At the bottom of the Avinamukkudi - 2 books and stories free download online pdf in Tamil

ஆவினம்குடி ஓரத்திலே - 2

ஆவினம்குடி ஓரத்திலே - 2

முதலில் வாளியோட தான் ஐந்தாறு நபர்கள் ஆவினங்குடி கிராமத்துக்கு வந்தார்கள். ஏதோ தண்ணீர் புடிக்க தான் போறாங்க என்று அவிநம்குடி கிராமத்தில் வசிப்பவர்கள் நினைத்தார்கள். பிறகு தான் தெரிய வந்தது. அவர்கள் கேரளா வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி பங்களிப்பு பண்ண தான் வந்திருக்கிறார்கள் என்று.

கிராமத்தில் இருக்கிறவங்க அத்தனை பேரும் பணத்தாலும், பொருட்க்களாலும் மனமிரங்கி தங்கள் வசதிக்கு ஏற்ப உதவி செய்தார்கள்.

ஏதாவது ஒரு சாக்குபோக்கு சொல்லி, சந்தாவுக்கு யாராவது அப்பப்ப வரத்தான் செய்யறாங்க. அதற்காகவே ஒருவர் சம்பாதிக்கணும் என்ற போல் தான் இருந்தது. என்றாலும் இது உண்மையான விஷயம் என்பதால் எல்லோரும் ஒருசேர உதவி செய்தார்கள்.

திரும்பவும் கொஞ்சம் நாள் கழித்து அவர்கள் கிராமத்தில் வரலானார். இப்போது தானே வந்திட்டு போனார்கள். திரும்பவும் எதற்க்காக வந்திருக்கிறார்கள் என்று எல்லோரும் அதிர்ந்து போனார்கள்

அப்போது தான் புரிந்தது இந்த தடவை அவர்கள் எதுவும் கேட்டு வாங்கி கொண்டுபோவதற்க்காக வரவில்லை என்றும், வழக்கத்துக்கு மாறாக.

எல்லோருக்கும் பணம் தந்து ஓட்டு கேட்டு போக தான் வந்திருக்கிறார்கள் என்பதும். தேர்தல் வரும் போது தான் இவர்களுக்கு எந்த தொகுதியிலிருந்து

ஜெயிச்சோம் என்றே ஞாபகத்துக்கு வருகிறது.

கிராமத்து மக்கள் எதுவும் மறுப்பு சொல்லாமல் அவர்கள் தந்த பணத்தை வாங்கிக்கொண்டார்கள். ஒட்டு தானே கேட்கிறார்கள், அதுவும் பணம் தந்து கேட்டதை கேட்டபடியே கொடுத்திடுவோம் என்று எல்லோருமாக கலந்து

முடிவு செய்தார்கள். யார் ஜாஸ்தி பணம் தறாங்களோ அவர்களுக்கே வாக்களிப்போம் என்ற முடிவுக்கு வந்தார்கள். ஏதனாலும், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பெரிதாக வித்தியாசம் எதுவும் தெரிவதில்லையே. அடுத்த ஐந்து வருஷத்துக்கு தொல்லை பண்ணமாட்டார்களே என்று நிம்மதி அடைத்தார்கள்.

அந்த கிராமம் இரண்டு மாநிலங்களின் சீமையில் தான் இருந்தது என்பதால் யாரும் அதிகமாக கவுனிப்பதில்லை. யாரிடமிருந்தும் எந்த ஒரு விதமான தொந்தரவும் இருப்பதில்லை. கிராமத்தின் சுற்று சூழ்நிலை அமைதியாக, அமோகமாக அமைந்திருந்தது.

