Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நிழல் தரும் வசந்தம் - 40

நீலனை பெங்களூர் ஆபீசுக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்தார்கள். ஒருவர் கூட ஆதரவு அளிக்கவில்லை. ரஞ்சனிக்கு அது கொஞ்சம் வருத்தமாய் இருந்தது. வேலை விஷயமாக சென்னை செல்லவிருந்தான் பிரேம். அப்போது நீலனை நேரில் பார்த்து பேசலாம் என எண்ணி இருந்தான்.நீலனுடைய ப்ரோஃபைல் எடுத்து பார்த்தான். அப்பா சிறு வயதிலேயே இறந்து விட்டார். அம்மாதான் அவனை வளர்த்திருக்கிறார். சமீபத்தில் அவரும் இறந்து விட்டார். அவன் முகவரியை குறித்து கொண்டான். சென்னைக்கு போகிறேன் உனக்கு என்ன வாங்கி வரட்டும் என தீபாவை கேட்டான்.நீ பிரச்சனைகளை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் இருந்தாலே போதும். இப்போது இருக்கிற அமைதியே எனக்கு போதும் என்றாள். ம் மகாராணி சொல்லிவிட்டால் பிறகென்ன என்றான். குமரன் என்னையும் அழைத்து போங்கள் என்றான். அடுத்த முறை நிச்சயம் அழைத்து போகிறேன் என்றான். நீலனை பார்க்க போவது குறித்து ரஞ்சனியிடமோ, தீபாவிடமோ சொல்லவில்லை.


சென்னை போய் சேர்ந்து இரண்டு நாட்களாகி விட்டது. மீட்டிங் முடிந்து இவன் கிளம்பும் சமயம் வந்ததும் நீலன் நினைவுக்கு வந்தான். அவனுக்கு ஃபோன் பண்ணினான். நான் பிரேம் . சொல்லுங்கள் சார். நான் உன்னை பார்க்கவேண்டுமே . எப்போது சார் என்ன விஷயம் என்றான். எல்லாம் நல்ல விஷயம் தான். நான் வீட்டில் தான் இருக்கிறேன். நல்லது நான் வருகிறேன் என்றான். ஓகே சார். இன்னும் ஒரு மணிநேரத்தில் நான் அங்கு இருப்பேன் என்றான்.வாங்க சார் என்று வரவேற்றான். அது ஒரு சிறிய அறையாக இருந்த போதும் நீட் ஆக வைத்திருந்தான். நான் உன்னை இப்போதுதான் பார்க்கிறேன் . நான் உங்களை பார்த்திருக்கிறேன் என்றான். கம்பெனி ப்ரோஃபைலில் உங்கள் போட்டோவை பார்த்திருக்கிறேன் என்றான். நீலன் இப்போது எப்படி இருக்கிறாய் கை சரியாகி விட்டதா என்றான். அது எப்பவோ சரியாகிவிட்டது. இருங்கள் சார் நான் காபி வருகிறேன் என்றான். அதெல்லாம் வேண்டாம், நான் சுபாவுக்கு கடமை பட்டிருக்கிறேன். நீ நல்ல வீடாக பார்த்து குடியேறு . நான் ஆபீஸ் மூலமாக வாடகை செலுத்த ஏற்பாடு செய்கிறேன் என்றான் . ரொம்ப நன்றி சார்.

