Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நிழல் தரும் வசந்தம் - 44

சுபாவும், லலிதாவும் பிரேம் வீட்டிலேயே தங்குவதாய் ஏற்பாடு.நான் முதலில் சௌமியாவை பார்க்க வேண்டும் என்றாள் சுபா. முதலில் என்னுடைய வீட்டுக்கு போய் ஃபிரெஷ் ஆகிவிட்டு பிறகு போகலாம் என்றான் பிரேம். வாசன் வரவில்லையா என்றான். அவருக்கு வேலை கொஞ்சம் பிஸி அடுத்த முறை வருவார் என்றாள். சுபா உன்னுடைய அப்பா,அம்மா எப்படி இருக்கிறார்கள் . அவர்கள் நலமாக உள்ளார்கள்.தீபாவுக்கு ஃபோன் பண்ணி சுபாவோடு வருகிறேன். தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய் என்றான். நான் ஏற்கனவே செய்துவிட்டேன் என்றாள். சுபாவையும், லலிதாவையும் வரவேற்றாள் ரஞ்சனி. என்ன ரஞ்சனி ஆளே மாறிவிட்டாய் என்றாள் சுபா. அப்படி எல்லாம் இல்லை . லலிதா குமரன் எங்கே என்று கேட்டாள். அவன் ஸ்கூலுக்கு போயிருக்கிறான். ஈவினிங் 4 ஓ கிளாக் வந்து விடுவான் என்றாள் தீபா. எனக்கு போர் அடிக்குமே என்று சொன்னாள் லலிதா.

தீபா சுபாவை அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு அழைத்து சென்றாள். நீங்கள் ஓய்வெடுத்து கொள்ளுங்கள். நான் டிபன் தயார் செய்கிறேன் என்றாள். சுபா லக்கேஜ் நீலன் எடுத்து வந்து கொடுத்தான். என்ன நீலன் வேலைக்கு கிளம்பவில்லையா? இதோ கிளம்பிவிட்டேன் என விடை பெற்றான். ரஞ்சனியும் கூட ஆபீஸ் போனாள். பிரேம் லீவு போட்டிருந்தான். லலிதா , சுபா உடன் தூங்கி போனாள். மதியம் 12 மணி போல எழுந்து ஃபிரெஷ் அப் ஆகி வந்தார்கள்.என்ன பிரேம் அப்படி பார்க்கிறாய் என்றாள். உனக்கு இன்னும் வயதாகவே இல்லை அப்படியே இருக்கிறாய் என்றான். கிண்டல் பண்ணாதே நான் டை அடித்திருக்கிறேன் என்றாள். சரி வா சாப்பிடலாம் என்றாள் சுபா. அவர்கள் இருவரும் வேலை தேடி ஒன்றாய் இருந்த நாட்களை நினைத்து பார்த்தான்.

சௌமியா குழந்தைக்கு என்ன பேர் வைத்திருக்கிறார்கள் என்றாள் சுபா? மோகிதா . நல்ல பேர் எனக்கு பிடித்திருக்கிறது என்றாள். லலிதா குறும்பு பண்ணாமல் சாப்பிடு என்றாள். சௌமியாவுக்கு ஃபோன் பண்ணி இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கு இருப்போம் என்றான் பிரேம். சுபாவிடம் சௌமியா பேசினாள். வாழ்த்துக்கள் சௌமியா என்றாள் சுபா. சீக்கிரம் வா என் வீட்டுக்கு என்றாள் சௌமியா.ராக்கியும் ,சௌமியாவும் சுபாவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். சௌமியா சுபாவை கண்டதும் கட்டி பிடித்து கொண்டாள். எப்படியோ உனக்கு ஒரு நல்ல வாழ்வு அமைந்துவிட்டது என்றாள் சுபா. ராக்கியை அறிமுகப்படுத்தினாள் . குழந்தை மோகிதா தூங்கி கொண்டிருந்தாள். சுபா ஆண்ட்டி பாரு சுபா ஆண்ட்டி உனக்காக வந்திருக்காங்க பாரு என்றாள் சௌமியா. குழந்தை கையில் சிறிய மோதிரம் ஒன்றை மாட்டி விட்டாள் சுபா.


