என்னாச்சு பிரேம் ? என்றாள் தீபா. அப்பாவுக்கு ரொம்ப முடியலியாம். நாம போய் பார்க்கலாமா ? இப்போதைக்கு பிரச்சனை இல்லை நாங்க பார்த்துக்கொள்கிறோம் அப்படின்னு சொல்லுறாங்க.மனசே சரியில்ல என்றான். நீ கவலைப்படாதே பிரேம் நான் கதிரேசன் அண்ணா கிட்ட பேசி போய் பார்க்க சொல்லுறேன் என்றாள். அதுவும் சரிதான். அவனுக்கு எங்கே நேரம் இருக்கிறது . அடுத்த வாரத்தில் ஒரு நாள் நான் மட்டும் ஊருக்கு போய் வருகிறேன் .சரி.சௌமியாவை எப்படியோ தன் மேற்பார்வை உள்ள அலுவலகத்துக்கு கொண்டு வந்து விட்டான் பிரேம். அவளுக்கும் அதில் மகிழ்ச்சிதான். ஆனால் எது நிரந்தரம் ? இப்படியே ஒருவருக்காக மற்றவர் தியாகம் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டுமா. சௌமியாவை தன்னுடைய கேபினுக்கு கூப்பிட்டான் பிரேம். எப்படி போகிறது வேலை? உனக்கு பிடித்திருக்கிறதா என்றான். எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்றாள். இன்று நீ என்னோடு லஞ்ச் சாப்பிடு என்றான்.
ரஞ்சனி, பிரேம், சௌமியா மூவரும் ஒன்றாக அமர்ந்து லஞ்ச் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.தீபாவிடம் இருந்து ஃபோன் வந்தது. சாதாரண கால் தான் அது. விஷயம் ஏதுமில்லை. தீபா நான் சாப்பிட்டு கொண்டிருக்கிறேன் பிறகு கூப்பிடுகிறேன் என்றான். சரி ரஞ்சனியும், சௌமியாவும் சாப்பிட்டார்களா .. அவர்களும் என் கூடத்தான் சாப்பிட்டார்கள் . சரி. நான் அப்புறம் பேசுகிறேன் என்று போனை வைத்து விட்டாள். நெருக்கம் அதிகமாகிறதே தவிர குறையவில்லை என நினைத்தாள். இதற்கு ஒரு தீர்வில்லையா என உள்ளுக்குள் குமைந்தாள் .
ரஞ்சனி நம்முடைய ஆபீஸ் ல ஏதாவது வேகன்ஸி இருக்குதா ? அப்படி எதுவும் இல்லையே ஆனா பிரேம் ஆள் சேர்த்துகிட்டே இருக்காரே என்றாள். அது வந்து .. நீ ரெஸ்யூம் கொடு அக்கா நான் பார்க்கிறேன் யாருக்கு வேலை வேண்டும் என்றாள். எனக்குத்தான். இங்கு குமரனும் ஸ்கூல் போய் விட்டதால் சும்மாதானே இருக்கிறேன். ம் அப்படியா நான் மாமாவிடம் பேசுகிறேன்.
என்ன தீபா நீ வேலை கேட்டாயாமே என்று சிரித்தான். ஏன் சிரிக்கிறீங்க நான் வேலைக்கு போக கூடாதா ? உங்களுக்கு வேண்டியவங்க மட்டும்தான் வேலை பாக்கணுமா ? அப்படி இல்லை தீபா .. குழந்தை கொஞ்சம் பெரியவனாகட்டும் அப்புறம் நானே உன்னை என் சீட்டில் உட்கார வைக்கிறேன் என்றான். இப்படியே சொல்லு பிரேம் . அவள் அன்பில் குறையில்லை.ஆனால் யாரோடும் அதை பகிர்ந்து கொள்ள அவள் தயாரில்லை. சௌமியா நான் ஊருக்கு போய் அம்மாவை பார்த்து வருகிறேன் என்றாள். அவர்களை பலமுறை நான் கூப்பிட்டும் அந்த ஊரை விட்டு வர மறுத்து விட்டார்கள் என்றாள்.சரி நீ போய் வா சௌமியா. பணம் எதுவும் வேண்டுமா என்றான். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நான் வேண்டும் என்றால் ஃபோன் பண்ணுகிறேன். பிரேம் அவளை ஸ்டேஷன் போய் வழி அனுப்பி வைத்தான்.
