குமரகுரு மற்றும் அவருடைய நடவடிக்கை புதிதாக இருந்தது பிரேமுக்கு. ஆனாலும் பிரேம் அவருக்கு உறுதுணையாக இருந்தான் . அவர் ஓய்வெடுக்க வேண்டியதாக நினைத்தான். தீபாவிடமும் ரஞ்சனியிடமும் அது குறித்து பேசவும் செய்தான். அவர்கள் எவ்வளவோ சொல்லியும் குமரகுரு கேட்க மறுத்துவிட்டார்.பிரேமுடைய தம்பி ரமேஷ் தன்னுடைய சொந்த நிறுவனத்தை நடத்த லோனுக்கு ஏற்பாடு செய்யும்படி பிரேமை கேட்டிருந்தான் அது அவ்வளவு சுலபம் இல்லை அவர்கள் வீட்டை அடமானம் வைத்து தான் லோன் வாங்க முடியும்.தன்னுடைய தம்பி ரமேஷ் லோனுக்காக அலைவதாக சொல்லி குமரகுருவிடம் வருத்தப்பட்டான் வேணும்னா பிரேம் நாமே பினான்ஸ் பண்ணலாமா.. அது வேண்டாம் மாமா அப்பா அந்த வீட்டை அடகு வைக்க ஒத்துக் கொள்ள மாட்டார்.பிறகு என்ன செய்யப் போகிறாய் பிரேம்? அவனை இங்கு வர சொல்லி இருக்கிறேன் அவனுடைய திட்டம் என்னவாக இருக்கிறது என்பதை முழுமையாக அறிந்த பிறகுதான் எவ்வளவு லோன் தேவைப்படும் என முடிவு செய்ய முடியும். அப்பாவிடமும் பேசலாம் என இருக்கிறேன் என்றான்.
பிரேம் ரமேஷ் க்கு போன் செய்தான் எப்போது வருகிறாய் என்ன விசாரித்தான். நாளை மறுநாள் வருவதாக சொன்னான். பிரேம் தீபாவிடமும், ரஞ்சனியிடமும் அந்த தகவலை சொன்னான். தீபா பெரிதாக அதைப் பற்றி விசாரித்துக் கொள்ளவில்லை. ரமேஷ் இரண்டு நாட்கள் கழித்து வந்து சேர்ந்தான்.ரமேஷ் தன்னுடைய திட்டத்தை பிரமிடமும், குமரகுருவிடமும் சொன்னான் இது எப்படியும் ஒரு கோடியை தொட்டுவிடும் என்றான் பிரேம். சொந்தமாக தொழில் தொடங்க அது போதுமா என கேட்டான் பிரேம். தற்போதைக்கு சிறிய இன்வெஸ்ட்மெண்ட்டே போதும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். அப்பா என்ன சொல்கிறார் அவருக்கு வீட்டை வைப்பதில் உடன்பாடு இல்லை நானும் ஆறு மாசத்தில் வீட்டை மீட்டு விடலாம் என சொல்லியும் அவர் நம்ப மறுக்கிறார் புரிகிறது. பேங்கில் செக்யூரிட்டி கேட்கிறார்கள் நீ ஏதாவது உதவ முடியுமா பிரேம். சமீபத்தில் குமரகுரு எழுதிக் கொடுத்த பிராப்பர்ட்டிகள் கொஞ்சம் இருந்தது பிரேமிடம்.
