Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

உயிரின் அர்த்தம் நீயே ???? - 1

காதல் ஆஹா...! கேட்கும்போதே நிறைவைத் தரும் ஒரு வார்த்தை... காதலிப்பது ஒரு சுகம்... ஆனால் காதலிக்கப்படுவது பேரின்பம்... 

காதலின் வெற்றி என்பது திருமணமா..? கொண்டாட்டமா..? காதலின் வெற்றி... 

காதலிக்கப்படுவது, 

காதலுக்காகவே வாழ்வது... 

மேலே சொன்ன அத்தனை வார்த்தைகளிலும் காதலின் சுகமான பக்கங்கள் நிரம்பி இருக்கும்... ஆனால்..? காதல் என்பது சுகங்களை மட்டும் தராது.. வலிகளை தரும்... உயிர் வலிகளை தரும்...  

காதல் வலிகளையும் சுகங்களையும் மட்டும் தராது காத்திருப்பதை சொல்லித் தரும் காத்திருப்பது அர்த்தமுள்ளதாக இருப்பின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும்... 

காதலிப்பது ஒரு சுகம் என்றால்... அடுத்தவர்களின் காதல் கதை கேட்பதும் ஒரு அலாதியான சுகம்... வாருங்கள்... நாமும் இவர்களின் காதல் கதையை கேட்போம்...

யாருடைய கதை...? 
விக்ரம் ஆத்ரேயன்... ஆராதனா... 

கொஞ்சம் (அதிக) ஆழமான காதல்...

கொஞ்சம் ( அதிக) உயிர் உருக்கும் காதல்..
______________________________________

அந்த நாள் மிகவும் சாதாரணமான ஒரு நாளாக பொழுது விடிந்தது போல இருந்தது... ஆனால்..! யாருக்கு சாதாரண நாள் நம்மை போன்ற சாதாரணமானவர்களுக்கு.... 

ஆனால் நம் நாயகன், நாயகிக்கு அன்று வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு நாள்... அவர்கள் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்த நாள்.. 

அன்று வெள்ளிக்கிழமை, காலையில் கண்விழிக்கும் போதே ஆராதனாவுக்கு மனதில் மலையளவு வலியுடன் கண் விழித்தாள்,

தினமும் அந்த நினைவுகள் தன்னை அலைக்கழித்தாலும்... இன்று ஏனோ? தன் ஆதி தன் அருகில் வேண்டும் போல் மனது சிறு குழந்தை என அடம்பிடித்தது... 

மூளை என்ன சமாதானம் சொன்னாலும்... மனது மூளையை அடக்கி ஆதியைத் தேடிச் செல்லும்படி வலியுறுத்திக் கொண்டே இருந்தது... 

இன்றைய அழைப்புருதலுக்கு காரணம்... ஏனெனில் இந்த உயிரை உருவி எடுக்கும் வலி.... மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த நாளில் தான் ஆரம்பித்திருந்தது... 

மற்றவர்களுக்கு இந்த மூன்று வருடம் எவ்வாறு கழிந்ததோ ஆனால் ஆதிக்கும் இவளுக்கும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் ரணமாகவே கழிந்தது நீண்ட நெடிய ஆண்டாகவே கழிந்தது... 

விவரம் தெரிய ஆரம்பிக்கும் காலத்தில் பார்த்து... விவரம் சற்று புரிய ஆரம்பித்த காலத்தில் பழகி... விபரமே ஒருவருக்கொருவராக புரியவைத்து.... 

காதலை உணர்ந்தும் வெளி சொல்ல முடியாமல் தவித்து... காதலை வெளிச் சொன்ன போது இருவருக்குமான நேசத்தின் அழகை கண்டு பூரித்து... 

காதலிக்கும் சுகத்தையும்.. காதலிக்கப்படும் சுகத்தையும்... ஒரே நேரத்தில் அனுபவித்து... இந்த காதல் கை கூடாது என்று மரண வலியையும் சந்தித்து... 

இதோ இன்று மூன்று ஆண்டுகளுக்கு முன் பிரிந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் கண்ணில் பாராமல்... கருத்தில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் காதல்.. 

"ஆரா... மணியாச்சு.. எந்திரிச்சி இவ்ளோ நேரம் மெத்தையில உக்காந்து என்னதான் பண்ணிக்கிட்டு இருக்க...? தினமும் உன் கூட இதே வேலையா போச்சு..." இன்று ஆதங்கமாக ஆரம்பித்தாள் மகிழருவி ஆராதனாவின் ஆத்ம தோழி. 

ஆரா, ஆதியின் காதல் எவ்வளவு உயர்வானதோ, அதே அளவு மகிழருவியின் நட்புணர்வும் உன்னதமானது.... அது ஏன் என்பது இனிவரும் அத்தியாயங்களில் உங்களுக்கே தெரியும்

ஆராதனாவின் பக்கத்தில் அமர்ந்து அவள் கைகளை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டு "உன்னால உன் காதல் நினைவுலேருந்து வெளியே வரவும் முடியல... காதல் தான் வேணும்னு மத்தத தூக்கி போட்டுட்டு போகவும் முடியல.."

