Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நிழல் தரும் வசந்தம் - 27

குமரனுக்கு மொட்டையடித்து காது குத்த வேண்டும் என அப்பா மறுபடி நினைவுபடுத்தினார். இவனும் தள்ளிப்போட்டுக்கொண்டே போனான். தீபா இந்த மாசமே
கோவிலுக்கு போகலாம் என்றாள். ம் ஏற்பாடு பண்ணுறேன் என்றான்.அப்பாவுக்கு ஃபோன் பண்ணி நல்ல நாளை குறித்து வாங்கினான். ரஞ்சனி உனக்கு ஓகே தானே ஏதும் இம்பார்டண்ட் மீட்டிங் எதுவும் இல்லையே என்றான். அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்றாள். சௌமியா நானும் லீவு போட்டு விடுகிறேன் என்றாள். தீபா நகைக்கடைக்கு போக வேண்டும் இந்த சண்டே என்றாள். எல்லாவற்றையும் செய்து விடலாம் நீ கவலைப்படாதே என்று சொன்னான். இதுவே லேட் ஆக்கிவிட்டீர்கள் என்றாள். அப்பா இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என ஏக்கமாக சொன்னாள்.

ஆபீஸ் ஸ்டாஃப் சில பேர் ஃபங்சன் வர விரும்பினார்கள்.அவர்களுக்காகவும் டெம்போ டிராவலர் வண்டி ஒன்றை அரேஞ்ச் செய்திருந்தான்.முதல் நாளே பிரேம் குடும்பத்தார் கிளம்பி விட்டார்கள். ரஞ்சனி, தீபா , சௌமியா, குமரன் தனக்குத்தான் மொட்டை என்பதை அறியாத வண்ணம் விளையாடிக்கொண்டிருந்தான். சர்ப்ரைஸ் ஆக ராக்கியும் அந்த ஆபீஸ் ஸ்டாஃப் கூட்டத்தில் இடம் பெற்றிருந்தான். என்ன ராக்கியும் வருகிறானா காதுகுத்துக்கு என்றாள் ரஞ்சனி. ஆமாம் என்றான் பிரேம் ஏன் வர கூடாதா ? வந்தா சும்மா இருக்க மாட்டான் , லேப்டாப் ஒன்றை திறந்து வைத்து ஸீன் போடுவான் என்றாள் ரஞ்சனி. அதெல்லாம் தப்பு என்றாள் தீபா.லாட்ஜ் ஒன்றில் எல்லோருக்கும் ரூம் புக் செய்திருந்தான்.இவனுக்கும் தீபாவுக்கும் ஒரு ரூம் சௌமியாவுக்கும், ரஞ்சனிக்கும் ஒரு ரூம் என புக் செய்திருந்தான். மற்றவர்கள் எல்லோருக்கும் கல்யாண மண்டபத்தில் தங்கி கொள்ள ஏற்பாடு . பிரேம் அப்பா எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டார். அவர்களுடைய குல தெய்வம் கோவில் அங்கிருந்து 10கி மி தூரத்தில் இருந்தது.