ஆவினம்குடி ஓரத்திலே காவடிகள் ஆடியது. காவலனின் பாதத்திலே காவிரியாறு ஓடியது. அந்த கிராமத்தின் மக்கள் வானத்தை போல பரந்த மனப்பான்மையுடையவர்களாக தான் இருந்தார்கள். அவர்கள் உதடுகளில் என்றும் ஓர் சிறு புன்னகை இருந்தது. கிராமத்தின் மக்கள் ஒருவருக்கொருவராக வாழ்ந்து வந்தார்கள். எல்லோரும் மரியாதையை தந்து மரியாதையை வாங்கிக்கொண்டார்கள். சகிப்புத்தன்மையும், பொறுமையும் , பொறுப்பும் அவர்களிடம் ஏராளமாக இருந்தது. யாரும் யார் குறையையும் சுட்டிக்காட்டமாட்டார்கள். யாரும் யாரையும் மட்டம் தட்டி பேசமாட்டார்கள். பெரியோர்களுக்கு உரிய மதிப்பை தந்தார்கள்.அடுத்தவங்க தனிப்பட்ட விழயங்களில் யாரும் மூக்கை நுழைக்க மாட்டார்கள். யாரும் அடுத்தவங்க மனதை நோகடிக்கிற மாதிரி நடந்துக மாட்டாங்க. அதனாலேயே சண்டை சச்சரவுக்கும் இடம் இருக்கவில்லை. முடிந்த வரலும் ஒருவருக்கு ஒருவர் உதவி பண்ணி வந்தார்கள். நேரத்தை வீணடிக்காமல் சீராக பயன்படுத்தினார்கள்.அன்பும் பண்பும் நிறைந்த கிராமம். மாவேலியின் ஆட்சி போன்ற, கள்ளம், கபடம் எதுவும் அந்த கிராமத்தில் இருக்கவில்லை. ஆடம்பரம், ஆர்பாட்டம் எதுவும் தென்படவில்லை.மனிதாபிமானம் ஏராளமாக இருந்தது. அன்பு, ஆதரவு, பாசம், நேசம் ஒன்றுக்கும் எந்த குறையும் இருக்கவில்லை.

அதனாலேயே உல்லாசமும், உட்சாகமும் என்றும் அந்த கிராமத்தில் நிறைவாக இருந்தது. தை பூசம் போன்ற பண்டிகை நாட்களில் தங்க தேரோடியது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.ஒவ்வொரு தையிலும் அந்த கிராம் வளர்ச்சியில் உச்சியை தொட்டது.எங்கெங்கும் ஆரவாரம், கலகலப்பு நிறைத்திருந்தது.நல்லது கெட்டதுக்கு எல்லோரும் கூடினார்கள்.

அந்த கிராமத்தில் தூய்மை நிறைந்திருந்தது. நிறைய மரங்கள் இருந்ததால் பச்சைபசேர் என்று இயற்க்கை அர்புதமாக தோத்தமளித்தது. அதி காலையில் குயில்களின் ரீங்காரம் சுவாரசியமாக இருந்தது.அப்பப்ப வீசும் ஆலமர தென்றல் மனதுக்கு இதமாக இருந்தது. பூமரங்கள், சாமரங்கள் வீசியது. ஊரெங்கும் பூ வாசம் பரவியிருந்தது.வானவில்லின் பின்னணியில் மயிலழகு மனதுக்கு திகிலூட்டியது.

அந்த கிராமத்தில் ஒரு பொது நல கழகமும் இருந்தது. தகவல் தொழில் நுட்பம் போன்ற எல்லா துறைகளிலும் ஞானிகள் கிராமத்திலேயே ஏராளமாக இருந்தார்கள் என்பதால் கிராமத்துக்கு வெளியில் இருந்து யார் உதவியும் அவர்களுக்கு தேவை படவில்லை. அதனாலேயே பண பிரிவு பண்ணி அவங்களே நெடும் சாலைகள், குடி நீர், மருத்துவமனை, பள்ளிக்கூடம், கல்லூரி என்று பொது நல வசதிகள் பண்ணிக்கொணடார்கள். எல்லா வசதிகளும் நிறைந்த கிராமம்.எல்லோரும் நிறைய படித்திருந்தார்கள்.

