Read DNA Murders - 4 by KATHIRMATHI in Tamil த்ரில்லர் | மாட்ருபர்த்தி

Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

DNA கொலைகள் - 4

DNA ☠️ கொலைகள்-4


தனது லேபிள் எதையோ வேகவேகமாக கிளியரிங் செய்து கொண்டு நடுநடுவே யாருக்கோ ஈமெயில் அனுப்பிக் கொண்டிருந்த டாக்டர் ராயர் தனது கைப்பேசி சிணுங்க, எடுத்துப் பார்த்தவர் டிஸ்பிளேயில் ஃபாதர் மோசஸ் எனத் தெரிய பேசத் துவங்கினார்.

ஹலோ ஃபாதர் எப்படி இருக்கீங்க? உங்களைப் பார்த்தும் பேசியுமே ரொம்ப நாளாச்சு எப்ப இந்த பக்கம் வரீங்க?

நான் வரது இருக்கட்டும் என்கிட்ட இருந்து உங்களுக்குப் ஃபண்டு வந்துக்கிட்டுதான இருக்கு.

ஹா... ஃபண்டு வந்துகிட்டுதா இருக்குது. ஆனா ஃபாதர் ஏன் ஒருமாதிரி பேசறீங்க?

அதைத்தான் திரும்ப சொல்றேன்  எங்கிட்டயிருந்து உங்களுக்குப் ஃபண்டு வந்துக்கிட்டுதா இருக்குதே தவிர, உங்ககிட்ட இருந்து ரிசல்ட் வரவே மாட்டேங்குதே. எப்பதா ரிசர்ச்ச முடிச்சு ரிசல்ட்ட கொடுப்பீங்க?

அதிகபட்சம் இன்னும் ஒன் இயர்க்குள்ள முடிச்சிடலாம்.

என்ன விளையாடறீங்களா டாக்டர்? நாம ஏற்கனவே லண்டன்ல பழகியிருந்தாலும், நான் இந்தியாவுல செட்டில் ஆகணும்னு வந்தப்போ எனக்கு உதவி பண்ணீங்களேனு அந்த பிரெண்ட்ஷிப் அடிப்படையில உங்களுக்கு மானிட்டரி ஹெல்ப் பண்ணா, நீங்க இவ்ளோ டிலே பண்றீங்க.

ஃபாதர் நீங்கன்னு இல்ல ஏன் நானா இருந்தாக்கூட சில ஆராய்ச்சிகள் நாம நினைக்கிற மாதிரி சுலபமா முடிஞ்சிடாது. அதுவும் நாம் பண்றது மெடிக்கல் லைன். அப்படிங்கறப்போ செவண்ட்டி பர்சன்டாச்சும் நாம நினைக்கிற மாதிரி ரிசல்ட் வந்தாத்தான் அதை கொஞாசம் கொஞ்சமா டெஸ்ட் பண்ணி பார்க்க முடியும். அதனால்தான் இந்த டிலே.

அப்புறம் எதுக்கு வித் இன் டூ இயர்ஸ்னு சொன்னீங்க. ஆனா பாருங்க இப்ப மூனு வருஷமா நீளுது. நான் திரும்பத், திரும்ப சொல்றேனு நினைச்சுக்காதீங்க. நான் அனுப்பறது என்னோட பணம் மட்டுமில்ல டிரெஸ்டுக்கு வர பணமுந்தான். அது மட்டுமில்லாம என்னோட அக்கா சர்ச்சுக்குனு அனுப்பற  பணத்த அவங்களுக்குத் தெரியாமலயே இதிலு போட்டிருக்க, ஆனா நீங்க கொஞ்சம் கூட சீரியஸ்னஸே புரியாம இழுத்தடிச்சிக்கிட்டிருக்கீங்க.

ஃபாதர் நாம பண்ற... வேணாம் ஃபாதர் நாம எல்லாத்தையும் ஃபோனுலேயே பேச வேண்டாம். இதனோட விளைவுகளை நேர்ல சொன்னாதான் உங்களுக்கும் புரியும். அதனால நீங்க எப்ப செஞ்சிக்கு வறீங்கனு சொல்லுங்க நான் உங்களை வந்து மீட் பண்றேன்.

