Thai thanthayarin thavippu - Tamil books and stories free download online pdf in Tamil

Thai thanthayarin thavippu - Tamil

தாய் தந்தையரின் தவிப்பு

Author : தில்லி ஹரிஹரன்

e mail id : cphari_04@yahoo.co.in

பிரதாப் ஒரு அரசாங்க வேலையில் இருந்து ஓய்வு பற்றிருந்தார். அவர் மனைவி பிரமாவோ குடும்ப நிர்வாகியாகத் தான் இருந்தார்கள். அவர்களுக்கு சுனிதா, அநிதா என்று இரண்டு பெண்கள். அவர்கள் சராசரி அழகாகத் தான் தெரிந்தார்கள். ஆனாலும் ஒப்பனை பொருட்களை ஏராளமாக பயன்ப்படுத்துவார்கள்.பெரியவள் சுனிதா கொஞ்சம் பெருத்த அமைப்பில் இருந்தாள். இரண்டு பேருமே பட்டதாரிகள் தான். அவங்களுக்கு

ஆணவம் அதிகமாக இருந்தது. யாரையும் மதிக்கிற குணம் இல்லை.

யாரிடமும் ஈனெரக்கம் பச்சாத்தாபம்.கிடையாது. வேலைக்கி போகறதால் பெருந்த்தன்மையும் கூடவே இருந்தன.

பணம் நிறைய இருந்தாலும் செலவு சைய்ய மனமில்லை. எப்பவும்

தான் சொல்லறதுதான் வேதவாகியயமாக நினைப்பார்கள். சுய உறுதி கொண்டவர்கள்.கேட்க்கும் திறன் கிடையாது.

அப்படியே வேலை சைய்யும் இடத்தில் கௌரவ் எனற ஒரு பைய்யன் கூட சுனிதா பழகத் துவங்கினாள். கூடிய சீக்ரமே அந்த நட்ப்பு காதலாக மாறிவிட்டது. ஒரு நாள் அவன் அவள் வீட்டுக்கே வந்து விட்டான். அவள் தந்தை தாயிடம் அவர்கள் மகளை விரும்பு வதாக கூறினான். அவன் அன்னிய சாதியில் சேர்ந்தவன் என்பதால் அவர்கள் மறுப்பு தெரிவித்தார்கள். கடுப்பானார்கள். இன்னமும் அவர்களிடம் பேசுவதில் எந்த பயனும் இல்லை என்பது அவங்களுக்கு நன்றாகவே புரிந்து விட்டது. அவன் தன் தந்தை தாயாரிடம் விழயத்தை கூறினான். அவர்கள் அதுக்கு ஒத்துகொண்டார்கள். கல்யாண தேதியும் குறிக்க பட்டது. சுனிதாவோ, அவள் வீட்டில் தகவலை சொல்லவே இல்லை. கௌரவ் மொதல் பிள்ளை என்பதால் கல்ய்ணத்தை பெரிதாகவே நடத்த தீருமாநித்திருந்தார்கள். கல்யாணத்தன்று வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் தன் அலுவலகத்துக்கு போகிற போன்றவே சீர் செய்துகொண்டு கிளம்பினா ள் சுனிதா. அதனால் வீட்டில் எந்த சந்தேகமும் யாருக்கும் எழவேயில்லை. பிற்பகல் இரண்டு மணிக்கெல்லாம் கல்யாணம் மிகவும் ஆடம்பரமாகவே முடிந்துவிட்டது. மாப்பிள்ளை வீட்டில் உற்றார் உறவினர்கள் எல்லோரும் வந்திரூந்தார்கள். பெண் வீட்டில் இருந்து

பெண்ணை தவிர வேற யாரும் இருக்கலை. அதன் பிறகு

அவள் ஒரு போனை போட்டு தன் வீட்டுக்கு தன் கல்யாணம் முடிந்த தகவலை தெரிவித்தாள். அந்த அதிர்ச்சியில் அவங்க நிலைகுலைத்து

நின்றார்கள். இவளவ் நாளும் படிக்கவைத்து ஆளாக்கி ஒரே நொடியில்

அசிங்கப்படுத்தி விட்டா ளே. அவர்களுக்கு ஜீரணிக்கவே இயலவில்லை

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு தவம் கிடந்த பின்

அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது..

