Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

வாழ்வில் மறக்க முடியாத ஒரு சந்திப்பு

அந்த ஆடிட்டோரியம் முழுவதும் மக்கள் கூட்டங்களாலும் பத்திரிக்கை நிருபர்களாலும் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது.

அங்கு வந்து இருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்த நிருபர்கள் அனைவரும் பிரமித்து விட்டார்கள்,அவர்கள் பிரமிப்பிற்கு காரணம் அந்தக் கூட்டம் முழுவதும் வந்தது ஒருவருக்காக என்பதால் மட்டுமே.

அது சாதனையாளர்களுக்கு, விருது வழங்கும் விழா இங்கு எத்தனையோ சாதனையாளர்கள் வந்தாலும் அங்குள்ள மக்கள் அனைவரின் கையிலும் அவள் ஒருவளின் பெயரை இடம் பெற்றிருந்தது, அவள் ஆழினி .

 அனைவரும் அவள் பெயர் தாங்கிய பேனரோடு அவள் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது அந்த ஆடிட்டோரியம் கதவு திறக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு சூழ கம்பீரமாக நடந்து வந்தால் ஆழினி,அவள் வரவும், அந்த நிகழ்ச்சிக்கு விருது வழங்குவதற்காக வந்திருந்த விருந்தினர் அவளுக்கு இந்த ஆண்டின் தலை சிறந்த எழுத்தாளருக்கான விருதே ஆழினிக்கு கொடுத்தார்.

ஆழினியும் சிறு புன்னகையோடு அந்த விருதை வாங்கிக் கொண்டால், அவள் விருது வாங்கும் போது அங்கு சூழ்ந்திருந்த மக்கள் கூட்டம் அனைவரும் ஆழினி,ஆழினி என்று அவள் பெயரை கோஷமிட்டார்கள்.

அவர்களே பார்த்து ஒரு தலை தலையசைப்பை கொடுத்தவள் மேடையை விட்டு இறங்கினால் அவள் இறங்கவும் பலாப்பழத்தில் ஈ மொய்ப்பது போல பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டார்கள்.

 அனைவரிடமிருந்து சரமரியாக கேள்விகள் வந்தது அதில் ஒரு பத்திரிக்கையாளர் வார்த்தைகளில் விஷம் தடவிய படி மேடம் நீங்க எப்படி எழுத்தாளர் ஆனீங்க, அதுக்கு உனக்களுக்கு என்ன தகுதி இருக்கு ஒரு வருஷம் முன்னாடி வர நீங்க என்ன தொழில் செய்தீங்கன்னு மறந்துட்டீங்களா என்ன, என்று ஆழினியே கஷ்டப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு கேள்வி கேட்டார் அந்த நிருபர்.

அந்த நிருபரின் வார்த்தைகளில் தடவப்பட்ட விஷம், ஆழினியின் முகத்தில் சலனத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு வருடத்தில் அவள் எதிர்கொண்ட விமர்சனங்கள், நிந்தனைகள், இகழ்ச்சிகள் என எல்லாவற்றுக்கும் பழகிப் போயிருந்தால் அவள்.

ஆனால் அவளைச் சுற்றியிருந்த நிருபர்களின் அருவருப்பான பார்வைகள் அந்தக் கேள்வி கேட்டவரை தாக்கியது.

ஆழினி அமைதியாக ஒரு புன்னகையை சிந்தினாள்.

அவள் கையில் இருந்த 'ஆண்டின் சிறந்த எழுத்தாளர்' விருது, அவளுக்குக் கிடைத்த வெற்றியை மட்டுமல்ல, அவள் கடந்து வந்த பாதையின் தழும்புகளையும் பறைசாற்றுவது போல இருந்தது.

மெல்லத் தலையை நிமிர்த்தியவள், கேள்வியால் அவமானப்படுத்த நினைத்த அந்த நிருபரின் கண்களை ஆழமாகப் பார்த்தாள்.

அவள் குரல், அந்தக் கூட்டத்தின் இரைச்சலைத் தாண்டி கம்பீரமாகவும், அழுத்தமாகவும் ஒலித்தது.


 தேங்க்யூ சோ மச் சார் (நன்றி). ஒரு வருடத்திற்கு முன் நான் என்ன தொழில் செய்தேன் என்று உங்களுக்கு நினைவிருக்கும் போது, அந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லாமல் இருக்கலாமா.