கம்மிங் தேர்ஸ் டே வர. நாம முதல்ல தொடங்கின லூர்து ஆலயத்துல சில வேலைகள் இருக்கு. அப்படியே உங்கள பார்க்கறதுக்கும் வர.

சரிங்க ஃபாதர். அப்ப இங்க வரப்ப மட்டும் தகவல் கொடுங்க.

**********

ரகு வீட்டில் ரகுவும் பர்ஃபீனாவும் பேசிக்கொண்டிருக்க கையில் டீ கப்போடு வந்த ரகுவின் அப்பா பரந்தாமன், இந்தாம்மா டீ எடுத்துக்க நீயும் எடுத்துக்கடா என்றவர்.,

ஏம்மா... உன்கிட்ட ஒன்னு கேட்கணும் மறைக்காம உண்மையைச் சொல்லனும்.

எதுவா இருந்தாலும் கேளுங்க அங்கிள். மறைக்காம எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் சொல்றேன்.

இவன் எதுனா திரும்பவும் வெளிநாடு போக ட்ரை பண்றானா? ஏன் கேட்கறேன்னா ஒருவாரமா ஆஃபிஸ் முடிஞ்சு வந்தும் என்னென்னத்தையோ கம்ப்யூட்டர்ல நோண்டறான், யார்யார்க்கூடயோ பேசறான், அதுக்குதா. எதுக்கு இத உன்கிட்ட கேட்கறேன்னா இவ யார்கூடயும் இப்படி பழகி பார்க்கல. வெளிநாட்டுல அஞ்சு வருஷம் வேலை பார்த்தானே தவிர இதுவரைக்கும் யார்யார்க்கூட ஒர்க் பண்ணா இவனுக்கு யார்யார் எல்லாம் ப்ரெண்ட்ஸ்ங்கன்னும் ஒன்னுமே தெரியாது. ஆனா அடிக்கடி ஃபோன் வரும். குறைஞ்சது ஒருமணி நேரமாவது பேசுவா. கேட்டாலும் சொல்ல மாட்டான்.  ஒரே வார்த்தையில ப்ரெண்ட்ஸுங்கப்பானு சொல்லி முடிச்சிடுவா. அப்படிப்பட்டவன் உன்கூட மட்டும் தான் இப்படி பழகுறா. உன்ன மட்டும் தான் வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திருக்கா. இன்னொன்னு, இவன் மறுபடியும் கிளம்பிட்டானா எனக்குன்னு யார் இருக்கா சொல்லு. அதனால கேட்கிறேன் அங்கிள்கிட்ட மறைக்காம சொல்லுமா.

ரகுவின் அப்பா அப்படிச் சொன்னதும் அவரின் நிலையையும் யோசித்தவள், ரகுவும் நாமும் தேவையில்லாத வேலையோ பார்க்கறமோ. ரகுவை விட்டாலும் இவருக்கு வேறு துணை கிடையாது. இதைச் சொல்லி ரகுவை ஸ்டாப் பண்ணிடலாமா.. இல்ல கண்ணுக்கெதிரா தப்பு நடக்குற மாதிரி இருக்குனு தன் குடும்பத்துக்கு என்ன ஆனாலும் பரவாயில்லைனு துணிஞ்சு இறங்கியிருக்குற ரகுவுக்கு ஹெல்ப் பண்ணாலாமா என்று யோசித்தவள் என்ன ரகு? இதெல்லாம் என்றாள்.

அப்படில்லாம் ஒன்னுமில்ல பர்ஃபீனா. அப்பா எனக்குனு நீங்க மட்டும் தான் இருக்கீங்க. அப்படிலா போகமாட்டேன்பா. உங்கக்கூட இருக்கனும்னுட்டுதான இதைவிட அதிகமான சம்பளத்தைக்கூட விட்டுட்டு வந்தேன். அப்பவாச்சும் அம்மா இருந்தாங்க. ஆனா இப்ப நீங்க மட்டும்தான இருக்கீங்க. அதனால அப்படியெல்லாம் போயிட மாட்டேன்.

