Read inyoureyes by Ucan doit in Tamil நாடகம் | மாட்ருபர்த்தி

Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

உன் விழிகளில்

நம்ம கதையோட ஸ்டார்டிங் இல்லையே ஒரு மிகப்பெரிய பங்களா காட்டுறாங்க... நம்முடைய ஹீரோயினி அந்த வீட்டில் உள்ள ஹீரோவோட அப்பா உள்ளே கூட்டிட்டு வராரு... “நீ உள்ள வா”ம்மா அப்படின்னு... அவளும் உள்ள வரா... பங்களா ரொம்ப பெருசா இருக்கு... அவளை கூட்டிட்டு வந்த உடனேயே... “யார் இந்த பொண்ணு?” அப்படிங்கற கேள்வி வருது.

இவள் நம்மளோட கெஸ்ட். இவளுக்கு எந்த ஒரு பாதிப்பும் வரக்கூடாது, எந்த ஒரு அவமானமும் நடக்கக் கூடாது” என்று சொல்லி, அந்த வீட்டின் மதிப்பிற்குரிய விஷால் அவர்கள் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்கள்.

அவள் வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். யாரிடமும் எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டாள்.

மறுநாள் சூரியன் கண் விழிக்க... அவள் கீழே இறங்கி வந்து பார்த்தபோது வீடு பரபரப்பாக இருந்தது.

“இந்த வீட்டோட மூணு பசங்க வரப் போறாங்க, அதனால்தான் இவ்வளவு பரபரப்பு,” என்று அங்கே வேலை செய்யும் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவளும் நிறைய பைல்களை எடுத்துக்கொண்டு விஷால் பின்பாக நடந்து சென்றாள்.

கதவுகள் திறந்தன. மூவரும் ஒரே மாதிரியான கருப்பு உடையில் கம்பீரமாக உள்ளே வந்தார்கள் — விக்ரம், அனுவந்தன், ரியாஸ்.

வரும்போது அவளுடைய கைகளில் இருந்த பைல்களை தெரியாமல் தட்டி சென்றான் அனுவந்தன்.

அவள் சுழன்றவுடன், அவளது கைகளில் இருந்த பேப்பர்கள் பறந்தன.

“நீதானே என்னோட திருடினாய்! எங்கடா என்னோட பை?”

அங்கே இருந்தவர்கள் அனுவந்தனையும், ஜோனாவையும் பார்த்தார்கள்... விஷால் சட்டென்று நின்றார்.

“என்னம்மா சொன்னது ஒன்றும் இல்லை அங்கிள். இந்தியாவுக்கு வரும்போது ஏர்போர்ட்டில் இவனோட சண்டை போட்டேன். அப்போ என்னோட பையை அங்கிருந்து எடுத்துட்டு போனான். அதுல தான் என்னோட பாஸ்போர்ட், ஐபேட் எல்லாம் இருக்கு. என்னோட அப்பாவுக்கு எப்படி கால் பண்ணுறது? இவன்கிட்ட இருந்து பையை வாங்கிக் கொடுங்க.”

விஷால் திரும்பி நின்றபோது, அனுவந்தன் — “ஆமா, இவ என்னோட மேல வந்து மோதினாள். அது எனக்கு பிடிக்கலை. அதனால்தான் அவளோட பையை எடுத்துட்டு வந்தேன்,” என்றான்.

“அங்கிள், இவன் பொய் சொல்றான். நான் ஒன்னும் மோதலை. இவன் வந்தபோது அங்கிருந்த பெண்கள் எல்லோரும் இவன் பின்னால் சென்றார்கள். என்னை தள்ளிவிட்டார்கள். அதனால்தான் உன்னோட மேல மோதினேன்,” என்றாள் ஜோனா.

விஷால் முறைத்தார். உடனே அனுவந்தன் அந்த பையை எடுத்துக் கொடுத்தான்.

“ரொம்ப நன்றி,” என்று திடுசிடுப்பாக சொன்னாள் ஜோனா.

“இங்க பார் ஜோனா. நீ உடனே ஊருக்கு கிளம்ப வேண்டாம். உன்னோட அப்பா — ஐ மீன் மிஸ்டர் பிரதாப் — வெளியூருக்கு பிசினஸ் ட்ரிப் போயிருக்கார். அவர் வந்ததும் நீ போ. சரியா?” என்று விஷால் சொன்னார்.

“அங்கிள், அது வரைக்கும் நான் இங்கேயே தங்கிக்கலாமா? என் பிரண்டோட வீடு மயிலாப்பூரில்தான் இருக்கு. ஆனால் நான் அங்கே தங்கிக்கிறேன்...” என்றாள்.

