Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

யாதுமற்ற பெருவெளி - 4

ஒரு நிமிடம் திகைத்தவன் என்ன சாம் இப்போ வந்து இப்படி கேக்குற என்றான். ம் நீ என்னை விட்டு விலகாம இருந்தா போதும் அப்படின்னு நினைத்தேன் ஆனா எங்கே உன்னை விட்டு நிரந்தரமா பிரிஞ்சுடுவேனோ அப்படின்னு எனக்கே பயமாயிடுச்சு .. ஹேய் நான் நீ நல்லா படிச்சு வெளிநாடு போய் செட்டில் ஆகிற வரை உன்னை விட்டு எங்கும் போகமாட்டேன். இது என்னோட பிராமிஸ் என்றான். தாங்க்ஸ் தீபன் என்றாள். வா சாப்பிடலாம் என்றான். நீ போ நான் வருகிறேன் .. தீபன் அவளை நினைத்து கவலைப்பட்டாலும் அப்போதைக்கு வெளியே காட்டிக்கொள்ள வில்லை. மாறாக இனி பிரவீனுடன் எந்த வித விரோத போக்கையும் கொள்வதில்லை என முடிவு எடுத்தான். ரொம்ப தாங்க்ஸ் கதிர் நீ இல்லேன்னா இந்த ஃபங்சன் இவ்ளோ சிறப்பா நடந்து இருக்காது என்றான் பிரவீன். அதுக்காக இங்கேயே டேரா போடலாம்னு நினைக்காதே.. அவளும் நானும் ஹஸ்பண்ட் அண்ட் வொய்ஃப் மாதிரி என்பதை மறக்காதே என்றான்.

பிரவீன் சாம் வீட்டில் குடியேறிவிட்டான். அவன் அப்பா அம்மா அவனை அவன் போக்கிற்கே விட்டுவிட்டார்கள். ஏதோ ப்ராஜக்ட் விஷயமாக சென்னையில் 3 மாதம் தங்க போவதாக சொல்லியிருந்தான். சாம் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் . இன்னும் ஒரு வாரத்தில் கிளம்புவதாக பிளான் பண்ணியிருந்தான். சாம் காலேஜ் வந்த போது எல்லோரும் அவளுக்கு வாழ்த்துக்கள் சொன்னார்கள். அவள் கண்கள் தீபனையே தேடின. எதற்காக அவனை தேடுகிறோம் என்பதே அவளுக்கு புரியவில்லை. தனக்கு ஒருவன் ஊரறிய நிச்சய மோதிரம் அணிவித்திருக்கிறான் என்பதும் அவள் நினைவில் வந்து போகாமல் இல்லை. தீபன் எப்போதும் போல இருப்பதாக நடித்தான். அவளை விட்டு விலக முடியாமலும் நெருங்க முடியாமலும் தவித்து வந்தான். மதியம் லஞ்ச் டைமில் சந்தித்தார்கள்.

என்னடா காலையில உன்னை காணோமே என்றாள். கொஞ்சம் வேலை இருந்தது. என்ன விஷயம் சாம் எதுக்காக என்னை தேடினாய் என்றான். இதெல்லாம் ஒரு கேள்வியா ? என்று அவன் தோளில் தட்டினாள் . இன்னும் 10 நாளில் காதலர் தினம் வருகிறது என்றான். அதுக்கென்ன என்றபடி பார்த்தாள். நிச்சயத்துக்கு பிறகு நீயும் அவனும் கொண்டாட போற ஃபர்ஸ்ட் லவ்வர்ஸ் டே என்றான். ம் அப்படி ஒண்ணு இருக்கோ என்று சிரித்தாள். இந்த கேசரி காலையில் உனக்காக பண்னினேன் என்றாள். எதுக்காக உனக்கு சிரமம் என்றான். எல்லாம் நீ எனக்காக கஷ்டப்படுறியே அத்துக்காகத்தான் என்றாள். நீ நிறைய மாறிவிட்டாய் என்றான். என்னை கண்டாலே உனக்கு பிடிக்காது. போதும்டா நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு புரியுது. அத்தோடு பேச்சை நிறுத்திக்கொண்டான். அவளை காயப்படுத்தும் நோக்கில் அவ்வாறு சொல்லவில்லை என்ற போதும் அவளுக்காக பரிதாபப்பட்டான்.

காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதையாவது செய்து சாமை அசத்த வேண்டும் என பிரவீன் ஆசைப்பட்டான்.சென்னைக்கு போவதற்கு முன் அவளுக்கு ஏதாவதொரு நல்ல கிப்ட் வாங்கிதரவேண்டும் என நினைத்தான். இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் அவர்களுக்கிடையில் இன்னும் நெருக்கம் வராதது ப்ரவீனுக்கு ஏமாற்றமாய் இருந்தது.அவளை விட இரண்டு வயது பெரியவன் பிரவீன். அந்த இடைவெளி கூட காரணமாய் இருக்கலாம் .சாயங்காலம் காலேஜில் அவளை பிக்கப் செய்து கொள்வதாய் சொல்லியிருந்தான். என்ன திடீர்னு என்றாள் சாம். நான் உன் husband எனக்கு அந்த உரிமை கூட இல்லையா என்று சிரித்தான். ம்ம் புரிகிறது இப்போது நான் ரொமான்ஸ் பண்ணும் மூடில் இல்லை என்றாள் . அவன் சொன்னபடி 5 மணிக்கு வந்து போன் செய்தான்.
ப்ரவீனுடன் வண்டியில் செல்ல அவள் தயாரானாள். அப்போது தீபன் , ரஞ்சனி உடன் பேசிக்கொண்டு வந்து கொண்டிருந்தான். போலாமா என்றான் பிரவீன். ஒரு நிமிஷம் என்றவாறு தீபன் என்று கூப்பிவிட்டாள் . அவன் கவனிக்காமல் ரஞ்சனி கூட பேசிக்கொண்டிருந்தான். அவள் மனது ஏதோ சொல்ல தடுமாறியது. நாம் போகலாம் என்றாள் பிரவீனிடம்.எங்காவது வெளியில் போகலாம் என்று சொன்னான் பிரவீன் மாலுக்கு போகலாம் என்றாள் . மாலுக்கு என்று அவள் சொன்னதும் உனக்கேதும் வாங்க வேண்டுமா என்றான் ஆர்வத்துடன். தீபன் அணிந்திருக்கும் சட்டைகள் எதுவுமே சரியில்லை அவனுக்கு ரெண்டு ஷர்ட் வாங்க வேண்டும் என்றாள் . அவளின் முகத்தையே பார்த்தவன் சரி போகலாம் அவனையும் கூப்பிடலாம் என்றான். வேண்டாம் அவன் வந்தால் உனக்கு பிடிக்காது என்றாள் . இருவரும் அந்த மாலை சுற்றி வந்தனர். ரொம்ப நாட்கள் கழித்து வெளியே வந்திருக்கிறோம் என்றான் பிரவீன் ஆமாம் எனக்கு இந்த இடம் ரொம்ப பிடித்திருக்கிறது என்றாள் .

தீபனுக்கு ரெண்டு டீ ஷர்ட் எடுத்தவள் உனக்கேதாவது வேண்டுமா என்றாள் . இப்போவாவது உனக்கு கேட்க தோன்றியதே என்று சிரித்தான். ம் போதும் செலக்ட் பண்ணு என்றாள் . அவன் ட்ரையல் ரூம் உள்ளே போனான். இவள் உடனே தீபனுக்கு கால் பண்ணினாள். பிஸி என்று வந்தது. ஏன் தான் இவ்வளவு அலைக்கழிக்க படுகிறோம் என சிந்தித்து பார்த்தாள் . ப்ரவீன் வெளியே வந்து இந்த ஷர்ட் எப்படி இருக்கிறது என்றான். அவள் நன்றாக இருக்கிறது என்றாள் . அவர்கள் அங்கிருந்த ரெஸ்டாரண்ட் ஒன்றில் சாப்பிவிட்டார்கள். என்ன தீபன் போனை எடுக்கவில்லையா என்றான். நான் வேண்டுமானால் முயற்சி செய்யவா என்றான். வேண்டாம் வேண்டாம் வேண்டுமென்றால் அவனே போன் செய்யட்டும் என்றாள் . உன் முகம் இப்போதுதான் மலர்ந்திருக்கிறது அப்படியே வைத்துக்கொள்... போதும் கிண்டல் பண்ணாதே என்றாள்.