இல்லடா.. உன்னையும் பிரிஞ்சு என்னால் இருக்க முடியாதுடா, உன்கிட்ட கேட்டாலும் வருத்தப்படுவியோனுதா பர்ஃபீனாக்கிட்ட கேட்டேன். நீ ஏதும் தப்பா எடுத்துக்காத ஸாரி.மை டியர்.

டேட் நீங்க ஒரு ரிட்டையர்ட் பிரொஃபஸர். நீங்கள்லா இப்படி பேசலாமா? நீங்க கேட்டா நான் கோவிச்சுக்குவேனா. நீங்க என்னைய சட்டைய பிடிச்சுக்கூட ஏன்டா ராஸ்கல் திரும்பவும் ஃபாரின் போக ஏதாவது பிளான் பண்றியானுக்கூட கேட்கறதுக்கு ரைட்ஸ் இருக்கு. அப்படி இருக்க என்கிட்ட ஸாரி கேட்டுக்கிட்டு...

ஓகே.. ஓகே.. டோண்ட் எமோஷனல் ஸாரி வாபஸ்.

ஓகேப்பா. நாங்க கொஞ்சம் வேலை விஷயமா என்னோட ரூமுக்கு போறோம். நீங்க வேணுனா டீ.வி. பாருங்க. நாங்க பேசிட்டு ஸ்நாக்ஸ் எதுனா ரெடி பண்ணி தரேன். மீன்வைல் ஏதாவது இம்ப்பார்டெண்ட்டுனா கூப்பிடுங்க.

பர்ஃபீனா உன்னோட லேபை கொண்டு வந்திருக்கியா?

ஆ...ங் எடுத்து வந்திருக்க. என்று அவனோடு ரூமிற்கு வந்தவள்.

ரகு நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே.

மாட்டேன் சொல்லு.

இந்த விஷப்பரிட்சை நமக்கு, ஐ மீன் உங்களுக்கு தேவையா? யாரோ என்னமோ பண்ணிட்டு போறாங்க. நமக்கு பிடிக்கலைனா விலகி வந்துட வேண்டியதுதானே.

இங்க பாரு பர்ஃபீனா .என்னோட சுயநலத்துக்கு மட்டும் என்னால பார்த்துக்கிட்டு யாராச்சும் எக்கேடு கெட்டுப்போங்கன்னு விட்டுட்டு போக முடியாது. நான் இந்த நாட்டு உப்பை தின்னுருக்க அதுக்கு கொஞ்சமாவது நன்றி விசுவாசத்தோட இருக்கணும்னு நினைக்கிற. உனக்கு வேணுனா விலகிக்கோ. நான் தனியாவே பார்த்துக்கறேன்.

ஹலோ... நீங்க மட்டும்தான் இந்த நாட்டு உப்பை தின்னுருக்கீங்களா? அப்ப நான்லா என்ன அடுத்த நாட்டு உப்பையா தின்னுருக்க. நானும் இந்த நாட்டு உப்பைதான் தின்னுருக்க. அதோடு சேர்த்து சர்க்கரையும் தின்னுருக்க. என்னாலையும் அப்படியெல்லாம் விட்டுட்டு போக முடியாது.

அப்புறம் ஏன் திடீர்னு வேண்டாம்ங்கற?

அப்பாவ நினைச்சுதா.

பர்ஃபீனா...  அவர் நான் எங்க அவரை விட்டுட்டு திரும்பவும் ஃபாரின் போயிடுவேனோனு நினைச்சி பேசிருக்காரு. நீ ரெண்டையும் போட்டு கன்ஃபியூஸ் பண்ணிக்காத.