“இங்க பார்… நீ என் உயிரைக் காப்பாத்திருக்கே. நீ இப்போ என்கிட்ட கெஸ்ட். எங்கயோ போகக் கூடாது, புரியுதா? மாடியில் ரைட் சைட்ல ஒரு ரூம் இருக்கு. அங்கே தங்கிக்கோ. உன் அப்பா வர்றது வரைக்கும் என்கிட்ட பி.ஏ ஆக இரு. சரியா? ஓகே?” என்றார் விஷால்.

“Mmm… அப்பா, நீங்க சொன்னது உண்மைதான். இவர் ரொம்ப கேரிங்கா நடந்திருக்கிறார். அதோட, என்கிட்ட பிரச்சினை பண்ணின அவங்க பையனையே பொரட்டி எடுத்துட்டாரு,” என்றாள் ஜோனா.

“அண்ணி, யார் இந்த பொண்ணு?
அண்ணன் ஏன் இவளுக்கு இவ்வளவு மரியாதை கொடுக்கிறார்?”

அதுவும் வந்தவுடனேயே, காயத்ரி (விஷாலின் மனைவி) புன்னகையுடன்,
“சரி, போதும். நீங்க மூணு பேரும் வந்துட்டீங்களா? உங்களுடைய நாள் எல்லாம் எப்படி போச்சு?” என்று கேட்டார்.

அதே சமயம், அனுவந்தனின் காதைத் திருப்பி,
“ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ளணும் என்று தெரியாதா?” என்று கோபித்துக் கொண்டார்.

அனுவந்தன் சிணுங்கிக் கொண்டு,
“ஏய் பம்கின்! வந்த உடனே என்னோட இமேஜை டேமேஜ் பண்ணிட்டீங்க. உன்னை விட மாட்டேன்… என்ன பண்ணப் போகிறேன்னு பாரு!” என்று சொன்னான்.
விக்ரமன் அனுவந்தனை நோக்கி, “ஏர்போர்ட்டில் எல்லா பொண்ணுங்கலும் உன்னை பார்த்து வழிச்சாங்க. ஆனா இந்த பெண் மட்டும் அப்படி செய்யவே இல்ல. நீ ஏன் டா பொய் சொன்னே?” என்றான்.

அதற்கு மற்றொருவர், “அந்தப் பெண்ணைப் பார்த்தா ஏதோ டேஞ்சரா தெரியுது. அவள்கிட்ட வச்சுக்காத… பிறகு நீ தான் வருத்தப்படாதே!” என்று எச்சரித்தான்.

அந்தப் பக்கம், காயத்ரி ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அப்போது கோதை, “அண்ணி, எனக்கு ஒரு லட்சம் பணம் கொடுக்குறீங்களா?” என்று கேட்டாள்.

“உனக்கு எதுக்கு அவ்ளோ பணம்?” என்று காயத்ரி கேட்டார்.

“மார்க்கெட்டில் புதுசா ஒரு பியூட்டி க்ரீம் வந்திருக்கே…” என்றாள் கோதை.

“சரி சரி… ஆனா உன் அண்ணன் கணக்கு கேட்பார், ஞாபகம் வச்சுக்கோ,” என்று காயத்ரி எச்சரித்தார்.

அந்தப் பணத்தை திடீரென்று ஒரு கை பிடுங்கிக் கொண்டது. “தேங்க்ஸ் மா, இந்த வாரம் இதுதான் போதும்,” என்று சொன்னான்.

“இதுவும் போச்சா…” என்று சலித்து கொண்டாள் கோதை.

பணத்தை வாங்கிக்கொண்டு போனவன், தன் நண்பர்களுடன் காரில் செஞ்சுட்டான். அவன்தான் — கோதையின் மகன், அனிருத்.

விஷாலுடன் சேர்ந்து ஜோனா ஆபீஸ்க்கு வந்தாள். வழியிலேயே அவள் மவுனமாக இருந்தாள், புதிய சூழலைக் கவனமாக பார்த்துக்கொண்டே நடந்தாள். அந்த அலுவலகம் மிகப் பெரியதும், சீரிய ஒழுங்கோடு இருந்ததும் அவளுக்கு வியப்பை ஏற்படுத்தியது. விஷால் அவளை தனது பக்கத்தில் அழைத்து வந்து, “இவங்க தான் இனிமேல் எனக்கு உதவப் போற என் P.A, ஜோனா” என்று அறிமுகப்படுத்தினார்.

அவள் கொஞ்ச நேரம் அந்த பைல்களை சீராகச் செக் செய்து கொண்டிருந்தபோது, அந்த இடத்திற்கு அனுவந்தன் வந்தான். “ஏய் பம்கின்…” என்று கிண்டலாக சொன்னவனைப் பார்த்தவுடன், திடீரென்று ஜோனா எழுந்து நின்றாள். அவளது முகத்தில் சிறிய சிரிப்பும், அதே சமயம் எச்சரிக்கையும் தெரிந்தது.