வீட்டுக்கு வந்தவுடன் அவன் எங்கேயோ அவசரமாக போய்விட்டான்.தீபன் போன் பண்ணியிருந்தான். இவள் எடுக்கவில்லை. தவிக்கட்டும் நன்றாய் தவிக்கட்டும் என்றாள் . அவன் ஏன் தவிக்க வேண்டும் என்ற எண்ணமும் எழுந்தது. என்னாச்சு தீபன் சாரி சாம் ரஞ்சனி என்னைக்குமில்லாம வெளியே எங்கோ போகணுமின்னு சொன்னா அவ கூட போயிருந்தேன் என்றான். ஒண்ணுமில்லை வீட்டுக்கு வா என்றாள் . இப்போவா ஆமாம் இப்போவேதான் அடுத்த கால் மணிநேரத்தில் அங்கிருந்தான். என்ன அர்ஜென்ட் மேட்டர்? பிரவீன் ஏதும் சொன்னானா அதெல்லாம் ஒண்ணுமில்லை. உனக்கு டிரஸ் எடுத்தேன் உனக்கு பிடித்திருக்கிறதா என்று பார். எதுக்கு இந்த வேலை என்றான். சும்மா போட்டு பார் . எனக்கு பிடித்திருக்கிறது தேங்க்ஸ் சாம் . வெறும் தேங்க்ஸ் மட்டும்தானா ? அவள் கண்களையே பார்த்தான். வேறு என்ன கிப்ட் வேணும் என்றான். உனக்கு நான் நிச்சயதார்த்தத்தின் பொது கொடுத்த கிப்ட் பிரித்து பார்த்தாயா என்றான். இல்லையே அதை பத்திரமாக இங்குதான் வைத்திருந்தேன் ஒரு நிமிஷம் என்றவாறு பீரோவை திறந்து எடுத்தாள் . அது ஒரு பறக்கும் குதிரை ஆண் பெண் ஜோடி ஒன்று அதன் மேல் அமர்ந்திருந்தது.

சூப்பர் இந்த குதிரை எனக்கு பிடித்திருக்கிறது என்றாள் .ப்ரவீனும் நீயும் பறந்து போகிறீர்கள் என்றான். உனக்கு முன்பு என் மீதிருந்த காதல் இப்போதும் இருக்கிறதா தீபன்? உண்மையை சொல்லப்போனால் பல மடங்கு அதிகமாய் இருக்கிறது .என்றான். நீ சீக்கிரம் யாரையாவது லவ் பண்ணு என்றாள் . அது கஷ்டம் . சரி இரு உனக்கு ஸ்னாக்ஸ் ஏதாவது எடுத்து வருகிறேன் என்றாள் . வேண்டாம் இப்போதுதான் சாப்பிட்டுவிட்டு வருகிறேன் .. நான் கிளம்புகிறேன் என்றான். பிரவீன் உன்னிடம் அன்பாய் இருப்பது எனக்கு சந்தோசமாக இருக்கிறது . ம் நீ ஏன் பெரிய மனுஷன் மாதிரி பேசுகிறாய் எப்போதும் போல பேசு .சரி வரேன் நாளைக்கு ஏதாவது உனக்கு ஸ்பெஷல் ஆக லஞ்ச் செய்து எடுத்து வரட்டுமா? அதை ப்ரவீனுக்கு கொடுத்து பரிசோதனை செய் என்று சிரித்தான். சும்மா சொன்னேன் உன் விருப்பம் போல செய் .
தீபன் விடை பெற்றுக்கொண்டான்.

