Read The Outerverse - Part 3 by tamilarasan in Tamil Fiction Stories | மாட்ருபர்த்தி

Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

The Outerverse - Part 3

பெரிய டொமேன் மற்றும் Elariah-வின் சிறைபிடித்தல்

அதே நேரத்தில், Elariah, வெளிப்புற வெற்றிட சாவி-யை பயன்படுத்தி
Aethion-ன் சர்வலோகத்தை காண டொமேனுக்குள் நுழைந்தாள்.
திடீரென்று, அந்த டொமேன் கடுமையாக குலுங்க ஆரம்பித்தது.
அவள் அச்சத்தோடு சுற்றி பார்த்தாள்—
நிழல்களுக்குள்ளிருந்து சில தெரியாத உயிரினங்கள் வெளியே வந்தன.

Elariah:

> “நீங்க யார்? இங்க எப்படி வந்தீங்க?”


மர்மமான ஒருத்தன் முன் வந்து, அச்சுறுத்தும் குரலில் சொன்னான்:

> “என் பெயர் Vael’Zaroth அது இப்ப முக்கியமில்லை 
நீ எங்க கூட வந்தா உனக்கு நல்லது. இல்லனா‌— நீ ரொம்ப வருத்தப்படுவ 


Elariah அந்த அதிர்ச்சியில் aethion கொடுத்த bracelet ஐந்து முறை தட்ட போகும்போது Vael’Zaroth அவள் கையைப் பிடிக்கிறான்.

 Vael’Zaroth சொல்றான்:

ஓ ஓ இவ்வளவு அவசரம் எதுக்கு?  

Vael’Zaroth அந்த braceletடை பார்க்கிறான் பிறகு:

இது அவன் கொடுத்தது தான 
அவனை நீ தாராளமா கூப்பிடலாம் ஆனா அதுக்கு முன்னாடி இப்ப நீ எங்க கூட வரணும். 
---


அடுத்த பக்கம், Aethion வெளிப்புற வெற்றிட ஒன்றுக்கு வந்து, Velthurion-னை சந்தித்தான்.

Aethion:

> “நான் ஒரு டொமேன பார்த்தேன்.
ஆனா அது சாதாரண டொமேன் மாதிரி இல்லாம ரொம்ப பெருசா இருந்துச்சு .
அதுக்குள்ள நிறைய பேர் இருந்தாங்க.
இது எப்படி சாத்தியம்?”



Velthurion தலையை தாழ்த்திக் கொண்டு, மிக கனமான குரலில் பேசினான்:

> “இந்த விஷயத்தை நாங்க முன்னாடியே சொல்லி இருக்கணும், Aethion.
ஆனா அதை நீ கண்டுபிடிச்சுட்டதால… இனிமேல் அதை மறைப்பதற்கு அர்த்தமே இல்ல.
அந்த டொமேன்… ஒருகாலத்தில் நாம நம்பிய ஒருவருடையது.”



Aethion:

> “என்ன?”



Velthurion ஆழமா மூச்சு விட்டான்.

> “அவன் பெயர் Zaryon.
ஒருகாலத்தில் நம்ம மிக நெருக்கமான நண்பன்.
உன்னைப் போலவே எண்ணற்ற சர்வலோகங்களையும் நிஜத்தையும் காப்பாற்றினவன்.
ஆனா ஒரு நாள் எங்களோட யார்கிட்டயும் பேசாம அவனோட டோமின் குழியே மறைமுகமா ஏதோ பண்ணிட்டு இருந்தா


Velthurion தொடர்ந்தான்:

> “ஒரு நாள் தெரிஞ்சது—
அவன் ஒரு செயற்கை கல்லை உருவாக்குறான்.
நாங்க கேட்டோம்: இத வச்சு என்ன செய்யப் போறே?’


