Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நிழல் தரும் வசந்தம் - 39

நீலன் மறுபடி கை சரியான பின் வேலையில் சேர்ந்துவிட்டான். தீபாவளி கொண்டாட்டங்களுக்கு இரண்டு கார்களில் சொந்த ஊர் நோக்கி பயணப்பட்டார்கள். ஒரு காரில் சௌமியா,ராக்கி, சௌமியா அம்மா ஆகியோரும் இன்னொரு காரில் பிரேம்,தீபா, குமரன் அதோடு ரஞ்சனியும் இருந்தனர். பிரேம் நீலன் குறித்து கவலைப்பட்டான். நம்மை போலத்தானே அவனும். குடும்பத்தை பிரிந்து கஷ்டப்படுகிறான். புதிய சீரமைக்கப்பட்ட வீட்டு வாசலில் பிள்ளையார் சிலையொன்று பிரதிக்ஷை செய்யப்பட்டு இருந்தது. எல்லோரும் அதை வணங்கினர். சௌமியா அம்மா உள்ளே போய் ஆரத்தி தட்டு எடுத்து வந்து சுற்றி போட்டாள். எல்லோரும் உள்ளே போனார்கள். வீடு நேர்த்தியாக இருந்தது. சௌமியா ,ராக்கி ,சௌமியா அம்மாவுக்கு ஒரு அறையிலும் , பிரேம் குடும்பத்தார் மற்றொரு அறையிலும் தங்கி கொண்டனர்.குமரா நீ பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், கெஸ்ட் எல்லாம் வருவார்கள் என்றாள் தீபா. ரஞ்சனி போனும் கையுமாகவே இருந்தாள். யாராவது ஃபோன் பண்ணிக்கொண்டே இருந்தார்கள்.எல்லோரும் குளித்து ரெடி ஆகி டைனிங் டேபிள் வந்து அமர்ந்திருந்தனர். ஏற்கனவே சமைக்க போன சௌமியா அம்மாவை ரெஸ்ட் எடுத்துக்கொள்ளும்படி அனுப்பி வைத்தாள் தீபா. அவளே உணவு தயாரித்தாள். சௌமியா உதவி செய்தாள்.

இன்னும் சில சாமான்கள் சமைப்பதற்க்கு வேண்டும் என தீபா சொன்னாள். நானும் ராக்கியும் போய் வாங்கி வருகிறோம் என்றான் பிரேம். பிரேம் ராக்கியை தனியாக விடாதே .. அவனுக்கு இந்த ஊர் புதிது என்றாள். ராக்கி காரை எடுத்துகொண்டு வந்தான். நாங்களும் வருவோம் என ரஞ்சனியும், குமரனும் அடம் பிடித்தனர். சரி வாங்க. ஆனா அங்க வந்து அதை வாங்கி குடு , இதை வாங்கி குடு அப்படின்னு கேட்க கூடாது என்றான். சரி சரி போகலாம் என்றார்கள். மதிய சாப்பாட்டுக்கு கதிரேசனையும், அவன் குடும்பத்தாரையும் வர சொல்லியிருந்தார்கள். இது தான் நான் படித்த ஸ்கூல் என்று ஒரு பாழடைந்த கட்டிடத்தை காட்டினான். இது என்ன பேய் பங்களா வா என ரஞ்சனி கேட்டாள் . எவ்வளவு கஷ்டப்பட்டு படித்தும் என நிலமை சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றான்.

