மூவரையும் ஃப்ளைட் ஏத்தி விட்டுவிட்டு சுபாவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாள்.சௌமியாவும், ராக்கியும் வந்து இவன் கூட தங்குவதாய் சொன்ன போது வேண்டாம் என மறுத்து விட்டான். உங்களுக்கு இப்போதான் கல்யாணம் ஆயிருக்கு . என்னால் தொந்தரவு வேண்டாம். ஏதாவது ஹெல்ப் வேணும்னா நான் கூப்பிடறேன் என்றான்.சௌமியா அவள் அம்மாவை செக் அப் கூட்டி சென்றாள். இப்போது அவள் உடல் நிலை தேறி இருப்பதாக டாக்டர் சொன்னார். ராக்கி அப்பா, அம்மா நிலை பற்றி சௌமியா அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. இரண்டு நாட்கள் பயணம் செய்து யு எஸ் சென்றனர் பிரேம் குடும்பத்தார். ஏர்போர்ட்டில் அவர்களை வரவேற்றாள் சுபா. எப்படி இருக்கே தீபா, ரஞ்சனி கங்க்ராட்ஸ் நீ அவார்ட் வின் பண்ணுணத டிவி ல பார்த்தேன் என்றாள். குட்டி குமரா வெல்கம் டு அமெரிக்கா என்றாள்.
இவங்கதான் சுபா ஆண்ட்டி அப்பாவோட குளோஸ் ஃப்ரெண்ட் என்று குமரனிடம் ரஞ்சனி சொன்னாள். அவன் புரிந்தது போல தலையை ஆட்டினான் .எல்லோருக்கும் நன்கு பசித்தது. காப்பி வாங்கி குடித்தார்கள். வீட்டில் எல்லாம் தயாராய் இருக்கிறது . வாசன் நமக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்றாள் . சுபா உன் மகள் எங்கே? லலிதா எங்கே என்றாள் தீபா. அவள் ரொம்ப குளிரா இருப்பதினால் வரவில்லை. வீட்டில் விட்டு வந்திருக்கிறேன்.ஒரு 30கி மி டிரைவ் செய்த பின் அவர்கள் வீடு வந்தது. வாசன் எல்லோரையும் வரவேற்றார். லலிதா வெட்கப்பட்டுகொண்டு வெளியே வரவில்லை. இங்கே பார் குமரன் வந்திருக்கிறான். பிரேம் அங்கிள் சொன்னேன் அல்லவா அவர் சன் என்றாள். பிரேம் அங்கிள் ஏன் வரவில்லை என்றாள். அவர் கொஞ்சம் ஆபீஸ் வேலையில் பிஸி என்று தீபா சொன்னாள்.
எல்லோரும் குளித்து ஃபிரெஷ் ஆனார்கள். வீடு எல்லோருக்கும் தாராளமாய் இருந்தது. வாசன் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தார்.நீங்களும் எங்களுடன் சாப்பிடுங்கள் என்றாள் .ரஞ்சனி இல்லை எனக்கு அவசர வேலை இருக்கிறது . உங்களை மாலை சந்திக்கிறேன் என்றார். எல்லோரும் டிபன் சாப்பிட்டார்கள். பாத்திரங்களை கழுவ தீபா உதவினாள். இங்கே ஏதும் தொந்தரவு இல்லையே .இல்லை நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்றாள் சுபா. குமரன் லலிதாவோடு விளையாடி கொண்டிருந்தான். ரஞ்சனி பிரேமுக்கு ஃபோன் செய்தாள். மாமா நாங்கள் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டோம். இங்கே வீடுகள் அருமையாய் இருக்கிறது. நீ எதைபற்றியும் கவலைப்பட வேண்டாம். உன் சந்தோஷத்துக்குத்தான் இந்த ட்ரிப் என்றான். தீபா ஃபோன் வாங்கி பேசினாள்.சாப்பிட்டாயா பிரேம் .. ஆச்சு நேரத்துக்கு சாப்பிடு என்று சொன்னாள்.சரி ,
பிறகு கூப்பிடுகிறேன் என்றான்.
மூவரும் இல்லாத வீடு என்னவோ போல இருந்தது.ஆபீஸ் விட்டால் வீடு என்று இருந்தவன் இப்போது என்ன செய்வதென்று யோசித்தான். ரஞ்சனிக்கு மாப்பிள்ளை பார்க்க புரோக்கர் ஒருவரை வர சொல்லியிருந்தான். அவர் 7 மணிக்கு வருகிறேன் என்று சொல்லி இருந்தார். அவருக்கு ஃபோன் பண்ணினான் . இன்னும் 10 நிமிடத்தில் தான் அங்கு இருப்பேன் என கூறினார். ரஞ்சனி ஜாதகத்தை மற்ற ஜாதகங்கள் உடன் ஒப்பிட்டு பொருத்தமுள்ள மாப்பிள்ளைகள் போட்டோவை எடுத்து வந்திருந்தார். இவன் அவற்றை வாங்கி வைத்தான். ஜோசியர் சாஃப்ட் காப்பி கூட வைத்திருந்தார். அதை ஒரு பென் டிரைவில் போட்டு கொடுத்தார். எல்லாம் வசதியான நல்ல அந்தஸ்துள்ள இடம். நீங்கள் வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம் என்று சொன்னீர்கள் அதனால் அவர்களை நீக்கி விட்டேன் என்றார் புரோக்கர். இவன் அவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்தான். நான் போட்டோ வை பெண்ணிடம் காட்டி செலக்ட் செய்து விட்டு உங்களை கூப்பிடுகிறேன் என்றான்.அப்போது நான் வருகிறேன் என்றார்.
மாப்பிள்ளை போட்டோவை ரஞ்சனிக்கு ஈமெயில் செய்தான். அதோடு ஃபோன் பண்ணி ரஞ்சனியிடம் செலக்ட் செய்ய சொல்லி இருந்தான். ஆபீஸ் போய் சேரந்தவுடன் ராக்கியையும்,சௌமியாவையும் கூப்பிட்டு எந்த மாப்பிள்ளை நன்றாக இருக்கிறார் என பார்க்க சொன்னான். அவர்கள் போட்டோவில் என்ன இருக்கிறது. நேரில் பார்க்க வேண்டும் அப்போது முடிவு செய்யலாம் என்றார்கள் . ரஞ்சனி ஒரு ஆளை செலக்ட் பண்ணி அனுப்பியிருந்தாள் . ஆள் அத்தனை அழகில்லை என்றாலும் நல்ல குடும்ப பின்னணி இருக்கிறது என்று தீபா சொன்னாள். அவன் பெயர் மாதவன். நாளைக்கு நீங்கல் இருவரும் ஃப்ரீ யா நாம் இந்த பையனை மீட் பண்ணுவோம் என்றான் பிரேம். எங்களுக்கு ஓகே தான் என்றார்கள்.
புரோக்கருக்கு ஃபோன் செய்து அந்த பையனை பார்க்க தயார் ஆனார்கள்.
நல்ல ரெஸ்டாரண்ட் ஒன்றை தேர்ந்தெடுத்தார்கள். மாலை 3 மணிக்கு வருவதாய் சொன்னான். அவன் இயற்கை விவசாய பண்ணை வைத்திருந்தான்.இவன் ஒரே பிள்ளை.மாதவன் வணக்கம் என்றான் .கூட அவன் ஃப்ரெண்ட் ஒருத்தரை அழைத்து வந்திருந்தான். என் பெயர் தீபக் என அறிமுகப்படுத்தி கொண்டான். ரஞ்சனி போட்டோ புரோக்கர் உங்க கிட்ட காண்பித்தாரா ? ம் எங்களுக்கு பிடிச்சிருக்கு என்றான் . அவர் அவனுடைய தொழில் பற்றி விசாரித்தார். அதில் போதுமான வருமானம் வருகிறது என்றான் . முன்பு ஐ டி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்ததாக சொன்னான்.ரஞ்சனியின் படிப்பு மற்றும் வேலை பற்றி விசாரித்தான். ராக்கி உங்களுக்கு டிரிங்க்ஸ் பழக்கம் உண்டா என கேட்டான். அவன் இல்லை என்றான். சாரி எங்க பொண்ணு இந்த விஷயத்துல காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டாள். அதுதான் கேட்டேன் என்றான். மாதவன் உங்களை எங்களுக்கு பிடிச்சிருக்கு . ரஞ்சனி உங்களுக்கு கால் பண்ணி பேசுவா. இதுதானே உங்க நம்பர் என்றான். ஆமாம். அப்புறம் மத்த விஷயங்களை புரோக்கர் கிட்ட பேசிக்கிறேன் என்றான் பிரேம்.சரி சார். விடைபெற்றுக்கொண்டான்.
