நாடுவதில்லையே.

முதல் பையன். மோகன் தங்கச்சிகள் இருந்தும் முதலிலேயே கல்யாணம் பண்ணிக்கொண்டு தனிக்குடித்தனம் போய்விட்டான். கூட்டுகுடும்பத்தில் முதலில் இருந்த கவுனம் அவனுக்கு இப்ப முற்றிலும் இல்லாமல் போய்விட்டது, எப்பொழுதாவது ஒருமுறை ஒரு முறை போன்ற அத்தி பூக்கும் போல் தன் வீட்டுக்கு மனைவியுடன் வந்து போவான். கடைசி க் கடை சரவணனோ செல்ல பிள்ளை சரவணன், திருச்செந்தூர் வாழும் சுந்தரன் என்ற போல் மிகவும் செல்லமாகத்தான் வளர்ந்து வந்தான். அவனுக்கு படிப்பிலும் அவ்ளவ் கவுனம் இருக்கவில்லை என்பதால் குட்டிசுவர் ஆகிவிட்டான்.

வீட்டில் மத்தவங்க எல்லோருக்கும் வேலை கிடைத்துவிடத்து. சரவணன் மட்டும் வேலை வெட்டி இல்லாமல் பொழுதை போக்க தள்ளாடினான்'

குப்பையும் பணவும் ஒன்று போன்றத் தான், கூடுகின்ற இடத்தில்த் தானே கூடுகிறது. உயர்ந்த இடத்தில் இருந்தால் உலகம் நம்மை மதிக்கும். நம் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் என்பார்கள். அதே போன்றத் தான் இருந்தது சரவணனின் நிலமையும். கொடுக்கல்

வாங்கல் எதுவும் இல்லை என்றாலும், இந்த உலகம் அடுத்தவர் விழயங்களில் மூக்கை நுழைக்கத்தானே செய்கிறது. படிக்கவேண்டிய

காலத்தில் படிக்காததால் இன்று இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்க

வேண்டியதா போச்சு சரவன்னனுக்கு. வேலையில்லா பாட்டதாரிகளேயே இந்த உலகம் மதிப்பதில்லை. மிதிக்காமல் இருந்தாலே பெரிய விஷயம்.அப்படி இருக்கும்போது படிக்காத அவனை யார் மதிப்பார்கள் என்று சரவணன் எண்ணினான், வருத்தப்பட்டான். இப்ப எல்லாரோடு சொல்பேச்சையும் கேட்க வேண்டியதா போச்சே. தனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சிற்கக முடியாமல் போய் விட்டதே. அன்று கூடபொறந்தவங்க படிக்க சொன்னப்போ எதுவும் காதில வாங்கிகொள்ளவேயில்லையே. இனி வாறதெல்லாம் அனுபவித்துத் தானே ஆகணம். சரவணனின் வருத்தத்துக்கு எல்லை இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் இப்ப வருந்தி பயன் ஒன்றும் இல்லையே. உறவுகாறன்களும் சரி, மத்தவங்களும் சரி எல்லோரும் தன் குற்றம்க் குறைகளை சுட்டிக்காட்டுகிறார்களே தவிர ஆதரவை தரவோ ஆறுதல் கூறவோ யாரும் இல்லையே. குப்பை வியாபாரி கூட குப்பையில வெச்ச வாழை போன்றத் தானே வாழ்கிறான். நாம நடுத்தரவர்கம் என்பதால் அந்தமாதிரியான வேலைகளை செய்வது நம்ம குடும்ப அந்தஸ்த்துக்கு ஒத்து வராதே. இப்ப எல்லாம் வேலை இல்லாத பட்டதாரியாக ஊரை சுத்தி வந்தாலே பொறுக்கி என்று தானே சொல்கிறார்கள். அப்படி இருக்கும்போது பத்தாவதுக் கூட தேறாத அவனை என்னென்னவெல்லாம் சொல்லி கேலி பண்ணுவாங்க.

