Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நிழல் தரும் வசந்தம் - 19

குமரகுரு இறந்த அதிர்ச்சியில் இருந்து பிரேம் இன்னும் மீளவில்லை. தீபாவும், ரஞ்சனியும் இன்னும் அழுது கொண்டிருந்தனர். பிரேம் அம்மா , தம்பி, அப்பா உள்ளிட்டோர் அவர்களை எப்படி சமாதானபடுத்துவது என்று புரியாமல் தவித்தனர். கதிரேசன், சுபா வந்திருந்தனர். இப்போதான் எல்லாத்தையும் ஒழுங்கு படுத்தினார். அவருக்கு தன் பொண்ணுங்க மேல இருந்த பாசம் விலைமதிப்பில்லாதது என்றான் பிரேம். அவர் கடைசி காரியங்களை பிரேம் செய்தான். சொந்தக்காரர்கள், ஆபீசில் வேலை பார்ப்பவர்கள், பிஸினஸ் பார்ட்னர்கள் என எல்லோரும் வந்திருந்தனர். அவர்கள் ரஞ்சனியை நல்ல இடத்தில் கல்யாண செய்து கொடுக்க வேண்டியது பிரேமின் பொறுப்பு என்றனர். பிரேம் தீபாவை என்ன சொல்லி சமாதானபடுத்துவது என தவித்தான். அவர்களுடைய உலகமே அப்பா தான். ஒரு வாரம் கழித்து பிரேம் குடும்பத்தார் கிளம்ப தயாரான போது தீபா, நீங்களும் எங்களை தனியாய் விட்டு போக வேண்டாம். எங்களோடு வந்து விடுங்கள் என்றாள்.

சரிம்மா இன்னும் ஒரு வாரத்தில் வருகிறோம் என்று சொல்லிவிட்டு போனார்கள். தீபாவுக்கும், ரஞ்சனிக்கும் அது பெரிய ஆறுதலாய் இருந்தது. பிரேம் ஆபீஸ் வேலைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தினான்.குமரகுருவுக்கென ஒரு பிரத்யேக அஞ்சலி கூட்டம் ஆபீஸில் நடத்தப்பட்டது. ரஞ்சனி அடுத்து படிப்பு முடித்து கம்பெனி நிர்வாகத்தை பார்த்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். பல முக்கியமான விஷயங்களை பிரேமிடம் முன்கூட்டியே குமரகுரு சொல்லி வைத்திருந்ததால் அவனால் ஒரு முடிவுக்கு வர முடிந்தது. ரஞ்சனியிடம் காலேஜ் போய் வா என சொன்னான். எல்லா பொறுப்பையும் பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினான். நாம் அவர் விட்டு சென்ற கடமைகளை நன்றாகவே முடிப்போம் என தீபாவிடம் சொன்னான். அதுவே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்றான் .

தீபா பிரேம் அம்மா , அப்பா தங்குவதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்தாள். அவர்கள் குறை ஏதும் சொல்லும் வகையில் நடந்து கொள்ள கூடாதென நினைத்தாள். ரமேஷ் தன் சொந்த ஊரில் தொழில் தொடங்கி இருப்பதால் இப்போதைக்கு வர முடியாது . அவ்வப்போது வந்து அப்பா அம்மாவை பார்த்து செல்கிறேன் என்றான். பிரேம் அப்பா நான் இங்கே எப்படி சும்மா இருப்பேன் ஏதாவது வேலைக்கு போகிறேன் என்றார். இத்தனை காலம் கஷ்டப்பட்டது போதும். கொஞ்சமாவது ஓய்வெடுங்கள் என்றான் பிரேம். பிரேம் அம்மா அவன்தான் இத்தனை தூரம் சொல்கிறானே உங்களது பிடிவாத குணத்தை மாற்றிக்கொண்டால் தான் என்ன என்றாள். சரி சரி நான் உங்களுக்கெல்லாம் தொந்தரவாக இருக்க ஆமாட்டேன் என்றார்.