அப்ப சரி. ஆனா அப்பாவுக்கு தெரியற மாதிரி ஆராயாதீங்க ரகு. அப்பா ஃபாரின்னு நினைச்சுட்டார் பரவாயில்லை. உண்மை தெரிஞ்சா பயந்துடுவாரில்ல.

எஸ் பர்ஃபீனா. நீ சொல்றதும் சரிதா. பட் இத வெளியில வச்சும் செய்ய முடியாதே. இருந்தாலும் கவனமா பார்த்துக்கறேன். பர்ஃபீனா உன்னை எதுக்கு வீட்டுக்கு வரச் சொன்னேன் தெரியுமா? நான் இந்த வாரம் பாஸுக்கு தெரியாம நிறையவே வேலை பார்த்துட்டே. இங்க நிறைய தப்பு நடக்குது.

உள்ளுக்குள் லேசாக பயந்த பர்ஃபீனா, விஷயம் பெரிசு தான் போலிருக்கு. பாம்பு புத்துக்குள்ள கையை விட்டுட்டோம்.இனி பாம்பு கழுத்த பிடிச்சு நசுக்கலைனா நாம கடிபட்டு சாகறது நிச்சயம். ஸோ அல்லா மேல பாரத்த போட்டு இறங்க வேண்டியதுதான் என நினைத்துக்கொண்டு, சரி ரகு எனக்குக் கொஞ்சம் இந்த பயோ கோடிங்ஸைப் பத்தி விளக்கினாத்தான் என்னால முடிந்த உதவியைச் செய்ய முடியும்.

ஏன் நீயும் பயோ டெக்தான?

ரகு நான் பயோ டெக்தான். பட் டிப்ளோமா.   உங்கள மாதிரிலா டீடெய்லா தெரியாது. ஸோ நீங்க காட்டுனப்ப அன்னைக்கு ஏதோ வித்தியாசமா இருந்தத உணர்ந்த. பட் அதப்பத்தி டீடெய்லா சொல்லுங்களேன்.

சரி சொல்றேன். இங்க பாரு பர்ஃபீனா. பொதுவா பயோ வேர்ல்ட பொருத்தவரை பிளான்டேஷன் அன்ட் அனிமல்ஸ்ஸுனு ரெண்டு பிரிவா இருந்தாலும் அவைகளின் DNA அதாவது மரபணுக்கள் கிட்டத்தட்ட சேம்தான். நூறு சதவிதத்துல மொத்தமே இருபதிலேருந்து இருபத்தைந்து விழுக்காடுதான் மாறுபடுது.

அப்ப ஒரு உயிரினத்த அது தாவரமா இல்ல விலங்கானு தீர்மானிக்கிற ஹுரோமோசோன் அதாவது ஜீன்கள் மொத்தமுமே இந்த டுவன்ட்டி டூ டுவன்ட்டி ஃபவ் பர்சன்டேஜ்ல கவராயிடுதுனு சொல்றீங்க அப்படித்தான.

யெஸ் அப்படித்தான்.

வா...வ் அமேஸிங். அப்ப அந்த டுவன்ட்டி ஃபவ் பர்சென்ட்ட கரெக்ட் பண்ணா நாமளும் தாவரங்களும் ஒன்னாயிடுவோமா? அதுங்களும் நடக்குமா.

ஆ... நடக்கும், நடக்கும். கார்ட்டூன் படத்துல நடக்கும். அப்படிலா அந்த பேலன்ஸ திருத்த முடியாது. அதுலதா கடவுளோட சூட்சமமே அடங்கியுள்ளது.

சரி அப்படி எதுலா ஒத்துவரும்.

உணவு உட்கொள்வது, சுவாசிப்பது, தண்ணி எடுத்துக்கிறது. இதுலா நமக்கும் தாவரங்களுக்கும் ஒரே மாதிரிதா நடக்கும். பட் அது எந்தெந்த இடத்துலங்கறதுதா வேறுபாடு. இதுபோல பல இருக்கு.