இரவு 10 மணிக்கு ராக்கி பிரேமுக்கு ஃபோன் பண்ணியிருந்தான் . இங்கே ஒரே கொசு கடி சார் உங்கள் லாட்ஜ் எங்கே இருக்கிறது என்றான். இங்கே எல்லா ரூமும் நிரம்பி விட்டது ராக்கி. ரொம்ப சாரி நான் இப்போதே அங்கு வருகிறேன். கொசுவலை வாங்கி கொண்டு போனான். எல்லோரிடமும் கொசுக்கடிக்காக மன்னிப்பு கேட்டான். அதி காலையிலேயே கோவிலுக்கு கிளம்பி விட்டார்கள் எல்லோரும். ராக்கி ஃபோன் பண்ணியிருந்தான் ரஞ்சனிக்கு எங்கே உன்னை காணோம் என்றான். அதெல்லாம் நான் வர வேண்டிய நேரத்தில வருவேன் என்றாள். அப்ப சரி வைக்கிறேன் . குமரன் அழுது கொண்டிருந்தான் யாரோ அவனுக்கு மொட்டை என்று சொல்லிவிட்டு போய்விட்டார்கள். காது குத்த யார் மடியில் உட்கார வைப்பதென்று டிஸ்கஷன் நடந்தது. ரமேஷ் மடியில் உட்கார வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
பிரேம் பிள்ளைக்கு மொட்டையடிக்கும் இடத்தை பார்வையிட்டான். அவனுக்கு நடந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. இவன் சிறு வயதாக இருந்த போது ரகளை பண்ணிவிட்டான். மொட்டை போடப்பட்டது. குமரன் சந்தனம் தடவிய தலையை தடவி பார்த்தான். அவன் கண்களில் கண்ணீர் எட்டிபார்த்தது. ரஞ்சனி கூடவே ராக்கி சுற்றிகொண்டிருந்தான். சீர்வரிசை சாமான்கள் அடுக்கப்பட்டு இருந்தது. பூஜா நிறைமாத பெண்ணாக இருந்தாள். குமரன் ரமேஷ் மடியில் அழாமல் உட்கார்ந்திருந்தான். சாக்லேட் கொடுத்து அவனை அழாமல் இருக்கும்படி செய்திருந்தார்கள். காது குத்தும் ஆளை பிரேமுக்கு நன்றாக தெரியும் . பார்த்து குத்துயா எனக்கு குத்துன மாதிரி குத்துனே அப்புறம் பேமண்ட் கிடைக்காது என்றான். அதெல்லாம் வலிக்காம காது குத்துவேன். பையன் எவ்வளவு அமைதியாக இருக்கிறான் பாருங்கள் என்றார். ஒரு வழியாக காது குத்தப்பட்டது. இவன் கண்களை மூடிக்கொண்டிருந்தான். என்ன மாமா இதுக்கு போய் பயப்படுறீங்க என்றாள் ரஞ்சனி. குமரன் அழுகை ஓயவில்லை. பிறகு ரஞ்சனி தூக்கி வைத்து கொண்ட பிறகே சமாதானம் ஆனான்.தீபாவுக்கு கண்கள் கலங்கிவிட்டன. ஆனால் சமாளித்து கொண்டாள். சாமிக்கு பூஜைகள் செய்யப்பட்டது. எல்லோருக்கும் கல்கண்டு, பேரீச்சம்பழம். சாத்துக்குடி வழங்கப்பட்டது.

என்ன ராக்கி உனக்கும் காது குத்துவோமா என்றாள். எனக்கு நீதான் தினம் தினம் காது குத்தறியே என்றான். ம் அது சரி கொஞ்சம் ஓவராத்தான் போகிறாய் என்றாள். பந்தி பரிமாறப்பட்டது . சைவம்,அசைவம் இரண்டு வகையும் இருந்தது. ராக்கி அசைவத்தை ஒரு பிடி பிடித்து கொண்டிருந்தான். நீ இப்படி பண்ணுவேன்னு எதிர்பார்க்கலே என்றாள் ரஞ்சனி. என்ன பண்ணிட்டேன், மாட்டுக்கு போட இலையில ஒன்னுமில்லாம பண்ணிட்டியே.. போதும் கிண்டல் பண்ணினது. சௌமியா இருக்கும் இடம் தெரியாமல் இருந்தாள். பிரேம் நிகழ்ச்சி நல்லபடியாக நடைபெற்றதால் மகிழ்வுடன் இருந்தான். கேட்கிறவர்களுக்கு எல்லாம் 200,500 என்று வாரி கொடுத்து கொண்டிருந்தான்.கடைசி பந்தியில்தான் தீபா, ரஞ்சனி,சௌமியா சாப்பிட உட்கார்ந்தார்கள். அவர்கள் சைவ பந்தியில் அமர்ந்திருந்தார்கள் ராக்கி பரிமாற வந்தான்.கண்களால் பேசிக்கொண்டனர் ரஞ்சனியும் , ராக்கியும்.

