Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நிழல் தரும் வசந்தம் - 31

சௌமியாவை ஈவினிங் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து போகலாம் என்று சொல்லி இருந்தார்கள். இவன் ஒரு புது மிக்ஸி வாங்கி கொண்டு அவளை பார்க்க வீட்டுக்கு போனான். என்ன பிரேம் இது நான் என்ன சின்ன குழந்தையா ? என்றாள். மை காட் நான் நூலிழையில் உன்னை தவற விட்டிருப்பேன் . நீ என்னடாவென்றால் .. சரி சரி நீயே எனக்கொரு ஜூஸ் போட்டு எடுத்து வா என்றாள். நிச்சயமாக என்றான். ராக்கி எங்கே ? அவன் ஆபீஸ் வரை போயிருக்கிறான்.அம்மா உள்ளே படுத்திருக்கிறார்கள். சௌமியாவின் வலது கையில் கட்டு போடப்பட்டு இருந்தது. இவன் ஜூஸ் போட்டு கொண்டு வரவும். ராக்கி உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது. ராக்கி முகம் கறுத்து போய் இருந்தது. வெயிலில் எங்கோ அலைந்து திரிந்து வந்திருந்தான். என்ன பிரேம் நீ போய் ஜூஸ் எல்லாம்.. அதெல்லாம் ஒன்றுமில்லை. கவனமாக இருங்கள் நான் கிளம்புகிறேன் என்றான்.

ராக்கி ரொம்பவே வருத்தப்பட்டான்.ரஞ்சனியிடம் பேசினான் பிரேம். சௌமியாவுக்கு நடந்ததை சொன்னான். அவள் நீங்கள் ரொம்பவே பயந்துவிட்டீர்கள் மாமா. நான் அக்காவிடம் ஃபோன் குடுக்கிறேன். அவள் வாங்கி பேசினாள். நீ ரெஸ்ட் எடுத்துக்கொள் பிரேம். மற்றவர்கள் விஷயத்தில் ரொம்ப அக்கறை எடுத்துக்கொள்ளாதே ..அவர்கள் உன்னை புண்படுத்தினால் உன்னாலும் தாங்க முடியாது என்னாலும் அதை பார்த்து கொண்டிருக்க முடியாது என்றாள். சரி குமரன் என்ன செய்கிறான். அவன் லலிதாவோடு விளையாடிக்கொண்டிருக்கிறான். வாசன் தீபா, ரஞ்சனியை வெவ்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்து போனான்.தீபாவுக்கு மனமெல்லாம் பிரேம் எப்படி தன்னை மற்றவர்களுக்காக இழைத்து கொள்கிறான் என்பதிலேயே இருந்தது.

திங்கட்கிழமை தான் சௌமியா ஆபீஸ் வர முடிந்தது. கை கட்டை அவிழ்த்து விட்டிருந்தார்கள். பிரேமை பார்த்ததும் புன்னகைத்தாள்.அவனுடைய பதிலுக்கு காத்திருந்தாள். பிரேம் ஹாய் என்று சொல்லிவிட்டு கேபினுக்குள் புகுந்து கொண்டான். அவள் என்னவோ இவன் சரியில்லையே என நினைத்தாள். மாதவன் நான் உங்களிடம் பேச வேண்டும் என போனில் சொன்னான். ஈவினிங் 5 30 மணிக்கு என்னுடைய வீட்டுக்கு வாருங்கள் அப்பா, அம்மா உங்களை பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்றான்.லொகேஷன் அனுப்பியிருக்கிறேன் . சரி வருகிறேன். மாலை 5 மணிக்கெல்லாம் மாதவன் வீட்டை கண்டுபிடித்து போய் விட்டான். வாங்க வாங்க நீங்க தான் ரஞ்சனி மாமா வா ? அக்கா கணவர் என்றான். மாதவன் எல்லாம் சொன்னான். பொண்ணுக்கு என்ன செய்யுறீங்க என்றார் பெரியவர். நீங்க என்ன சொல்லறீங்களோ அதன் படி செய்யுறேன் என்றான். அவர் ஒரு லிஸ்ட் கொடுத்தார்.
பையன் இதெல்லாம் வேணாம்னு சொன்னான். ஆனா எங்களுக்குன்னு ஒரு கவுரவம் இருக்கு இல்லை அதனாலே நீங்க இதெல்லாம் எந்த குறையும் இல்லாம செய்யுங்க.நீங்க என்ன சாப்பிடறீங்க காபி , டீ? . டீ யே போதும் என்றான்.