தேங்காய் கடை போட்டிருந்தவர் .. யாரு ரமேஷ் அண்ணனா நீங்க என்றார்.ஆமாம் நான் பிரேம் தான் என்றான் . இளநீர் சாப்பிடுங்க என்று இளநீர் வெட்டி கொடுத்தார். காசு கொடுத்தும் வாங்கவில்லை. எல்லா சாமான்களையும் வாங்கியாச்சா என்று உறுதிப்படுத்தி கொண்டான். ரஞ்சனி ஒரு பையும் , குமரன் ஒரு பையும் எடுத்துக்கொண்டனர், கதிரேசன் மனைவியும், குழந்தைகளும் வந்திருந்தனர். கதிரேசன் அவசர வேலையாக வெளியூர் போயிருப்பதாகவும், நாளை வந்து விடுவதாகவும் சொல்லி இருந்தான். எல்லா குழந்தைகளும் பட்டாசு வெடிக்க வாசல் நோக்கி ஓடினர். நீங்க டிவி பாருங்க. இப்போ சாப்பாடு ரெடி ஆயிடும் என்றான் பிரேம் .மழை லேசாக தூறல் போட்டது. பட்டாசுகளை வெயிலில் காய வைத்திருந்தாள் தீபா. மாடிக்கு போய் எல்லாவற்றையும் அள்ளி வந்தாள். மழை வேகமாக பெய்ய துவங்கியது. காற்றும் அடிக்க தொடங்கியது.குழந்தைகள் ஏமாற்றத்துடன் உள்ளே வந்தனர்.

தீபாவுடன் கதிரேசன் மனைவி பேசிக்கொண்டிருந்தாள். அப்போது ரஞ்சனி பற்றிய பேச்சு வந்தது. நாங்களும் முயற்சி பண்ணிட்டுத்தான் இருக்கோம். அவ மனசுல என்ன இருக்கோ என்றாள் தீபா. ரஞ்சனி உணவு பொருட்களை எடுத்துகொண்டு டைனிங் டேபிள் மீது வைத்தாள். முதல்ல குழந்தைங்க சாப்பிடட்டும் என்றாள் சௌமியா அம்மா. வாங்க பசங்களா சாப்பிடலாம் என எல்லோரையும் கூப்பிட்டாள் தீபா. எல்லோரும் ஓடி வந்தனர். பிரேம் அமைதியாக அவர்கள் விளையாடுவதை பார்த்துக்கொண்டிருந்தான். எல்லோரும் சாப்பிட்டு முடித்தனர். கதிரேசன் மனைவிக்கு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்தனுப்பினாள் தீபா. குமரன் ரொம்ப ஜாலியா இருக்குது.. நம்ம வீட்டுக்கு எல்லோரையும் கூட்டிட்டு போலாமா என்றான்.
ம் போலாம் நீ பெரியவன் ஆனதும் இதே மாதிரி எல்லோரையும் கூட்டிட்டு போகணும் என்றான் பிரேம்.

மாலை எல்லோரும் மும்முரமாக டிவி பார்க்க தொடங்கினர். இவனும் ராக்கியும் மொட்டை மாடிக்கு போனார்கள். சிலர் இன்றைக்கே தீபாவளி போல பட்டாசுகளை வெடித்து தள்ளினர். ராக்கி நான் வேணும்னா உங்க அப்பா அம்மா கிட்ட பேசட்டுமா என்றான். அதெல்லாம் வேண்டாம் எனக்கு நீங்களும் , தீபாவும் தருகிற அன்பும் ஆதரவும் போதும் என்றான். என்னவோ நடந்து விட்டது. பெரியவர்களுடைய அன்பு,பிடிவாதம் இரண்டுமே புரிந்து கொள்ள முடியாதது. பிரேம் நீ நிஜமாகவே ஊருக்கு திரும்ப போகிறாயா . ம் எனக்கு சிட்டி வாழ்க்கை அவ்வளவாக மனதுக்கு நெருக்கமானதாக இல்லை. ஆனால் இன்னும் நிறைய வேலை இருக்கிறது அதை விட கடமைகள் நிறைய இருக்கின்றன என்றான். ரஞ்சனி காபி கொண்டுவந்து இருவருக்கும் கொடுத்தாள். தாங்க்ஸ் ரஞ்சனி என்றான் ராக்கி.
ரஞ்சனி அங்கேயே நின்று வானத்தின் நிறம் மாறும் அழகை ரசித்தாள். அதை பாராட்டவும் செய்தாள். என்ன அழகு இந்த வானம். ஆனால் சில சமயம் ஒன்னுமில்லாமல் போய்விடுகிறதே என்றாள்.