அவன் சொன்னான்:

> ‘நாம நிறைய நல்லது பண்ணி இருக்கோம்.
எண்ணற்ற சர்வ லோகங்களையும் உலகங்களையும் காப்பாத்திருக்கோம்…
ஆனா நம்ம ஆசை பத்தி என்ன நம்மளோட கனவுகளை பத்தி என்ன?
நமக்குன்னு ஒரு சர்வ லோகத்தா உருவாக்கக்கூடாதா?
ஒருமுறை தோல்வி அடைந்ததால வெளிப்புற வெற்றிடத்திற்கு வந்தோம் .
ஆனா இப்போ… நமக்கு சர்வ லோகம் எப்படி உருவகுது அப்படிங்கிற எல்லா அறிவு ஞானமும் நமக்கு இப்போ இருக்கு  
நாம் எல்லாரும் ஒன்றிணைஞ்சா நாம தோத்து போன இடத்துல மறுபடியும் ஜெயிக்கலாம் மறுபடியும் சர்வ லோகங்கள இந்த முறை சரியா கட்ட அமைக்கலாம் அதனாலதான் இதை நான் கண்டுபிடிச்சிருக்கேன் இந்த செயற்கை கல்லை வெளிப்புற வெற்றிட 3-க்குள் அனுப்பினா அது தானாகவே வெடிச்சு 
ஒரு சர்வலோகம உருவாகும். அதுக்கப்புறம் நாம அங்க போய் நம்மளுக்கு ஏத்த மாதிரி அதை வடிவமைச்சுக்கலாம்’”



சிலர் அதை ஏற்றுக்கிட்டாங்க.
சிலர் மறுத்தார்கள்.

அவர்கள் சொன்னார்கள்:

> “நாம செயற்கை சர்வலோகம் உருவாக்கி அது சரியான படைப்பா இருந்தாலும் 
Separateverse அதை ஏத்துக்கிட்டு வாயிலை திறக்குமா? 
. இத நாம செய்யறதுனால. அங்க குழப்பம் தான் உருவாகும் ‘உண்மையான கல்’ எல்லையற்ற லோகத்திலிருந்து
வெளிப்புற வெற்றிட 3-க்கு வந்தாலும்—
அது ஒன்றும் உருவாக்காம போய்விடும்.”



Zaryon பதில் சொன்னான்:

>“ ஒரு விஷயத்தை முயற்சி பண்றதுக்கு முன்னாடியே அதுல நாம தோத்துருவோம்னு சொல்றது முட்டாள்தனம். கொஞ்சம் இப்படி யோசிச்சு பாருங்க நம்ம எவ்வளவு சர்வ லோகங்களையும் பல உலகங்களையும் காப்பாத்திருப்போம் நம்மளுக்குன்னு ஒரு சர்வ லோகங்களை உருவாக்குவதற்கு நாம தகுதியானவங்க இல்லையா!

ஆனால் இன்னும் சிலர் வாதிட்டனர்: 

இதுல நாம வெற்றி பெறுவோமோ இல்ல தோல்வி அடையுறோமோ 
நீ இயற்கை விதிகளோட விளையாடுற நீ எல்லாத்தையும் ரிஸ்க் எடுக்க வைக்கிற
நீ நெனச்சது சாதிக்க இது வழியில்ல



---

பிறகு இதே ஒரு போராக வெடித்து

இரு பிரிவும் மோதின.
Zaryon-ஐ ஆதரிச்சவர்கள் ஆபத்தானவர்கள் என்று அறிவிக்கப்பட்டார்கள்.
 
அந்த போர் இடையில், அவர்கள் கோபத்தோடு கத்தினார்கள்:

> “எங்கள நீங்க வெற்றிட இரண்டுக்கு தள்ளிநிங்கனா —
நீங்க ஒரு சர்வ லோகத்தை கூட காப்பாத்த முடியாதபடி.
எல்லாத்தையும் அழிச்சிடுவோம்!”



ஒருபுறமும் அவர்களை அடக்க முடியவில்லை.
இறுதியில் அவர்களை வெளிப்புற வெற்றிட இரண்டுக்கு தள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது 

அதுதான்…நாங்க செஞ்ச மிகப்பெரிய தவறு.

அவங்க வெளிப்புற வெற்றிட இரண்டுக்கு போனதுக்கப்புறம் —
அவர்கள் அந்த இடத்தையே கைப்பற்றினர்.
தீய உயிர்களுக்கு தங்களது சக்தியை அளித்தார்கள்.
அவர்களுக்கு டொமேன்கள் எப்படி உருவாக்குவது என்று கற்றுக்கொடுத்தார்கள்.
அதிலிருந்துதான்… அனைத்து தீய ஆட்சியாளர்களும்
டொமேன்களை உருவாக்கத் தொடங்கினர்.