தீபா அதெல்லாம் வேண்டாம் அவசரத்துக்கு அதை பயன்படுத்திக் கொள்ளலாம். நான் வேண்டுமானால் என்னுடைய நகைகளை தருகிறேன் என்றாள். ஒரு நிமிடம் பிரேம் திடுக்கிட்டான். அதைப்பற்றி அவன் யோசிக்கவில்லை நகையை அடமானம் வைக்க அவளுக்கு எப்படி மனம் வந்தது? அவள் அப்பா அவளுக்காக ஆசையாய் செய்து போட்டது. தீபாவை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றான். நல்லா யோசிச்சு தான் சொல்றியா இது ஒரு வகையான திட்டமிடப்படாத பிளான் சக்சஸ் ஆகாமலே போகலாம் என்றான் அவன் உன்னுடைய தம்பி பிரேம். அவன் தான் அப்பாவை பார்த்துக் கொள்கிறான் அதனால் பரவாயில்லை எப்படியும் மீட்டுக்கொள்ளலாம். நீ இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கிறாயா? தீபா.. நிச்சயமாக.. ரொம்ப நன்றி அண்ணி நான் இதை எதிர்பார்க்கவில்லை என்றான் ரமேஷ். குமரகுரு தீபாவிடம் நன்றாக யோசித்து விட்டாயா பிறகு எங்களை குறை சொல்லக்கூடாது இது வெறும் பேப்பர் பிளான் அது நடைமுறைப்படுத்தப்படும் போது நிறைய சிக்கல்கள் வரும் நகையை மீட்க காலதாமதம் ஆகும் அதை எல்லாம் நீ புரிந்து கொண்டிருக்கிறாயா என்றார். நான் ஒன்றும் சின்ன பிள்ளை இல்லை நான் பிரேமை நம்புகிறேன் ரமேஷ் நிச்சயம் அதை மீட்டு தருவார் என்றாள். அப்புறம் நாளைக்கு நல்ல நாள் நாளையே நாம் பேங்குக்கு செல்வோம் என்றான் பிரேம். எல்லோரும் அதற்கு ஒத்துக்கொண்டனர்..
மறுநாள் பேங்குக்கு தீபா, ரஞ்சனி, பிரேம் ,ரமேஷ் ,குமரகுரு எல்லோரும் கிளம்பினர். பிரேம் அப்பா இதை கொஞ்சமும் விரும்பவில்லை ஆனால் தீபாவிடமிருந்து இப்படி ஒரு கருணையை அவர் எதிர்பார்க்கவில்லை. தீபாவுக்கு அவர் நன்றி சொன்னார். பிரேமுடைய அம்மாவும் தீபாவுக்கு நன்றி சொன்னார். எப்படியும் ரமேஷ் தன் தொழிலில் வெற்றி பெறுவான் என நம்பினார் பிரேமின் அம்மா. நகை அடகு வைத்து ரமேஷூடைய அக்கவுண்டில் பணத்தைப் போட்டார்கள். ரமேஷ் நெகிழ்ந்து போனான், அண்ணி நீங்கள் செய்த இந்த உதவி நிச்சயம் பல பேருக்கு உதவும். நான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவேன் என்றான்.இன்னும் ஒரு ஆறு மாதத்தில் எல்லாமும் நடக்கும் என்றான் ரமேஷ். அவனை ஸ்டேஷன் வரை சென்று வழி அனுப்பி வைத்தார்கள் தீபாவும் பிரேமும். தீபா உன்னுடைய பெருந்தன்மையான குணத்தை இப்போதுதான் நான் அறிகிறேன் . ஏன் பிரேம் சும்மா அதைப் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிறாய். நான் உன்னை நம்புகிறேன் என்றாள்.
தொழில் தொடங்க வேண்டிய பணம் கிடைத்து விட்டதால் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் ரமேஷ் .என்ன ரமேஷ் நினைத்ததை சாதித்து விட்டாயா? அவர்கள்தான் பெருந்தன்மையாக சொன்னால் நீயும் அதை ஏற்றுக் கொள்வாயா எனக்கு சங்கடமாக இருக்கிறது என்றார் பிரேம் அப்பா. எவ்வளவு காலத்துக்குத்தான் நாம் கஷ்டப்பட முடியும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து தான் ஆக வேண்டும் என்றான் ரமேஷ். ரிஸ்க் நீ எடு ஆனால் அடுத்தவர் பணத்தில் எடுக்காதே என்றார். அம்மா பாருங்கள் அப்பாவை நெகட்டிவ் ஆகவே பேசுகிறார் என்றான்.தம்பி அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது நீ கவனமாக இருக்க வேண்டும் இது கொஞ்சம் நெஞ்ச தொகை அல்ல. நீ நிதானமாக ஒவ்வொரு படியாக முன்னேற வேண்டும் அதுவரை அந்த பணத்திற்கு வட்டி கட்ட வேண்டும் ஆகையால் நீ பொறுப்புடன் செயல்படு என்று சொன்னார் பிரேம் அம்மா.அண்ணி நம்புகிற அளவுக்கு கூட நீங்கள் இருவரும் என்னை நம்ப மாட்டீர்கள் அதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றான் ரமேஷ். அதுதான் எங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கிறது அவள் பிரேமின் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளாள். அதை கெடுத்து விடக்கூடாது. சரிம்மா என்றான்.