மாதவன், ரஞ்சனி பொருத்தம் நன்றாக இருக்கிறது . ரஞ்சனிக்கு பிடிக்க வேண்டுமே என்றாள் சௌமியா. ரஞ்சனியிடம் மாதவனிடம் நாங்கள் பேசிவிட்டோம், நீ பேசி முடிவு செய் என்றான் பிரேம். சுபா போட்டோவை பார்த்து விட்டு சோசியல் மீடியா வில் தேடினாள். அவன் அதில் எல்லாம் ஆர்வம் காட்டுகிறார்போல இல்லை. ரஞ்சனி வீடியோ காலில் அவனிடம் பேசினாள். ரஞ்சனி கல்யாணத்துக்கு பிறகும் நான் வேலைக்கு போவேன் என்றாள். சரி எனக்கும் சம்மதம் என்றான். நான் மேற்படிப்பு படிக்க தடை சொல்ல கூடாது . சரி . பெங்களூர் விட்டு வேறெங்கும் என்னால் இடம் மாற முடியாது என்றாள். நீங்கள் சொன்ன அத்தனைக்கும் சம்மதம் என்றான். உங்களுக்கு ஏதாவது கண்டிஷன் இருந்தால் சொல்லுங்கள் என்றாள். என் அப்பா அம்மா தான் என்னுடைய ஒரே சொத்து. நான் நிறைய சேமித்து வைத்திருக்கவில்லை. நம்முடைய வருமானத்தில் வாழ வேண்டும் என்றான். எனக்கு ஓகே என்றாள். மற்றவற்றை மாமாவிடம் பேசுங்கள் என்றாள் ரஞ்சனி.
தீபாவுக்கு இதில் ரொம்ப சந்தோஷம். எப்படியோ இந்த சம்பந்தம் முடிந்தால் நிம்மதியாக இருக்கும். குமரன் அருகில் இருந்த பார்க் ஒன்றில் லலிதாவுடன் விளையாட போயிருந்தான். கூட சுபாவும் போயிருந்தாள். அவள் திரும்பி வந்ததும் விஷயத்தை சொன்னார்கள் தீபாவும், ரஞ்சனியும்.எங்களுக்கு ஓகே ரஞ்சனி ஊரில் இருந்து வந்ததும் மற்றதை பேசிக்கொள்ளலாம் என்று சொன்னான் பிரேம்.சௌமியா , பிரேம், ராக்கி மூவரும் பீச் போயிருந்தார்கள். என்ன பிரேம் அவர்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறாயா ? ஆமாம் இன்னும் 6 வாரங்கள். லைப் போர் அடிக்கிறது என்றான்.பேசாமல் ஒரு இரண்டு நாட்கள் எங்களுடன் வந்து இரேன் என்றாள். அம்மாவுக்கு ஆறுதலாக இருக்கும் என்றாள் சௌமியா. சரி வருகிறேன் என்றான்.