 ஆம், எனக்குத் தெரியும். நீங்கள் சொல்வது போல, இந்த மேடையின் முன், இந்த விருதின் முன், நான் ஒரு எழுத்தாளர் ஆனால், ஒரு வருடம் முன்பு... நான் ஒரு 'விபச்சாரி'தான்.

உங்கள் மொழியிளே சொல்வதென்றால், நான் ஒரு 'தகுதி இல்லாதவள்'."

ஆழினி அவள் கடந்த காலத்தை வெளிப்படையாகப் பேசியதும், அங்கிருந்த கூட்டம் ஒரு கணம் அமைதியில் உறைந்தது.

அந்த நிருபரின் முகத்தில், தான் நினைத்ததை நிறைவேற்றிவிட்டதற்கான ஒரு விகாரமான புன்னகையை ஆழினியே பார்த்து சிந்தினர்.

ஆனால் ஆழினி அவருக்கு சளைக்காமல் 
என் கடந்த காலம் என் பேனா முனையைத் தீர்மானிக்கிறதா? ஏன் ஒரு விபச்சாரிக்குக் கதை சொல்லத் தெரியாதா? ஒரு விபச்சாரிக்குப் கதைகளின் பாத்திரம்( கேரக்டர்ஸ்) படைக்கத் தெரியாதா? வலிகள், கஷ்டங்கள், நிராகரிப்புகள், இந்தச் சமூகம் என்மீது துப்பிய எச்சில்கள் இது எல்லாம்தான் என் எழுத்தின் ஊன்றுகோள்கள்.

உங்க கண்கள் வழியாகப் பார்க்கும்போது நான் தகுதியற்றவளாக இருக்கலாம்.

 ஆனா, இந்த விருதை வழங்கிய நடுவர்களும், என் எழுத்துக்களை வாசித்து என்னை எழுத்தாளியாக மாற்றிய இத்தனை லட்சக்கணக்கான மக்களும் என் எழுத்துக்குத் 'தகுதி' இருக்கிறது என்று நிரூபித்து விட்டார்கள்."

அவள் குரலில் இருந்த உறுதியில் அரங்கத்தில் உள்ள அனைவரும் அவளை பார்த்தார்கள்.

ஆழினி நிறுத்தாமல் அவரை பார்த்து தொடர்ந்து பேசினாள்.

நீங்கள் என்கிட்ட கேட்ட கேள்வி, என் தகுதியைப் பத்தி இல்லை, நீங்கள் கேட்டது, இந்தச் சமூகத்தின் மனப்பான்மையைப் பற்றியது.

 ஒரு சிறு தவறு செய்தாலும், ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் தடுமாறினாலும், ஒரு பெண்ணை எப்போதும் அதே இருண்ட கூண்டில் அடைத்து வைக்க இந்தச் சமூகம் எப்படித் துடிக்கிறது என்பதைப் பற்றிய கேள்வி அது.

 நான் என் கடந்த காலத்தை மறக்கவில்லை. அதுதான் என் பலம்.

 அங்கிருந்த நிருபர்கள் மற்றும் மக்களை பார்த்து அவள் கடந்த காலத்தை பற்றி பேசினால் அவள் தன் கடந்த காலத்தைப் பற்றிப் பேசும் போதும், சமூகத்தின் இரட்டை வேடத்தைப் பற்றி சொல்லும் போதும், அந்தக் கூட்டத்தில் அமைதி நிலவியது.

அவளது குரலில் இருந்த உறுதி, ஒவ்வொருவர் மனசாட்சியையும் தட்டியெழுப்பியது. தலை குனிந்திருந்த நிருபரின் உடல்மொழி, அவளின் வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்தியது.

ஆழினி இப்போது தன் வாழ்க்கையின் திருப்புமுனையான வந்த ஒரு நாள், அவள் ஒரு எழுத்தாளராக முதல் அடி எடுத்து வைத்த நாள் அதற்க்கு காரணம் பற்றி சொல்ல தொடங்கினால்.

 அதற்கு முன்னால் அனைவரையும் பார்த்து ஒரு நாள் மட்டும் சந்தித்த பெயர் கூட தெரியாத ஒருவரால தான்
 என் வாழ்க்கை இவ்வளவு தூரம் வந்துன்னு சொன்னா உங்கனால நம்ப முடியாமா என்று அனைவரையும் பார்த்து கேட்டால் ஆழினி.

