Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

வினையை தேடி ஒரு பயணம்... - 2



பகுதி - 2

அந்த நூலக உரிமையாளர் மிகவும் குழப்ப நிலையில் அவ்விடதை விட்டு செல்கிறார்.

அன்றிரவு புத்தக பதிவுகளை தேடி பெற்று வந்த அந்த மூவரும் தங்களின் ஓய்வறைக்கு வந்து அமர்கின்றனர். பிறகு எடுத்து வந்த புத்தக மற்றும் செய்தித்தாள் குறிப்புகளை ஆராய்ந்து பார்கின்றனர்.
தீடீரென ஒரு குரல் .... இது என்னது ??? இதை யார் எடுத்துக் கொண்டு வந்தது ?? என்ற கேள்வி அடுத்தடுத்து வர... குரல் வந்த திசையை நோக்கி திரும்பி பார்கின்றனர். அதை பார்த்த மூவரும் .., ஆமாம்.. இது என்னது ? என்று மூவரும் ஒரே சமயத்தில் ஒருவரை பார்த்து கேட்டுக் கொள்ள ... இல்லை இதை நான் எடுக்கவில்லை...!! நீ தான்... இல்லை நீ தான் என்று ஒருவர் மேல் ஒருவர் பழிபோட்டுக் கொள்ள ... இதனை படிக்கும் நமக்கும் இந்நேரம் எதுவும் விழங்கியிருக்காது... யார் இவர்கள் ? எதை யார் எடுக்கவில்லை ? என்ற கேள்வி வர தொடங்கியிருக்கும்.

அன்று காலை சக்தி , மித்ரா, மீரா ஆகிய மூவரும் நூலகத்திற்கு சென்று புத்தக மற்றும் செய்தி மாதிரிகளை சேகரிக்க முடிவு செய்து நூலகத்திற்கு செல்கின்றனர். அங்கு நீண்ட நேரத்திற்கு பிறகு சேகரித்த குறிப்புகளை தங்கள் ஓய்வறைக்கு வந்த பிறகு சரிபார்த்துக் கொண்டிருந்த மீரா , மித்ரா -வை பார்த்து இதை யார் கொண்டு வந்தது ? இதை பற்றி நாம் தேடவில்லையே‌‌‌ ...! பிறகு எப்படி ??? என்று குழம்பி கொண்டிருந்த மீரா மற்றும் மித்ரா அருகே வந்த சக்தி இங்க என்ன பிரச்சனை ...? ஏன் இப்படி கத்திக் கொண்டு இருக்குறீர்கள் ? என்று கேட்கிறாள்.. மீரா நடந்தவற்றை கூறுகிறாள்... சக்தியும் இதை பார்த்து இதை நானும் கொண்டு வரவில்லையே...!! என்று கூற மூவரும் அது எதை பற்றிய செய்தி என்று கூற பார்க்காமல் அதை தூரமாக வைத்துவிட்டு உறங்க சென்றனர். இந்த சக்தி, மீரா, மித்ரா மூவரும் துப்பறிவு துறையில் படிக்கின்ற மாணவிகள். தங்களின் இறுதி படிப்பிற்கான குறிப்புகளை தேடி நூலகத்திற்கு செல்கின்றனர். அங்கு தவறுதலாக ஒரு செய்தி தொகுப்பு இவர்கள் தேடிய குறிப்புடன் கொண்டுவரப்படுகிறது. இதை பார்த்து தான் மூவரும் குழம்பினர். இதற்கிடையில் நூலக உரிமையாளர் மிகவும் கவலையுடன் இருக்கிறார்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த அவரது மகன் அவரிடம் சென்று ஏன் ? கவலையாக இருக்கிறீர்கள் ? என்று கேட்க... முதலில் தயங்கிய அவர் பிறகு தன் மகனிடம் நடந்தவற்றை கூறுகிறார்... இதனை கேட்ட மகன் இதில் என்ன இருக்கிறது? நூலகம் எல்லோருக்கும் பொதுவானது அப்படி இருக்கும் பொழுது ஏன் கவலை கொள்கிறீர்கள் ? என்று சமாதானம் செய்ய... அவர் சிரித்தபடி தன் மகனிடம் நீ நினைக்கின்ற அளவுக்கு அது எளிதான விஷியம் இல்லை... அதில் உள்ள ஆபத்து தெரியாமல் நீ பேசி கொண்டிருக்கிறாய் என மர்மமாக சிரிக்க... இதை கேட்ட மகனுக்கு கோபம் வந்துவிட்டது.. அந்த மூனு பேரை விட நீங்கள் இப்படி பேசுரது தான் வித்யாசமாக இருக்கிறது அப்பா என்று கூற... அவர் தன் மகனிடம் சொல்ல ஆரம்பிக்கிறார்‌.. அந்த குறிப்பு ஒரு பள்ளியை பற்றியது... என்று ஆரம்பிக்க கோபத்தில் இருந்த மகன் மெல்ல கவனிக்கிறான்...
பல வருடத்திற்கு முன் மிகுந்த செல்வாக்குடன் இருந்த பள்ளி இன்று அடைப்பட்டு இருக்கிறது... ஏழை பிள்ளைகள் படிக்க அமைக்கப்பட்ட ஒரு கிறிஸ்துவ பள்ளி தான்