தீபா சற்றே நிம்மதி அடைந்தாள். ராக்கி பிஸி ஆக இருந்தான். புதிதாக இரண்டு பெண்கள் அப்பாய்ன்ட்மெண்ட் செய்திருந்தான். அவன் மனம் ரஞ்சனியை சுற்றி வந்தது. ரஞ்சனியோ கண்டும் காணாமல் இருந்தாள். நேரிடையாக கேட்டு வம்பு வந்தால் அவளை பார்க்கிற வாய்ப்பு கூட இல்லாமல் போய்விடும் என பயந்தான் . புதிதாக சேர்ந்த இரு பெண்களும் சுறுசுறுப்பாக இருந்தனர். அவர்களை இவன் வேலைக்கு சேர்த்தாலும் ரிப்போர்ட் எல்லாம் பிரேமுக்கு போனது. பிரேம் ராக்கியின் திறமையை மதித்தான். சொன்ன மாதிரி ஒரு மாதத்தில் இலக்கை எட்டி இருந்தான். அவனுக்காக சிறிய அளவிலான பாராட்டு பார்ட்டி வைத்திருந்தான் பிரேம். ரஞ்சனி கலந்து கொண்டிருந்தாள். ராக்கி உண்மையிலேயே நம்முடைய கம்பெனியின் ஸ்டார் என்றான் பிரேம்.ரஞ்சனிக்கு என்னவோ பெருமையாக இருந்தது.
என்ன ராக்கிக்கு பாராட்டு விழாவா என்றாள் தீபா. ஆமாம் மாமாதான் organise பண்ணினாரு . அவனுக்கு ரொம்ப சந்தோஷம் .உனக்கெல்லாம் மாமா பாராட்டு விழா வைக்க மாட்டாரா? மூணு வருஷம் ஆக போகுதே நீயும் எல்லா அச்சீவ்மெண்ட் பண்ணியிருக்கே அப்படித்தானே என்றாள். ம் நிச்சயம் நடக்கும் என்றான் பிரேம்.அக்கா அப்படித்தான் சொல்லுவா.. நம்மளை நாமே பாராட்டிக்க கூடாது என்றான்.குமரன் இப்போதெல்லாம் அவன் வேலையை அவனே பார்க்க போய்விடுகிறான். டைனிங் டேபிள் பார்த்து அமர்ந்து கொள்கிறான். இவனுக்கு அந்த ஸ்கூல் மேல் மரியாதை ஏற்பட்டது.குமரனால் யாருக்கும் தொல்லை இல்லை. அதே சமயம் அவன் அம்மாவிடம் இருக்கும் பிரியம் தன்னிடம் இல்லை என நினைத்து வருத்தம் அடைந்தான். ரஞ்சனி இதெல்லாம் சாதாரணம் போக போக சரியாகிவிடும் என்றாள்.
சௌமியா ஃபோன் பண்ணியிருந்தாள். அவள் அம்மாவுக்கு சீரியஸ் ஆக இருக்கிறது என்று. இவன் உடனே புறப்பட்டான். தீபா குமரனை கவனமாக பார்த்துக்கொள் . ரஞ்சனி நீயும் எந்நேரமாக இருந்தாலும் ஃபோன் பண்ணு என்றான். நான் வருகிறேன் என விரைந்தான். இவன் போய் சேர்ந்த போது சௌமியா ஹாஸ்பிடல் வராண்டாவில் அழுது கொண்டு நின்றாள். என்ன ஆச்சு சௌமியா . ஹார்ட் அட்டாக் . ஆபரேஷன் போய் கொண்டிருக்கிறது என்றாள்.நேற்று நைட் என்னிடம் பேசிவிட்டு படுத்தார். காலையில் நெஞ்சு வலிக்கிறது என்று சொன்னார் . நீ பயப்படாதே நான் இருக்கிறேன் என்றான். அவள் எனக்கு யாரையும் தெரியவில்லை, யாரும் உதவ தயாரில்லை என்றாள். ஆபரேஷன் சக்ஸஸ். 2 லட்சம் பணம் கட்டினான் . பிரேம் எனக்கு நீ செய்த செய்கிற உதவிக்கு .. அதெல்லாம் அப்புறம் அம்மாவை கவனி என்றான்.