பிரவீன் 9 மணி போல வந்தான். என்ன ஒரே ஹாப்பி மூட் தீபன் வந்தானா ஆமாம் . சரி எனக்கு பசிக்கிறது . தோசை ஊத்தட்டுமா என்றாள் . அவள் கிச்சன் உள்ளே போனாள் . இவன் குளித்து விட்டு வந்தான். அவள் இடுப்பை சேர்த்து அணைத்தான்.சீ என்ன பிரவீன் இது என்றாள் . இது கூட இல்லேன்னா எப்படி என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான். நாளைக்கு நாம அப்பா அம்மாவை பார்க்க போறோம் என்றான். அவள் சரி எத்தனை மணிக்கு என்றாள் . சாயங்காலம் 8 மணிக்கு. நன்றாக இருக்கிறது தோசை என்றான். அவனுக்கும் அவளுக்கும் தனித்தனி அறைகள் இருந்தன. சாம் வாங்கி கொடுத்த உடைகளை அணிந்து செல்பி அனுப்பி இருந்தான் தீபன் .
சாம் போட்டோவுக்கு கமெண்ட் எதுவும் செய்யவில்லை. அதை பிரவீன் பார்த்தால் ஏதாவது சொல்வான். இருக்கிற நிம்மதியும் போய்விடும். காலேஜ் ஆண்டு விழா வருகிறது அதில் உற்சாகமாய் கலந்து கொள்ள வேண்டும் என நினைத்தாள் . இவளுடைய டான்ஸ் ப்ரோக்ராம் ஒன்றும் இடம் பெறுவதற்கு இருந்தது. வேறு கல்லூரி மாணவர்களும் ,மாணவிகளும் வருவார்கள். இவள் டான்ஸ் ரிஹெர்சலில் பிஸி ஆக இருந்தாள் . இரண்டு நாட்களாக தீபனை பார்க்க முடியவில்லை. போனில் கூட பேச நேரமில்லை. ஆண்டு விழா களை கட்டியிருந்தது. ரஞ்சனி இவள் கூட டான்ஸ் ஆடி வந்தாள் அவளை விசாரித்ததில் தீபனும் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயாராகி கொண்டிருக்கிறான் என்ற தகவல் கிடைத்தது. சாம் நடன நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும் போது அங்கு வந்த தீபனும் அவளை உற்சாக படுத்தினான். விசில்களை பறக்க விட்டான். அவளும் சிறப்பாகவே ஆடினாள் . அப்போது வந்த பிற கல்லூரி மாணவர்கள் ரஞ்சனியின் ஆட்டத்தை கேலி செய்தனர். இதனால் அவள் பாதியிலே ஆட்டத்தை நிறுத்தி விட்டாள் . ஒரே களேபரமாகி விட்டது. தீபன் அவர்களை தட்டிக்கேட்டான். அப்போது கைகலப்பு ஏற்பட்டு தீபன் அவர்களை அடித்து விரட்டும்படி ஆகிவிட்டது. பிரின்சிபால் தீபனை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்தார். கல்லூரியும் 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. பிரவீன் நடந்ததை அறிந்து வருத்தப்பட்டான் அதோடு சந்தோஷமும் அடைந்தான். ஒரு வாரத்துக்கு அவன் காலேஜ் பக்கம் வர மாட்டான். சாமும் , ப்ரவீனும் ப்ரவீனுடைய அம்மா அப்பா வை பார்க்க போயிருந்தார்கள். இங்கேயே ரெண்டு நாள் இருங்க என்று சொல்லிவிட்டார் பிரவீன் அப்பா. அதை தட்ட முடியவில்லை சாமால் .
தீபன் அப்பா பிரின்சிபால் பார்க்க போயிருந்தார். எவ்வளவோ கெஞ்சி கேட்டும் அவர் ஒரு வார சஸ்பென்ஷன் குறைக்க முடியாதென்று சொல்லிவிட்டார். ரஞ்சனி இன்னும் காலேஜ் திரும்பவில்லை. தீபன் அவளை சமாதானப்படுத்த முயன்றான். ரஞ்சனியை பார்க்க சாம் வந்திருந்தாள் . தீபன் அங்கு இருப்பதை பார்த்ததும் என்னடா எப்படி இருக்கே ஏன் ஒரு போன் கூட பண்ணலே என்றாள் . நடந்த சண்டைல போன் டேமேஜ் ஆயிடுச்சு ரிப்பேர் பண்ண கொடுத்திருக்கேன் என்றான். சாமும் ரஞ்சனியும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். நீ புது போன் வாங்கிக்க நான் பணம் தரேன் என்றாள் ரஞ்சனி. அவன் மறுப்பேதும் சொல்லவில்லை. வீட்டுக்குத்தானே போற நான் ட்ராப் பண்ணுறேன் என்றான் தீபன் . நான் இப்போ பிரவீன் வீட்டுல இருக்கேன் இன்னும் ரெண்டு நாள் கழித்துதான் வருவேன் என்றாள் .தீபன் நீ எதுக்கும் ஜாக்கிரதையா இரு அந்த பசங்க திரும்ப உன்னை அடிக்க வரலாம் என்றாள் . அதெல்லாம் பார்த்துக்கலாம் . பிரவீன் கிட்ட சொல்லி இருக்கேன் அவனும் அந்த பசங்கள வார்ன் பண்ணியிருக்கான்.எது நடக்கக்கூடாது என சாம் நினைத்தாளோ அது நடந்து விட்டது தீபனை அந்த கல்லூரி மாணவர்கள் திரும்ப மைதானத்தில் வைத்து தாக்கியதில் அவனுடைய கை எலும்பு முறிந்து விட்டது. விஷயத்தை கேள்விப்பட்டதும் ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தாள் சாம். அவன் கண்கள் மூடி படுத்திருந்தான். ரஞ்சனி சோகமாக அவன் அருகிலேயே அமர்ந்திருந்தாள் . தீபனுடைய அம்மா அழுதபடி இருந்தாள் . போலீஸ் கேஸ் ஆகவிடாமல் பிரின்சிபால் சமாதானம் செய்து வைத்தார். கதிருடைய அம்மாவை சாம் சமாதானம் செய்தாள் . தீபன் அப்பா மருந்து வாங்க போயிருந்தார். குறைந்தது 3 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர் சொல்லிவிட்டார். ரஞ்சனியை கான்டீன் அழைத்து போய் காபி வாங்கி கொடுத்தாள் சாம். நீ ரொம்ப வருத்தமாய் இருப்பதை பார்க்கவே சங்கடமாய் இருக்கிறது நீ வீட்டுக்கு போ நான் பார்த்துக்கொள்கிறேன் என்றாள் சாம். பிரவீன் சென்னை போய்விட்டான் என்றும் சொன்னாள் . கண்விழித்து பார்த்தவன் ரஞ்சனி எங்கே என்றான் இப்போதுதான் போனாள் நான் இப்போதான் வந்தேன் என்றாள் சாம்.