யாதுமற்ற பெருவெளி பாகம் 1
சம்யுக்தாவின் கதை
நான்தான் உன்னை விரும்பலைனு சொல்லிட்டேனே அதோட விட்டுட வேண்டியதுதானே ஏன் என்னை தொந்தரவு பண்ணுற என்றாள் சம்யுக்தா . சரி இனிமே தொந்தரவு பண்ணலை நாம ஃபிரண்ட்ஸ் ஆக கூடவா இருக்க கூடாது. எனக்கு உன்னை பத்தி தெரிஞ்சுதான் உன்னை வேணாம்னு சொன்னேன். ஓகே சம்யுக்தாஅப்புறம் உன் விருப்பம் என்றான் .சம்யுக்தாவை அவனால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாதுதான். இப்போ என்ன மச்சான் பண்ணுறது பேசாம அரியர் பேப்பர்ஸ் கிளியர் பண்ணுற வழிய பாரு மச்சான் என்றான் கிரிஷ். எனக்கு என்னவோ அவ மனசுல வேற யாரோ இருக்காங்க அப்படின்னு தோணுது. கிரிஷ் அவ என்னை ஃப்ரெண்ட் ஆ கூட ஏத்துக்கல பார்த்தியா அதுதான் என்னை யோசிக்க வைக்குது. அமெரிக்கா இல்லை லண்டன் ல இருக்க எவனையோ கல்யாணம் பண்ண போறா அவ எல்லாம் மனசுக்கு முக்கியத்துவம் குடுக்க மாட்டா மச்சி. நீயும் நல்ல ஸ்டேட்டஸ் ல இருந்தா நிச்சயம் யோசிச்சிருப்பா .. ம். என்ன இருந்தாலும் காதல் மாதிரி வராது. இப்படியே யோசனை பண்ணிக்கிட்டே இருக்காதே ... சரி கிரிஷ் நாளைக்கு பார்க்கலாம் என்றான் தீபன்
மூன்றாம் வருடம் இன்ஜினியரிங் என்பது காதல் தோன்றும் பருவம் தான். சம்யுக்தா இவனை வேண்டாம் என்று சொன்னது தீபனை யோசனை செய்ய வைத்தது. இவனுடையது சராசரி குடும்பம். அப்பாவும் அம்மாவும் வேலைக்கு போகிறார்கள். ஒரே பையன். என்னடா மூஞ்சை தூக்கி வெச்சிட்டு இருக்கே அரியர்ஸ் தானே கிளியர் பண்ணிடலாம் என்றார் ராமநாதன். இவன் ஒன்றும் பேசாமல் மாடியில் உள்ள தன் அறைக்கு போனான். அவனுக்கு அழுகையாய் வந்தது, கொஞ்ச நேரம் மியூசிக் கேட்டான். கிரிஷ் ஃபோன் பண்ணியிருந்தான் இவன் பேசும் மனநிலையில் இல்லை. இவனுக்கு அதிகம் நண்பர்கள் கிடையாது. கடைசி வருடம் முடிவதற்குள் அந்த சம்யுக்தாவே ஆச்சார்ய படும்படி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என நினைத்தான். 9 மணி போல ஃபோன் வந்தது.அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை, சம்யுக்தாவிடம் இருந்துதான் கால் வந்திருந்தது. நான் உன்கிட்ட கொஞ்சம் கடுமையாத்தான் நடந்துகிட்டேன் சாரி என்றாள் . நான் என்னோட கசின் பிரவீன் அதான் மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட்ல இருந்து என்னை பார்க்க வருவானே அவனைத்தான் விரும்புறேன் என்றாள். வேற யார்கிட்டயும் இதை ஷேர் பண்ண வேண்டாம். என்ன ஒண்ணுமே பேச மாட்டேங்குற ? ஆல் தி பெஸ்ட் சம்யுக்தா என்றான். சரி குட்நைட். குட்நைட் என்றான். ம் அவளே தெளிவாக சொல்லிவிட்டாள் . இனிமேலும் அவளை நினைத்து பயனில்லை என தனக்குள் சொல்லி கொண்டான்.
