Read I melted and became alive... by Imaginary Moon in Tamil நாடகம் | மாட்ருபர்த்தி

Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

உருகியே உயிரானேன்...

உருகியே உயிரானேன்....


எதிர் பாராத திருமணம்  இரு உள்ளங்களை இணைக்குமா ? பிரிக்குமா ?

சதாரண பஸ் கண்டக்டர் வாழ்கையில் உள்ள மர்மங்கள் மற்றும் அதில் பயணம் செய்யும் நமது நாயகிக்கு நிகழும் பிரச்சனைகள் இருவரின் வாழ்கையில் அடுத்தடுத்து நடக்கும் பகுதியே நமது கதை....


பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகரில் அனைத்து மக்களும் அவசரமாக அலுவலகங்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கும் சென்று கொண்டிருப்பது போலவே நமது கதையின் நாயகி யாழினியும் தனது கல்லூரி செல்வதற்காக தனது வீட்டில் தயாராகிக் கொண்டு இருக்கிறாள்.


யாழினி பெயரின் இனிமைக்கு ஏற்றது போலவே அவளும் மிகவும் இனிமையானவள். தான் இருக்கும் இடத்தை எப்போதும் கலலகலப்பாக வைத்து இருப்பாள். கருணை குணம் மிக்கவள். எதிர்காலத்தில் அதுவே இவளுடைய வாழ்க்கையை மாற்றக்கூடியதாக அமையும்.

பார்ப்பவர் கண் கவரும் அழகோவியமாக இருக்கும் 19 வயது   மங்கை.

அவளது கருவிழி ஒன்றே போதும் அவளை வர்ணிக்க

யாழினி டைம் ஆச்சு பாரு சீக்கிரம் கீழ வா என்று கூறிக் கொண்டே தனது கணவருக்கு காபியை  கொடுத்துவிட்டு சமையல் அறை சென்றார் அவளது தாய் சிவகாமி.

அவர் தந்த காபியை குடித்துவிட்டு தினசரியை புரட்டிக் கொண்டிருந்தார் யாழினியின் தந்தை கதிரேசன்.

யாழினியின் தந்தை கதிரேசன் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் அவரது மனைவி சிவகாமி குடும்ப  தலைவியாக அனைவரையும் கவனித்துக் கொண்டு இருக்கிறார்.

அவர்களுடைய ஒரே புதல்வியான   யாழினியே அவர்களுக்கு உலகம்.

கீழே வந்த யாழினி அம்மா இன்னைக்கு இட்லி தானா அட்லீஸ்ட் தோசையாவது ஊத்தி குடுங்கம்மா என்றாள்
அதற்கு சிவகாமி அதுக்கு நீ சீக்கிரமா கீழே வந்து இருக்கணும் இப்பவே காலேஜ்க்கு டைம் ஆச்சு
சீக்கிரம் சாப்பிட்டு போ இல்லைன்னா பஸ் விட்டுடுவ நீ தான் அப்புறம் கஷ்டப்படணும் என்றார்.

இதுதான் சிவகாமியின் குணம் காசு பணம் எவ்வளவு இருந்தாலும் இருப்பதை வச்சு வாழ்றத அவர் மட்டும் கடைப்பிடிக்காம அவரோட பொண்ணு இதை பண்ணனும் அவரோட கணவனும் இதையே பாலோவ் பண்ணனும்னு நினைக்கிறதுல ரொம்ப கரெக்டா இருப்பாங்க

பொண்ணு தான் அவங்க உலகமே ஆனாலும் வாழ்க்கையில நிறைய விஷயத்தை அவ தெரிஞ்சுக்கணும் புரிஞ்சுக்கணும் அப்படிங்கறதுக்காக அவ கேட்டது உடனே தரவும் மாட்டாங்க செஞ்சு தரவும் மாட்டாங்க இருக்கிறத வச்சு சந்தோஷமா இருக்க பழகிக்க தான் சொல்லிக் கொடுப்பாங்க.
இந்த விஷயம் எதிர்காலத்தில் யாழினி ஓட வாழ்க்கைக்கு பொருந்தும் கதையோட நம்மளும்   தெரிஞ்சுக்குவோம்.

என்னதான் யாழினி சலிச்சுக்கிட்டாலும் அந்த இட்லியும் அவளுக்கு மிகவும் பிடித்த உணவு தான் அதனால குறை சொல்லிட்டாலும் அதை சாப்பிட்டு தான் அங்கிருந்து போவா.

அவள் தாயும் அவளை சீண்டும் விதமாக சாப்பாடு வச்சிட்டு போயிடுவே வேணாம்னு சொல்லுவ  பார்த்தேன் சாப்பிட்டுட்டு  இருக்கிற என்றார்

அவளும் தனது தாயை பார்த்து  சோறு முக்கியம்  பிகுலு  என்று கூறிவிட்டு தனது கல்லூரி பையுடன் வீட்டை விட்டு வெளியேறினாள்.
பேருந்து நிறுத்தத்திற்கு வந்த யாழினி தனது தோழியை அடையாளம் கண்டு கொண்டு அவளுடன் சேர்ந்து பேருந்திற்காக காத்திருந்தாள்.

