ராக்கியை பற்றி தான் தேவைக்கதிகமாக சிந்திக்கிறோமோ என ரஞ்சனி எண்ணினாள். பிரேம் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டான். தீபாவுக்கு குமரனை பார்க்கவே நேரம் சரியாக இருந்தது.இது பற்றியெல்லாம் அவள் சிந்திக்கவும் இல்லை . அதன் விளைவுகள் பற்றி கவலைப்படவும் இல்லை. சில சமயம் நவீனை நினைப்பதுண்டு. அவனோடு தன் வாழ்க்கை ஏன் அமையவில்லை. எவ்வளவு உற்சாகமான நாட்கள் அவை என்று எண்ணிக்கொண்டாள் . அப்போது நான் சிறு பெண் இப்போதும் அப்படியே இருக்க முடியுமா ?என்னவோ காலமாற்றத்தில் சுழன்று கொண்டே இருக்கிறேன் எனவும் சொல்லிக்கொண்டாள் .
சௌமியா தன்னை தீபா புரிந்து கொள்ளுவாள் என எதிர்பார்த்தாள். தன்னுடைய நிலை யாருக்கும் வரக்கூடாது அது ரொம்பவும் துரதிர்ஷ்டமான நிலை. இழப்புக்கு மேல் இழப்பு. பிரேம் ரொம்ப நல்லவனாய் இருப்பது தான் பிரச்சனை. நான் காதலித்த பிரேம் அப்பாவி. அவனுக்கு தேவைகள் இருக்கவில்லை. இப்போதோ அவன் ஒரு நிறுவனத்தின் முதலாளி. பல பேரை சமாளித்து கம்பெனியை நடத்திக்கொண்டு இருக்கிறான். பிரேம் இல்லாவிட்டால் நான் இல்லை . இப்படியாக சிந்தனை நீண்டது.அன்று சண்டே என்பதால் எல்லோருமே லேட் ஆக சாப்பிட வந்தார்கள். உப்புமா செய்திருந்தாள் தீபா. என்ன உப்புமாவா என்றான் பிரேம். இது உனக்கு பிடிக்காதே பிரேம் என்றாள் சௌமியா. இருவரது கண்களும் ஒரு நொடி சந்தித்து கொண்டன. இன்னைக்கு ஒரு நாள் சாப்பிடு பிரேம் என்றாள் தீபா.
ரஞ்சனி நான் வேணும்னா நூடுல்ஸ் போடட்டுமா மாமா என்றாள். அதெல்லாம் வேண்டாம். உப்புமாவே சாப்பிடுகிறேன் என்றான். எனக்கு நூடுல்ஸ் போட்டு கொள்கிறேன் உங்களுக்கு சௌமியா அக்கா ? எனக்கு உப்புமாவே போதும் என்றாள். தீபா இங்கே என்ன நடக்குது? ரஞ்சனி பேசாம சாப்பிடு என்றாள். எங்கே போகலாம் என்றான். மூவி போகலாமா ?குமரன் சும்மா இருக்க மாட்டான்.தீம் பார்க் போகலாம் என்றார்கள் . தீபா எனக்கு ஓகே போகலாம் என்றாள்.குமரன் உற்சாகமாக தலையாட்டினான். அவன் அம்மாவை அவன் பின்பற்றினான். வாட்டர் ஃபால்ஸ் இருக்கும் தீம் பார்க்க போனார்கள். இன்னைக்கு இன்னும் என்னவெல்லாம் பார்க்கணுமோ என பிரேம் முணுமுணுத்தான்.
ஒரு 30கி மி பயணம் செய்த பின் அந்த தீம் பார்க் தென் பட்டது. பக்கத்திலேயே முதலைப்பண்ணை, பாம்பு பண்ணை போன்றவை இருந்தது. ரொம்பவும் முக்கியமான இடத்துக்குத்தான் வந்திருக்கிறோம் போல என்றெண்ணினான்.ரஞ்சனி துள்ளல் போட்டுக்கொண்டு ஓடினாள். ஒரு தொப்பி ஒன்றும் போட்டிருந்தாள்.ராட்டினங்கள் சுற்றிகொண்டிருந்தன, மேஜிக் ஷோ கூட இருந்தது. யாரோ பாட தெரியாமல் மேடையில் ஏறி பாடிக்கொண்டிருந்தார்கள். தீபா , சௌமியா இருவரும் ஆளுக்கொரு திசையில் சென்றனர். இவன் அங்கிருந்த மரத்தடியில் நின்றான். சேஃப்டி எல்லாம் பக்கா தானே என ஆபரேட்டர் அருகே போய் விசாரித்தான்.சுதந்திரமாய் இருப்பதற்கும் கட்டுப்பாடுகள் தேவைப்படுகிறது.