அதற்கு அங்கு இருந்த அனைவரின் தலையும் தானாக இல்லை என்ற ஆடியது அவர்களை பார்த்து புன்னகை செய்தவள் ஆனால் என் வாழ்க்கையில அந்த ஒரு நபர், அந்த ஒரு நாள் அந்த ஒரு சந்திப்பு அதுதான் என்னை இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்துச்சு அதான் உண்மை. 

 அனைவரும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள், அவளும் அவளை பற்றி சொல்லத் தொடங்கினாள்.

தன் கடந்த காலத்தைப் பற்றி சொல்லும் போது அவள் கண்களில் ஒரு கணம் ஒரு மெல்லிய சோகம் வந்து மறைந்தது.

 அதை மறைத்துக் கொண்டு அவளைப் பற்றி சொல்ல நான் விபச்சாரி (விலை மாது )ஆனதற்கு என் வறுமை ஒரு காரணம் என்றால், நான் ஒரு அனாதை என்பதும் இன்னொரு அடிப்படை உண்மை. எனக்கு அம்மா இல்லை, அப்பா இல்லை. என்னைப் பெற்றவர்கள் யான்னு கூட எனக்குத் தெரியாது. என்ன பெத்தவங்க என்ன குப்பைக் தொட்டில போட்டு போயிட்டாங்க.

ஆறு மாசக் குழந்தையா, என்ன ஒரு குப்பைத் தொட்டியில் யாரோ என்னைப் போட்டு போயிட்டாங்க அந்த வழியாக வந்த... என்று ஒரு நிமிடம் நிறுத்தியவள் அந்த நிருபரை பார்த்து உங்கள் மொழியில் சொல்லணும்னா 'இன்னொரு தகுதியில்லாதவள்' அவங்க தான் என்ன பாத்தா என்ன அவங்களோட தூக்கிட்டு போனாங்க.

 அவங்க பெயர் பவானி.

அவங்களும் ஒரு விலை மாது தான்
​இந்த சமூகம் அவங்க அவமானப்படுத்துச்சு அதையெல்லாம் பெருசா எடுத்துக்காம எனக்கு ஒரு தாய் அன்பா கொடுத்தாங்க .

 அவங்க முடிஞ்ச அளவு என் மேல பாசத்தை கொடுத்தாங்க நான் கேட்டதை அவங்க கொடுக்கவில்லை, ஆனால் அவங்களுக்கு என்ன கிடைத்ததோ, அதையெல்லாம் எனக்குக் கொடுத்தாங்க.

 ஒரு விலைமாதின் கூரையின்கீழ் வளர்வது எவ்வளவு கஷ்டம்னு உங்க எல்லாருக்கும் தெரியும் ஆனால் அந்த கஷ்டமான இடத்திலையும் நான் கௌரவமா வளந்தேன். அதுக்கு காரணம் பவானி அம்மா.

​"அவங்க எனக்குத் தாயாக இருந்தங்க. ஆனால், இந்த உலகம் என்னைச் சும்மா விடலா பவானி அம்மாவின் தொழிலைப் பற்றித் தெரிந்த எல்லாம் , என்னை தப்பா பேசி என்ன ஒதுக்கி வச்சாங்க.

​'விபச்சாரியின் மகள்', 'பிறப்பிலேயே தகுதியில்லாதவள்' – இந்த வார்த்தைகள் இன்னும் ஏன் காதுகளில் கேட்டுகிட்டே இருக்கும்.

பவானி அம்மா அவங்கள மாதிரி ஆயிரக்கூடாதுன்னு என்னைப் படிக்க வைக்க ஆசைப்பட்டங்க ஆனால், பள்ளி வாசலில் மற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் செய்த தொந்தரவால் பள்ளி நிர்வாகம் என்னை பள்ளிக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

​ஒரு விலைமாது எவ்ளோ கஷ்டப்படுவாங்கன்னு உங்களுக்கு எல்லாருக்கும் தெரியுமா என்று அந்த அரங்கத்தில் உள்ளவர்களை பார்த்து கேட்டால்.

 அவர்கள் அமைதியாக இருந்தார்கள் ஆழினி மறுபடியும் அவள் கதையை சொல்ல தொடங்கினாள்.