பிரேம் நான் அப்புறம் வந்து உன்னை அழைத்து கொள்கிறேன் சுபா நீ பேசிக்கொண்டிரு என்றான். சரி பிரேம் நான் ஃபோன் பண்ணுகிறேன் என்றாள். கிட்டதட்ட 20 வருஷ பழக்கம் ஒரு நாளில் பேசி தீருமா? லலிதாவுக்கு விளையாட பொம்மை குடு ராக்கி என்றாள். சௌமியா எல்லாம் பிரேம்தான் பார்த்துக்கொண்டான். இந்த வீடு , ஹாஸ்பிடல் செலவு எல்லாம். ம் எல்லாமே மாயை போல தோன்றுகிறது அப்பா மட்டும் இருந்திருந்தால் மோகிதாவை கொண்டாடி இருப்பார் என்று சௌமியா அழுதாள். அழாதே சௌமியா எல்லாம் நல்லதுக்குத்தான். சரி வா வீட்டை பார் என்று சுற்றி காண்பித்தாள். அவர்கள் தங்களது கதைகளை பேச தொடங்கினர். மாலை 4 மணிக்கு காபி போட்டு குடுத்தாள் . நீ எப்போது யு எஸ் போகிறாய். ஒரு முக்கியமான வேலை இருக்கிறது அது முடிந்த பின்தான் போவேன் என்றாள் சுபா.
அப்படி என்ன முக்கியமான வேலை? நீலனுடைய கல்யாணம் தான் அது. அவனுக்கு ஒரு துணை கட்டாயம் தேவை. நல்ல வேலை , நல்ல சம்பளம் அவனுக்கு யாரும் இல்லை அதுதான் குறை என்றாள்.


மாலை 6 மணி போல நீலன் வந்தான் சுபாவை அழைத்து போக. குமரன் வந்துவிட்டானா ஸ்கூலில் இருந்து என்றாள் லலிதா . வந்துவிட்டான் வா போகலாம் என்றான் நீலன். சௌமியாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள் சுபா. பிறகு பார்க்கலாம் என்றாள்.சௌமியா குழந்தை மோகிதா தூக்கத்திலிருந்து விழித்திருந்தது. அது கையில் இருந்த மோதிரத்தை பார்த்தது. சௌமியா சுபா ஆண்ட்டி வந்தாங்க என்று அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.குமரனை கட்டிக்கொண்டாள் லலிதா. அவனுக்கு கூச்சமாய் இருந்தது.லலிதா அவனோடு விளையாட போனாள். பிரேம் எங்கே என கேட்டாள். ஆபீஸ் வரை போயிருப்பதாக சொன்னான் நீலன். ரஞ்சனியும், பிரேமும் எப்பவுமே கொஞ்சம் லேட் ஆக வருவார்கள் என்றான். தீபா சுபாவை கிச்சன் உள்ளே அழைத்தாள். சுபா என்ன ஸ்பெஷல் என்றாள். ஹல்வா செய்தேன் . சூடாக இருக்கிறது டேஸ்ட் பண்ணி பார் என்றாள்.

பிரேமும், ரஞ்சனியும் 9 மணிக்கு ஏதோ சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வந்தனர். சுபா ஹாலில் இருந்து டிவி பார்த்து கொண்டிருந்தாள். பிரேம் நாளை மதியம் அப்பா , அம்மாவை பார்க்க ஊருக்கு போகிறேன் என்றாள். என்ன அவசரம் ரெண்டு நாள் கழித்து போலாமே என்றான். அவர்கள் ஃபோன் மேல் ஃபோன் அடித்து கொண்டிருக்கிறார்கள். லலிதாவை பார்க்க துடிக்கிறார்கள் என்றாள். சரி போய்விட்டு நேராக இங்கே வந்து விடு என்றான். வருகிறேன் என்றாள். பிரேம், தீபா, சுபா, ரஞ்சனி, நீலன் என எல்லோரும் கார்டன் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் அப்போது ரஞ்சனி கல்யாண பேச்சு வந்தது. ரஞ்சனி நீ இன்னும் அப்படியேதான் இருக்க போகிறாயா ? என்றாள் சுபா. அப்படி எல்லாம் இல்லை எனக்கு ஒருவரை பிடித்திருக்கிறது ஆனால் அவரோ .. இந்த காலத்திலும் கூடவா இப்படி ?உன் அழகுக்கும், அறிவுக்கும் பொருத்தமானவர் நிச்சயம் அதிர்ஷ்டசாலிதான் என்றாள் சுபா. நீலன் நீங்கள் சொல்வது சரிதான் அக்கா என்றான்.