ஒரு வாரம் அவர்கள் கூடவே இருந்தான். உன்னால் எப்ப முடியுமோ அப்ப டியூட்டிக்கு வா. அம்மாவை அழைத்து கொண்டு வந்து விடு . நான் ஆபீஸ் அருகிலே வீடு பார்க்கிறேன் என்றான். சரி பிரேம். அவள் அம்மா இவனை கையெடுத்து கும்பிட்டாள் . இவன் என்னம்மா இது என்று சொன்னான். தீபாவிடம் பேசி இரண்டு நாட்கள் ஆயிருந்தது. அவள் கோவத்தில் இருக்க கூடும்.ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தான். யாரும் எதுவும் கேட்கவுமில்லை இவன் சொல்லவுமில்லை. ரஞ்சனிக்கு எல்லாம் தெரிந்திருந்தது. தீபா என கூப்பிட்டான் . என்ன ? குமரன் ஒழுங்காக சாப்பிடுகிறானா என்றான். ம் ஏன் ஃபோன் பண்ணவில்லை என்றாள். அதை எப்படி சொன்னால் உனக்கு புரியும். சிட்சுவேஷன் அப்படி என்றான். மறுநாள் கிளம்பி வேலைக்கு போய்விட்டான்.
ரஞ்சனி அக்கா நீ ஒன்றும் கவலைப்படாதே என்றாள்.
இவன் சௌமியாவுக்கு வீடு ஒன்று பார்த்து அட்வான்ஸ் கொடுத்தான். சௌமியா அம்மாவை அழைத்துக்கொண்டு வந்தாள் . தீபா வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்கி போட்டாள்.சௌமியா வேலைக்கு மறுபடி ஜாயின் செய்துவிட்டாள். குமரன் பள்ளியில் ஆண்டு விழா . அவனுடைய டான்ஸ் பெர்ஃபார்மன்ஸ் இருக்கிறது என்று டீச்சர் சொன்னார்கள். தீபா, ரஞ்சனி, சௌமியா, ராக்கி கூட வந்திருந்தான். பிரேம் அவன் ஆடிய சின்ன சின்ன ஸ்டெப் களை ரசித்து பார்த்தான். டீச்சர்கள் ஒருபுறம் ஆடிக்கொண்டிருந்தனர். பிரேம் அவன் மகனை கட்டி தழுவி கொண்டான் .வெரி குட் என்றான்.எல்லா பெருமையும் உனக்கே தீபா என்றான். அந்த டான்ஸ் வீடியோவை எல்லோருக்கும் அனுப்பினான்.
தீபா சௌமியா வேறு வீட்டுக்கு போனதில் சிறிது நிம்மதி அடைந்தாள். ரஞ்சனி இன்னும் ராக்கி விஷயத்தில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்தாள் . தான் அவனை விரும்புகிறோம் என்பதை அவள் மறுத்து வந்தாள். தீபா நான் உனக்கு மாப்பிள்ளை பார்க்க போகிறேன். நீ சொல்லி இரண்டு வருடம் ஓடி விட்டது என்றாள் தீபா. சரி என்று ரஞ்சனி சொல்லிவிட்டாள். பிரேம் இதை கேள்விப்பட்டதும் மகிழ்ந்தான். என்ன ரஞ்சனி அக்கா சொல்வது உண்மையா ? ஆமாம் மாமா மாப்பிள்ளை பாருங்கள் உங்கள் தரத்தில் பாருங்கள் என்றாள். ரொம்ப நன்றி ரஞ்சனி என்றான். இதை கேள்விப்பட்ட ராக்கி மனதளவில் உடைந்து போனான். சௌமியா அம்மாவை அவ்வப்போது போய் பார்த்து வந்தான் பிரேம். அவள் இப்போது நார்மல் ஆகிவிட்டாலும் கவனம் தேவை என்று சொல்லியிருந்தார்கள்.