இரண்டு நாட்கள் கழித்து குமரகுரு காலை மணி பத்து ஆகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. தீபா பதட்டமானாள். அறைக்குள் நுழைந்து பார்த்தபோது குமரகுரு மயக்கத்தில் இருப்பது தெரியவந்தது அவசர அவசரமாக காரை எடுத்துக் கொண்டு ஹாஸ்பிடல் விரைந்தாள். பிரேமும் வந்தான். என்ன ஆச்சு டாக்டர் நல்லா தானே இருந்தாரு. அவருக்கு பிளட் பிரஷர் கொஞ்சம் ப்ராப்ளமா இருக்கு. அப்சர்வேஷன்ல வச்சிருக்கோம் கொஞ்ச நேரம் கழிச்சு சொல்றோம் என்றார்கள். ரஞ்சனியும் காலேஜிலிருந்து வந்து விட்டாள் என்ன ஆச்சு அப்பாவுக்கு என்றாள். மாலை ஏழு மணி போல டிஸ்சார்ஜ் செய்தார்கள். பிரேம் டாக்டர் என்ன சொன்னார்கள்? சாதாரண மயக்கம் தான் வயது மூப்பு காரணமாக ஏற்படும் மயக்கம் தான் என்றார்கள். எனக்கு என்னவோ பயமாக இருக்கிறது பிரேம். நாம் வேறு ஸ்பெஷலிஸ்ட்களிடம் அவரை அழைத்துப் போகலாமா நீ ஏன் பயப்படுகிறாய் அப்படி என்றால் டாக்டர்கள் பரிந்துரைத்திருக்க மாட்டார்களா... நீ டென்ஷன் ஆகாதே. எல்லாம் சரியாகிவிடும் அவரை. ஓய்வெடுக்க வைத்து நேரத்துக்கு சாப்பிட வை.. என்ன பிரேம் பயந்து விட்டாயா எனக்கு ஒன்றும் இல்லை.. நான் இறந்து விட்டேன் என்று நினைத்தேன் . அப்படி பேசாதீர்கள் மாமா இது ஒரு கஷ்டமான சூழ்நிலை என்றார்.
மூன்று மாதத்தில் கம்பெனி அடிக்கல் நாட்டு விழாவிற்காக அழைப்பிதழ் அனுப்பி இருந்தான் ரமேஷ் எல்லோருக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது. சொந்த ஊரிலே கம்பெனி தொடங்குவது அவ்வளவு சுலபம் இல்லை ஆனால் ரமேஷின் விடாமுயற்சியால் அது சாத்தியமாயிற்று.. எல்லோரும் அவசியம் வர வேண்டும் என்ன போனில் சொன்னான். குமரகுரு நான் வரவேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன் ஆனால் டாக்டர்கள் ஓய்வெடுக்க சொல்லி விட்டார்கள். பிரேம் தீபா ரஞ்சனி ஆகியோரை அனுப்புகிறேன் என்றார்.எல்லோரும் மகிழ்ச்சியுடன் பிரேம் ஊருக்கு காரில் புறப்பட்டார்கள் தீபாவுக்கு அதில் பெருமையும் ஏற்பட்டது பிரேம் என் நம்பிக்கை வீண் போகவில்லை என்றாள். இப்பதானே ஆரம்பிச்சு இருக்கான் போகப் போக தெரியும் என்றான் பிரேம் சும்மா கிண்டல் பண்ணாத அவன் நிஜமாகவே முன்னுக்கு வந்துருவான் என்றாள். ரஞ்சனி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள். ரஞ்சனிக்கும் அப்படி ஒரு எண்ணம் இருந்தது தானும் ஒரு பிசினஸ் உமனாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டாள்.