இளையவள் அனிதாவோ முப்பத்தி ஏழு வயதை தாண்டியிருந்தாள்.

பிராதாபுக்கோ வயதாகி விட்டது. உடல் நலம் சரியில்லாமல் போனதால் ஒரு நாள் திடீர்ன்னு இரந்து விட்டார். சுனிதாவோ, ஏதோ அடுத்தவங்க வந்து துக்கம் விசாரிப்பதுபோல் பார்த்துவிட்டு, சிந்தாத கண்ணீரை சிந்திவிட்டு சிலை போன்ற நின்றாள். தன் தாய்க்கி ஆறுதல் சொல்லாமலேயே தன் வீட்டுக்கு அன்றைக்கே சென்றுவிட்டாள். தன் கைய்யே தனக்கு ஒசரம் என்று புலம்பிகொண்டாள் பிரேமா.

ஒரு வருடம் முடிந்த பிறகு அனிதாவுக்கு ஒரு மாப்பிள்ளையை தேடினாள்

அவள் அம்மா. நிச்சிதார்த்தமும் நன்றாக முடிந்து விட்டது. பிறகு விசாரித்ததில்

அந்த மாப்பிள்ளை ஒரு டைவோர்சீ தான் என்று தெரிய வந்ததது.

இவ்ளவ் பெரிய விழயத்தை மறைத்து விட்டானே.

இன்னும் என்னென்ன' மறைதி ரூப்பானோ என்று சந்தேகப்பட்டு அந்த கல்யாணத்தையே நிறுத்தம் செய்து விட்டார்கள்

ஆறு வருடங்கள் அப்படியே துன்பத்துயரங்களில் நிகழ்ந்தன. அவள் அம்மாவுக்கும் வயதாகி விட்டது

இனியும் கல்யாணத்தை தள்ளிப்போட இயலாததால் அந்நிய சாதி ஆனாலும் ப றவாயில்லை என்று நினைத்து ஊருக்குள்ளேயே ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்தார்கள். அனிதாவின் கல்யாணத்தில் அவள் அக்கா சுனிதாவும்

அவள் கணவரும் கலந்துகொள்ளவில்லை.

பிரேமாவுக்கோ பெருந்த்தன்ம்மை அதிகம், தன் விழயங்களை அரண்மனை

ரகசியமாகவும் அடுத்தவங்க விழயங்களை அம்பலப்படுத்துவதிலும் கெட்டிக்காரி. அடுத்தவங்களை குறை சொல்வதிலும் அவங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதிலும் குறியாக இருந்தா ள்.

ஏதோ ஒரு இருளுடைய மாவட்டத்தில்த்தான் அனிதா குடியிரிந்தாள். அதை வெளிப்படுத்தவோ, மாப்பிளை அந்நிய சாதி யில் சேர்ந்தவன் என்று ஒத்துக்கொள்ளவோ பிரேமா மறுத்தாள். அனிதா பூரித்துப் போனா ள். வாழ்க்கையில் வெற்றி அடைந்ததாக அடுத்தவங்களுக்கு சவால் விட்டாள்.

முற்றும்

ஆணும் பெண்ணுமாக ராகவனுக்கும் சுந்தரிக்கும் சரிகா ஒரே ஒரு

வாரிச்சாகத்தான் இருந்தாள். ஒரே மகள் என்பதால் நி றைய செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். சரிகாவோ பார்க்க சுமாராகத்தான் இருந்தாள். அவள் கவுனம் படிப்பில் அவ்ளவ் இருக்கவில்லை. ஒப்பனை பண்ணவே அவளுக்கு

நேரம் பற்றலை. யாரையும் மதிக்கின்ற குணம் இல்லை. எப்படியோ

தட்டிமுட்டி பன்னெடாவது வரலும் படித்து முடித்தாள். அப்புறம்

ஏதோ ஒரு பேஷன் டிசைன் கோர்ஸில் சேர்ந்து கொண்டாள்.