 ஒரு நாள், பவானி அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போச்சு பவானி அம்மா கிட்ட பணம் இல்ல என்கிட்ட பணம் இல்லை என் தேவையே எல்லாம் பவானி அம்மா தான் பார்ப்பாங்க.

விபச்சாரி மகள்ன்னு எந்த இடத்திலையும் எனக்கு வேலை கிடைக்கல நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்தேன்,
அதனால நான் வீட்லதான் இருந்தேன் பவானி அம்மா அப்பப்ப நைட்டுக்கு போகும்போது அதுல மட்டும் தான் காசு வரும் அந்த காசு வச்சு தான் என்னையும் பார்த்துகிட்டு அவங்களையும் பார்த்துப்பாங்க.

 அப்படிப்பட்ட சூழ்நிலையிலை தான் பவானி அம்மாக்கு உடம்பு சரி இல்லாம போச்சு ஹாஸ்பிடல் செலவுக்கு கூட காசு இல்ல.

 ஹாஸ்பிடல் போனா அவங்களுக்கு ஒரு ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க எனக்கு வேற யாரையும் தெரியாது நான் யார்கிட்ட போய் காசு கேட்பேன் எங்க தெருல உள்ளவங்க கிட்ட கேட்டா என்ன பாத்த உடன கதவு மூஞ்சில சாத்துகிற மாதிரி அடிச்சிட்டு போயிடறாங்க.

 எனக்கு வேற வழியே தெரியல அப்பதான் என் கண்ணு முன்னாடி ஒரே ஒரு வழி தெரிந்தது. வேறு வழி இல்லாம நான் அந்தச் சேற்றில் இறங்க வேண்டியிருந்தது. என்னைப் பொறுத்தவரை, அது தேர்வு அல்ல, அது என் அம்மாவைக் காக்க நான் எடுத்த ஒரு தியாகம்."

​"நான் அந்த தொழிலைத் தொடங்கியபோது, பவானி அம்மா என்னைப் பார்த்து கதறி அழுதாங்க 'என் பொண்ணு இப்படி ஆகக் கூடாதுன்னு ஆசைப்பட்டேன்,' ஆனா கடைசில இப்படி ஆயிடுச்சு என்று அழுதார்கள்.

 நான் அவங்க கிட்ட, 'அம்மா, நீங்க யாருமற்ற அனாதையான என்ன நீங்க காப்பாத்துனீங்க இப்போ உங்க உயிரை காப்பாத்த . எனக்கு இந்த வழியே தவிர வேற எதுவும் இல்ல மா.

​ஆனால், என் மனசாட்சிக்குத் தெரியும், நான் என் தனிப்பட்ட கனவுகளை, கௌரவத்தை, சந்தோஷத்தை ஒரு இருண்ட அறைக்குள் வைத்து பூட்டி விட்டேன்.

 சிறிது நாட்களில் உடல்நிலை சரியில்லாததால் பவானி அம்மாவும் இறந்துவிட்டார். எனக்கு இருந்த ஒரு துணையும் இல்லாமல் போய் விட்டது.

 பவானி அம்மாவிற்காக செய்த செயல் அவர்கள் இல்லாதபோதும் என்னை துரத்தியது இந்த சமூகம் என்னை விடவில்லை என்னை ஒரு விபச்சாரி ஆகவே பார்த்து..

 என்னால வெளியே எங்கும் போக முடியல என்னோட உலகமே அந்த நாள் அறைக்குள்ள என்ன சந்திக்க வரும் மனிதர்களிடம் மட்டுமே.

 அன்றொரு நாள் அந்த இரவும் அதே போல தான் தொடங்கியது.

ஆனால் என் வாழ்க்கையின் அத்தனை அசாதாரணமான மாற்றங்களுக்கும் அதுதான் தொடக்கம். அன்று எனக்கு வேறு எந்த எண்ணமும் இல்லை. அடுத்த வேளை உணவு, வாடகை, என்று இருண்ட உலகத்தின் ஒரே இலக்கு அதுதான்.

"அன்றும், மற்ற நாட்களைப் போலத்தான் என் அறைக்கு வந்தார் ஒருவர். ஆனால் அவர் மற்ற மனிதர்களைப் போல இல்லை என்று எனக்கு சிறிது நேரம் கழித்து தான் பிரிந்தது.