இன்று சொந்த பந்தம் என்று சொல்லி சென்றாலும் யார் வீட்டிலேயும்

நாலு நாள் நிம்மதியாக தங்க முடியாதே. எல்லோருக்கும் அவங்கவங்க குடும்பம் என்று ஆகிவிட்டதே. தப்புத் தாளங்கள் தவறிய பாதங்கள்

இனி எப்படி வாழ்வதென என்று எழுதிய வேதங்கள் என்ரபோல் வாழ்க்கையே

நடுத் தெருவுக்கு வந்திடுத்தே. இந்த காலத்துல நாயா பேயா

உழைத்தாலும் நல்ல பெயர் கிடைப்பது எவ்ளவு சிரமம். பணம் இல்லை என்றால் நாய் கூட நம்மை மதிக்காதே. நாய்க்கு கிடைக்கிற

மரியாதை கூட தனக்கு இல்லாமல் போய்விட்டதே என்று சரவணன்

மிகவும் வருந்தினான். ஆனால் இப்ப வருந்தி ஒன்றுக்கும்

பயனில்லையே. எல்லோருக்கும் அவங்கவங்க குடும்பம் என்று ஆகிவிட்டதே. யாருக்கும் அடுத்தவங்களை பற்றி நினைக்க நேரமோ மனமோ இல்லாமல்

போய்விட்டதே. ஒருவருக்கொருவர் வீட்டுக்கு போகிறதும் வாறதும் அரிதாகி விட்டதே. அப்படியே பார்த்தாலும் எங்கேயோ பார்த்த நாபகம் என்றபோல் ஆகிவிட்டதே.

இப்படியெல்லாம் தனக்குத் தானே புலம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில்த் தான் கேரளாவில் இருக்கும் விவசாயத்தை கவுனிக்க அவன் தந்தை அவனிடம் உத்தரவிட்டார். வேறு வழியின்றி அவன் விவசாயத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். உழவர்களிடம் மெல்லுகெட்டியே அவனுக்கு போதும் போதும் என்றாகி விட்டது. இரண்டு நாள் வேலைக்கு ஒழுங்கா வந்தால் நாலு நாள் வரமாட்டாங்க. அப்படியே வந்தாலும் செய்ய வேண்டிய வேலையை

ஒழுங்கா செய்ய மாட்டாங்க. ஒரு சில தொழிலாளர்கள்

சொன்னதை மட்டுமே செய்வார்கள். ஒரு சிலர் சொன்னதையும் சொல்லாததையும் செய்வார்கள் இன்னும் சிலர் சொன்னதையே ஒழுங்கா செய்ய மாட்டார்கள். அப்படியாக எப்படி எப்படியெல்லாமோ

விவசாயத்தை சமாளித்து வந்தான். அந்த காலத்தில் உழவர்களுக்கு ஊதியமாக ஆறுக்கு ஒரு பங்கு விளைவுகளை மட்டுமே தர வேண்டியிருந்தது. தினசரி கூலி பணமாக தரும் சம்பிரதாயம் கிடையாது.

ஒரு நாள் திடீரென்று நிலச் சீர்திருத்தங்கள் கேரளா

அரசினால் நடை முறைக்கு கொண்டுவரப்பட்டது.

அதன்படி நிலம் உழவர்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்ற நிலைமை வந்து விட்டது. உழவர்களுக்கு மட்டும் தான் அதன் பலனை ஆள முடியும் என்பதை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. நிலமும் உழைக்கும் உழவர்களுக்கே என்று முடிவானது.அந்த சீர்திருத்தம் மூலம் நிறைய விவசாயிகள் தன் நிலங்களை இழந்து பலியாடானார்கள். சரவணனும் நடுத் தெருவிற்க்கே வந்து நின்றான்.நடப்பதெல்லாம் கனவா நினைவா என்பது கூட அவனுக்கு ஒன்றும் தலை கால் புரியவில்லை. அவனுக்கு தூக்கிவாரி போட்டது. பேச்சு எழவில்லை. திக்குமுக்காடி நின்றான். நிலைகுலைந்து போனான்.. இன்று இப்படி தன்னம்த தனியாக தத்தளிக்க வேண்டிய சூழ்நிலையை சந்திப்போம் என்று அவன் எந்த கனவிலும் நினைக்கவில்லை. ஒரு நிமிடத்தில் அவன் வளர்பிறை கனவுகள் அத்தனையும் மண்ணோடு மண்ணா கரைந்தது. தலைக்கு மேல் வர வேண்டியது தலைப்பாகோடபோகவில்லையே. கண்ணுக்கு வருவது புருவத்தில் தட்டி போகவில்லையே. நாம ஒன்னு நினைக்கிறோம் அனால் கடவுள் என்ன நினைக்கிறாரோ அது தானே நிரந்தரம் என்று நமுக்கு தெரிவதில்லையே. அன்று ஆரவாரம் போல் கலகலப்பாக இருந்த வீடு இன்று கலவரம் முடிந்து ஓய்ந்தது போன்ற வெறிச்சோடியது. வாழ்க்கையில் நிகழ்வதை எல்லாம் தைரியமாக எதிர்கொள்வோம் என்ற ஒரு முடிவுக்கு வந்தான். எல்லோரும் அவங்கவங்க வழிக்குத் தானே போகிறார்கள். யாரையும் நாம் திருத்த முடியாதே. எது எப்படியிருந்தாலும் வாழ்ந்து தானே ஆகணும்.