நாம் கொஞ்சம் வெளியே போய் பேசலாமா ? போகலாம் சார். பீச் வரை போகலாமா ? சரி சார். இவன் வெளியே வந்து நின்று கொண்டான். அவன் உடை மாற்றிக்கொண்டு பிரேம் கூட காரில் ஏறிக்கொண்டான். நீலன் இந்த ஆபீஸ் பிடித்திருக்கிறதா ? பிடித்திருக்கிறது சார். இன்னும் 6 மாதம் போகட்டும் உன்னை பெங்களூர் அழைத்து கொள்கிறேன் என்றான். நன்றி சார். பீச் காற்று முகத்தில் அடித்தது. நீ ஒன்றும் உனக்கு யாரும் இல்லையே என்று வருத்தப்பட வேண்டாம். எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ வேலையில் மட்டும் கவனம் செலுத்து என்றான். நீ ஏதாவது சொல்ல விரும்புகிறாயா . ரஞ்சனி மேடம் ரொம்பவும் நல்லவர்கள் என்றான். அம்மா இறந்த போது எனக்கு ஆறுதலாக அவர்கள்தான் பேசினார்கள் . நீலன் இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரமில்லை அது துன்பமோ, இன்பமோ அதை நீ புரிந்து கொள்ள வேண்டும். சரி சார். நான் கிளம்புகிறேன். உனக்கு பணம் எதுவும் தேவையா ? இல்லை சார். பிரேம் விடை பெற்றுக்கொண்டான்.

ரஞ்சனிக்கு ஃபோன் செய்து விவரங்களை சொன்னான். ஏன் என்னிடத்தில் சொல்லாமல் நீலனை பார்க்க போனீர்கள் என்றாள். அது என்னவோ அவனைப் பார்த்தால் சிறுவயதில் என்னை பார்த்தது போல இருந்தது என்றான். எனக்கு ஏதாவது வாங்கி வாருங்கள் மாமா என்றாள்.சரி. குமரன் என்ன பண்ணுகிறான். ஹோம்வொர்க் பண்ணிக்கொண்டிருக்கிறான்.சரி அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் . நான் இரவு 9 மணிக்கெல்லாம் வீடு வந்து விடுவேன் என்றான். சரி மாமா. தீபா டிவி பார்த்து கொண்டிருக்கிறாள்.. கூப்பிடவா .. வேணாம் என்றான். சுபாவுக்கு ஃபோன் செய்தான். நீலனை பார்த்தேன் என்றான். அவனை உன்னை நம்பித்தான் அனுப்பியிருந்தேன். நீ எப்போது இந்தியா வருகிறாய் என்றான். இப்போது இல்லை இன்னும் 3 மாதம் ஆகும் என்றாள். டேக் கேர் பை என்றான்.

குமரன் தூங்காமல் விளையாடிக்கொண்டு இருந்தான். தீபா என்ன என்னிடம் பேசாமல் எல்லோரிடமும் பேசி இருக்கிறீர்கள் என்றாள். அதெல்லாம் ஒன்றுமில்லை தீபா. எனக்கு பசிக்கிறது என்றான். பிரேம் நான் உன்னை ரொம்பவே மிஸ் பண்ணினேன் என்றாள்.ஃபிரெஷ் ஆகிவிட்டு வா டிபன் எடுத்து வைக்கிறேன் என்றாள். குமரன் அப்பா அம்மா என்னை அடித்து விட்டார்கள் என்றான். அப்புறம் என்ன எப்போதும் விளையாட்டுதான். படிப்பதே இல்லை என்றாள். நீயும் அவனோடு சரிக்கு சமமாக சண்டைக்கு போகாதே என்றாள். குமரா படிப்பு ரொம்ப முக்கியம் என்றான். சரிப்பா. அப்பா எனக்கு இன்று கதை சொல்லுகிறீர்களா என்றான். நாளை நிச்சயம் சொல்லுகிறேன் என்றான். தீபா தீபா என்ன ? தூங்கி விட்டாயா ? இல்லை தூக்கம் வரவில்லை . உனக்குத்தான் என் நினைப்பே இல்லையே என்றாள். நீ இல்லாமல் இந்த வாழ்வே இல்லை என்றான். இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை.அவளை இழுத்து அணைத்தான். என்ன இன்று கோவம் தூக்கலாக இருக்கிறது என்றான். முத்தம் தேவைப்படுகிறது என்றாள். அவள் விளக்கை அணைத்தாள்.