அப்போது அவள் தினமும் செல்லும் பஸ் வந்ததும் தனது தோழி வைசாலி உடன் பஸ்ஸில் ஏறினாள்.

இப்போது அந்த பஸ்ஸில் கண்டெக்டர் ஆக இருக்கிறவன் தான் ராணா. ஆறடி உயரத்தில் மிகவும் கம்பீரமாக இருக்கக் கூடியவன். 

இவனை பார்ப்பதற்காகவே பல பெண்கள் இந்த பஸ்ஸில் வருவார்கள். ஆனால் ஒரு நாளும் எவரையும் திரும்பி அவன் பார்த்தது இல்லை.

யாழினியும் கூட தனது வீட்டின் அருகே பஸ் என்பதாலே இதில் பயணம் செய்கிறாள்.அவளும் ஒரு நாள் கூட ராணை வேறு பார்வையில் பார்த்ததில்லை. 

ராணா இதில் பயணம் செய்வது இரண்டு வேளை மட்டுமே காலையில் 9 மணிக்கு பின் நைட்டு 9 மணிக்கு.
இதில் யாழினி காலை மட்டுமே ராணா வரும் வேளை வருவாள்.

ராணா இதில் வேலை செய்வதும் சில காரணங்களால் தான். அவன் M.Com  படித்தவன். கரஸ்ஸில் பிஸ்னஸ் மேனேஜ்மெண்ட் படித்து வருகிறான். அவனுக்கு என்று இருப்பது அவன் அம்மா கஸ்தூரி மற்றும் தங்கை ரதி. அவன் அம்மா வீட்டின் அருகே சிறிய மளிகைக் கடை நடத்தி வருகிறார். 

அதை அவ்வப்போது கவனிப்பது ராணா தான்.
எனவே இவன் கண்டெக்டரா, ஸ்டுடெண்டா, இல்ல அம்மா கடைய பாத்துகிறவனா கேட்டா காலம் தான் பதில் சொல்லும்.


யாழினி தனது தோழியுடன் ஒரு இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள். பேருந்து பயணம் தொடங்கியது.

யாழினி  ரெக்கார்ட் முடிச்சிட்டியா?  என்றாள் வைஷாலி.

ஆ முடிச்சுட்டேன் டி இல்லைன்னா அந்த  சிடு மூஞ்சி அவ்வளவுதான்.

அய்யோ என்னடி என்ன தனியா விட்டுட்ட கிளாசுக்கு போனதும் சீக்கிரம் முடிச்சுடனும் இல்லைனா நான் மட்டும் தனியா மாட்டிக்குவேன் என்று வைஷாலி புலம்பி கொண்டு வந்தாள்.

வைஷாலியை பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவளது குடும்பம் ஜாதி வெறி   ஊறி போனவர்கள் அது மட்டும் இல்லாமல் பண விஷயத்திலும் மிகவும் கரராக இருப்பவர்கள்.

பிற்காலத்தில் இவர்களாலேயே நமது யாழின் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினைகள் எழ போகும் என்பது தெரியாமல் இரு தோழிகளும் மிகவும் சந்தோஷமாக அவர்களது கல்லூரி வாழ்க்கையை ரசித்துக்கொண்டு வந்தனர்.

சொல்லப்போனால் வைஷாலி செய்யும் சிறு தவறினால் இரு நண்பர்களின் வாழ்க்கையிலும் ஏற்படும் விரிசல் மற்றும் அதனால் ராணா அடையும் துன்பங்களும் காலத்தின் கட்டாயமே இதனை யாராலும் மாற்ற முடியாது.

வைஷாலி அவளுடைய அத்தை மகனை காதலித்து  வருகிறாள் இருவரும் தான். எனவே எப்போதும் அவளுடைய புராணமே யாழினி இன் காதில் வைஷாலி மூலம் விழுந்து கொண்டே இருக்கும். 

யாழினி, போதும்டி சாமி என்னால முடியல இதுக்கு மேல  உன் ஆள பத்தி என்கிட்ட சொல்லிக்கிட்டே இருக்காத காண்டாகுது.

அவ்வளவு  காண்டானா நீ யாரையாவது லவ் பண்ணலாம் இல்ல டி...

  ஏண்டி நானும் உன்ன மாதிரி புலம்பி கிட்டு இருக்கணுமா சந்தோஷமா இருக்கிறேன் அது உனக்கு பிடிக்கலையா..

ஹே நான் எங்கடி பொலம்புன என் மாமா மேல இருக்குற லவ் தாண்டி சொல்லிட்டு இருக்கிறேன்.