" ஆனா... உன் மனசையும் கஷ்டப்படுத்தி.... உன் உடல் நிலையும் பாதிக்க வச்சு... ஏன் இப்படி இருக்க..? அவள் தலையைக் கோதி கேட்டாள். 

"இப்பவாவது நீ சரின்னு சொல்லு... நான் பேசுறேன் உன் ஆதி கிட்ட நான் உனக்காக பேசுறேன்..." என்றாள் மகிழருவி. 

இது எதையுமே சரியாக காதில் வாங்காத ஆராதனா..., மகிழருவியின் மடியில் படுத்துக்கொண்டு கண்ணீர் கொட்ட... "மகிழு, எனக்கு என் ஆதிய பாக்கணும் போல இருக்கு... மகிழு இன்னைக்கு அவன் நெனப்பு என்ன ரொம்ப வாட்டுது... அவனை பார்க்கணும் மகிழு ஒரே ஒரு தடவை தூரத்தில் இருந்து பார்த்தா கூட போதும் மகிழு..." என்று கதறினாள். 

மகிழருவிக்கு ஆராதனாவின் இந்த அழுகை மிகவும் அதிர்ச்சியாக இருந்தது... மூன்று ஆண்டுகளாக கண்ணை எட்டாத சிரிப்புடன்... உதட்டளவு புன்னகையுடன்... இறுக்கமாக, தன் சோகத்தை கூட வெளியில் காண்பிக்காமல் அமைதியாக வலம் வந்த தன் தோழி... 

இன்று சுற்றுப்புற நினைவு கூட இல்லாமல்... இவ்வாறு கதறுவது அவள் மனதையும் அழுத்தி அவள் கண்களிலும் கண்ணீரை கொட்ட செய்தது. 

"ஆரா, ஆரா, நான் சொல்றத கொஞ்சம் கேளு... முதல்ல எந்திரிச்சு உட்காரு... நம்ம ஆபீஸ்க்கு கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சு சரியா...? "

"நாம இப்போ ஒன்னும் நம்ம ஊர்ல இல்ல...! நாம இப்ப எங்க இருக்கோம்னு உனக்கு ஞாபகம் இருக்கு இல்ல... நீ இங்க எப்படி ஆதிய உடனே உன்னால பார்க்க முடியும்..."

"எங்க? ஆதியோட போட்டோவை பார்த்து அவனை கூப்பிட்டு பேசிடுவோம்னு சொல்லி தானே அவன் நம்பரை கூட பிளாக் பண்ணி வச்சிருக்க... அதனால தானே அவனோட டிபி சேஞ்ச் பண்ணா கூட உனக்கு தெரியாம இருக்கு..." என்றாள். 

"இப்ப திடீர்னு என்ன ஆச்சு உனக்கு? எந்திரி, ஆபீஸ் போய் அங்க இருக்குற மென்னய பிடிக்கிற ஒர்க் பிரஷர்ல உட்கார்ந்தா எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பின்னுக்குப் போய்டும்... எந்திருமா.. சொன்னா கேளு... என்று அன்னையாக அதட்டினாள். 

மகிழருவி சொல்வதும் உண்மை தானே... நடக்காத ஒரு விஷயத்திற்காக எதுக்கு இவ்வாறு அழுது கதற வேண்டும்..? என்று மனதை தேற்றிக்கொண்டு, 

"சரிமகிழு... ஏதோ இன்னைக்கு ரொம்ப வலியா இருந்தது. அதனால தான் அழுதுட்டேன்.. நீ ஒன்னும் சங்கடப்படாதடி.. உனக்கு தெரியுமில்ல, இன்னைக்கு என்ன நாள்? னு அதனால தான் தாங்க முடியலன்னு நினைக்கிறேன்..." 

"சரி விடு... நம்ம வேலையை பார்ப்போம் எங்கிருந்தாலும் என் ஆதி நல்லா இருக்கணும்... எனக்கு அது போதும். " என்றாள் ஆராதனா. 

மகிழருவிக்கு எப்பொழுதும் போல் மனதிற்குள் பிரமிப்பு...! தான் காயப்பட்டாலும் பரவாயில்லை.. தான் நேசிப்பவர் நிம்மதியாக இருக்க வேண்டும். என்று எவ்வாறு இப்படி விட்டுக் கொடுக்க முடிகிறது? 

தனக்கு வலிப்பது கூட அவனுக்கு சொல்லாமல் ஏன் அவனிடம் காண்பிக்காமல் இப்படி ஒரு தவ வாழ்க்கையை யாரால் வாழ முடியும்..? என்று ஆச்சரியமாக யோசித்துக் கொண்டிருந்தாள். 

(இந்த காதல் எப்போது கை கூடும்)..