அவர் முகத்தில் எந்தவித அருவருப்போ, அவசரமோ இல்லை. என்மீது வழக்கம் போல விழும் அந்த அருவருப்பான பார்வைக்கு பதிலாக, அவர் கண்களில் ஒருவிதமான அமைதி இருந்தது.

நான் என் வழக்கமான கேள்வியைக் கேட்டேன், 'உங்களுக்கு என்ன வேண்டும்.

அவர் என் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். 'எனக்கு... நீ கதை சொல்லு என்று சொன்னார்.

நான் ஒரு நிமிடம் அதிர்ந்து என்ன கேட்டீங்க என்று குழப்பத்துடன் அவரிடம் கேட்டான்.

 அவர் ஒரு சிறு சிரிப்போடு உன் வாழ்க்கையைப் பத்தி, உன் கனவுகளைப் பத்தி உன் வலிகளைப் பத்தி... சொல்லு இன்னைக்கு நீ யாருனு மறந்திரு , நீ என்னவாக ஆகணும்னு ஆசைப்பட்ட அதைப் பற்றி சொல்லு.

எனக்கு ஒரு நல்ல கதை வேணும் என்று சொன்னார்.

 எனக்கு அப்போது ஒன்றுமே புரியவில்லை.

 அப்போது அவர் சட்டைப்பையிலிருந்து ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் எடுத்து இதை நான் உனக்காகக் கொண்டு வந்தேன்,'என்று சொல்லி என்னிடம் கொடுத்தார்..

 ஒரு நிமிடம் யோசித்தவர் உனக்கு எழுத தெரியுமா என்று கேட்டார்.

நான் தமிழ் எழுத தெரியும் என்று சொன்னேன் அப்போ 'நீ உன்னுடைய கதைகளை எழுதத் தொடங்கு. அதை எழுதும் போதுதான், இதுவரை உணராத உன்னையே உன்னால உணர எழுது என்று சொன்னார்.

நானும் சிறு தயக்கத்தோடு அவரிடம் இருந்து அந்த பேனாவை வாங்கினேன்.

 அதுவரையில், நான் கண்ட மனிதர்கள் என் உடலைத்தான் விரும்பினார்கள்.

 என் பேச்சையோ, எண்ணங்களையோ ஒருபோதும் கேட்டதில்லை. ஆனால் இந்த மனிதர், என் உடலை அல்ல, என் உள் இருக்கும் வார்த்தைகளை, விரும்பினார்.

அன்று இரவு நான் அவரிடம் என் வாழ்க்கைக் கதைகளைச் சொல்லவில்லை. மாறாக, நான் என் கற்பனையில் இருந்த ஒரு பெண்ணின் கதையைச் விருப்பப்படி கற்பனையில் எழுதி அவரிடம் கொடுத்தேன்.

 நான் எழுதும் வரை அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

நான் எழுதி முடித்த பிறகு அந்த பேனாவையும் அந்த நோட்டையும் அவரிடம் கொடுத்தேன்.

 நான் எழுதும் வரிகளை ஒவ்வொன்றாக படித்து முடித்தவர் கடைசியாக என்னிடம்
 அவர் ஒரு வார்த்தை சொன்னார்: 'உன் எழுத்திற்கு வலிமை இருக்கிறது. அதை வீணாக்காதே.என்று சொன்னவர் அவர் சட்டை பையில் இருந்து பணம் கொடுத்தர்.

ஆனால் நான் வாங்க வில்லை . அதற்குப் பதிலாக நான் அவரிடம், 'நீங்கள் எனக்குக் கொடுத்த அந்த நோட்டுப் புத்தகம் மற்றும் போதும் என்று சொன்னேன்.


அவர் சிரித்தார். 'இந்த நோட்டுப் மேல் கை வைத்து நீ இதில் ஒரு கதையாவது எழுத வேண்டும். அதை நான் உன் புத்தகமாகப் பார்க்க வேண்டும்.'
சொல்லி விட்டு விடியும் முன்பே வெளியேறினார்.

என் வாழ்க்கையில், முதல் முறையாக ஒருவன் அவளை ஒரு மனிதியாக, ஒரு படைப்பாளியாக அங்கீகரித்துவிட்டுச் சென்றான். அவர் அவளை ஒரு நாள் மட்டுமே சந்தித்தார் அவர் பெயர் தெரியாத அவர் ஊர் தெரியாது ஏன் அவர் யார் என்றே எ தெரியாது ஆனால், அந்த ஒரு நாள் சந்திப்பு, அவளுக்குத் தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பேனாவைத் தந்தது.