இதற்கெல்லாம் காரணம்—
ஒரு காலத்தில் எங்களுடன் இருந்த முன்னாள் நண்பர்கள்தான்.


நாங்க பல முறை எங்க நண்பர்கள் இருக்கிற டொமின் ஆக்சஸ் பண்ணி அவங்கள திருத்தலான்னு நினைச்சோம் ஆனா அவங்க எங்களை கண்டுக்காம அந்த இரண்டு பாதைல போயிட்டு இருந்தாங்க அப்புறம் காலப்போக்கில் அவர்கள் தீயவர்களாகவே ஆயிட்டாங்க.

 அதுக்கப்புறம் அவர்கள் தங்கள் டோமினை மறைக்க ஒரு Reflective Mirror Barrierரா போட்டுட்டாங்க அதுக்கப்புறம் எங்களால அவங்களோட அந்த பெரிய டோமினா அடைய அல்லது அணுக பல முறை முயற்சித்தோம் - ஆனால் எங்களால முடியல   


---


Velthurion:

> “நீ பார்த்த அந்த பெரிய டொமேன்…
Zaryon கூட போன எங்களோட நண்பர்கள்தான் நங்க பல முறை அந்த டோமின அணுக பார்த்தோம் ஆனா எங்களால முடியல
ஆனா நீ எப்படி பார்த்த? முதல்ல எப்படி அணுகின?
 .”



Aethion:

> “இப்ப புரியுது. ஏன் உங்களால அந்த மத்த டோமின்குல்லையும் போக முடியல அப்படின்னு 
ஆனா இதெல்லாம் ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லால?

Velthurion:

> “ நாங்க இதுல உன்ன ரொம்ப தள்ளக்கூடாதுன்னு நினைச்சோம் உனக்குன்னு சொந்த சர்வ லோகம் இருக்கு.
அதனால நீ மீதமுள்ள டொமின்குள்ள இருக்கிற அந்த தீய ஆட்சியாளர்கள் அழிச்சு அவங்களோட அந்த டொமீனா அணுகுற சாவியோ பொருளோ மட்டும் எங்களுக்கு நீ கொடுத்தா அத வைத்து அந்த டோமின்களை பூரா அழிச்சிட்டு கடைசில எங்க நண்பர்கள் இருக்கிற அந்த கடைசி பெரிய டோமினா எதிர்கொள்வோம் அதுதான் எங்க திட்டமா இருந்தது 


Aethion:

> “ சாவி இல்ல பொருளா நீங்க என்ன சொல்றீங்க?



Velthurion:

> “ஒரு டொமேனின் தீய ஆட்சியாளரை கொன்னா—
அவன் உடல் ஒரு சாவியாவொ அல்லது ஏதோ ஒரு பொருளாவும் மாறும்.
அதைக் கொண்டு அந்த டொமேனுக்குள்ள நுழையவோ இல்ல அணுகவோ முடியும்.”



Aethion:

> “எனக்கு அப்படி நடக்கல.
அவர்கள் உடல் சக்தி ஆற்றலாக மாறி நேரா என்னுள் சென்று விடுது.
நான் அதை தடுக்க முடியல நா இதெல்லாம் இயல்பு என்று தான் நினைச்சேன்



(இந்த வார்த்தையை கேட்ட உடனே—
அங்க இருந்த சக்தி வாய்ந்தவர்கள் அதிர்ச்சியில் நின்றார்கள்.
யாராவது ஒரு டோமின்காளை உருவாக்கினால், அவர்கள் அதற்குள் முழுமையான கட்டுப்பாட்டைப் பெறுகிறார்கள் - மேலும் அந்த டோமின்குள்ளியே இருந்து வெளியில் மறைமுகமாக சர்வலோகம், பிரபஞ்சம் போன்றவற்றுக்கு அணுகலையும் பெறலாம். ஆனால் அந்த டொமைன் படைப்பாளர் கொல்லப்படும்போது, அவர்களின் சாராம்சம் பொதுவாக அவர்களின் டோமின்களை அணுகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக - ஒரு சாவியாக - மாறும்.)