மாலையில் வீடு போய் சேர்ந்தார்கள். மறுநாள் பூமி பூஜை நடைபெற்றது பிரேம் உட்பட எல்லாரும் கலந்து கொண்டார்கள் அந்த ஊர் பெரிய மனிதர்கள் சிலர் கலந்து கொண்டார்கள் எல்லோரும் ரமேஷின் உழைப்பை பாராட்டினார்கள். மதியம் விருந்து பரிமாறுப்பட்டது. கதிரேசனும் வந்திருந்தான். கதிரேசன் தீபாவை நலம் விசாரித்தான் என்ன விசேஷம் உண்டா என கேட்டான் இப்போது என்ன அவசரம்?என்றாள். விழாவிற்கு வந்த எல்லாருக்கும் நன்றி தெரிவித்தான் ரமேஷ். ரமேஷ் உடைய அப்பா இன்னும் நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தார். தீபாவை பார்த்ததும் அவர் நெகிழ்ச்சியுடன் அவளுடைய கைகளை பிடித்துக் கொண்டார்.ரொம்ப நன்றி மா.. இந்த காலத்துல இப்படி எல்லாம் யாரு உதவி செய்வா, நீ செஞ்ச இந்த உதவியை காலத்துக்கும் மறக்க மாட்டேன் என்றார்.
அவர்கள் எல்லோரும் மறுநாளே கிளம்பி விட்டார்கள் என்ன அவசரம் பிரேம் அதற்குள்ளாக கிளம்பி விட்டாய் என்றான் ரமேஷ். அங்கே மாமாவை தனியாக விட்டு விட்டு வந்திருக்கிறோம் உதவிக்கு யாரும் இல்லை வேலைக்காரர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் உதவியை அவர் விரும்பியதில்லை அதனால் நாங்கள் புறப்படுகிறோம் என்றான். என்ன அண்ணி நீங்களாவது தங்க கூடாதா இரண்டு நாட்கள் கழித்து போலாமே? இல்லை அப்பா இப்ப ரொம்ப சோர்வா இருக்காரு அவரை உடனிருந்து பாத்துக்கணும் அதனால நாங்க எல்லாரும் பக்கத்துல இருக்கணும் என்றாள் . வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது குமரகுரு பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் அவரைப் பார்த்தவுடன் தான் எல்லோருக்கும் நிம்மதி உண்டாயிற்று.. இப்போ எப்படி இருக்கீங்க மாமா ? பரவாயில்லை பிரேம்.
பிரேம் ஆபீஸ் கிளம்பி விட்டான் தீபா அப்பா சாப்பிட வாங்க என்றாள். நீ சாப்பிட்டாயா என்றார் இல்லை வாங்க சேர்ந்து சாப்பிடலாம். நேரத்துக்கு சாப்பிடுமா. தீபா அவரோட சேர்ந்து சாப்பிட்டாள். ஊருக்கு போறேன் ஊருக்கு போறேன்னு சொல்லி என் உடம்பே போச்சு என்றார். உங்களை இப்படி பார்க்கிறதுக்கு கஷ்டமா இருக்குது.பூமி பூஜை போட்டோக்களை பார்த்துக் கொண்டிருந்தார் பரவாயில்லை. நிறைய பேர் வந்திருக்கிறார்கள் போட்டி நிறைந்த உலகம் என்றார்.மதியம் என்ன செய்யட்டும் உங்களுக்கு பிடித்ததை செய்கிறேன் அப்பா என்றாள். நீ சிரமப்பட வேண்டாம் தீபா எப்போதும் என்ன செய்வாயோ அதையே செய். சரி அப்பா நான் மார்க்கெட் போய் விட்டு வருகிறேன் உங்களுக்கு ஏதாவது வாங்க வேண்டுமா? ஒன்றும் வேண்டாம். மதியம் ஒரு மணி போல திரும்பி வந்தாள். அப்பா என்று கூப்பிட்டாள். பதில் இல்லை அவர் ரூமுக்கு போய் பார்த்தாள். குமரகுரு மேஜையில் சாய்ந்து இறந்திருந்தார் .