பிரேம் அம்மா சமையல் செய்வதிலும், மற்ற வேலைகள் செய்வதிலும் தீபாவிற்கு உதவினாள் . பிரேம் ஆபீசில் சில பிரச்சனைகள் உண்டான போதும் சமாளித்தான்.என்ன பிரேம் ஆபீஸில் பிரச்னையாமே என்றாள் தீபா . ஆமாம் சில பேர் நான் அந்த பதவியில் இருப்பதை விரும்பவில்லை என்றான்.பிரேம் எல்லாம் சரியாகிவிடும் என நம்புகிறேன் உனக்கு எதையும் சமாளிக்கும் திறமை இருக்கிறது.தீபா அப்பா அம்மா எப்படி இருந்தாலும் எதை செய்தாலும் சற்று பொறுத்துக்கொள் அவர்கள் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் என்றான். அதெல்லாம் நான் என் சொந்த அப்பா அம்மா போல பார்த்து கொள்வேன் என்றாள். தாங்க்ஸ் தீபா . நான் நாளை சீக்கிரமாக ஆபீஸ் போக வேண்டும் இப்போது போய் தூங்குகிறேன் என்றான். சரி பிரேம். ரஞ்சனி அவ்வபோது கவலை கொண்டவளாக தோன்றினாள். நீ ஒன்றும் பயப்படாதே என பிரேம் அப்பா சொல்லி வந்தார்.

குமரகுரு இறந்து மூன்று மாதங்கள் ஓடி விட்டன.ஸ்வாமிகளை பார்த்து வரலாம் என பிரேம் சொன்னான். ரஞ்சனி, தீபா இருவருடனும் போனான். பிரேம் இது மிகப்பெரிய இழப்புதான். ஆனால் நீ தேங்கி விடாதே ..ரஞ்சனியை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றார். ரஞ்சனி நான் படிப்பை நிறுத்திவிட்டு கம்பெனி நிர்வாகத்தில் பங்கெடுக்கவா என்றாள். இன்னும் ஒரு வருடம் தான் இருக்கிறது. அந்த டிகிரி வாங்கிவிட்டு நீ வா. கம்பெனி உன்னுடையது எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றான். தீபாவும் அதை ஆமோதித்தாள் . பிரேம் ஸ்வாமி என்ன சொன்னார் என கேட்டாள் அம்மா. இவன் சிலவற்றை சொன்னான். உனக்கு நல்லதுதான் நடக்கும் என்றாள். சுபா ஃபோன் பண்ணியிருந்தாள். தனது வீட்டில் தனக்கு தெரியாமல் மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் அவர்கள் இன்று பெங்களூர் பையன் ஒருவரை மீட் பண்ண சொல்லி இருப்பதாகவும் சொன்னாள். நல்ல விஷயம்தானே இது . நானும், தீபாவும் வருகிறோம். எத்தனை மணிக்கு, எங்கே என மெசேஜ் பண்ணு என்றான்.

சுபாவுக்கு விருப்பமில்லாத போதும் அவளுடைய அப்பா அம்மாவுக்காக இந்த பெண் பார்க்கும் படலத்துக்கு ஒத்துக்கொண்டாள். அது ஒரு ஹோட்டல் ஆக இருந்தது.சுபாவுடைய அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் வரவில்லை. சுபா அம்மா வந்திருந்தார். மாலை 3 மணி போல இவர்கள் அங்கே போய் விட்டார்கள். சுபா ஏனோ தானோ என டிரஸ் பண்ணிக்கொண்டு வந்திருந்தாள். வந்த பையன் ஸ்மார்ட் ஆக இருந்தான். அவர்களுக்கு அவன் ஒரே பையன். மேட்ரிமோனியில் உங்கள் ப்ரோஃபைல் பார்த்தேன் எனக்கு பிடித்து விட்டது என்றான். சுபா அம்மா பேசினாள். எனக்கும் இவ ஒரே பொண்ணுதான். இவளுக்கு விவாகரத்து ஆன பின்னே அவளே வேலை தேடிக்கிட்டா. அந்த தைரியமும் தன்னம்பிக்கையும் தான் எனக்கு பிடிச்சிருக்கு என்றான் மாப்பிள்ளை பையன். நாங்கள் பெரிதாக எதையும் எதிர் பார்க்கவில்லை நீங்களே பார்த்து செய்யுங்கள் என்றார் பையனின் அப்பா.எல்லோரும் சேர்ந்து உணவருந்தினார்கள்.