தீபா எங்கிருந்தோ பிரேம் பிரேம் என கூப்பிட்டாள். வானத்தில் இருந்து அசரீரீ வருவது போல அவள் குரல் ராட்டினத்தில் இருந்து கேட்டது. இவன் குழந்தையை வைத்திருந்தான் அம்மா பாரு ,அம்மா பாரு என்று காட்டினான். குமரன் ஏதோ ஐஸ் கிரீம் விற்பவனை நோக்கி பார்வையை வீசினான். சௌமியா எங்கு போனாள். அவள் கார் டாஷ் பகுதியில் போகிற வருகிற கார்களை இடித்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் நிஜமான சந்தோஷம் இருந்தது. ரஞ்சனி தண்ணீர் ஃபால்ஸ் ஒன்றில் ஆடிக்கொண்டிருந்தாள்.மூன்று பெண்கள் முன்னூறு ஆசைகள் . குமரனை வாங்கி கொண்ட தீபா ஐஸ்கிரீம் வாங்கினாள்.சௌமியாவும் வந்தாள். ரஞ்சனிக்கு வர மனசே இல்லை. சௌமியாவிடம் டவல் குடுத்து அனுப்பினான் பிரேம். வா ரஞ்சனி இன்னும் நிறைய இருக்கிறது என்றாள். மனசே இல்லாமல் எழுந்து வந்தாள்.
முதலைப்பண்ணையும், பாம்பு பண்ணையும் நல்ல நிலையில் இருந்தது. ஆனால் அது வெயில் காலம் என்பதால் நிறைய தண்ணீருக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பாம்புகள் விஷம் எடுப்பதை வேடிக்கை பார்த்தார்கள். ரஞ்சனி எல்லாவற்றையும் வீடியோ எடுக்க தவறவில்லை. என்ன ரஞ்சனி இப்படியே காலத்தை ஒட்டி விடலாம் போல என்றான் ஆமாம் மாமா அவை எப்படி காலத்தை பற்றி கவலைப்படாமல் இருக்கின்றன என்றாள். சௌமியா சிரித்தாள். சௌமியா அவைகளின் காலம் இந்த பண்ணை முதலாளியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றாள். ம் அது சரிதான் . மதியம் அங்கேயே ஒரு ஹோட்டலில் சாப்பிட்டார்கள். ராக்கியிடம் இருந்து ஃபோன் வந்தது பிரேமுக்கு . என்னாச்சு ராக்கி ரொம்ப நேரமாக ரஞ்சனிக்கு ஃபோன் போடுகிறேன் லைன் கிடைக்கவில்லை. என்ன விஷயம் ராக்கி நாங்கள் தீம் பார்க் வந்திருக்கிறோம் . ஓ சாரி எனக்கொரு டாக்குமென்ட் தேவைப்பட்டது அதுதான் கூப்பிட்டேன். நான் இப்போதே அனுப்பி வைக்கிறேன் என்றான்.