அப்படி பார்த்தா புரோட்டின்களுக்கான கோடிங்ஸ் பாக்டீரியாவிலிருந்து ஈஸ்ட் வரைக்கும், தாவரங்கள் மற்றும் விலங்குகள் வரை ஒரே மாதிரியாக இருக்கும் சரியா.

எஸ் யுவர் அசம்ப்ஷன் ஈஸ் கரெக்ட்.

சரி மத்ததுல எப்படி வித்தியாசமாகுதுனு சொல்லுங்களேன்.

நான் என்ன இங்க பயாலஜி கிளாஸா எடுக்கறேன்?

அட அதுக்கில்ல. இது வேற ரிசர்ச்னு சொன்னீங்கள்ல .அதை எப்படி கண்டுபிடிச்சீங்கன்னு கேட்கிறேன்.

டி.என்.ஏ. வரிசையை வச்சு.

என்ன டி.என்.ஏ வரிசையை வச்சா?

ஆமா, அது எப்படினு நான் சொல்றதுக்கு முன்னாடி இந்த இமேஜஸை கொஞ்சம் உன் சிஸ்டத்துல லோட் பண்ணிக்க என்று சில படங்களை கொடுத்தான் ரகு.

அவன் கொடுத்த பென்டிரைவில் இருந்த படங்களைத் தனது சிஸ்டத்தில் அப்லோட் செய்த பர்ஃபினா, இந்த ஒரு வாரத்துல நிறைய கலெக்ட் செய்திருக்கீங்க போலிருக்கு.

எல்லாம் கூகுள் ஜீ'யோட  அருள்தான். பட் அதோடு சேர்த்து இந்த ஷீட்டை பத்திரமா சேவ் பண்ணி பாஸ்வேர்ட் போட்டு ஹைட் பண்ணி வை. இது ரொம்ப ரொம்ப முக்கியம்.

அப்ப இந்த படத்துல இருக்குற டிஃபரன்ஸ் எல்லாம் அந்த DNA சீரியல்லயே இருக்குதுனு சொல்றீங்களா?

ஆமா.

என்னது இது, ஏதோ கோடிங் ஷீட் மாதிரி இருக்கு.

ஆமா கோடிங் ஷீட்தா. எனக்கு தப்பான கோடிங் கொடுத்துட்டு அப்புறமா நம்ம பாஸ் ரகசியமா பண்ண ஒரிஜினல் கோடிங். ஆனாலும் வீட்டுக்கு வந்து திரும்ப அனலைஸ் பண்ணப்ப இதுவும் செகன்டரிதான்னு தெரிஞ்சது. ஏன்னா இதை படிச்சதுக்கப்புறம் தான் தெரிஞ்சது இது வெறும் டெஸ்ட் அவுட்தானு.

அப்படினா உண்மையான பூதம் இன்னும் கைக்கு சிக்கலை.

ரகு சிரித்தான்.

ஏன் சிரிக்கறீங்க?

பின்ன சில்லியா கொஷின் கேட்டா சிரிக்காம என்ன பண்ண? எவ்வளவு பெரிய இல்லீகள் பிராஜெக்ட் பண்றாரு. அப்படி இருக்க அவ்வளவு கான்ஷியஸான ஷீட்டை சாதாரணமா மத்தவங்க கையில வெளியில கிடைக்கிற மாதிரி வைப்பாரா?

அப்புறம் எதுக்கு இதை எடுத்துட்டு வந்தீங்களாம்?

மேலோட்டமா பார்க்கறப்ப எனக்குக் கொடுத்த மாதிரியே இருந்தது. அப்புறம்தான் தெரிஞ்சது இது ட்ரை அவுட் பண்ணதுன்னு.

சரி அப்பக்கூட இதை எப்படி எடுத்துக்கிட்டு வந்தீங்க? ஒருவேளை இதை... என பர்ஃபீனா அதிர்ச்சி விலகாத கண்களோட கேட்க.

எஸ். யூ ஆர் கரெக்ட் அவர் கேபின்ல இருந்து திருட்டுத்தனமாக எடுத்தது தான். 


கொலைகள் நடக்கும்