ரஞ்சனி, சௌமியா, ராக்கி எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள் . பிரேம் வருவதை பார்த்ததும் பேச்சை நிறுத்தி விட்டு அவனையே பார்த்தார்கள். என்ன ஆச்சு என்றான்.பிரேம் மாமா நீங்கள் ஆளே மாறிவிட்டீர்கள் என்றாள் ரஞ்சனி. ஓ நல்ல விஷயம்தானே அது. ம் எங்களை விட்டு வெகுதூரம் போய் விட்டீர்கள் என்றாள். நான் எங்கேயும் போகவில்லை ஆனால் எல்லாவற்றிலும் இருந்து விலகி இருந்து பார்க்கிறேன் என்றான். சௌமியா சிரித்தாள். அந்த சிரிப்பு அவன் வாழ்நாளெல்லாம் தவற விட்ட சிரிப்பு. ராக்கி சற்றே வியப்புடன் பிரேமை பார்த்தான். சௌமியா அவர்களையெல்லாம் அழைத்துகொண்டு வேலையை பார்க்க போனாள். கம்பெனியில் சில உள்ளடி வேலைகள் நடப்பதாக பிரேமுக்கு தகவல் கிடைத்தது. அது ரஞ்சனியை பாதிக்கும் என தெரிந்தது. இது ஒன்றும் முதல் முறை அல்ல . ஆனால் ரஞ்சனி எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால் முடிவெடுக்க தயங்கினான்.

தீபா நீ எஜுகேஷன் டிரஸ்ட் கமிட்டி மெம்பர் தானே ஏதாவது உனக்கு செய்ய வேண்டி இருக்கிறதா ? யாருக்காவது ஏதாவது உதவி செய்ய விரும்புகிறாயா என்றாள். scholorship கொடுக்கலாம் என நினைத்தேன் . யாருக்கு கதிரேசன் குழந்தைகளுக்கு. சரி அப்படியே செய்து விடுகிறேன் . நீ ஆபீஸ் வந்து விவரங்களை ஃபில் பண்ணி கொடு என்றான். தீபா கதிரேசனிடம் பேசி அனுமதி வாங்கினாள். அவர்களுடைய படிப்பு விவரங்களை வாங்கி கொண்டு ஆபீஸ் போனாள். வா தீபா என்ன ஆச்சு விவரங்களை வாங்கி விட்டாயா என்றான். ம் ஆச்சு. அந்த சிஸ்டம் எடுத்து கொள் என்றான். அவள் டைப் செய்து முடிக்கும் வரை அவள் அருகிலேயே இருந்தான். அந்த பிள்ளைகள் இருவரும் நன்றாக படிக்க கூடியவர்கள் என்றாள். சரி நான் இதை மீட்டிங்கில் பேசி அனுமதி வாங்கி வைக்கிறேன் என்றான். சரி நான் போகட்டுமா . இரு இது டீ டைம். எல்லோரையும் பார்த்துவிட்டு போ என்றான். சௌமியா, ராக்கி , ரஞ்சனி கூட டீ குடித்தாள். அவள் விடை பெற்றுக்கொண்டாள்.

ரஞ்சனி கொஞ்சம் பேச வேண்டும் என்றான். உன் மேல் கம்ப்ளைண்ட் வந்திருக்கிறது என்றான். என் மேலேயா என்றாள். ஆமாம் நீலன் விவகாரத்தில் நீ ரொம்ப கருணை காட்டுவதாக யாரோ கம்ப்ளைண்ட் பண்ணி இருக்கிறார்கள். மாமா யார் அது .. அது நமக்கு முக்கியமில்லை. இதை எப்படி சமாளிப்பது என்பதுதான் முக்கியம். நான் என்ன செய்ய வேண்டும்.இனிமேல் அந்த மாதிரி கம்ப்ளைண்ட் வராத மாதிரி பார்த்துகொள்கிறேன் என்றாள். உனக்கு நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. சரி மாமா. கவனம் தேவை. பிரேம் அதற்க்கு அப்புறம் அதை பற்றி அவளிடம் பேசவில்லை. நீலன் ஏதோ சொந்த காரணத்துக்காக பெங்களூர் வந்திருந்தான். அவன் பிரேமுக்கு ஃபோன் செய்தான். என்னப்பா பெங்களூர் வந்தாயா ? ஒரு கல்யாணம் அதுதான் வந்தேன் என்றான். நல்லது என் வீட்டுக்கு வாயேன். அது வேண்டுமா சார். சும்மா வா என்னுடைய குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைக்கிறேன். சரி மதியம் லஞ்ச்க்கு வந்து விடு என்றான்.