பிரேம் அந்த லிஸ்ட் பார்த்ததும் மலைத்தான் .அதோடு மாதவன் சொல்வதற்கும், அவர்கள் அப்பா அம்மா சொல்வதற்கும் சம்மந்தமே இல்லாதது போல தோன்றியது. பேசாமல் இந்த வரனை தட்டிக்கழித்து விடுவோமா என யோசித்தான். அந்த லிஸ்ட்டை தீபாவுக்கு அனுப்பினான். தீபா இதென்ன அநியாயம் மாதவன் ஒன்றும் மஹாராஜா இல்லையே என்றாள். நம்முடைய பெண் நன்றாக இருக்க வேண்டுமென்றால் இதெல்லாம் செய்துதான் ஆக வேண்டும் என்றான். இது சரியா வராது . நான் ரஞ்சனியிடம் சொல்லி விடுகிறேன். நீங்களும் அந்த பையனை பார்த்து சொல்லிவிடுங்கள். எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் குடு. இதில் யோசிக்க என்ன இருக்கிறது .நம்முடைய சக்திக்கு மீறி இதை செய்தால் அவர்கள் மேலும் கேட்பார்கள் என்றாள்.

சௌமியாவும், ராக்கியும் தீபா சொன்னதையே சொன்னார்கள். ரஞ்சனி எனக்கு நீங்கள் நிறைய செய்திருக்கிறீர்கள் ஆனால் இது வேண்டாம் . உங்களை அடகு வைத்து இந்த கல்யாணம் வேண்டாம் என்றாள். மாப்பிள்ளைக்காக பார்க்கிறேன் என்றான். இவனெல்லாம் ஒரு மாப்பிள்ளை ? நான் இவனை செலக்ட் செய்ததற்காக வருத்தப்படுகிறேன் என்றாள். உன்னுடைய இறுதி முடிவு என்ன. வேண்டாம் மாமா.. நான் நானாகவே இருந்து விட்டு போகிறேன். சரி ரஞ்சனி.மாதவனிடம் இருந்து ஃபோன் வந்தது . சாரி என்றான் பிரேம் ..எங்களுக்கு இதில் விருப்பமில்லை என்று சொல்லி போனை வைத்தான். மாதவன் ராக்கியிடம் பேசினான். ராக்கி அவன் இதை எதிர்பார்க்கவில்லை அவனும் அப்செட் ஆகத்தான் இருக்கிறான் என்று கூறினான்.

ரஞ்சனி மனதெல்லாம் பற்றி எரிந்தது. மாமாவை யார் என்று நினைத்தார்கள் ? இஷ்டத்துக்கு வளைந்து கொடுக்கும் மூங்கில் போல நினைத்து விட்டார்கள் போல. சுபா இதெல்லாம் சகஜம் என்றாள். ரஞ்சனி கோபப்படாதே எல்லாம் நல்லபடியாய் நடக்கும் என்றார் வாசன். பிரேமுக்கு இரவு உறக்கம் வரவில்லை. என்ன செய்வது ஒரு நல்ல பையன் கிடைக்க எவ்வளவு அலைய வேண்டும் என்று யோசித்தான். ரஞ்சனிக்கு பொருத்தமானவன் நிச்சயம் கிடைப்பான். ஆனால் அவள் மனம் மாறிவிட்டால் பிறகு கஷ்டம். அவள் ஏற்கனவே திருமணத்தை தள்ளிப்போட்டவள். இவ்வாறாக சிந்தை ஓடியது. விடிகாலை 3 மணிக்குதான் தூங்கினான் . காலையில் யாரோ பெல் அடிக்க கதவை திறந்தான். மணி 10 ஆகிறது இன்னமும் தூங்குகிறாயா என்றது அவன் அப்பா தான். அவர்தான் ஊரில் இருந்து வந்திருந்தார்.

