INS Imphal books and stories free download online pdf in Tamil

INS Imphal

எல்லா புகழும் என் தாய் தகப்பனுக்கே.

Tamil Transcript Of The Video.

INS Imphal | இந்தியாவின் கடற்படையில் இப்போது மூன்று ராணிகள்  | India’s First Indigenous Stealth Guided Missile Destroyer

Video Link - https://youtu.be/mHvyhcesNV0

YouTube Channel Name – Mads X13.

Channel URL - https://www.youtube.com/channel/UC4JY9KGK581qT0Z-66cxQLQ

எல்லோருக்கும் வணக்கம் 

பெரிய பெரிய நாடுகளை ஆட்சி செய்த துணிச்சலான ராணிகள் இருந்திருக்கிறார்கள். செஸ் கேமில் ராணி மிகவும் சக்திவாய்ந்த பீஸ். பான், ரூக்ஸ் பிஷப் பீஸ்கள் அனைத்தையும் விட ராணி மிகவும் சக்திவாய்ந்தது.   அவள் ராஜாவை செக்மேட் செய்தால் தப்பிப்பது கடினம்.  இப்போது உங்கள் செஸ் போர்டில் மூன்று ராணிகள் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள்.

இந்தியப் பெருங்கடலின் பரந்த பரப்பில் ஒரு ஸ்டீல் கார்டியன் எப்போதும் விழிப்புடன் நமக்காக இருக்கும்.  இது ஐஎன்எஸ் இம்பால். , வழிகாட்டப்பட்ட ஏவுகணை கைடெட் மிஸைல் டெஸ்டராயர். அவள் ஒரு கப்பல் மட்டுமில்லை, இந்தியாவின் கடல் வலிமையின் சின்னம். ஐஎன்எஸ் இம்பால் நமது தேசத்தின் ஒரு ஸ்பிரிட்டாக இருக்கிறது.  இது மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் வலிமையான ஃபயர்பவரை கொண்டிருக்கிறது.

மற்றொரு முக்கியமான உண்மை, ஐஎன்எஸ் இம்பால், இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட முதல் இந்தியாவிலேயே கட்டப்பட்ட ஒரு ஸ்டெல்த் கைடெட் மிசைல் டெஸ்டராயர். இந்த மகத்தான கப்பலை செய்துமுடித்த நூற்றுக்கணக்கான சைன்டிஸ்டுகளை என்ஜீனியர்களை தொழிலாளிகளை பார்த்து நாம் பெருமை படவேண்டும். மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், இது ஒரு ஸ்டெல்த் டெஸ்டராயர்.  இது எதிரிகளின் கண்களில் இருந்து மறைந்துவிடும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.

எதிரிகள் ரேடார் அலைகள் மூலம் கடலை ஸ்கேன் செய்வார்கள். ஸ்டெல்த் டெக்னாலஜி எதிரியின் ரேடார் அலைகளைத் திசைதிருப்பி விடும். எதிரிகளை குழப்பி விடும்.

மேலும் அவைகள் ஹீட் அப்சார்ப்பிங் வகையான பெயிண்டிங் பூசப்பட்டிருக்கும். அட்வான்ஸ்ட் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் ஒரு கப்பலில் இருந்து வெளி வரும் வெப்பத்தை உணர்ந்து தாக்கும். அதனால் இந்த ஸ்பெஷல் பெயின்டிங்  இம்பாலை எதிரிகளின் வெப்பத்தைத் தேடும் ஏவுகணைகளுக்கு தெரியாமல் போய்விடும். கப்பலின் கன்ஸ்ட்ரக்ஷனில்  பயன்படுத்தப்படும் மெட்டீரியல்கள் கூட சத்தத்தை அடக்கும் திறனைக் கொண்டிருக்கும்.

AI Female.

எதிரி ரேடார்களின் கண்ணுக்குத் தெரியாமல் இருப்பது பல பெரிய நன்மைகளை தரும். சர்ப்ரைஸ் அட்டாக்.   நீங்கள் கடலில் அங்கே இருப்பதை உங்கள் எதிரி தெரிந்துகொள்வதற்கு முன்னாலேயே பல ஏவுகணைத் தாக்குதலை நடத்திவிடலாம். தாக்கப்படும் நேரத்தை குறைக்கலாம். நீங்கள் எவ்வளவு நேரம் கண்டறியப்படாமல் இருக்கிறீர்களோ, அவ்வளவு குறைவாக உங்கள் எதிரி உங்களை டார்கெட் செய்வதை குறைக்கலாம்.