பிரேம் அப்பா ஃபோன் பண்ணியிருந்தார். என்னப்பா எப்படி இருக்கிறீர்கள் என்றான். பூஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்றார். ரமேஷ் பேசினான். அண்ணியிடம் பேசவேண்டும் என்றான். ரொம்ப நன்றி அண்ணி . நீங்கள் அட்வைஸ் பண்ணாவிட்டால் நான் அதெல்லாம் விடு ரமேஷ் . எல்லாம் நல்லதுக்குத்தான் என்றாள். நாம் போய் பார்க்க வேண்டும் என்றாள். நீ மட்டும் போய் வா. நான் இப்போது வர முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்றான். சரி நான் தனியாக எப்படி போவது? ரஞ்சனியை கூட்டி போ என்றான். சரி. பூஜாவின் தாய் வீடு திண்டிவனம் பக்கத்தில் இருந்தது. இவர்கள் டிரைன் பிடித்து போனார்கள்.எல்லோரும் பிரேம் வரவில்லையா என்றார்கள். இவள் குழந்தைக்கு தங்க காப்பு போட்டாள்.இரண்டு நாள் தங்கி இருந்து விட்டு வந்தாள்.
ராக்கி ஒரு முடிவுக்கு வந்தவனாக ரஞ்சனிக்கு ஃபோன் பண்ணினான். என்ன விஷயம் ராக்கி என்றாள் . உன்னிடம் பேச வேண்டும். சொல்லு என்ன விஷயம். நான் நேரில் பேச வேண்டும். நான் இப்போதுதான் ஊரில் இருந்து வந்தேன். அதனால் என்னால் உடனே வர முடியாது நாளைக்கு எங்கே மீட் பண்ணலாம் என்றாள்.இவன் இடத்தை சொன்னான். என்ன யார் போனில் என கேட்டாள் தீபா. ராக்கிதான் என்னவோ பேசவேண்டும் என்று சொல்கிறான். நாளைக்கு பார்க்கலாம் என்று சொல்லி இருக்கிறேன். பிரேம் தீபாவிடம் குழந்தை எப்படி இருக்கிறது என்றான். இவள் சொன்னாள். மறுநாள் முன்பே போய் விட்டாள். ராக்கி எனக்கு கல்யாணம் என்றான். இவள் திகைத்து போய்விட்டாள். சமாளித்து கொண்டு எப்போ என்றாள். நாளைக்கு . ரிஜிஸ்டர் ஆபீசில் நடக்கிறது. நீ வர வேண்டும் என்றான். நான் ஏன் வர வேண்டும் என்றாள். அந்த பெண் வேறு யாருமல்ல சௌமியா தான் என்றான். இவள் திடுக்கிட்டாள் . எனக்கு அவள் மேல் பரிதாபம் எல்லாம் இல்லை. எனக்கு பிடித்திருந்தது. அவர்களிடம் கேட்டேன் ஒத்துக்கொண்டார்கள். நான் வருகிறேன் என்றாள் ரஞ்சனி.
பிரேம் ஒரு வார்த்தை சொல்லவில்லை. சௌமியா கழுத்தில் ராக்கி தாலி கட்டினான்.மாலை மாற்றி கொண்டார்கள். தீபா சற்று தாமதமாக வந்தாள். சௌமியா பிரேம் காலில் விழுந்தாள் . ரஞ்சனி தன்னை தேற்றி கொண்டாள். அவள் எது மாயை என்று உணரவில்லை. பிரேமுக்கு மனம் நிறைந்து விட்டது. இனி அவள் வாழ்வை அவள் பார்த்துக்கொள்வாள். ராக்கி அவளுக்கு என்றென்றும் துணை நிற்பான். ராக்கி பெரிய மனதுக்காரன் . ரஞ்சனி வீட்டுக்கு வந்தாள். தான் யார் என அவளுக்கு தெரிந்தது. தன் அப்பாவை நினைத்து பார்த்தாள். தீபா முன்னிலையில் நல்ல காரியம் செய்தான் ராக்கி என்றாள் ரஞ்சனி. சௌமியா வாழ்க்கை தெளிவு பெற்ற நிம்மதியில் பிரேம் தூங்க போனான்.