என்னப்பா திடீர் பயணம்? உன்னை பார்த்து மாதங்கள் ஆகிறது உன் வீட்டில் எல்லோரும் அமெரிக்கா போயிருப்பதாக சொன்னார்கள். அதுதான் வந்தேன். சௌமியா எப்படி இருக்கிறாள். அவளுக்கு திடீரென கல்யாணம் நடத்தினாயாம். என்னிடத்தில் கூட சொல்லவில்லை என்றார். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள். இப்போதே தயார் செய்ய சொல்லுகிறேன் என்றான். நான் குளித்து விட்டு வருகிறேன் எதுவாக இருந்தாலும் சரி. ரமேஷ் குழந்தை எப்படி இருக்கிறான்? அவன் சரியான வாலாய் இருக்கிறான் என்றார்.ரஞ்சனி விஷயத்தை சொல்லி வருத்தப்பட்டான். அவ்வளவு பேராசைக்காரர்களிடம் பெண்ணை தரக்கூடாது என்றார்.
சௌமியாவும்,ராக்கியும் வந்திருந்தார்கள். மாமா எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்கள் என்றார்கள். நல்லா இருங்க என்று நூறு ரூபாய் தாளை சௌமியாவின் கையில் திணி த்தார்.எதுக்கு இதெல்லாம் என்றாள். அதெல்லாம் ஒரு அன்புதான் என்றார்.

சௌமியா வீட்டில் மதியம் பிரேம் அப்பாவிற்கு சாப்பாடு. பிரேமும் அங்கேயே சாப்பிட்டான். தீபாவிற்கு ஃபோன் செய்து அப்பா வந்திருக்கிறார் என்றான் .அவளோடு வீடியோ காலில் பேசினார். அவருக்கு அதில் மகிழ்ச்சி, குமரன் வந்து தாத்தா எப்படி இருக்கீங்க? நீங்க இங்க வாங்க என்றான். ரொம்ப சந்தோஷம் பா. அவளுக்குத்தான் கொடுத்து வைக்கல போயிட்டா என்று அழுதார். அப்பா அழாதீங்க என்றான். எப்ப திரும்ப வராங்க எல்லோரும் என்றார். அடுத்த வாரம் என்றான். நேரம் கிடைச்சா நீ ஊருக்கு வா . சௌமியா, ராக்கி உங்களையும் தான். சரி என்று சொன்னார்கள். அவர் இரவே டிரைன் பிடித்து ஊருக்கு போனார்.

ரஞ்சனிக்கு மாப்பிள்ளை இந்த ஒரே சிந்தனை மனதை அரித்து எடுத்தது. தீபா நம்முடைய கடமையை நாம் செய்துதான் ஆக வேண்டுமென்றான்.தீபா, ரஞ்சனி, குமரன் எல்லாம் சுற்றி பார்த்த இடங்களின் போட்டோக்களை அனுப்பியிருந்தார்கள். அடுத்த வாரம் அவர்கள் இங்கு இருப்பார்கள். ராக்கி கவலைப்படாதீர்கள் பிரேம். நிச்சயம் ரஞ்சனிக்கு நல்ல பையன் கிடைப்பான் என்றான். பிரேம். சௌமியா, ராக்கி சினிமாக்கு போனார்கள். இவனுக்கு சென்ட்டிமென்ட் ஸீன் என்றாள் அழுது விடுவான். படமோ முழுக்க அப்பா சென்ட்டிமென்ட். இவன் எவ்வளவோ முயன்றும் அழுகையை அடக்க முடியவில்லை. பிரேம் கண்ட்ரோல் யுவர்செல்ஃப் என்றாள் சௌமியா.