நீலன் வருகையை ரஞ்சனி எதிர்பார்க்கவில்லை.மதியம் சிறப்பாக லஞ்ச் தயாரிக்கும் படி சொல்லி இருந்தான் பிரேம். நீலன் 2 மணிக்கெல்லாம் வந்துவிட்டான். குமரனுக்கு ஏதோ ஒரு ரிமோட் கார் வாங்கி வந்திருந்தான். வா நீலன். ரஞ்சனி நீலன் வந்திருக்கிறான் பார் என்றான். அவள் தயங்கியவாறே உட்கார்ந்திருந்தாள். தீபா அவனுக்கு சாப்பாடு பரிமாறினாள்.ரஞ்சனி அவனிடம் பேசுவாள் என பிரேம் எதிர்பார்த்தான். இவன் எனக்கு கொஞ்சம் வேலையிருக்கிறது நீயும் ரஞ்சனியும் பேசிக்கொண்டிருங்கள் என்று சொல்லிவிட்டு வெளியே போனான். ரஞ்சனி எப்படி இருக்கிறீர்கள் என்றாள். நான் கல்யாணத்துக்கு வந்தேன் . ஃப்ரெண்ட் கல்யாணத்துக்கு வந்தேன். வீடு மாறி விட்டீர்களா என்றாள். ஆமாம். இப்போது வீடு பெசன்ட் நகரில் இருக்கிறது என்றான். ஏதாவது தேவை என்றால் தயங்காமல் கேளுங்கள் என்றாள். அவன் நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள் சார் ரொம்ப வருத்தப்பட்டார் என்றான். அவள் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. மெதுவாக சிரித்தாள்.சில விஷயங்கள் நம்முடைய கையில் இல்லை என்றாள். அவன் விடை பெற்றுக்கொண்டான்.

நீலன் அவனுடைய அந்த சுபாவம் எல்லாம் மாறி விட்டிருந்தது. முன் இருந்த பொறுமை இல்லாத நீலன் இப்போது இல்லை. நிதானமாகவே பேசினான். அவனை ஏற்றுக்கொள்வதில் ரஞ்சனிக்கு எந்த தடையும் இல்லை. அது அவளுடைய உள்ளுணர்வு சொன்னது. ஆனால் தன்னுடைய அதிர்ஷ்டம் குறித்து கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தாள். பிரேம் என்ன சொன்னான் நீலன் என்றான் ரஞ்சனியிடம். ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லை என்றான். நீ என்ன சொன்னாய் நான் என்ன சொல்வது ..சரி போகட்டும்.. உனக்கு அவனை பிடித்திருக்கிறதா ? இப்போது எதுவும் வேண்டாம் மாமா. இப்படியே சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி ரஞ்சனி . அவள் நான் ஆசைப்பட்டது எதுவும் கிடைக்க போவதில்லை என்றாள்.
நீலன் தன்னுடைய மனதில் ரஞ்சனி பற்றி எதுவும் சலனங்கள் இல்லை என உறுதி படுத்தி கொண்டான்.

ஆபீஸ் டூர் போக வேண்டும் என எல்லோரும் வெகு நாளாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். சௌமியாவும், ராக்கியும் வர முடியாத சூழ்நிலையில் இருந்தார்கள். ரஞ்சனி மட்டும் போகிற மாதிரி இருந்தது. அவள் எல்லா ஏற்பாட்டையும் செய்திருந்தாள்.நீலன் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தாள். அவனுக்கு ஃபோன் செய்தாள்.