"அன்று முதல், என் உலகம் மாறியது. என் இருண்ட அறையில் நான் 'வேலை' செய்யும்போதுகூட, என் மனம் கதைகளையே யோசிக்க தொடங்கியது.

 அந்த நோட்டுப் புத்தகம் முழுவதும் என்னுடைய வலி, என் சந்தோஷம், என் நிராகரிப்பு, என் கனவுகள் என எல்லாவற்றையும் எழுத ஆரம்பித்தேன்.

 என் எழுத்து, என்னை விடுதலை செய்தது. நான் என் வாழ்க்கையை, என் கதைகளை, இந்தச் சமூகத்தின் அநீதிகளை எழுத எழுத, நான் முன்பு இருந்த 'உழைக்கும் உடலிலிருந்து,' 'உணர்வுகள் கொண்ட எழுத்து சக்தியாக' மாறினேன்.

அடுத்த ஆற மாதங்களில்,நான் தனது கடந்த காலா அனுபவங்களை, சந்தித்த மனிதரளின் முகமூடிவேடங்களை, தன் சொந்த வலிகளை, ஏக்கங்களை அனைத்தையும் எழுதிக் குவித்தேன் 

 எழுத்துகளில் தீவிரமாவும் நேர்மையும், அனுபவத்தின் ஆழமுமகா எழுதி என் முதல் புத்தகத்தை வெளியிட்டேன்.

என் முதல் புத்தகம், "நிலவின் மறுபக்கம்" என்ற புனைப்பெயரில் வெளியானது.

அது வெளியான குறுகிய காலத்திலேயே பெரும் விவாதப் பொருளாக மாறியது. நான் அதில் வெறும் கதை சொல்லவில்லை, ஒரு சமூகத்தின் பாலியல் தொழிலாளிகள் மீதான பார்வையைச் சவுக்கால் அடித்தால் அனைவருக்கும் புரியும்படி இருந்தது..

இன்று, ஆழினி ஒரு புகழ்பெற்ற
எழுத்தாளர். அவள் சமூகத்தில் மிகவும் மதிக்கப்படுகிறாள். ஒரு காலத்தில் அவளை இழிவாகப் பார்த்தவர்களே, இன்று அவளது அறிவுரைகளுக்காகக் காத்திருக்கிறார்கள். அவள் ஓர் இரவுச் சந்திப்பில் கிடைத்த ஒரு வார்த்தையை மூலதனமாகக் கொண்டு, தன் வாழ்க்கையையே மாற்றிக்கொண்டாள்.

​"என் வாழ்க்கையில் அந்த ஒரு நாள் சந்திப்பு, என்னை ஒரு எழுத்தாளராக மாற்றியது. ஆனால், அந்த மாற்றம் என்னைச் சந்தித்த ஒருவனால் மட்டும் வந்தது அல்ல. மாற்றம் என்பது என் கடந்த காலத்தின் இருளைப் புறக்கணித்து, என் படைப்பாற்றலை நம்பிய இலட்சக்கணக்கான வாசகர்களிடமிருந்து வந்தது.

 நீங்கள் இன்று நான் நின்றிருக்கும் இந்த மேடையைப் பார்க்கிறீர்கள். ஆனால், நான் கடந்து வந்த குப்பைத் தொட்டி, சேறு, இருண்ட அறை ஆகியவற்றை இந்த சமூகம் இனிமேலும் நினைவில் வைத்திருக்கலாம்.

நினைவில் வையுங்கள். ஆனால், என் கடந்தவையுங்கள். ஆனால், என் கடந்த காலம், இன்னொரு பெண்ணின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சுவராக இருக்கக்கூடாது! இவள் ஒரு விபச்சாரி என்று சொல்லும் அதே சமூகம், இவள் எழுதியதை ஏன் படிக்கிறீர்கள் என்று இன்னொரு பெண்ணைக் கேட்கக் கூடாது.

நாங்கள் மனிதர்கள். தவறு செய்தாலும், வலியில் இருந்தாலும், எங்களுக்கும் இரண்டாவது வாய்ப்பு உண்டு. அந்த வாய்ப்பை எங்கள் எழுத்துக்கு, எங்கள் உழைப்புக்கு, எங்கள் இருதயத்திற்கு வழங்க இந்த சமூகத்திற்கு மனது வேண்டும்."