தீபா, ரஞ்சனி, குமரன் ஃப்ளைட் ஏறி விட்டார்கள். சுபாவையும், லலிதா மற்றும் வாசனையும் அவர்கள் ரொம்பவே மிஸ் பண்ணுவார்கள்.லலிதா அழுது தீர்த்து விட்டாள் ஏர்போர்ட்டில். குமரன் சோகமாகவே கிளம்பினான் என்று தீபா சொன்னாள். நாளைக்கு சாயங்காலம் வந்து விடுவோம் என்றாள் ரஞ்சனி. மாதவன் மறுபடி ஃபோன் பண்ணவில்லை.ஊரில் இருக்கும் ரமேஷிடம் ரஞ்சனிக்கு மாப்பிளை பார்க்க சொல்லி ரஞ்சனி ஜாதகத்தை அனுப்பினான். இங்கே எல்லாம் இன்னும் கூட கேட்பார்கள் என்றான். இவன் சோர்ந்து போனான். ராக்கியை அழைத்து கொண்டு சென்னை போனான். அங்கு மாட்ரிமோனி நிறுவனங்களில் பேசி பார்த்தான். உங்க ஸ்டேட்டஸ் அளவு வேணும்னா அப்படித்தான் எங்க கிட்ட வரன் இருக்கு என்றார்கள்.

ஏர்போர்ட் சௌமியா, ராக்கி, பிரேம் எல்லோரும் போயிருந்தார்கள். குமரன் வந்து கட்டிக்கொண்டான். தீபா எப்படி இருக்கிறாய் சௌமியா என்றாள். நான் நல்லா இருக்கிறேன். ரஞ்சனி எல்லோரையும் விசாரித்தாள். மாமா இனி நாம் கல்யாண பேச்சு பேச வேண்டாம் என்றாள். வீட்டுக்கு போகலாம் என்றான்.சௌமியா கிச்சன் போய் எல்லோருக்கும் ஸ்நாக்ஸ் கொடுத்தாள். டீ கொண்டு வந்தாள். பிரேம் நாங்கள் ஃபிரெஷ் ஆகி வருகிரோமே என்றாள் தீபா. ரஞ்சனியும் கூட போனாள் குமரனை தூக்கி கொண்டு. சரி நாங்கள் அப்புறம் வருகிறோம் என்று சௌமியாவும், ராக்கியும் சொன்னார்கள். ரமேஷ் ஒரு வரன் இருப்பதாகவும் அந்த பையனுக்கு அம்மா மட்டும்தான் இருக்கிறார்கள்.அவன் மேத்ஸ் டீச்சர் என்று சொன்னான். அவன் போட்டோவும் ஜாதகமும் அனுப்பி இருக்கிறேன் என்றான்.

பிரேம் என்ன கிச்சன் என்ன இப்படி இருக்கிறது என்றாள் தீபா. பையன் போட்டோவில் நன்றாய் இருந்தான். 30000 சம்பளம். நிரந்தர வேலை. இப்போது ரஞ்சனியிடம் சொல்ல வேண்டாம். பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று விட்டு விட்டான்.ரஞ்சனியும், தீபாவும் என்ன இப்படி இளைத்து விட்டாய் என்றனர். தீபா சுபா வீடு எல்லாம் எப்படி சவுகரியமாய் இருந்ததா .. அதெல்லாம் சூப்பர் என்றாள். வாசன் எங்களை நன்றாக பார்த்து கொண்டார்.ரஞ்சனி நீ உடனே ஆபீஸ் வர வேண்டாம் . சரி மாமா. ரமேஷ் அப்பாவுக்கு மறுபடி உடம்பு சரியில்லை என்றான். இவன் கொஞ்சம் பணம் போட்டு விட்டான். நான் அடுத்த வாரம் வந்து பார்க்கிறேன் என்றான்.கடைக்கு போக வேண்டாம் என சொல் என்றான். நான் சொன்னா கேட்டாத்தானே? சரி ஜாக்கிரதையாக பார்த்துக்கொள் . இரவு ரெண்டு மணி இருக்கும். ரமேஷிடம் இருந்து ஃபோன் வந்தது அப்பா நம்மைஎல்லாம் விட்டு போய் விட்டார் என்று அழுதான். இவனுக்கு தலை சுற்றியது. அப்பா மறைந்து விட்டார் . இனி அவனை என்றைக்குமாக பார்க்க வர மாட்டார் . தீபாவை எழுப்பி விஷயத்தை சொன்னான்.அவளும் அழுதாள். குமரனையும், ரஞ்சனியையும் அழைத்து கொண்டு நால்வரும் காரில் ஊர் நோக்கி பயணிக்க தொடங்கினர்.