ஸ்டரடீஜிக் நன்மைகள். ஸ்டெல்த் டெக்னாலஜி எதிரியின் எல்லைக்கு நெருக்கமாகச் செயல்படவும், மதிப்புமிக்க உளவுத்தகவல்களை சேகரிக்க உதவும்.

டெஸ்டராயர்கள் பொதுவாக தனியாக செயல்பட மாட்டார்கள். ஒரு க்ரூப்பாகத்தான் தான் போவார்கள். ஆனால்  விதிவிலக்கான சூழ்நிலைகளில் உளவு நடவடிக்கயில் ஈடுபடும்போது, கடற்கொள்ளை எதிர்ப்பு ரோந்துகள் செய்யும்போது அல்லது மீட்பு நடவடிக்கைகள் போன்ற வேலைகள் செய்யும் போது தனியாக போகலாம்.

எஸ்கார்டிங்: அவைகள் பெரும்பாலும் விமானம் தாங்கி கப்பல்கள் அல்லது வணிகக் கப்பல்கள் போன்ற பெரிய கப்பல்களைச் சுற்றி ஒரு க்ரூப்பாக செயல்படுவார்கள். இது பல  அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த பாதுகாப்பை அனுமதிக்கும்.

நீர்மூழ்கி எதிர்ப்பு போர் அல்லது ரீஜினல் ரோந்து போன்ற குறிப்பிட்ட பணிகளுக்காக அவைகள் மற்ற  போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற பிற கப்பல்களுடன் இணைக்கப்படும்.

கேரியர் போர் குழுக்களில் அதன் பங்கு மற்றொரு முக்கிய பகுதி. அவைகள் அத்தியாவசிய பாதுகாப்பை வழங்குகின்றன. மேலும் கேரியர் எதிரிகளைத் தாக்கும் போது டெஸ்டராயர்கள் அதற்கு ஆதரவு கொடுப்பார்கள். ஒரு மிதக்கும் நகரத்தை கற்பனை செய்து பாருங்கள். மையத்தில் ஒரு பெரிய விமானம் தாங்கி கப்பல் இருக்கும். அதைச் சுற்றி டிஸ்ட்ராயர்ஸ் போன்ற சிறிய கப்பல்கள் இருக்கும். ஆனால் எந்த நகரத்துக்கும் பாதுகாப்பு தேவை என்பது போல, இந்த கேரியர் போர் குழுவிற்கும் பாதுகாப்பு தேவை.

இந்தப் டெஸ்டராயர்கள் கேரியரைச் சுற்றி ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகின்றன.  எல்லாத் திசைகளிலிருந்தும் வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக தொடர்ந்து பாதுகாப்புடன் இருக்கும். உள்வரும் ஏவுகணைகள், டார்பிடோக்கள் மற்றும் எதிரி விமானங்களை அவற்றின் சக்திவாய்ந்த பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தகர்த்துவிடுவார்கள்ள்.

ஆனால் டெஸ்டராயர்கள் பாதுகாவலர்கள் மட்டுமில்லை. அவைகள் திறமையான அட்டாக்  வீரர்களும் கூட. எதிரி கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்க அவைகளின் சொந்த ஏவுகணைகளை ஏவ முடியும்.

இவைகள் கேஸ் டர்பைன்கள் அல்லது  டீசல்-எலக்ட்ரிக் என்ஜின்கள் மூலம் நகரும். இந்த சக்தி வாய்ந்த என்ஜின்கள் தேவைப்படும் போது மணிக்கு ஐம்பது கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் டிஸ்ட்ராயர்களை இயக்குகின்றன.

இது ஒரு கைடெட் மிசைல்கள் வைத்திருக்கும் டெஸ்டராயர். சாதாரண ஏவுகணைகள் ஏவுதல் ஆங்கிள் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட பாதையைப் பின்பற்றி பறக்கும்.

ஆனால் வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் பலவிதமான வழிகாட்டுதல் டெக்னாலஜியை பயன்படுத்துகின்றன.

ரேடார்-வழிகாட்டுதல்: டார்கெட்டை கண்காணிக்கவும் அதை துல்லியமாக தாக்க ரேடாரைப் பயன்படுத்துகிறது.

இன்ப்ரா ரெட் வழிகாட்டுதல். டார்க்கெட்டிலிருந்து வெளிப்படும் வெப்பத்தை குறிவைத்து தாக்கும்.