இன்னும் ஒரு நாள் தங்கி விட்டு போகலாம் என்று சொல்லிவிட்டார் பிரேம் அப்பா. இவன் ரூமை காலி செய்து விட்டு வீட்டுக்கு வந்தார்கள். சௌமியா நான் ஊருக்கு போகவா என்றாள். அதெல்லாம் வேண்டாம் அங்கு யார் இருக்கிறார்கள் பேசாமல் இரு என்றான் பிரேம். காது குத்துக்கு வந்த ஆபீஸ் ஸ்டாஃப் எல்லோருக்கும் நன்றி சொல்லி வழி அனுப்பி வைத்தான். ராக்கி நான் இருக்கவா இல்லை போக வா என்றான் ரஞ்சனியிடம். உன் இஷ்டம் என்றாள். எனக்கு போக மணசில்லை , நீ சொன்னால் இருக்கிறேன் என்றான். சரி என்று சொன்னாள்.குமரன் இப்போது அழுவதை நிறுத்தி விட்டான். சௌமியாவிடம் இருந்தான். சௌமியா நீ ஏன் இவ்வளவு அமைதியாகி விட்டாய் என்றான் பிரேம். எனக்கு இந்த ஊரும் மக்களும் ரொம்ப பிடித்து விட்டது. அதோடு என்னுடைய அப்பாவை நீ நினைவு படுத்துகிறாய் என்றாள். அவள் அழுது விடுவாள் போல இருந்தது.

மறுநாள் எல்லோரும் கிளம்பி விட்டார்கள் ராக்கி நம்முடைய காரிலேயே வரட்டும் என்று சொல்லிவிட்டான் பிரேம்.பிரேம் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். பிரேம் வண்டி ஓட்டினான். என்ன ராக்கி உனக்கு ஒன்றும் குறை இல்லையே கொசுக்கடி தவிர என்றான். அதெல்லாம் ஒன்றுமில்லை சார். ரஞ்சனி நாளைக்கு ஆபீஸ் கட்டாயம் போக வேண்டும் என்றான் பிரேம் . என்ன ராக்கி நீ வருகிறாயா? நான் எப்பவும் ரெடி என்றான். ரஞ்சனியும் சௌமியாவும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து தூங்கிகொண்டிருந்தார்கள். தீபா குமரனுக்கு வெளியில் வேடிக்கை காட்டி கொண்டிருந்தாள். பிரேம் அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். அடுத்த மாதம் இன்னொரு பேரப்பிள்ளை வரப்போகிறது அவர் பிஸி ஆகி விடுவார்.

சௌமியா , ரஞ்சனி இருவரும் தாங்கள் இடம் வந்ததும் தான் எழுந்தனர். என்ன அப்படி தூங்கி இருக்கிறோம் என்று வெட்கப்பட்டனர். ராக்கி எங்கே என்றாள் ரஞ்சனி அவன் அப்போதே போய் விட்டான் என்றான். வீட்டுக்கு வந்ததும் குமரனை தூங்க வைத்தாள். சௌமியாவும், ரஞ்சனியும் அவர் அவர் அறைக்கு சென்று விட இவன் உடை மாற்றினான். எல்லோரும் சௌமியா யார் என்று கேட்டார்கள் என்றாள் தீபா. அதெல்லாம் பெரிது படுத்தாதே என்றான். நீ என்ன சொன்னாய் . தூரத்து சொந்தம் என்று.அவளை ஆழமாக பார்த்தான். நீ எதற்க்கும் கவலைப்படாதே நான் இருக்கும் வரை என்றான். ஃபிரிஜில் இருந்து ஐஸ் வாட்டர் எடுத்து குடித்தான். அவனுக்கு சௌமியாவை பிரியக்கூடிய சக்தி இல்லை என்று தோன்றியது.