இனி மேலும் சொந்தகம் பந்தம் என்று அலட்டிப்பதில் எந்த

அர்த்தமும் இல்லையே. மேற்கொண்டு என்ன பண்ணுவது என்று

திணறினான். திடீரென்று ஒருயோசனை அவனுக்கு தோன்றியது. இதுவரைக்கும் மேலாளராக உழவர்களை கவுனித்து வந்தோம்.

இனி மேல் உழவர் வேலைக்கே சென்று விடுவோம் என்ற திட்டவட்டமான முடிவுக்கு வந்தான். இனி மேல் யாரையும் நம்பி வாழ முடியாது என்பது அவனுக்கு உறுதியாகிவிட்டது. வாழ்க்கையில் அவனவனுக்குன்னு ஒரு பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் நேர்கிறது. தன் நிலத்தில் தானே உழவதாக மனு போட்டு வாதாடி நிலத்தை மீட்டுக்கொண்டான். நிலத்தை மீட்டுவதற்குள் அவனுக்கு உயிர் போய் உயிர் வந்தது.

அம்மா இருந்த நாட்களில் வீடு சந்தோஷத்தில் துளிர்விட்டது. அந்த நாட்களை இன்று ஆசை போட மட்டும் தானே முடியும். அப்பாவுக்கும் வயதாகி விட்டது அவர் கிராமத்திலேயே தங்க விரும்பினார். கோயில் குளம் என்று வாழ்ந்து வந்தார். சராவண்னுக்கு அவரையும்

கவுனிக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. மழை வருமோ என்று நினைத்து

குடையை பிடிக்கும் போன்ற, அவர் பெயரில் ஒரு மெடிக்லைமை எடுத்து வைத்தான். மத்தவங்களுக்கு ஒரு நேரம் வந்து விசாரிக்கக் கூட நேரம்

இல்லாமல் போய் விட்டது. மிந்தி எல்லாம் பண்டிகைகளுக்காவது

எல்லோரும் ஒருவருக்கொருவர் தவறாமல் சந்திப்பது ஒரு

பழக்க வழக்கமாக இருந்தது. இன்று அதற்கும் நேரம் இல்லை போல.

இன்று எல்லோருக்கும் எல்லா வசதிகளும் இருந்தும்

ஒருவருக்கு ஒருவரின் உடலும் உள்ளவும் நலம் தானா என்று விசாரிக்கக் கூட நேரம் இல்லாமல் போய் விட்டது.

கால போக்கில் அவங்க குழந்தைகளுக்கும் கல்யாணமாகி விட்டது. அண்ணா தம்பி, அக்கா தங்கச்சி என்பதை விட சம்பந்திகளுக்கு அன்யோன்யம் ஜாஸ்தி ஆகிவிட்டது. இப்ப நாம அவங்க வீட்டுக்கு சென்றால், எங்கேயோ எப்பவோ தென்பாண்டி கடற்கரையின் மணல்வெளியில் பார்த்த நாபகம் கூட இல்லாததுபோல் பார்ப்பார்கள். எல்லோருமா ஒரு காலத்தில் ஒன்றாக எப்படி எப்படியெல்லாம் இருந்தோம். எல்லோரும் இருந்தும் இன்று யாரும் இல்லாததுபோல் அனாதையாக பிச்சை எடுக்க வேண்டியதா போச்சே. தன் கை தான் தனக்கு ஒசரம். இப்ப எல்லாம் எல்லோரும் உதவாக்கறைகளாகத் தானே இருக்கிறார்கள்.