பிரேம் எனக்கு உன்னை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. எல்லோர் மீதும் நீ எவ்வளவு அன்பாய் இருக்கிறாய் அவர்கள் மீது அக்கறையை செலுத்துகிறாய். பதிலுக்கு அவர்கள் உன் மீது எவ்வளவு மரியாதை செலுத்துகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. உன் அப்பா அம்மா இல்லாமல் போனது எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்றாள். மறுநாள் மதியம் நீலன் சுபாவையும்,லலிதாவையும் டிரைன் ஏற்றி விட சென்றிருந்தான். சுபா நான் உன்னிடம் ஒன்று கேட்பேன் நீலன் மறைக்காமல் உண்மை சொல்ல வேண்டும் என்றாள். கேளுங்கள் அக்கா . உனக்கு ரஞ்சனியை ஏற்றுக்கொள்வதில் என்ன சிக்கல். அது வந்து .. உனக்கு அவளை பிடித்திருக்கிறதா இல்லையா ? பிடித்திருக்கிறது. நல்லது நான் மற்றதை பேசிக்கொள்கிறேன் என்றாள். நீலனுக்கு சுபா அவசரப்படுவது போல தோன்றினாலும் யாராவது ஒருவர் பேசித்தானே ஆக வேண்டும் என நினைத்தான்.

குமரன் லலிதா எங்கே என்றான். அவர்கள் பாட்டி வீட்டுக்கு போயிருக்கிறார்கள் இரண்டு நாளில் வந்து விடுவார்கள் என்றான் நீலன். பிரேம் நீலனிடம் மனம் விட்டு பேசினான். நீலன் இந்த பணம், சொத்து, புகழ் எல்லாம் நிரந்தரம் இல்லாதது. நம்பிக்கை , விசுவாசம் போன்றவற்றிற்கு பலன் அதிகம் மதிப்பும் அதிகம் என்றான். நீ எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாயோ அதுவே உன்னை காப்பாற்றும் . புரிகிறது சார். நீ ரஞ்சனியை திருமணம் செய்து கொள்.இது என்னுடைய வேண்டுகோள். என்ன சார் இது என்றான். எனக்கு தெரியும் உன்னுடைய விசுவாசம் இதை தடுக்கிறதென்று. ஆனால் காதல் அது அவ்வளவு சுலபமில்லை. சுபா என்னிடம் எல்லாம் சொல்லிவிட்டாள். நீ தயங்குவதும் ரஞ்சனி அதனால் குழம்புவதும் வேண்டாம். நீ நல்லவன் எனக்கு அந்த ஒரு தகுதியே போதும். நான் ரஞ்சனிக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன் . நீ சம்மதம் மட்டும் சொல் என்றான்.ரஞ்சனியை மணந்து கொள்ள எனக்கு சம்மதம் சார் என்றான் நீலன் .