அங்கேயே ஒரு பாய் பிரிண்டையும் தேடிகொண்டாள். இந்த காலத்தில் பாய் ப்ரிஎண்ட் இருப்பதெல்லாம் மிகவும் சகஜமானது என்று அவள் தாய் தந்தையும் அதை பெரிதாக ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. அவனோட அவள் வீட்டுக்கு போக்குவரத்து வாடிக்கையானது.

அவன் அந்நிய சாதியில் சேர்ந்தவனாகத் தான் இருந்தான். ஒரு

நாள் தன் கல்வி நிர்வனத்துக்கு போகிறா போன்ற வீட்டில் இருந்து

கிளம்பி அன்று சாயங்காலம் அவன் சொந்த ஊருக்கு அவன்

கூடவே விமானத்தில் சென்றுவிட்டாள் சரிகா. அவள் தாய் தனத்தை

அவளை தேட ஆரம்பித்தார்கள். தேடிகொண்டிருக்கும் போதே தொலைபேசி

அழைத்தது. இணைப்புமுனையில் சரிகாவாத் தான் இருந்தாள். தன் கல்யாணம் முடிந்துவிட்டதாகவும் , தன்னை தேட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினாள். அவர்கள் அதிர்ந்து போனார்கள். இப்படி யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டு, ஓடுகாலி என்று பெயர்' எடுத்து விட்டாளே. மொதலிலேயே சொல்லியிருந்தால் முறைப்படியாக ஒரு ரிசெப்சனையாவது

வெச்சுத் தொலைச்சிருக்கலாமே. நம்ம தன்மானம் கப்பலேறாமல்

காட்ப்பாத்தியிருக்கலாமே. இந்த காலத்தில் சாதியெல்லாம் யாரும் பார்ப்பதில்லையே, சாதிமதபேதமெல்லம் முன்னவங்க சை ய்ஞ்ச

மோசம் என்று தானே கருதுகிறார்கள். இன்று அவமானப்பட்டு சிக்குநூறாக நிற்க்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோமே. சிலம்பொலி போல் புலம்ப வெச்சிட்டாளே.ஒரே பெண் என்பதால் அவள் கேட்டதை எல்லாம் வாங்கி தந்தோமே. என்னென்ன வேலை, வ்யாபாரமெல்லாம் பண்ணி வாழ்க்கையில் முன்னேற எவ்ளவ் சிரமப்பட்டோம், துடித்தோம், தவித்தோம். எவ்ளவ் கஷ்டப்பட்டு ஆளாகினோம். எதையும் அவள் உணரவேயில்லையே.

ஏதோ பதினெட்டு வயசு நிறைய காத்திருந்தது போன்ற இப்படி பண்ணிட்டாளே.

இன்று ஒன்றும் பயனில்லாமல் போய்விட்டதே. இன்று.அசிங்கப்பட்டு,சீரழிந்து தத்தளித்து த்,தடுமாறி நிர்க்கவேண்டியதா போச்சே. இதையெல்லாம் யாரிடம் போய் சொல்வது. அப்படியே சொன்னாலும், பொறுமையா கேட்கவோ ஆறுதல் கூறவோ யாரும் இல்லையே. இது என்னடா ரோதனையா போச்சு என்று காறித்துப்பத்தானே செய்வாங்க நாலு பேர் நாலு விதமாகத் தான் கேலி சைய்வா ஙகளே. ஊர் உலகம் வாய் கூச்சாமல் பேசத்தானே சைய்யும். அவங்களை நாம சந்தித்துத் தானே ஆகணம். அவங்க கேள்விக்கெல்லாம்.