சுபா தன் சம்மதத்தை தெரிவித்து விட்டாள். எல்லோருக்கும் சந்தோஷம் . இத்தனை வருடம் பிடிவாதமாய் இருந்தவள் இப்போதாவது கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்டாளே என மகிழ்ச்சி அடைந்தான்.நாங்கள் நாள் பார்த்துவிட்டு உங்களுக்கு சொல்கிறோம் . அந்த நாளில் நிச்சயதார்த்தம் வைத்து கொள்ளலாம் என்றார்கள். சுபா, சுபா அம்மா இருவரும் பிரேமுக்கும், தீபாவுக்கும் நன்றி சொன்னார்கள். எல்லாவற்றையும் நீங்கல் ரெண்டு பேரும்தான் முன்னின்று நடத்தி தர வேண்டும் என்றாள் சுபா அம்மா. நிச்சயமாக சுபா என்னுடைய அக்கா மாதிரி என்றாள். இனி என்ன டேட்டிங் தான், மேரேஜ் போட்டோ ஷூட் தான் என்றான் பிரேம். சும்மா கிண்டல் பண்ணாதே பிரேம் அவர் பேசிய விதம் எனக்கு பிடித்திருந்தது தவிர அப்பா,அம்மாவுக்கு பாரமாய் இருப்பதை நான் விரும்பவில்லை என்றாள். அவரோடு வெளிநாடு போய்விடலாம் என யோசிக்கிறேன் . இது நல்ல யோசனை என்றான்.

ரஞ்சனி மாப்பிள்ளை போட்டோவை ஆர்வமாக பார்த்தாள் . நன்றாக இருக்கிறார் என்றாள். நிச்சயதார்த்ததுக்கு நாம் எல்லோரும் செல்ல வேண்டும் என்றான்.சுபாவுக்கு கல்யாணம் என்பது எல்லோருக்கும் நிம்மதியை கொடுத்தது.லலிதா மேடம் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தாள். தான் தன்னுடைய சொந்த ஊருக்கே போக விருப்பபடுவதாக சொன்னாள் . சுபா நீங்கள் இத்தனை வருடம் எனக்கு துணையாக இருந்து விட்டீர்கள் . நீங்கள் இல்லாமல் எப்படி இருப்பேன் என்றாள். அதெல்லாம் ஒரு குழந்தை வந்தால் எல்லாம் மாறிவிடும் . நான் வீட்டை விற்க போவதில்லை . உன் கல்யாணம் முடியும் வரை பயன்படுத்திக்கொள் என்றாள் லலிதா.

சுபா மாப்பிள்ளை பெயர் வாசன். வாசன் பிரேமிடம் பேசினான். நான் அன்றே உங்களிடம் பேச நினைத்தேன் என்றான். சொல்லுங்கள் வாசன் எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் என்றான். மதன் என்பவர் நேற்று என்னிடம் பேசினார். ஆமாம் சுபாவின் முன்னாள் கணவர். அவர் சொன்னதை நான் நம்பவில்லை. நம்பவும் மாட்டேன். நீங்கள் அவனிடத்தில் ஜாக்கிரதையாக இருங்கள் என்றான் பிரேம். இந்த விஷயம் சுபாவுக்கு தெரிய வேண்டாம் அவள் வருத்தப்படுவாள் என்று பிரேம் கூறினான். சரி நான் பார்த்துக்கொள்கிறேன். நிச்சயதார்த்தம் ஒரு சண்டே அன்று வைக்கப்பட்டு இருந்தது. பிரேம் அப்பா, அம்மா, ரஞ்சனி, தீபா எல்லோரும் வந்திருந்தார்கள். சடங்குகள் நிறைவாய் நடைபெற்றது.சுபாவும், வாசனும் மோதிரங்கள் மாற்றிக்கொண்டனர்.கல்யாண பத்திரிக்கையை அய்யர் வாசித்தார். சுபா வாசனுடன் மனம் திறந்து பேசினாள். இன்னமும் மதன் என்னை பற்றி தவறாக பேசிக்கொண்டுதான் இருக்கிறார்,ஆனால் நான் அதை பற்றி கவலைப்படவில்லை என்றாள்.