சௌமியா வீட்டை நேர்த்தியாக வைத்திருந்தாள். ராக்கி சமையலுக்கு தேவையான சாமான்கள் வாங்கி போட்டான். சௌமியா அம்மா சமையல் அறையில் சௌமியாவுக்கு உதவியாக இருந்தாள். ராக்கி டிவி பார்த்து கொண்டிருந்தான். நீ மறுபடி அம்மா அப்பாவிடம் பேசினாயா என்றான் பிரேம். அவர்கள் போனை எடுக்க மாட்டேன் என்கிறார்கள். எல்லாம் முடிந்து விட்டது என்றான் விரக்தியுடன் . நான் நேரில் போய் பார்த்து வருகிறேன் என்றான் பிரேம். வேண்டாம் பிரேம் எல்லாம் அவர்களே மனமிரங்கி வரட்டும் என்றான். மதிய சாப்பாடு அருமையாக சமைத்திருந்தாள் சௌமியா. மூவரும் சாப்பிட்டனர். சௌமியா அம்மாவிடம் விடை பெற்று கொண்டான் பிரேம். பிரேம் உனக்கு எப்ப தோணுதோ அப்ப கண்டிப்பா வா என்றாள்.
ராக்கி சௌமியா இருவரும் பிரேமிடத்தில் உண்மையான அன்பும் ,மரியாதையும் வைத்திருந்தார்கள். என்ன தீபா போய் அங்கேயே செட்டில் ஆகி விட்டாயா என்றான் பிரேம். அப்படியில்லை இங்கே ஒரே பனி வீட்டை விட்டு வெளியே போக முடியவில்லை. குமரன் வேறு ஒரே சேட்டை என்றாள். சரி எப்போது ஃப்ரீயாக இருக்கிறாயோ அப்போது பேசு என்றான். சரி பிரேம். வாசன் இன்னும் 3 நாட்களில் நிலமை சீராகிவிடும் என்று சொல்கிறார்கள். நாம் வெளியில் சென்று சுற்றி பார்க்கலாம் என்றான்.சுபாவோடு உட்கார்ந்து கேம்ஸ் விளையாடினாள் ரஞ்சனி. தீபாவுக்கு புத்தகங்கள் போதும். லலிதா, குமரனோடு நன்கு பழகி விட்டாள்.பிரேம் ஆபீஸ் விஷயமாக வெளியூர் போயிருந்தான். வரும் போது ராக்கி சௌமியாவுக்காக டிரஸ் எடுத்து வந்திருந்தான்.
டிரஸ் கொடுப்பதற்காக அவர்கள் வீட்டுக்கு போயிருந்தான். அவள் அம்மா எங்கோ போயிருந்தாள். சௌமியா என கூப்பிட்டான். நான் குளித்து கொண்டு இருக்கிறேன். நீ உட்கார் என்றாள். நான் அப்புறம் வருகிறேன் என்றான், போகாதே என்று சொல்லிவிட்டு டிரஸ் மாற்றிவிட்டு வந்தாள். இவன் பெருமூச்சு விட்டான். என்ன விஷயம் பிரேம் ? உனக்கும், ராக்கிக்கும் டிரஸ் எடுத்தேன் என்றான். அவற்றை வாங்கி கொண்டாள். நல்லா இருக்கு எனக்கு பிடிச்சிருக்கு என்றாள். இவன் நான் கிளம்புகிறேன் என்றான். இரு ஜூஸ் கொண்டு வருகிறேன் என்று உள்ளே போனாள். உள்ளே போய் 5 நிமிடம் கழித்தும் வரவில்லை . என்னவென்று எட்டி பார்த்தான் மிக்ஸி ஷாக் அடித்து அவள் நெற்றியில் காயம் பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவள் மயங்கி விழுந்திருந்தாள். உடனே அவளை தூக்கி காரில் போட்டுக்கொண்டு ஹாஸ்பிடல் விரைந்தான். ராக்கி வந்து சேர்ந்தான். என்னாச்சு பிரேம் என்றான். சொன்னான் ரொம்ப நன்றி பிரேம். இப்போ கண் விழித்து விட்டார்கள் போய் பார்க்கலாம் என்றார் டாக்டர். சௌமியா அம்மா பக்கத்திலேயே சோகமாக இருந்தார். சௌமியா பிரேம் கைகளை பிடித்து கொண்டாள்.ராக்கி அவளிடம் பேசிக்கொண்டிருந்தான். இவன் வெளியே வந்தான் .ரஞ்சனியிடம் பேச வேண்டும் போல இருந்தது.