இந்த ராக்கி தொல்லை தாங்கமுடியல என்றாள் ரஞ்சனி. அவன் சின்சியர் பையன் என்றான் பிரேம் . ஆஹா என்றாள் ரஞ்சனி. மாலை 4 மணிக்கெல்லாம் வீடு திரும்பி விட்டார்கள். நீ எதற்கும் ராக்கியிடம் பேசிவிடு என்றான் பிரேம். சரி. அவள் பேச ஆரம்பித்தாள் ஃபோன் அவன் வைப்பதாய் தெரியவில்லை. இவனுக்கு வீடு என்ற ஒன்று இருக்குமா என்று தெரியவில்லையே என்றாள்.ஒரு வழியாய் ஃபோன் வைத்தான். சண்டே அதுவுமாய் 1 மணி நேரத்தை வீணாக்கி விட்டான். குமரன் விளையாண்ட களைப்பில் தூங்கி கொண்டிருந்தான். தீபா பிரேம் எங்கே என தேடினாள். அவன் ரூமில் ஏதோ படித்து கொண்டிருந்தான்.பிரேம் இன்னைக்கு நல்லா பொழுது போச்சு என்றாள். இவன் படிப்பதிலேயே குறி ஆக இருந்தான்.அவள் அந்த புத்தகத்தை வாங்கி வைத்தாள். என் கூட பேசவே நேரம் இல்ல உனக்கு என்றாள். அது அப்படியில்ல உன் நேரத்தை நான் எடுத்துக்க கூடாதில்லையா என்றான். நீயே இன்னைக்கு ஒரு நாள் தான் ரெஸ்ட் ல இருக்குற என்றான். ரொம்ப பேசாதே என்று அவனை அணைத்து கொண்டாள். அவள் கன்னங்கள் சிவப்பாய் மாறி இருந்தன. நாம அமெரிக்கா போகிறோமோ பிரேம் ? நிச்சயமா நான் ரொம்ப ஆசையா இருக்கேன் .பிரேம் அவளை ஆழமாக பார்த்தான். நான் உன்னை ரொம்ப கஷ்டபடுத்துறேனா தீபா.ஏன் அப்படி நினைக்கிற ? சும்மாதான் . அவள் அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
ரஞ்சனியும் சௌமியாவும் சாயங்காலம் மூவி போனார்கள். தீபா வரவில்லை என்று சொல்லிவிட்டாள். பிரேமும் தீபாவும் மட்டும் வீட்டில் இருந்தனர். குமரன் விளையாடிக்கொண்டிருந்தான். என்ன பிரேம் நீதான் அவர்களை அனுப்பினாயா? உன் வேலையா இது என்றாள். உன்னை லவ் பண்ணுவதற்கு யாருடைய பர்மிஷனும் தேவையில்லை என்றான். அப்போ லவ் பண்ணிட்டே இருப்பியா? நிச்சயமா . நீ சௌமியாவை லவ் பண்ண அளவுக்கு என்னை லவ் பணனுவியா பிரேம் . இது என்னோட பேராசை என்றாள். சீ பைத்தியம் என்றான்.
குமரனை அழைத்துகொண்டு மாளிகை பொருட்கள் வாங்க சூப்பர் மார்க்கெட் போயிருந்தார்கள்.பிரேம் அவள் சொன்னதை யோசித்து பார்த்தான். நாம் உண்மையாகவே சௌமியாவை நேசிக்கும் அளவு தீபாவை நேசிக்கிறோமோ என நினைத்தான். அவர்கள் மூவி பார்த்துவிட்டு வந்து விட்டார்கள். வெளியிலேயே நின்று பேசி கொண்டிருந்தார்கள். சாரி நாங்கள் உடனே வந்து விடலாம் என்று தான் போனோம் என்றாள் தீபா. அதனால் பரவாயில்லை ரஞ்சனிக்கு அந்த ஹீரோவை ரொம்ப பிடித்துவிட்டது என்றாள் சௌமியா .
இரவு டின்னர் அமைதியாக சாப்பிட்டு முடித்தார்கள். அந்த ஹீரோ யார் என பிரேம் கேட்டு தெரிந்து கொண்டான். எல்லோரும் கார்டன் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். என்ன படம் நல்லா இருந்ததா. அதுக்கென்ன ஹீரோ நல்லா ரொமான்ஸ் பண்ணி இருந்தார். ஃபைட் பண்ணியிருக்கார். ஆனால் ஒரே ஒரு குறை ?என்ன படம் வெறும் 3 மணி நேரம் தான் என்றாள் ரஞ்சனி. நாம் அவரை முடிந்தால் நேரில் பார்ப்போம் என்றான் பிரேம் . நிஜமாகவா ? நிஜமாய்த்தான் சொல்கிறேன். நம்மால் முடியுமா ? ப்ரமோஷன் ஈவண்ட் கூப்பிட்டால் வர போகிறார் . ரொம்ப தாங்க்ஸ் மாமா. சரி நேரமாகிறது போய் தூங்குங்கள் என்றான். தீபா தூங்கி கொண்டிருந்தாள். அவள் கேட்ட கேள்வி எவ்வளவு நிஜம் நான் அவளை சந்தோஷமாக வைத்திருக்கிறேனா ? திடீரென அவள் விழித்து கொண்டாள் . என்ன பிரேம் இன்னும் தூங்கவில்லையா ? பால் சுட வைத்து தரவா என்றாள். சரி குடு என்றான்.