வானம் எப்போதும் ஒரே போல இருப்பதில்லை. வாழ்க்கையும் அப்படித்தான். குமரன் ராத்திரி பத்து மணி வரை பட்டாசு வெடித்து கொண்டிருந்தான். குமரா நாளைக்குதாண்டா தீபாவளி . இன்னைக்கே மொத்த பட்டாசுகளையும் காலி பண்ணினா எப்படி என்றாள் ரஞ்சனி. சித்தி நீயும் தானே பாதி வெடித்தாய் என்றான். சரிடா வா வந்து கை , கால கழுவி விட்டு டிபன் சாப்பிடு என்றாள். தீபாவின் கால்களை பிடித்து விட்டு கொண்டிருந்தான் பிரேம். ஏன் அப்படி ஸ்வீட் செய்ய வேணும் அப்புறம் கால் வலிக்குது என்று புலம்ப வேண்டும் என்றான். அவள் எதுவும் சொல்லவில்லை. என்ன தீபா யோசனை. குமரன் காலத்தில் அவனுக்கு துணையாக யார் இருப்பார்கள் . ஏன் இன்னொரு தங்கச்சி பாப்பா கேட்டானா ? ஆசையை பாரு பிரேமுக்கு . அவனுக்கு கூட்டுக்கூடும்பம் என்றால் என்னவென்று இப்போதுதான் புரிய ஆரம்பித்து இருக்கிறது. ம் அது நல்லது தான். விட்டு கொடுத்து போவது அவன் இயல்பில் இருக்கிறது. சரி லேட் ஆகிறது நீ தூங்கு . காலையில் நேரத்தோடு கோவிலுக்கு போக வேண்டும் என்றான். பிரேம் நீ உண்மையில் சந்தோஷமாக இருக்கிறாயா ? நிச்சயமாக .

காலையிலேயே எண்ணெய் தேய்த்து குளித்து தயார் ஆனார்கள் எல்லோரும் . குமரன் கடைசியாக வந்தான். அவனை சௌமியா அம்மா குளிப்பாட்டி விட்டார்கள். பாட்டி பாட்டி கண் எரியுது பாட்டி என்றான். எல்லாம் சரியாய் போய்விடும் என்றாள். புது உடை அணிந்து கோவிலுக்கு போனார்கள். கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. பிரேம் குமரனை தோளில் தூக்கி வைத்து சாமி தரிசனம் செய்ய வைத்தான். முருகா முருகா என்று அவன் குரல் எழுப்பினான். எல்லோரும் பிரகாரத்தை சுற்றி வந்தார்கள். பிரேம் ரஞ்சனிக்கு எப்படியாவது கல்யாணம் நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டான். நீலனிடம் இருந்தும்,சுபாவிடம் இருந்தும் ஃபோன் வந்தது. இருவரும் தீபாவளி வாழ்ததுக்கள் சொன்னார்கள். பிரேம் நீலனுக்கு போனஸ் கிடைத்ததா என விசாரித்தான் ரஞ்சனியிடம் . அவனுக்கும் போனஸ் போட சொல்லியிருந்தேன் என்றாள். புது உடையில் தேவதை போல இருந்தாள் ரஞ்சனி.

என்ன பிரேம் என் புடவை எப்படி இருக்கிறது என்றாள் தீபா. நீ செலக்ட் செய்த எதுவும் அழகுதான் என்றான். சும்மா சொல்லாதே . நான் என்னை சொல்லிக்கொள்ளவில்லை என்றான். எப்போதுதான் நீ புதிராய் பேசுவதை நிறுத்துவாயோ என்றாள். நம்முடைய வாழ்க்கையே புதிர் தான் என்றான். சௌமியா, ராக்கி இருவரும் சௌமியா அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். பிரேமும், தீபாவும்,குமரனும் கூட ஆசீர்வாதம் வாங்கினார்கள். மதிய சாப்பாட்டு பிறகு எல்லோரும் ஒரு குட்டி தூக்கம் போட்டார்கள். குமரன் இன்னமும் பட்டாசு வெடித்து தீர்த்து கொண்டிருந்தான். கதிரேசன் சாயங்கலமாக வந்தான். குழந்தைகள் , பெரியவர்கள், என எல்லோருக்குமான தீபாவளி அது. கதிரேசன் பிரேம் இருவரும் பழைய கதைகளை பேசிக்கொண்டிருந்தனர் . இன்னும் சில பேரை பார்த்து விட்டு வருகிறேன் என பிரேம் போனான். கூடவே குமரனையும் கூட்டிப்போனான்.

