Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

வினையை தேடி ஒரு பயணம்.....

சாதாரணமாக கதை கேட்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எனக்கும் கதை கேட்பது என்பது பிடித்தமான ஒன்று . இக்கதை மற்ற கதைகளை போல் இல்லாமல் மிகவும் மாறுபட்ட கதை வடிவத்தை கொண்டது .
"எந்த ஒரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு " என்பது நியூட்டனின் விதிகளில் ஒன்று... அதுபோல் செய்யும் வினை நன்றாகினும் , தீதாகினும் அஃது தன்னை தேடி ஒருநாள் வரும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. செய்யும் வினை எதுவாகினும் அதற்கான பலன் தன்னை தேடி வந்தே ஆகும்... எவ்வளவு யுகமாயினும்...! ஒருநாள் அவ்வினை அச்சார்ந்தவனை தேடி வந்தே ஆகும்....

இக்கதை ஓர் வினையால் உருவானது... அவ்வினை அச்சார்ந்தவரை தேடி வந்ததா ? இல்லை மறைந்ததா ? என்று பார்க்கலாம்... இறுதியில் நடந்தது என்ன ? என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்...

நான் இப்பொழுது கதைக்குள் செல்ல போகிறேன்.வினையை தேடி.... என்னோடு உள்ளே வர விரும்புபவர்கள் என் கைகளை பிடித்துக் கொண்டு வாருங்கள் ... பயணத்திற்கு செல்லலாம்.. வழியில் தொலைந்து விடாதீர்கள்.

வினையை தேடி ஒரு பயணம்...

............*..................*....................*.................*...........

ஓர் பழைய நூலகம்... அதில் பல வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகளின் தொகுப்புகளுக்கான பல பகுதிகள் அங்கு இடம்பெற்றிருந்தன. நூலகத்தின் வலப்புறம் பல வருட தொகுப்புகளும் இட புறம் புது தொகுப்புகளும் இருந்தன. பல வருட தொகுப்புகளில் செய்திதாள்கள், புத்தகங்கள் மேலும் பல முக்கிய குறிப்புகள் நிறைந்தது. அந்த நூலகம் பார்ப்பதற்கு மிகவும் அமைதியாகவும், அழகான உள்தோற்ற அமைப்பும் கொண்டதாக இருந்தது. புத்தகங்கள் அனைத்தும் வரிசையாக சீரான முறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. சுவர்களில் அழகிய வண்ண ஓவியங்கள் இருந்தன. அந்த சுற்றுச்சூழல் மனதிற்கு அமைதியை தரும் வண்ணம் இருந்தது. கீழே மேசையுடன் கூடிய நான்கு நாற்காலிகள் நூலகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருக்கின்றன. அவை நுட்பமான கலை வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்டிருந்தன . அவற்றின் வழியாக சூரிய ஒளி உள்நுழைந்தன. அவை மிகவும் புத்துணர்ச்சி தரும் விதமாக இருந்தது.. நூலக வாசகர்கள் நாற்காலிகளில் அமர்ந்து புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்தனர். பலர் புத்தகங்களை தேடிக் கொண்டும் இருந்தனர்.அதில் மூவர் மட்டும் மிகவும் அவசர அவசரமாக எதையோ தேடுவது போல் இருந்தது.பல மணி நேரமாக இவர்கள் மட்டும் எதையோ தேடி கொண்டிருக்க ... அனைவரின் பார்வையும் அவர்கள் மேல் திரும்பியது...


" இவர்கள் எதை இவ்வளவு நேரமாக தேடுகின்றனர் ...? " - என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது‌. ஆனால் அவர்களோ எதையும் பொருட்படுத்தாமல், தான் வந்த வேலையில் மிகவும் கவனமாக இருந்தனர்....

அந்த மூவரும் வலப்புறம் உள்ள பல வருட தொகுப்புகளில் பதிவுகளை வாசித்தபடி இருக்க , இதை ரொம்ப நேரமாக கவனித்துக் கொண்டிருந்த நூலக உரிமையாளர்.. அவர்களிடம் சென்று, தாங்கள் எதை தேடுகிறீர்கள்...? என்று கேட்டார்.
அவர்கள் மூவரும் .. நாங்கள் பல வருட தொகுப்புகளின் செய்திதாள்களில் முக்கிய செய்திகளை பட்டியலிடுவதாக கூறினர். பிறகு அவ்விடத்தை விட்டு சென்றார்.
செய்திதாள்கள் மற்றும் பல முந்தைய தகவல்கள் அனைத்தும் அருகாமை நூலகத்தின் தேடல்களுக்கு பிறகு அவை கிடைத்தது.

அவற்றை மிகுந்த சந்தோசத்துடன் சேகரித்துக் கொண்டு அங்கிருந்து செல்கின்றனர்.

இவர்கள் மூவர் யார்? எதற்காக இவ்வளவு நேரம் எதையோ தேடியபடி அலைந்து கொண்டு இருந்தனர்? இவர்கள் இவ்வளவு நேரம் தேடும் அளவிற்கு என்ன தான் அந்த செய்திகளில் இருந்தது ? என்ற கேள்வி அங்கிருந்த அனைவரின் மனதிலும் எழுந்து...

அந்த மூவர் செய்திகளை சேகரித்துக் கொண்டு அங்கிருந்து சென்றனர். பிறகு சில மணி நேரத்திற்கு பின்னர் அந்த நூலகத்தினை அடைக்கும் நேரம் ஆக கடையின் உரிமையாளர் அனைத்து ஜன்னல் மற்றும் மின் விளக்குகளை அணைத்துவிட்டு கிளம்ப தயாரானார்.
அப்போது திடீரென்று ஓர் எண்ணம் அவர் மனதில் எழுந்தது...!

அது என்னவென்றால் , காலையில் வந்த மூவர்கள் பற்றிய சிந்தனை தான்.
அவர்கள் அப்படி எதை தான் தேடினார்கள் என்ற சந்தேகத்தில் திரும்பவும் உள்ளே சென்று , பல வருட தொகுப்புகள் உள்ள இடத்திற்கு சென்று.. அந்த செய்திதாள்கள் மற்றும் கட்டுரை சார்ந்த புத்தகங்களை தேடிய அவருக்கு இறுதியில் அவர்கள் எதை தேடினர் என்ற வினாவிற்கு பதில் அளிக்கும் விதமாக அவை கிடைத்தன.
அதனை பார்த்த அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்நது...!
உடலெல்லாம் வியர்த்து... மூச்சுவாங்கும் அளவிற்கு பயத்தில் உரைந்தார் உரிமையாளர். மனமெங்கும் பல கேள்விகள்....
ஏன் ?? எதற்கு ?? என்ற பல தோன்றின. அவர்களை எச்சரிக்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் ஆழ்மனதில் கடலென எழுந்தது...

இவர் இவ்வாறு பயப்படும் அளவிற்கு அந்த செய்தி எதைப் பற்றியதாக இருக்கும்..? என்ற கேள்வி அவருடன் ... தொடர்ந்து நம் மனதில் இந்நேரம் எழுந்திருக்க கூடும்...

தொடரும்....



தொடர்ந்து படியுங்கள்... மேலும் விருவிருப்பான திருப்பங்கள் காத்திருக்கின்றன. விருவிருப்பான கொலை மர்ம தொடர் கதை....


வினையை தேடி ஒரு பயணம்.... - சில்பா

பகுதி : 1