குமரன் அவன் எதிர்காலம் எல்லாம் திட்டமிட வேண்டும். இப்படி பல சிந்தனைகள் ஓடின. சௌமியா ? அவளுக்கு நான் என்ன செய்தால் அவளால் சுயமரியாதையுடன் வாழ முடியும். தீபா பால் கொண்டு வந்தாள். பால் குடித்தவன் என்ன சிந்தனை பிரேம் எப்போ பார்த்தாலும் . அது ஒண்ணுமில்லை நம்ம பையன் எதிர்காலம் பத்திதான். அவனுக்கு இப்போதான் 4 வயசு முடியபோகுது அதுக்குள்ள என்ன . ம் எனக்கு தோணுது உனக்கு , ரஞ்சனிக்கு எல்லாம் நான் செய்ய வேண்டியதை செய்யணும்னு தோணுது என்றான். நீ அவசரப்படாதே பிரேம் என்றாள். வா வந்து படு,உனக்கொரு கதை சொல்லறேன் என்றாள். பேய்க்கதையா? என்ன கிண்டலா என்றாள்.
பிரேம் ஆபீஸ் கிளம்பிவிட்டான். தீபா வெறுமையாய் இருந்த வீட்டை பார்த்து பெருமூச்சு விட்டாள். அப்பா என்னை விட்டு நீங்கள் போயிருக்க கூடாது.குமரன் ஸ்கூல் அட்மிஷன் சம்பந்தமாக ஸ்கூல் ஒன்றில் விசாரித்தாள். அவர்கள் காலேஜ் பீஸ் கேட்டார்கள். நானே என பிள்ளைக்கு நன்றாய் சொல்லிக்கொடுப்பேன் என்று வந்து விட்டாள்.குமரா நீ நன்றாக படிக்க வேண்டும் . பீஸ் ஒரு பிரச்சனை இல்லை என்று பிரேம் சொல்லி இருந்தான். ஆனால் இவளுக்கு அவர்கள் பிள்ளையை எப்படி நடத்துவார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டது. மெஷின் மாதிரி ஹோம் வொர்க் கொடுப்பார்கள்.மதியம் சாப்பாடு எடுத்து வருகிறேன் என்று பிரேமிடம் சொல்லி இருந்தாள்.அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லியும் இவள் கேட்கவில்லை. ரஞ்சனியும், பிரேமும் அவள் கூட சாப்பிட்டனர். ரொம்ப தாங்க்ஸ் தீபா என்றான்.
ஸ்கூல் அட்மிஷன் பற்றி சொன்னாள். அதை நான் பார்த்துககொள்கிறேன் என்றான் பிரேம்.நீ கவலைப்படாதே உன் பிள்ளை நிச்சயம் ஒரு நல்ல மனிதனாக வருவான்.மற்றதெல்லாம் பிறகுதான் என்றான். சரி நான் கிளம்புகிறேன் என்றாள். குமரனை பக்கத்து வீட்டில் விட்டு வந்திருக்கிறேன் என்றாள். சரி ஜாக்கிரதையா போ. ரஞ்சனி ராக்கியிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். எனக்கும் இப்படி ஒரு சொந்தம் இருந்தால் நன்றாக இருக்கும் என்றான்.நீ குடுத்து வைத்தவள் ரஞ்சனி என்றான். எப்படி சொல்கிறாய் உன் மாமாவும், அக்காவும் உன்னை நன்றாக பார்த்துககொள்கிறார்கள் என்றான்.