நிச்சயம் முடிந்ததும் விடை பெற்றுக்கொண்டான் பிரேம் .ரஞ்சனி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கிப்ட் ஒன்றை சுபாவுக்கு வாங்கி வந்திருந்தாள்.தீபா பையன் நல்ல பையன் பெருந்தன்மையா இருக்கிறான் என்றாள். இதெல்லாம் காலப்போக்கிலே மாறாமல் இருக்க வேண்டும் என்றான். அதுவும் சரிதான். அந்த மதன சும்மா விடக்கூடாது என்றாள். நாம் என்ன செய்ய முடியும். எல்லாவற்றையும் நல்லா வாழ்ந்து காட்டி கடந்து போக வேண்டும் என்றான். சௌமியா ஃபோன் பண்ணியிருந்ததாக சுபா சொன்னாள். அவள் கல்யாணத்துக்கு வருவதாய் சொல்லி இருந்தாள்.
கல்யாணம் பெங்களூரில் தான். தான் உயிருக்குயிராய் சௌமியாவை காதலித்த நாட்களை நினைத்து பார்த்தான்.

நாட்கள் ஓடின இரண்டு ஆண்டுகள் கல்லூரி படிப்பை நிறைவு செய்து இருந்தாள் ரஞ்சனி. அவளுக்கு வேறு எதிலும் நாட்டம் இல்லை.அன்று அதிகாலை தீபாவுக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. டாக்டரிடம் அழைத்து போனான். அவர்கள் மகிழ்ச்சி நிரம்பிய செய்தி சொன்னார்கள் தீபா தாயாக போகிறாள் என்று. வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷம். அதோடு இனிதான் கவனமாக இருக்க வேண்டும் என பிரேம் அம்மா கட்டாயமாக சொல்லிவிட்டாள். தீபா பிரேமை அணைத்துக்கொண்டாள் . எல்லாம் நல்லதுக்குத்தான் என்றான். சுபா நேரில் வந்து வாழ்த்தினாள். பிரேம் நீ அப்பாவாக போகிறாய் அதோடு உனக்கு கூடுதல் பொறுப்பும் என்றாள். டாக்டர் அறிவுரைகளை கவனமாக ஃபாலோ செய்தாள் தீபா. ரமேஷ் செய்தி கேட்டு சந்தோஷப்பட்டான்.

ரஞ்சனி இந்த வீட்டுக்கு வாரிசு வரபோவதை எண்ணி மகிழ்ந்தாள்.பிரேம் அம்மா தீபாவை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டாள். பிரேம் அப்பா ஏதோ விளையாட்டு சாமான்கள் வாங்கி வந்த வண்ணம் இருந்தார். என்ன அப்பா அதற்குள் என்றான் பிரேம். என்னவோ எனக்கு பிடித்திருந்தது என்றார். தீபா ஒரு முழு வாழ்வின் பலனை அடைய காத்திருந்தாள். மழலை செல்வம் கிடைக்க அவள் ரொம்ப நாள் காத்திருக்க வேண்டியிருந்தது. பிரேம் ஆபீஸ் வேலைகளை குறைத்து கொண்டு தீபாவுடன் நேரம் செலவிட்டான். தாங்க்ஸ் பிரேம் என்றாள். இனி குழந்தை பிறந்தால் வேலைக்கே போகமாட்டான் போல என கிண்டல் செய்தாள் பிரேம் அம்மா . சுபா கல்யாணத்துக்கு எல்லோருக்கும் டிரஸ் எடுக்க வேண்டும் என நினைத்தான். அதன் படியே எல்லோரையும் ஷாப்பிங் கூட்டி போனான்.