சுபாவுக்கும், தீபாவுக்கும் மகிழ்ச்சி . ரஞ்சனி வெட்கப்பட்டு கொண்டு ரூமை விட்டு வெளியே வரவில்லை. நீலன் நீயே போய் கூப்பிடு ரஞ்சனியை என்றான் பிரேம் . ரஞ்சனி என்ன இது புது பழக்கம் என்றான்.ரஞ்சனி வெளியே வந்தாள். அவள் முகம் மலர்ந்திருந்தது. என்ன நீலன் அதற்குள் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்றாள். பிரேம் மாமா நீங்கள் செய்வது சரியில்லை எனக்கு தோணும் போது நானே சொல்லியிருப்பேன் என்னுடைய காதலை என்றாள். நீயாவது சொல்வதாவது ? என்றான் நீலன். எல்லாம் சரியாகவே நடக்கிறது. நடக்கப்போகும் கல்யாணத்தை நல்ல முறையில் நடத்த வேண்டுமே என்றான் பிரேம்.சுபா ஊரில் இருந்து வரட்டும் நிச்சய தேதி குறிக்கிறேன் என்றான். நீலன் அவன் அறைக்கு போய்விட்டான். பிரேம் மாமா என்ன ரஞ்சனி . நீங்கள் என்ன சொன்னீர்கள் அவனிடம் . உண்மையை சொன்னேன். எனக்கு நாளை கோவிலுக்கு போக வேண்டும் என்றாள். நிச்சயமாக போகலாம் . எல்லோரும் சேர்ந்து போகலாம் என்றான்.

காலையிலேயே கிளம்பி விட்டார்கள் கோவிலுக்கு. குமரன் தூங்கட்டும் என்று வேலைக்காரகளிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்கள். தெய்வமே இப்போதாவது ரஞ்சனி வாழ்வில் சந்தோஷம் வந்ததே என்று பிரேம் நினைத்து கொண்டான்.தீபா நீலன், ரஞ்சனி இருவரும் சேர்ந்து பல ஆண்டு காலம் வாழ வேண்டும் என வேண்டிக்கொண்டாள். சௌமியா ஃபோன் பண்ணியிருந்தாள். வாழ்த்துக்கள் ரஞ்சனி. அவன் உனக்கு பொருத்தமானவன் என்றாள். தாங்க்ஸ் அக்கா வெறும் தாங்க்ஸ் மட்டும் போதாது என்றாள் சௌமியா. நீலன் , ரஞ்சனி சேர்ந்து நின்று செல்பி எடுத்துகொண்டார்கள். குடும்பமாய் ஒரு செல்பி எடுத்துக்கொண்டார்கள்.பிரசாதம் வாங்கி நீலன் ரஞ்சனி நெற்றியில் வைத்து விட்டான்.

என்ன நீலன் நீதானா இது ? என்றாள். நெருங்கினாலும் கிண்டல் பண்ணுகிறாய் விலகி நடந்தால் வருத்தப்படுகிறாய் . நான் என்ன செய்வது என்றான். ம் என்னை கட்டிப்பிடித்து கொள் என்றாள். கோவில் இது இல்லையென்றால்? ம் முன்னாடி பார்த்து நட என்றான். பிரேம் காரை ஓட்டினான். சுபா முன் சீட்டிலும், நீலனும், ரஞ்சனியும் பின் சீட்டிலும் அமர்ந்திருந்தனர். நீலன் அவள் முகத்தையே பார்த்துகொண்டிருந்தான். என்ன நீலன் ஆபீஸ் போகிறாயா இல்லை லீவா என்றான் பிரேம் அதெல்லாம் வேண்டாம் நான் போகிறேன் என்றான்.நான் இன்று லீவு . ரஞ்சனியை பத்திரமாக ஆபீஸ் கொண்டு போய் சேர்க்கிறாயா ,, நிச்சயமாக என்றான்.

தீபா நீ ஏன் எதுவும் சொல்ல மாட்டேன் என்கிறாய்.நான் என்ன சொல்ல பிரேம். அவளுக்கு எது நல்லதோ அதைத்தான் நீ செய்வாய் என்றாள். உனக்கு என் மேல் கோவம் இல்லையே .. இருந்தது அதெல்லாம் இப்போது அன்பாக மாறிவிட்டது என்றாள். குமரனை ஸ்கூல் கொண்டு போய் விட்டு வருகிறேன் என போனாள். வீட்டை சுற்றி வந்தான். குமரகுரு படமும், இவன் அப்பா, அம்மா படமும் இருந்தது. என்னுடைய கடமையை செய்து விட்டேன். ரஞ்சனி இனி மகிழ்ச்சியை தவிர வேறெதுவும் பார்க்க கூடாது என்றான்.