யாரார்க்கு என்ன மேடையோ இங்கே, யாரார்க்கு என்ன வேடமோ என்று ஒன்றும் புரியவில்லையே. ஆடும் வரை கூட்டம் வரும், ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும். வாழ்க்கையே தைவம் தந்த வீடு வீதியிருக்கு என்ற போல் ஆகிவிட்டதே. அண்ணன் இல்லை தம்பி இல்லை ஆதரிப்பார் யாரும் இல்லை என்று தன்னந்தனிமையில் தனிமரமாக நிற்போம் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையில் எதிர்பார்ப்பதை விட எதிர்பாராதது தானே அதிகமாக நிகழ்கிறது.

இன்று ஒரு நேரம் உற்றார் உறவினர்களை சந்திப்பதே மிக பெரிய விழயம்.

யாருக்கும் யாரிடமும் பேசக்கூட நேரம் இல்லையே.

ஏதோ போக்கு வரவு இல்லை என்றாலும் சண்டை சச்சரவு இல்லாமல் இருப்பதே பெரிய விஷயம் என்று எண்ணினான்.

ஒரு நாள் திடீர் என்று பெரிய அண்ணன் அண்ணி

சொல்லாமல் கொள்ளாமல் ஏதேச்சையாக வீட்டுக்கு வந்தார்கள்.

சரவணனோ, இவங்க எதற்க்காக இப்படி திடீர்ன்னு அவசர ஆத்திரமாக வந்திருக்காங்க என்று அதிர்ந்தான். பிறகு தான் தெரியவந்தது

அவங்க எல்லோருக்கும் பொதுவான வீடு நிலம் எல்லாத்தையும்

விற்பனை பண்ணி, தன் பங்கை வாங்கி செல்லத தான் வந்திருக்காங்க என்பது. வயதாகி விட்டதால் அவங்க தந்தையும் அதற்க்கு ஒத்துக்கொண்டு விட்டார். எதுவும் பேசி பயன் இல்லை என்று சரவணனுக்கு நன்றாகவே தெரிந்ததால் அவன் அமைதியாகவேஇருந்து விட்டான். அவன் பேசினாலும் எதுவும் ஈடுபடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. சரவணன் கடைசி பையன் என்றாலும் எதையும் நிதானமாக யோசிச்சு முடிவெடுக்கும் திறமை அவனுக்கு என்றும் இருந்தது. அவன் வாழ்க்கையில் உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுத்ததில்லை. இவ்ளவ் சீக்கிரம் அவங்க வீடு விற்பனையாகும் என்பதை அவனால் கற்பனை பண்ணி பார்க்க கூட இயலவில்லை.

நீலவானத்தின் பின்னணியில் அந்த வீடும், மலை வாழைத் தோப்பும் மிக அழகாக தெரிந்தது. பறவைகளின் சிறகடிக்கும் ஓசை எப்பவும் இருந்தது. பச்சை ப்பசேர் என்று இருந்த மலை பிரதேசத்தில் அந்த வீடு ஓர் சொர்க்கமாக தோற்றம் அளித்தது.மாலையிலும் காலையிலும் மலையோரம் வீசும் ஜில் என்ற தென்றல் மனதுக்கு இதமாக இருந்தது. காலையில் பூவன் கோழி கூவல் கேட்டுத் தான் அவர்கள் எழுந்திருப்பார்கள். தூய்மையான தென்றல். பக்கத்தில் ஓடும் நீரோடையில் நீராடுவதிலும் ஓர் தனி.இன்பம் இருந்தது. அந்த ஓடையில் ஓடும் தண்ணீரின் ஓசை வெள்ளி கொலுசின் ஒலி போன்ற ஊரெங்கும் எதிரொலித்தது.. நதியோரத்தில் இருந்த தென்னை மரங்கள் இயற்கையின் அழகுக்கு அழகூட்டியது.பட்டிக்காடாக இருந்தாலும் இந்த சொகம் பட்டணத்தில் அரிதாக தென்பெடுகிறது. நிழல் கடிகாரம், கோயில் மணி ஓசை எல்லாம் நேரத்தை சுட்டி காட்டியது.

மிகவும் சிரமப்பட்டு மீட்கப்பட்ட நிலமும் சரவணனுக்கு கை மீறி போனது.

வாழ்க்கை என்றாலே போராட்டம் என்பது போல் ஆகிவிட்டது. ஏதோ அவனவன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு வாழ்க்கையின் வண்டியை ஓட்டலாம் என்று நினைத்தால்க் கூட ஏதாவுது ஒரு சிக்கல் இருக்கத்தானே

செய்கிறது.இந்த நிலை மாறுமோ அன்பு வழி சேருமோ ?