ஒருவரை பிடிப்பதற்கு காரணங்கள் தேவையில்லை. என்னவோ அப்படித்தான் சம்யுக்தாவை தீபனுக்கு பிடித்திருந்தது. இனி அவள் தனக்கில்லை என்ற போது என்ன செய்ய வேண்டும் என தீபனுக்கு தோன்றவில்லை. மறுநாள் காலேஜ் போகவில்லை. என்னவோ காரணங்கள் சொல்லி வீட்டில் சமாளித்து விட்டான். மறுநாள் காலேஜ் போயிருந்த போது நல்ல மழை. குறைந்த அளவு ஸ்டூடண்ட்ஸ் வந்திருந்தனர். அவள் என்னவோ இயல்பாகத்தான் இருந்தாள். மதியம் லேப் இருந்தது. அவளுடைய குரூப்பில் இவனையும் சேர்த்து விட்டார் ஹெச் ஓ டி. என்ன தீபன் இந்த மழைலேயும் காலேஜ் வந்திருக்க ? நேத்து ஏன் காலேஜ் வரல என்றாள் சம்யுக்தா. ம் எதிர்பார்க்கல மழை வரும்னு . எனக்கு மழைனா ரொம்ப இஷ்டம் என்றாள். காலேஜ் பஸ் போகுதானு தெரியல . நீ என்னை வீட்ல டிராப் பண்ணுறியா என்றாள். சரி சாம் என்றான். இப்போ எதுக்கு என்னை கூப்பிடுறா பிரவீன் காலேஜ் வரலையோ ?என்று பல யோசனைகள் உதித்தன . அவள் அதன் பிறகு ஒன்றும் கேட்கவும் இல்லை. சொல்லவும் இல்லை. காலேஜ் நேரம் முடியும் போது மழை கொஞ்சம் விட்டிருந்தது. அவளை காணோம் எங்கே போயிருப்பாள் என்று தெரியவில்லை. இவனுக்கு தவிப்பாய் இருந்தது. அவளை மறுபடி வகுப்பறையில் போய் பார்க்கலாம் என எண்ணினான்.அவனுடைய வகுப்பறையை கடக்கும் போது போதும் பிரவீன் இதுக்குதான் நான் உன் கூட வரல அப்படின்னு சொன்னேன். இப்போ தீபன் அங்கே வெயிட் பண்ணிட்டு இருப்பான். பிரவீன் அவளை அணைத்தவாறே முத்தம் கொடுக்க நெருங்கினான். பிளீஸ் பிரவீன் என்றவாறு விலகிக்கொண்டாள் . இவன் ஜன்னல் வழியே இதை கண்டதும் திரும்ப பைக் ஸ்டாண்ட் அருகே போய் விட்டான்.10 நிமிடம் கழித்தே வந்தாள் . சாரி தீபன் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. பரவாயில்லை போகலாமா என்றான். எங்கேயாவது நல்ல காப்பி ஷாப் இருந்தா நிறுத்தேன் காபி குடிச்சுட்டு போகலாம் என்றாள். நிச்சயமா என்றான்.
என்ன தீபன் என்னடா திடீர்னு இப்படி குளோஸ் ஆ வண்டியில் வராளே அப்படின்னு நினைக்கிறியா . சே சே எப்போ நீ பிரவீனை விரும்புறேன்னு சொன்னியோ அப்பவே என் மனச மாத்திக்கிட்டேன் என்றான். ம் ம் புரியுது. காப்பி நல்லா இருந்தது ரொம்ப தாங்க்ஸ் . நீ தீபன் ரொம்ப நல்லவனா இருக்க அதுதான் எனக்கு உன்கிட்ட பிடிச்சிருக்கு என்றாள். தாங்க்ஸ் சாம் நாம போலாமா இப்போவே மறுபடி மழை வர மாதிரி இருக்கு . சரி வேகமா போய்விடலாம் என்றான். நனைந்தும் நனையாமலும் அவளை அவள் வீட்டில் விட்டான். தாங்க்ஸ் தீபன் என்றாள். வர சண்டே என் வீட்ல பிரவீன் பர்த்டே பார்ட்டி இருக்கு நீயும் வா. நான் எதுக்கு? ஹேய் நீ கண்டிப்பா வரணும் என்றாள். இவள் என்னை சோதிக்கிறாளே என்று யோசித்தவாறே வீட்டுக்கு போனான். அவ உன்னை வெச்சு கேம் ஆடுறா மச்சான் . நீ போகாதே பர்த்டே பார்ட்டிக்கு . என்னவோ அவ கூட இருந்தாலே மனசுல ஒரு சந்தோஷம். போய்ட்டு வரேன் மச்சான். என்னவோ பண்ணிதொலை , அப்புறமா என்கிட்ட வந்து பீல் பண்ணாதே என்றான் கிரிஷ். பிரவீன் இவனுக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவனாய் இருந்தாலும் சம்யுக்தாவிற்காக அந்த பர்த்டே பார்ட்டியில் கலந்து கொள்ள தீர்மானித்தான். எதிர்பார்த்த மாதிரி பிரவீனின் நண்பர்கள் இவனை வேண்டா வெறுப்பாக பார்த்தார்கள். சம்யுக்தா பிரவீனுக்கு மோதிரம் ஒன்றை பரிசளித்தாள் . நெருங்கி நின்று போட்டோக்கள் எடுத்து கொண்டார்கள். பிரவீனிடம் நான் சொன்னேனே தீபன் ரொம்ப இன்னொஸெண்ட் என்றாள். நீங்க வந்ததில ரொம்ப சந்தோஷம் என்றான் பிரவீன். பர்த்டே பார்ட்டி முடியும் தருவாயில் இருந்தது, இவன் விடை பெற்றுக்கொண்டான். பிரவீன் இவனை கூப்பிட்டான். இவன் காதில் மெதுவாக ஏதோ அன்னைக்கு மழை வந்தது நீ டிராப் பண்ணினேன்னு சொன்னாள் . இனிமே அந்த வேலையெல்லாம் வைத்து கொள்ளாதே என்றான். இவன் அதை காதில் வாங்காதது போல கிளம்பினான். நான்தான் அப்பவே சொன்னனே டா அவங்க எல்லாம் பெரிய இடம் அப்படின்னு. பரவாயில்லை விடுடா கிரிஷ். இப்போ எனக்கு புது நம்பிக்கையே வந்துருக்கு. அவ என்னை ரிஜக்ட் பண்ணுனாலும் அவ உள் மனசுல எனக்காக ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கு . நல்ல ஆளுடா நீ என்றான். இப்போதைக்கு இந்த சந்தோஷமே போதும் என்றான் தீபன் .
தான், தன்னுடைய வசிக்குமிடம், பொருளாதாரம் பற்றியெல்லாம் யோசிக்க தோன்றாத வயது அது. தீபன் அது பற்றியெல்லாம் யோசிக்கவில்லை.தீபன் மனதில் காதல் எண்ணங்கள் சிறகடித்து பறந்தன. அடுத்து என்ன செய்து அவளை இம்ப்ரஸ் செய்ய முடியுமென்றே அவன் மனம் யோசித்தது. அதெல்லாம் முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது. இயல்பாக இருப்பது போல தோன்றினாலும் அவள் மனதிலும் ஆசைகள் இருக்கத்தானே செய்யும். அவள் அதை கட்டுப்படுத்தி வைத்திருப்பாள். மதியம் போல லைப்ரரிக்கு போனான். அவள் மதிய நேரங்களில் அங்கு வருவாள் என்பது அவனுக்கு தெரியும். இவன் நேராக ஏதோ புத்தகத்தை தேடுவதாக பாசாங்கு செய்துகொண்டே அவள் வருகிறாளா என்று பார்த்தான். அவள் வந்தாள் பிரவீனும் வந்திருந்தான். எதுக்கு இங்கெல்லாம் என்றான் பிரவீன் . சும்மா வா பிரவீன் . இந்த அமைதி எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றாள் சம்யுக்தா. ம் நாளைக்கு மதியம் மூவி போவோம் வரியா என்றான். அதெல்லாம் வேண்டாம் பிரவீன். நாம இதுக்கு முன்னாடி போனது இல்லையா ? என்னவோ புதுசா போற மாதிரி .. அது என்னவோ சரி உன் ஃபிரண்ட்ஸ் யாரையாவது கூப்பிடு சேர்ந்து போலாம் என்றான். தீபன் புத்தகத்தை தவற விட்டான்.
எல்லோரும் திரும்பி பார்த்தார்கள். சாரி சாரி என்றவாறு சரிந்த புத்தங்கங்களை அடுக்கினான்.