Velthurion:

> “அப்படியா…?
அப்போ அந்த டோமின் இன்னும் அழியாமா அப்படியே இருக்கா?”



Aethion:

> “ஆம். அது இருக்கு.”



அனைவரும் அதிர்ந்தனர்.




Velthurion மெதுவாக:

> “Aethion…
நீ absorbing பண்ண்ற சக்தி…
அது எங்களால் கூட அவ்வளவு எளிதா பண்ண முடியாது

இன்னும் இங்குள்ள சிலர் சொன்னார்கள்: 

 மேலும் நீங்கள் கிட்டத்தட்ட சர்வ வெல்லமையுள்ள அல்லது சர்வ வல்லமையுள்ள சக்தி வாய்ந்தவர்களை உங்கள் உடலுக்குள் நேரடியாக உறிஞ்சிக் கொள்கிறீர்கள் அதுவும் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல்? எங்களைப் பொறுத்தவரை, எங்கள்‌ எதிர்ப்பு சக்திகள் அத்தகைய சக்தியை உடனடியாக அழித்துவிடும்... ஆனால் உங்கள் உடல் அதனுடன் இணக்கமாக இருக்கிறது - எப்படி?”


பண்டைய மனிதர்கள் மெதுவாகப் புரிந்துகொள்ளத் தொடங்கினர்
பண்டைய புத்தகத்தில் எழுதப்பட்ட தீர்க்கதரிசனத்தை அவர்கள் நினைவு கூர்ந்தனர்
ஒருவர் சமநிலையற்ற நிலையிலிருந்து எழுவார். அவர் அழிவை உள்வாங்குவார், ஆனால் அவர் மூலமாத்தான் , அனைத்து தீய சக்திகளும் விழும்.”

அவர்களின் எண்ணங்களில்:

>நமது கணிப்பு உண்மையாக இருந்தால்... ஏதியோனின் சக்தி சர்வவெல்லமையையும் தாண்டி இருக்கலாம்.

---



ஆனால் திடீரென்று இங்கே ஒரு hologram தோன்றியது.

அது Elariah.

Aethion அதை பார்த்து அதிர்ச்சியடைந்தான்.

Elariah-வின் பின்னால்
தீய Zaryon நின்று பேசினான்:

> “நீ இவளை நம்பி உன் பொறுப்பை கொடுத்தது—
உன் மிகப்பெரிய தவறு, Aethion.
அவள் உனக்கு உயிரோட வேண்டும்னா
உடனே இங்க வா. அதுவும்
தனியா.”



Elariah கத்தினாள்:

> “Aethion! இவன் பேச்சை கேட்டு இங்க வராதே!”



அவன் அவள் கழுத்தை நசுக்க ஆரம்பித்தான்.

> “ > "நீ புரிந்துகொள்வாய் என்று நம்புகிறேன், ஏத்தியன். அவளை நீ உயிருடன் பார்க்க விரும்பினா. முதல்லா நீ இங்க வரணும்”


 பிறகு ஹோலோகிராம் மறைந்தது.

Aethion பீதி, கோபம் கலந்து:

> “நான் இப்பவே அங்க போய் ஆகணும். !”



Velthurion மற்றும் சிலர் அவனைத் தடுத்தார்கள்.

Velthurion:

> “Aethion அவங்க சொன்ன சத்தியத்தை அவங்க பின்பற்றுவாங்கன்னு நினைக்கிறிய?



ஆனா ஒரு பண்டைய இங்குள்ள மனிதர் சொன்னான்:

> “அவனை விடுங்கள்.
இது அவனோட முடிவு.”



Velthurion பின்னடி திரும்பி பேசுவதற்கு குள்ளேயே Aethion அங்கே டெலிபோர்ட் ஆகிவிட்டான்.
 .




Velthurion இதைக் கண்டு பயத்துடன் மனதில் நினைத்தான்.

> “இது சரியில்லை…இப்படி நடக்க கூடாது அவசரப்பட்டுட்டியே Aethion