மாற்றம் என்பது, நீண்ட காலப் பழக்கத்தால் வருவதல்ல; அது சரியான நேரத்தில், சரியான நபரிடம் இருந்து கிடைக்கும் ஓர் அரிய வார்த்தையால், ஒரே நொடியில் கூட நிகழலாம். உங்களை நம்பும் ஒரு வார்த்தை, ஆயிரக்கணக்கான தடைகளைத் தகர்க்கும் வல்லமை கொண்டது.


ஆழினி நிருபர்களைப் பார்த்துக் கூறினாள், அவர் என் மீது இரக்கப்பட்டவர் அல்ல அவர் என் படைப்பாற்றலின்மீது நம்பிக்கை வைத்தவர். அவர் சொன்ன ஒரே வார்த்தை: 'எழுது!' நான் எழுத ஆரம்பித்தேன். என் எழுத்துக்கள் என்னை அந்தச் சகதியில் இருந்து வெளியே இழுத்து வந்தது. ஒரு விபச்சாரியாக ஒருவன் சந்தித்தாலும், அந்த ஒருவனால்தான் நான் இன்று ஆழினியாக, உங்கள் முன் 'சிறந்த எழுத்தாளராக' நிற்கிறேன். இது என் வெற்றி மட்டுமல்ல, இந்தச் சமூகத்தின்மீது என் எழுத்து பெற்ற வெற்றி!"

​ஆழினி அவள் பேச்சை முடிக்கும்போது, அங்கிருந்த ஒட்டுமொத்த கூட்டமும் பலத்த கரவொலி எழுப்பியது. அந்த நிருபரின் கேள்வியில் இருந்த விஷம் இப்போது உடைக்கப்பட்டு, ஆழினியின் கம்பீரத்தில் வெற்றிப் பேரொளியாய் மாறியிருந்தது.

​"இறுதியாக..." ஆழினி மீண்டும் தனது ஆள்காட்டி விரலை உயர்த்திப் பேசினாள்.

அவளது குரலில் இப்போது வெற்றிக் கனலின் அமைதி இருந்தது.

​"என் கடந்த காலத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அதுதான் என் கதைகளின் ஆதாரம். ஒரு வருடத்தில் ஒரு விபச்சாரி எழுத்தாளராக மாற முடியும் என்றால், அவளை இந்த சமூகம் ஏற்றுக்கொண்டு கௌரவிக்க முடியும் என்றால், இனி எந்தப் பெண்ணும், தன் கடந்த காலத்தைக் கண்டு அஞ்சி, தன் எதிர்காலக் கனவுகளை இருண்ட அறைக்குள் பூட்டத் தேவையில்லை! இந்த விருது, ஆழினி என்ற தனிப்பட்ட பெண்ணுக்கானதல்ல.

இது, இந்த மண்ணில் ஒரு விபச்சாரியாகப் பிறந்தாலும், ஒரு படைப்பாளியாக மாற முடியும் என்று நிரூபிக்கும் ஒவ்வொரு உடைந்த இதயத்துக்கானது."

​ஆழினி விருதைத் தூக்கி உயர்த்திப் பிடிக்க, 'ஆழினி! ஆழினி!' என்ற கோஷங்கள் அரங்கத்தை அதிர வைத்தன.

தன் மீதான அத்தனை பழிகளையும், நிராகரிப்புகளையும் அவள் தன்னுடைய பேனா முனையால், தன்னுடைய எழுத்தால், இன்று துடைத்தெறிந்தாள்.

 அவளுடைய கண்ணியமும், கம்பீரமான உறுதியும், அன்று முதல், இந்தச் சமூகத்தின் மனசாட்சியின்மீது பொறிக்கப்பட்ட ஓர் அழியாத பாடமாக மாறியது.

​ஒருவரின் கடந்த காலத்தைக் கொண்டு ஒருபோதும் அவர்களின் எதிர்காலத் திறமையை எடைபோடாதீர்கள். ஒரு மனிதனின் 'தகுதி' அவன் கடந்து வந்த பாதையில் அல்ல; அவன் எழுப்பும் எண்ணத்திலும், செய்யும் செயலிலும்தான் இருக்கிறது......