பதில் சொல்லித்தானே ஆகணம். நம்மை பற்றி அவங்க என்ன நினைப்பாங்க. அவங்க நம்மை தப்பாகத் தானே எடை.போடுவாங்க. நாலு பேர் போன்ற தலை நிமிர்ந்து இந்த உலகத்தில் நாம இனி வாழ முடியாதே. வாழ்க்கையே ஒரு சோதனையாகிவிட்டதே. இவள் நம்மை இந்த நிலைமைக்கி

ஆள்ளாக்கி விட்டா ளே. நாம குத்துக்கல்லாட்டம் இன்னும் உயிரோட இருக்கும்போது நமக்குரிய மதிப்பை அவள் தரவில்லையே. இனி நாம யாருக்காக வாழணம். எல்லோரும் சொல்லிக்கொள்ளும்படி ஆகிவிட்டதே. வீட்டில் கலகலப்பா இருந்த ஆரவாரம் இன்று கலவரமாக மாறிவிட்டதே. நாம.பெற்ற மகளே நம் சொல்வழிக்கி இல்லாமல் போய்விட்டாளே. வாடி வெதங்கி ஊராரிடம் கூனிக்குறுகி நிற் க்கவேண்டிய நிலமை நேர்ந்ததே. எல்லாமே கைவிட்டு போச்சே. இனி உயிரோடஇருந்து எந்த பயனும் இல்லையே. இந்த காலத்து பசங்க எதையும் நிதானமாக யோசித்து ஒரு முடிவையும் எடுக்கறதில்லையே.

கற்பனை என்றாலும், கல்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் என்று எப்பவும் துதி பாடுவேனே. கடவுளும் இப்படி கை விட்டுட்டாரே. இனி

யாரிடம் போய் முட்டிக்கிறது என்று தெரியவில்லையே. இப்ப

நான் என்ன பண்ண முடியும்? தைவம் நின்று கொல்லும் என்பார்கள். அது சரியாகத்தானே இருக்கிறது. கடவுளின் கணக்கீடு நமக்கு தெரிவதில்லையே. அன்று கண்ட்டிச்சு வளர்த்திருந்தால் இந்த நிலைமைக்கி ஆள் ளாகியிருக்க மாட்டோமே. இன்று என்னதான் அழுது புலம்பினாலும், ஆர்ப்பாட்டம், ரகள பண்ணினாலும் 'நடந்தது நடந்தது தானே. நடந்தது எதையும் சீர்ச் சைய்யவோ திருத்தவோ இயலாதே. அழுதழுது சுந்தரி சோர்ந்து போயிருந்தாள், ராகவன் தன் மனைவியிடம் நெருங்கினான். நடந்ததய்யே நினைத்திருப்பதில் எந்த பயனும் இலை என்று ஆறுதல் கூறினான். நமக்கு அவ்ளவ் தான் கொடுப்பினை இருக்கு. வயசுக்கு வந்தவர்களுக்கு சட்டமும்

சாதகமாகத்தான் இருக்கிறது. நமக்கு நம் குழந்தைகளை ஆளாக்க மட்டும்தான் கடமையும் உரிமையும். இருக்கிறது. வயசுக்கு வந்த பிறகு அவங்க வாழ்க்கையின் பாதையில் குறுகே நிற்ப்பது சரிப்பட்டு வார்றாது. குருவி

கூட இறக்கைகள் முளைத்த பிறகு பறக்கத்தானே செய்கிறது. அது

ஒரு சுதந்திர பறவையாக மாறி தன் வாழ்க்கையின் பாதையில் செல்கிறது.

.அதனால் நாம் உணச்சிவசப்படாமல் இனி ஆகவேண்டியதை பாப்போம்.ஒரு பெண் தாய்மையை அடையும்போது மட்டுமே ஒரு தாய்தந்தையின் தவிப்பை அவளுக்கு சரியாக புரிந்து கொள்ள முடியும். வீட்டுக்கு வீடு வாசப்படிகள் இருக்கத்தானே செய்கிறது, விஷயங்களும் ஆசைப்படி இருக்கிறது போன்ற துன்பத் துயரங்களும் வாழ்க்கையில் இருக்கத்தான் செய்கிறது. நாம் அதையெல்லாம் ஜீரணிச்சுத்தான் ஆகணம். அது தான் வாழ்க்கை. அப்பத்தான் வாழ்கையின் பாதையில் முன்னேற முடியும். அவர்களது ஆறுதலான வார்த்தைகளை கேட்டு சுந்தரியும் தன்னை சுதாரித்துகொண்டாள்.

முற்றும்

Author : தில்லி ஹரிஹரன்

e mail id : cphari_04@yahoo.co.in

பகிரப்பட்ட

NEW REALESED