வேணும்னா இவனை கூப்பிடலாமா என்றான் பிரவீன். வேண்டாம் அவன் ரொம்ப சென்சிடிவ் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் டென்ஷன் ஆவான். சரி நித்யாவை கூப்பிட்டுகிட்டு போலாம் என்றாள். சரி உன் விருப்பம் என்றாள். அவர்கள் நேராக இவனிடம் வந்தார்கள் ரொம்ப நேரமா எதையோ தேடுற போல என்ன தேடுற என்றாள். அது வந்து வந்து சரி சரி டைம் ஆச்சு போலாம் என்றான் பிரவீன். என்னடா லைப்ரரி ல சரியான பல்பா அதெல்லாம் இல்லை உன் மூஞ்சை பார்த்தாலே தெரியுது . சரி அவங்க சினிமாக்கு போறாங்க நீ என்ன பண்ண போற. நான் என்ன பண்ண முடியும் நீயும் ஏதாவது பிக்அப் பண்ணுற மாதிரி நடிடா அப்போதான் கொஞ்சமாவது அட்டென்ஷன் கிடைக்கும் என்றான் கிரிஷ்.ம் ஏற்பாடு பண்ணுறேன். இவனுக்கு உடனே யாரை அழைத்துக்கொண்டு போவதென்று தெரியவில்லை. தவித்து போனான். பேசாமல் ரஞ்சனியை கூப்பிட்டு பார்க்கலாமா அவள் இவன் சீனியர் நல்ல ஃப்ரெண்ட் ஆனால் என்ன நினைப்பாளோ சரி கேட்டு பார்போம் என்று அவளுக்கு ஃபோன் செய்தான். என்னடா திடீர்னு சம்யுக்தா போறாஅப்படின்னா நீயும் போகனுமா ? நீ இப்போ வரியா இல்லையா அதை சொல்லு சும்மா அட்வைஸ் பண்ணிக்கிட்டு என்றான். ரஞ்சனி சரி வரேன் ஆனா அங்க வந்து அவ கிட்ட நீ வழிய கூடாது கெத்தா இருக்கணும் என்றாள். சரி வா என்றான்,
படம் ஓடிக்கொண்டிருந்தது அவள் இன்னும் வந்த பாடில்லை. ஒருவேளை சம்யுக்தா வரவில்லையோ என நினைத்தான். இவனுக்கு மெசேஜ் வந்தது. எடுத்து பார்த்தான். எங்கே இருக்கே ? ரஞ்சனி கூட மூவி. ம் சரி . அவ்வளவுதான் மெசேஜ். ரஞ்சனி படத்தை ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்.இண்டர்வெல் வந்ததும் போதுமடா போலாம் வீட்டுக்கு என்றாள். ஏன் என்னாச்சு எனக்கு அந்த ஹீரோயின் ஹீரோ கூட ரொம்ப நெருக்கமா இருக்குறது பிடிக்கலை என்றாள். இவன் சரி வா போலாம் . எதிர் திசையில் நித்யாவும், சம்யுக்தாவும் வந்தனர். என்னடா என்னை கூப்பிடலை சினிமாக்கு என்றாள். இவனுக்கு அவளோ தைரியம் போதாது என்றாள் ரஞ்சனி. சரி பிரவீன் எங்கே என்றான். அவன் ஏதோ மேட்ச் இருக்கிறதென்று போய்விட்டான். சரி ஏதாவது ரெஸ்டாரண்ட் போலாமா என்றாள் நித்யா . நீங்க போய்ட்டு வாங்க என்றாள் ரஞ்சனி. ரஞ்சனி கிளம்பி விட்டாள் ரெஸ்டாரண்ட் நன்றாக இருந்தது. சம்யுக்தா வேண்டியவற்றை ஆர்டர் செய்தாள். படம் எப்படி இருந்தது என்று பேச்சை ஆரம்பித்தான். எனக்கு பிடித்திருந்தது என்று சொன்னாள் நித்யா . சரி நீ சம்யுக்தாவை வீட்டில் டிராப் செய்து வீடு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது என்றாள் நித்யா . ஏன் சாம் நீ வண்டி வைத்து கொள்ளவில்லை . நீ கற்றுக்கொடுக்கிறாயா அடுத்த வாரமே வண்டி வாங்கி விடுகிறேன் என்றாள். நிஜமாகத்தான் சொல்கிறாயா ? உனக்கா சொல்லி கொடுக்க ஆட்கள் இல்லை ? அது என்னவோ எனக்கு யாரிடமும் போய் கேட்க தோணவில்லை .. சரி நெக்ஸ்ட் சண்டே வைத்து கொள்ளலாம் என்றான். சம்யுக்தா வீடு மாலையில் இரவு விளக்குகளோடு ஜொலித்தது.