சீக்கிரமே ஏதாவது செய்தாக வேண்டும் என்று பட்டது.ரஞ்சனி நீ முன்னாடி ஆபீஸ் போ நான் மதியம் வருகிறேன் என்றான். சரி மாமா. நீ அந்த ராக்கியோடு கண்ணாமூச்சி நடத்த வேண்டாம் வேலையை மட்டும் பார் என்றான். சௌமியாவும் கிளம்பிவிட்டாள். தீபா சற்று லேட் ஆக எழுந்து கொண்டாள்.அவளுக்கு காபி கொண்டு போய் கொடுத்தான். அவள் குமரனை தூக்கிகொண்டு கிச்சன் போனாள். என்ன ஆபீஸ் போகலையா ? ஸ்கூல் அட்மிஷன் பேசினோமே போய் பார்த்துட்டு வரலாமா என்றான். இன்னைக்கு நாள் நல்லா இருக்கு. சரி நான் குளிச்சிட்டு வரேன். இவனை கொஞ்சம் பிடிங்க என்றாள்.
பையனை பிளே ஸ்கூல் சேர்க்க ஒத்துக்கொண்டார்கள். ஒரு நாளைக்கு 4 மணி நேரம். இவளுக்கு ரொம்ப சந்தோஷம். அவசியம் ஆபீஸ் போகனுமா என்றாள். ஆமாம் என்றான். என் மேல கோவமா ? அதெல்லாம் ஒண்ணுமில்லை . மதியம் சாப்பிட்டுவிட்டு போகலாம் என்றாள். சரி.

திங்கள்கிழமை முதல் குமரன் பிளே ஸ்கூல் போவான்.சௌமியாவும், தீபாவும் என்னடா பையா ஸ்கூல் போறியா என்றார்கள் குமரனை பார்த்து. முதல் நாள் வகுப்பு போகும் போது அழுதான். அப்புறம் போக போக சரியாகி விட்டது. குழந்தைகள் எவ்வளவு பேரை சமாளிக்கிறார்கள். பிரேம் ராக்கியிடம் நாம் நம்முடைய டார்கெட் அதிகபடுத்த வேண்டும் என்றான். நீ புதிதாக இரண்டு பேரை உனக்கு அசிஸ்டண்ட் ஆக எடுத்துக்கொள். ரஞ்சனி தனியாக இயங்கட்டும் என்றான். சரி சார். ரஞ்சனி தேவையில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறாள் அவள் இப்போது ஃபோகஸ் இல்லாமல் இருக்கிறாள். எல்லாமும் ஒரே மாதத்தில் நடக்க வேண்டும் ராக்கி . நிச்சயமாக. இதை அறிந்த ரஞ்சனி என்ன மாமா புதிதாக ரெண்டு பேரா ? ஆமாம் நீ போய் வேலையை பார் என்றான்.

சௌமியாவை தன் ஆபீஸ் வர விருப்பமா என கேட்டான் பிரேம். அவள் மையமாக தலையாட்டினான்.நீ இங்கே உன் விருப்பமான துறையை தேர்ந்தெடுக்கலாம் என்றான்.தீபா என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் என்றாள். சௌமியா அந்த கம்பெனியில் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறாள். அதுதான் நம்முடைய
கம்பெனிக்கு மாற்றினேன். சௌமியா நிம்மதி பெருமூச்சு விட்டாள். ரஞ்சனி அடிக்கடி முன்பை போல ராக்கியை பார்க்க முடியவில்லை. அவளுக்கு தன்னை யார் என்று அறியும் நேரம் வந்தது. ராக்கி உடன் பேச வேண்டும் போல இருந்தது. ஒன்றுமில்லாவிட்டாலும் துணை என்று ஒருவர் இருந்தால் நல்லதுதானே.பிரேம் குமரன் ஸ்கூல் போய் குமரன் என்ன செய்கிறான் எப்படி இருக்கிறான் என விசாரித்து வந்தான். தீபா , சௌமியா , ரஞ்சனி ஆகியோர் பிஸி ஆகி விட்டார்கள். அப்போதுதான் அந்த செய்தி வந்தது. பிரேம் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை என்று. இவன் இப்போதைக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டான் ரமேஷ். நாங்கள் பார்த்துகொள்கிறோம் என்றும் சொல்லி விட்டார்கள்.
பிரேம் பணம் அனுப்பி வைத்தான். பிரேம் அப்பாவிடம் பேசினான். எனக்கு ஒண்ணும் ஆகாதுப்பா என்றார்.