நேத்து கூட பக்கத்து ஊரு திருவிழாவில் போய் எனக்காக ஆசையா ஒரு கம்மல் வாங்கிட்டு வந்தாரு.. என்று தனது  காதலனை நினைத்து  உருகி கொண்டு வந்தாள்.

நமது யாழினிக்கு காதல் என்பது பிடிக்காமல் இல்லை அவளைப் பொறுத்தவரை காதல் என்பது மிகவும் அற்புதமான ஒன்று அதனை அனைவரிடமும் காட்ட வேண்டும் அன்பின் வடிவமாக.

அதனாலயே அனைத்து பெண்களும் மயங்கி கிடக்கவும் ராணாவை கூட வேறொரு கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை  நமது ராணாவும் அதற்கு சலித்தவன் அல்ல தன்னை பார்க்கும் எந்த ஒரு பெண்ணை திரும்பி கூட பார்த்தது இல்லை

ஆனால் இன்று நமது நாயகன் நாயகி இருவரும் பேசிக்கொள்ளுமாறு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

தனது கல்லூரி வரப்போகும் ஸ்டாப் வந்ததால் யாழினியும் வைசாலியும் இருக்கையிலிருந்து எழுந்து இறங்க தயாராகினர் .

அப்போது டிரைவர் சரியாக  வண்டியை  u-turn செய்ய, வழக்கத்திற்கு மாறாக நம்ம ஹீரோயின்   ஸ்ட்ராங் நின்னுட்டா 
நம்ப ஹீரோ ஸ்லிப் ஆகி யாழினி மேலே  விழுந்திட்டான். 

இருவரும் எதிர்பாராத சமயத்தில் நிகழ்வு நடந்தது  அப்போது இருவருடைய கண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து இனம் புரியாது உணர்வை பரிமாறிக் கொண்டனர்.
  
யாழினியின் மைவிழியில் சற்று மனம் தடுமாற தான் செய்தது நமது ராணாவிற்கு. 

யாழினிக்கும்  முதல் முதலாக ஒரு ஆண் மகனின் ஸ்பரிசத்தை உணரும் இத்தருணத்தை எப்படி கையாள்வது என்று புரியாமல் திகைத்து இருந்தாள்.

   இந்த நிகழ்வை கலைக்கும் விதமாக வைஷாலி அய்யோ.. யாழினி
எந்திரிடி என்ன ஆச்சு உனக்கு என்று கேட்கவும் இருவரும் சுயம் பெற்று எழுந்து கொண்டனர்.

எழுந்த வேகத்தில்  ராணா தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க. தெரியாம விழுந்துட்டேன் சாரி என்று சொன்னவன் 

அதற்கு மேல் அங்கு நிற்காமல்  பேருந்தின் முன்புறம் சென்று விட்டான்

யாழினிக்கு ஆச்சரியமாக போனது யாருடா இவன் சாரி சொன்னா  ஆனா நம்ப அதுக்கு ஓகே எதுவும் சொல்லல அதுக்குள்ள அவன் பாட்டுக்கு  போய்ட்டான்.

ஓகே நம்மளும் இது ரொம்ப பெருசா எடுத்துக்க வேணாம் என்று நினைத்தவள் தனது ஸ்டாப் வந்தவுடன் எனது தோழி வைஷாலி உடன் இறங்கிக்கொண்டாள்.

வைஷாலி என்னடி  ரெண்டு பேரும் கண்ணிலே பேசிக்கிட்டிங்க போல... இன்று கிண்டல் செய்தாள்.

ஹே தெரியாம விழுந்துட்டாங்கடி நீ ஏதோ இமேஜினேஷன் பண்ணிக்காத கிளாஸ் டைம் ஆச்சு சீக்கிரமா வா இல்லன்னா உன்  ரெக்கார்டு அவ்வளவு தான் ஞாபகம் இருக்கு இல்ல...

அய்யய்யோ ஆமாண்டி வா போகலாம் இன்று இருவரும் கல்லூரிகள் நுழைந்து கொண்டனர். 

ஆனால் யாழினிக்கு இந்த நிகழ்வினை நினைக்கும் போது ஒரு வித சிறு படபடப்பு மனதிற்குள் இருந்து கொண்டு தான் இருந்தது. 

அங்கு ராணாவிற்கும் ஒரு சில நிமிடங்கள் இவற்றைப் பற்றி நினைக்கும் போது ஒரு புதுவித உணர்வு உண்டாகத்தான் செய்தது இருந்தும் அதை அதனோட விட்டு விட்டான்.

இவற்றையெல்லாம்  பேருந்தில் இருந்த அனைத்து பெண்களும் பார்த்து வயிறு எரிந்து கொண்டு இருந்தனர். காரணம் நம்ம ஹீரோ  சார் தான்.



தொடரும்...