லேசர் வழிகாட்டுதல்: முதலில் லேசர் கற்றை ஒன்று எதிரி இலக்குகளை அடையாள படுத்தும். அதை குறிவைத்து கைடெட் மிசைல் டார்கெட்டை அழித்துவிடும்.

ஜிபிஎஸ் வழிகாட்டுதல்: செயற்கைக்கோள் சிக்னல்களைப் பயன்படுத்தி எதிரி டார்கெட்டுகளை அழிப்பது.

அட்வான்ஸ்ட் ஏஜீஸ் க்ளாசில் இருக்கும் டெஸ்டராயர்கள் விஷேச கம்ப்யூட்டர்களை யூஸ் பண்ணி ஏவுகணையில் இருக்கும் சென்சார்களின் டேட்டாக்களை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை வழிநடத்துகின்றன.

Mads X13

INS இம்பால் ஆயுத அமைப்புகளிள்:

கப்பலின் முன்னே இருக்கும் பீரங்கிகள். இந்த பெரிய அளவிலான பீரங்கிகள் நீண்ட தூர பயர் பவரை வைத்திருக்கின்றன. OTO Melara என்ற கடற்படை பீரங்கி பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் இருந்து புறப்படும் வெடிகுண்டுகள் சுமார் 50 கிலோமீட்டர்கள் வரை சென்று எதிரிகளின் சக்திகளை அழித்துவிடும். 

கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் நீருக்கடியில் அச்சுறுத்தல்களுக்கான நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகள் அவைகளிடம் இருக்கிறது. டார்பிடோ குழாய்கள். இவை டார்பிடோக்களை ஏவுகின்றன. எதிரி கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தக்கூடிய அட்டனாமஸ் டார்பிடோக்கள் இவைகளில் இருக்கும்.

ஒரு விரிவான சென்சார்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்கள் எந்த ஒரு அட்டாக்கையும் கணித்துவிடும். ரேடார்கள். இந்த மேம்பட்ட ஸிஸ்டெம்கள் சுற்றியுள்ள சூழலை ஸ்கேன் செய்து, வானத்தில் இருந்தோ, நிலத்தில் இருந்தோ அல்லது நீருக்கடியில் வரும் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து கண்காணிக்கும்.

சோனார். இந்த நீருக்கடியில் ஒலி அலைகளை அனுப்பும் சிஸ்டம் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடிக்க உதவுகிறது. இது நீர்மூழ்கி எதிர்ப்புப் போருக்கு முக்கியமானது.

எலெக்ரானிக்ஸ் போர் முறைகள்: INSImpal எதிரிகளின் கம்யூனிக்கேஷன் மற்றும் ரேடார் சிக்னல்களை ஜாம் செய்து, அவர்களின் செயல்பாடுகளை சீர்குலைத்துவிடும்

இதில் ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி இருக்கிறது. இந்த ஹெலிகாப்டர்கள் உளவு பார்க்கவும், நீர்மூழ்கி எதிர்ப்பு போர், தேடல் மற்றும் மீட்பு மற்றும் பிற பணிகளுக்கு உதவும்.

ஐஎன்எஸ் இம்பாலின் நீண்ட தூர தாக்குதல்களுக்கான முதன்மை ஆயுதம் அதன் பிரம்மோஸ் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளில் இருக்கிறது. அவைகள் 200 கிலோமீட்டர் வரை போகும். இம்பாலின் ரேஞ் 15,000 கிலோமீட்டர்.  இது இது நிலத்திற்கு வராமல் 45 நாட்கள் வரை கடலில் இருக்கும். இதில் இருக்கும் ஆபீசர்கள் 50 பேர், வீரர்கள் 250.

இந்த மாதிரியான போர்க்கப்பல்கள் எஞ்சினீரிங் அற்புதங்கள். ஆனால் அழிவு சக்தியால் நிரப்பப்பட்டிருக்கிறது. இது என்ன இருந்தாலும் பேரழிவை ஏற்படுத்தப்படும் ராணுவ ஆயுதம்.  போர் என்பது ஒரு சாபம். ஆனால் பல உயிர்காக்கும் கண்டுபிடிப்புகள் ராணுவத்தில் இருந்து வந்திருக்கின்றன. 

Please like, comment and subscribe to the videos. Most importantly, share the videos widely.

Thanks.

Take care.

Mathan.