பூக்களை வாங்கி கொண்டான்.தீபா வீட்டு வாசலில் இறைந்து கிடந்த வெடித்த பட்டாசுகளை கண்டு வியப்பில் ஆழந்தாள் . ரஞ்சனி டிவி பார்த்து கொண்டிருந்தாள் . சௌமியா ராக்கி வெளியே போயிருந்தனர். பிரேம் பூவை தீபா தலையில் வைத்து விட்டான். ரஞ்சனியிடம் சாமிக்கு போடும்படியும் சொன்னான். பிரேம் மாமா இந்த தீபாவளியை ஸ்பெஷல் ஆக்கியதற்கு தாங்க்ஸ் என்றாள் ரஞ்சனி. இன்னும் நிறைய இருக்கிறது . நீ அடுத்த வருஷமும் வர வேண்டும் நான் இல்லாமல் போனாள் கூட என்றான். தீபா அவனை செல்லமாக ஒரு குத்து குத்தினாள் . பிரேம் ஏன் அப்படி எல்லாம் சொல்லுகிறாய்.என்னவோ தோணுச்சு என்றான்.என்ன எல்லோரும் ஊருக்கு திரும்ப ரெடியா என்றான் ராக்கி. குமரன் என்ன? நான் வரலைப்பா என்றான் . ராக்கி இது நம்முடைய ஊர் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றான்.

ஊர் வந்து சேர்ந்தார்கள். எல்லோரும் அவரவர் வேலைகளில் பிஸி ஆக இருந்தார்கள். குமரனை ஸ்கூலுக்கு அனுப்புவதற்குள் போதும் பொதுமென்றாகி விட்டது. பிரேமும், ரஞ்சனியும் கிளம்பி விட்டார்கள். இவள் யாருமில்லாத வீட்டை வெறுமையுடன் பார்த்தாள். எல்லாம் குடும்பம்தான் . குடும்பம் தான் தனக்கு எல்லாமும் என்றாள். நீலன் எப்படி வேலை செய்கிறான் என ரிப்போர்ட் கேட்டிருந்தாள் ரஞ்சனி. அது வந்து விட்டது. முன்னைக்கு இப்போது பரவாயில்லை. அவன் உண்டு அவன் வேலையுண்டு என இருக்கிறான். ரஞ்சனி அந்த ரிப்போர்ட்டை பிரேமுக்கு அனுப்பி வைத்தாள். சென்னை போனால் அவனை பார்த்து வர வேண்டும் என எண்ணிக்கொண்டான். நாட்கள் ஓடின. சௌமியா தாயாக போவதாக ராக்கி சொன்னான். பிரேமுக்கு மகிழ்ச்சி. வாழ்ததுக்கள் ராக்கி என்றான், புது வீடு போகும் போது பையனோ இல்லை பெண்ணோ இருப்பார்கள் என்றான். சௌமியா வெட்கப்பட்டாள் .

தீபாவும், ரஞ்சனியும் இந்த விஷயத்தை சௌமியாவுடன் கொண்டாடினார்கள். மேலும் இன்பம் பெருகட்டும் என சௌமியா அம்மா வாழ்த்தினாள் . எல்லாம் சரியாக நடக்கிறது என்றாள் தீபா. குமரன் மாதிரி பையனும், ரஞ்சனி மாதிரி பெண்ணும் வேண்டும் என்றான் ராக்கி. ராக்கி எதையோ சாதித்து விட்டது போல உணர்ந்தான். அதே சமயம் சௌமியா மனதில் கவலைகள் வராத வண்ணம் தான் நடந்து கொள்ள வேண்டும் என எண்ணினான்.புது வீடு இன்னும் 6 மாதங்களில் ரெடி ஆகிவிடும் என்று சொன்னார்கள். அவர்கள் இப்போது முழுமையான குடும்பமாய் தங்களை உணர்ந்தார்கள்.