உள்ளே வா தீபன் . அப்பா அம்மா இல்லையா . அம்மா வேலைக்கு போய்விட்டு 8 மணிக்கு தான் வருவாங்க . அப்பா சிங்கப்பூர்ல வேலை . உட்காரு இப்போ வந்து விடுகிறேன் என்றான். போய் டிரஸ் மாற்றிக்கொண்டு வந்தாள். என்னவோ கொஞ்ச நாளா ஒரே யோசனை நான் பிரவீன் கூட பிரேக் அப் பண்ணிக்கலாம்னு பார்க்கிறேன் என்றாள். ஏன் என்னாச்சு திடீர்னு எங்களுக்குள்ள ஒத்து போகலென்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற ? நான் எப்படி சொல்ல முடியும். சும்மா சொல்லு . இதில உடனடியா அவசர பட வேண்டாம் . சரி நான் அவசரப்படலை . சரி நான் கிளம்பட்டுமா என்றான். நீ ஏன் பயப்படுற தீபன் . தைரியமா என் கூட பழகு அதுதான் எனக்கு பிடிக்கும். இவன் சந்தோஷத்தில் மிதந்தான். அவள் மறந்து விடாதே அடுத்த வாரம் நான் நித்யாவிடம் சொல்லி வண்டி வாங்கி வைக்கிறேன் என்றாள் .
கிரிஷ் இதெல்லாம் வெறும் டிராமா என்றான். அப்படி சொல்லாதே அவள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறாள். இந்த வாய்ப்பை நான் தவற விடமாட்டேன் என்றான். ம் என்னவோ பண்ணு என்றான். பிரவீனிடம் இருந்து கால் வந்தது. என்னடா இவன் கால் பண்ணுறான் அட்டென்ட் பண்ணி பேசு என்னாச்சு பிரவீன் சம்யுக்தா உன்கிட்ட ஏதாவது சொன்னாளா ? இல்லையே என்னவோ ஃபோன் எடுக்க மாட்டேங்குறா ? எனக்கு எதுவும் தெரியாது என்றான். ஓகே பை. மச்சான் உன் லைன் நிஜமாவே கிளியர் ஆகுது போல என்றான் கிரிஷ். மென்மையாக புன்னகை செய்தான் தீபன் . சண்டே எப்போது வரும் என்று காத்திருந்தான் தீபன் . அவளே ஃபோன் பண்ணட்டும் என்று காத்திருந்தான். காலை 10 மணிக்கு அவளே அழைத்தாள் . இவன் ஒவ்வொன்றாய் சொல்லிக்கொடுத்தான் அவள் நெருக்கத்தில் பார்க்க மிக அழகாய் இருந்தாள். ஒரு மணி நேரம் போயிருக்கும். பிரவீனிடம் இருந்து அவளுக்கு கால் வந்தது. அந்த மைதானத்தில் யாருமில்லை. ஒன்றிரண்டு பேர் மட்டும் விளையாட வந்திருந்தார்கள். என்ன பிரவீன் ? எங்கிருக்க நீ நான் தீபன் கூட இருக்கேன். டூ வீலர் கத்துக்கிறேன் என்றாள். ஓ நீ ஏன் என்னை கூப்பிடலை என்றான். நீதான் எப்பவுமே பிஸி. சரி சரி நான் வரேன் அங்கே . அதெல்லாம் வேணாம் நாங்க வீட்டுக்கு போறோம் என்றாள். நீ லைசென்ஸ் எடுக்க அப்ளை பண்ணு சாம் என்றான் தீபன் . சரி வா வீட்டுக்கு போலாம் என்றாள். பிரவீன் என்ன சொன்னான் என்றான் தீபன் . அவனைத்தான் முதலில் டூ வீலர் கத்துக்க கூப்பிட்டேன் அவன் என் இடுப்பை பிடிக்கறதிலேயே கவனமா இருந்தான். இவன் எதுவும் சொல்லவில்லை.
சம்யுக்தா அம்மா இவனை பற்றி விசாரித்தாள் . ஸ்நாக்ஸ் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள். இவளுக்கு பிரவீன்தான்னு சின்ன வயசுலேயே முடிவு பண்ணி விட்டோம் என்றாள். கொஞ்சம் நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் தீபன் . இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே என்றாள் சம்யுக்தா. இன்னொரு நாள் வரேன் என்றான் , சம்யுக்தா மனசில் என்ன இருக்கிறது என்பதே புரியாமல் இருந்தது.