சரவணன் தன்னை காட்ப்பாத்துவான் என்று எண்ணி அவர் தன் சொத்தை எல்லாம் சரிசமமாக எல்லோருக்கும் பிரித்து தந்து தன் கடமையை முடித்துக்கொண்டார்.ஒரு வாடகை வீட்டில் குடியிருப்பதை தவிர அவனுக்கு

வேற வழி ஒன்றும் தெரியவில்லை. எல்லோரிடமும் ஏற்கனவே

ஏகப்பட்ட சொத்து இருந்தன. அவங்க எல்லோரும் சொந்தம் வீட்டிற்த் தான் இருந்தாங்க. அவரவர் வீட்டின் வரவேற்பறைகளை நன்றாக சீர் செய்திருந்தாங்க. என்றாலும் வரவேற்க யாரும் வரவில்லை.

வரவேற்கும் மனமும் அவர்களுக்கு இருக்கவில்லை.

வேறு வழியின்றி சரவணன் உழவர் வேலையை தொடர்ந்தான். சரவண்னுக்கும் வீட்டை நிர்வாகம் பண்ண ஒரு வாழ்க்கை துணைவி தேவை பட்டது. தனக்கு மனைவியா வருபவள் ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை, குத்துவிளக்காக குலமகளாக இருக்கவேண்டும் என்று விரும்பினான்.

இப்ப எல்லாம் கல்யாணம் ஆகிறதே மிகவும் சிரமம்.அப்படியே கல்யாணம் நடந்தாலும், இறுதி வரைக்கும் இராமர் சீதை போன்ற புனிதமாக ஒன்றாக இருப்பாங்களா என்று முன்கூட்டியே சொல்லிக்கொள்ள முடியவில்லை. என்றாலும் நல்லதையே நினைப்போம் என்று எண்ணினான். சரவணன் தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பான். வீணாக ஊரு வம்பை விலைக்கு வாங்கமாட்டான். தன்னால் முடிஞச வரைக்கும் எல்லோருக்கும் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் உதவி பண்ணுவான். அவன் நினைத்த படியே கூடிய சீகிரம் அவன் கல்யாணமும் பெரியோர்கள் ஆசீர்வாதத்துடன் நடந்து நிகழ்ந்தது. அவள் குடும்பத்துக்கு ஏற்ப பெண்ணாகத் தான் இருந்தாள். வீட்டு வேலைகளை நன்றாக நிர்வாகம் பண்ணி வந்தாள்.

தனக்கும் ஒரு வீடு வாசல் என்று இருந்தால் மட்டுமே இந்த் உலகம் தன்னை மதிக்கும் என்று சரவணன் நினைத்தான். அதற்காக தீவிரமாக ஓயாமல் கடுமையாக உழைத்தான். சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தான். செய்யும் தொழிலே தைவம் என்று நினைத்தான்.

திடீர்ன்னு நெஞ்சு வலி வந்து அப்பாவும் ஒருநாள் இறந்து விட்டார்.

உற்றார் உறவினர்கள் வந்து காரியத்தை முடித்துவிட்டு

கிளப்பினார்கள். வீடே வெறிச்சோடியது .

தந்தை இறந்த துக்கத்தை மீட்க வெகு நாள் ஆகிவிட்டது. அவர்களுக்கு

இருந்த பொறுமையும் பொறுப்பும் பாராட்டக்கூடியது. அவர் வாழ்ந்ததுக்கும் ஒரு அர்த்தம் இருந்தது.

கூடிய சீக்கிரம் சரவணனுக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

அவனை கோபி என்று அழைத்தாலும் தன் தந்தை பெயர் விளங்கட்டும் என்று நினைத்து, சங்கரன் என்ற பெயரையே வைத்துக்கொண்டான். அவன் உல்லாசத்துக்கும் உற்சாகத்துக்கும் எல்லையே இல்லாமல் போய்விட்டது. ஆண் பிள்ளை பிறந்தது, அவனுக்கு நெஞசில் பால் வார்த்தது போன்ற இருந்தது.வாழ்க்கையே ஒரு வரப்பிரசாதம் போன்ற முதன்முதலாய் சரவணனுக்கு தோன்றியது.

முற்றும்