" செய்ன்ட் வில்லியம் "

அப்பள்ளியின் தலைவர் ஜான்சன் மிகவும் இரக்க குணம் கொண்டவர். அவரது மனைவி ஸ்டெல்லா இருவரும் அப்பள்ளியின் வளர்ச்சிக்காக மிகவும் பாடுபட்டனர். சிறிது நாளில் அவர்கள் செய்த முயற்சியின் பலனாக பள்ளி நல்ல நிலைக்கு வந்தது. பிறகு இருவரும் சேர்ந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் விதமாக ஒரு அமைப்பை உருவாக்கி குழந்தைகளை பார்த்துக் கொண்டு வந்தனர். எல்லாம் நன்றாக இருக்கின்ற சமயத்தில் நடந்த ஒரு மர்மமான மரணத்திற்கு பிறகு அடுத்தடுத்து நிகழ்ந்த நிகழ்விற்கு பிறகு அதன் நிலை மாறியது. கடந்த பத்து வருடங்களாக இப்பள்ளி அடைப்பட்ட நிலையில் தான் உள்ளது. இன்று வரை கொலைக்கான காரணம் கண்டறிய முடியாததால் அவை காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. மேலும் அப்பள்ளியில் இருந்த பலரும் அங்கு பேய் நடமாட்டம் இருப்பதாகவும் ... அங்கு செல்பவர்கள் மர்மமாக
கொல்லப்படுகின்றனர் என்றும் பலர் பேசுவர். என்று கூற ...மகன் மிகுந்த ஆர்வத்துடன் ..., அப்படி சென்றாள்...?? என்று கேட்க தந்தை கோபம் கொண்டு அந்த எண்ணத்தை குழிதோண்டி புதைத்துவிடு என்று கத்துகிறார்.
மகன் சரி கோபப்படாதீர்கள் நான் விளையாட்டிற்கு கேட்டேன் என்றான் சிரித்தபடி... தந்தை நீ விளையாட்டிற்கு கேட்டாயா ? உன்னை பற்றி எனக்கு தெரியாதா ...!! ஒழுங்கா வேலைய பார்த்தால் சரி என்று கூறிக்கொண்டே அந்த மூவரை பற்றி யோசித்தபடியே உறங்குகிறார். காலை விடிகிறது...வழக்கம் போல் அனைவரும் பரபரப்பாக வேலைக்கு சென்று கொண்டிருக்க...சக்தி, மீரா, மித்ரா மட்டும் பொறுமையாக கண்விழித்து விடிந்து விட்டதா ?? என தனது நாளை தொடங்குகின்றனர்.