மலரும் மணிவண்ணனும் அந்த கழகத்தின் முக்கிய சையல் இயக்குநர்களாக இருந்தார்கள். நிதானமாக யோசித்துதான் எந்த ஒரு முடிவையும் அவர்கள் எடுப்பார்கள். பொது நல வாழ்விலும் , தனிப்பட்ட வாழ்விலும் அவர்களுக்கு ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். ஐந்து வருஷத்தில் அந்த கிராமம் ஜப்பான் போன்ற அமோகமாக வளர்ந்து வந்தது. ஒரு சில சிறுவர்கள் கிராமத்தின் முன்னேற்றத்துக்காக ஒத்துழைக்க முன் வந்தார்கள். முதியோர்கள் கோவில், குளம் என்று வாழ்ந்து வந்தார்கள்.

வாழ நினைத்தால் எந்த சூழ்நிலையிலும் வாழலாம்

என்பதற்கு அந்த கிராமம் ஓர் எடுத்துக்காட்டாக இருந்தது

பக்கத்து மாநிலங்களில் இருக்கிறவங்களுக்கு இவர்கள் வளர்ச்சியில் பொறாமை ஏற்பட்டது. அப்பப்ப தீய சக்திகளின் ஆக்கிரமணங்களுக்கு அநத கிராமம் எதிர்கொள்ள வேண்டியதாகிடித்து. ஓகி,கஜ போன்ற பொறாமையின் புயல்கள் அப்பப்ப அந்த கிராமத்தில் அலைமோதியது.

ஆனால் அவர்களுக்கு கடவுளின் அருள் ஏராளமாக இருந்தது. அவர்கள் மிகவும் முருகன் பத்தர்களா கத்தான் இருந்தார்கள். அவர்கள் சொல்லிலும் சையலிலும் ஒழுக்கம் இருந்தது.

ஒரு பக்கம் பொறாமை இருந்தாலும், தாங்களும் இவர்களை போன்ற வாழ்க்கையில் முன்னேறணும் என்ற ஆவல் அவர்களுக்கு தோன்றியது.

ஐந்து வருஷத்துக்கு பிறகு அவர்கள் திரும்பவும் ஓட்டு கேட்க வந்தார்கள்.

அந்த தொகுதியிலிருந்து தான் தேர்தலில் ஜெயிச்சோம் என்று கூட அவர்களால் நம்பமுடியவில்லை. தப்பி தவறி வழி தப்பி வந்திட்டோமோ என்று கூட நினைத்தார்கள்.அவர்கள் வாய் அடைச்சு போய், வானம் பார்த்து

நின்றார்கள். அவர்களுக்கு ஆகாயமே இடிந்து வீழ்ந்தது போல்

தோன்றியது.நம்ம உதவி ஒன்றும் இல்லாமலேயே, இவ்வளவுக்கு வேலை பண்ணியிருக்காங்களே. இவ்வளவுக்கு தூய்மையான இடம் வாழ்க்கையில் முற்றிலும் பார்த்ததே கிடையாதே என்று அவர்கள் அதிர்ந்து போனார்கள். மீண்டும் ஓட்டு கேட்கவும் வெட்க்கப்பட்டார்கள். ஐந் வருஷத்தில் என்னத்தை கிழித்தீர்கள் என்று யாரும் அவர்களிடம் கேட்கவில்லை. அரசாங்கத்துக்கு எந்த மனு தாக்கலும் யாரும் கொடுக்கவில்லை.

ஓட்டு போடுறோம் என்று பணிவுடன் சொல்லி வந்தவர்களை அனுப்பி வைத்தார்கள். எதுவும் பண்ணாமலேயே இவ்வளுவு அருமையான தொகுதி

அவர்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

எது எப்படி இருந்தாலும் நமக்கு ஓட்டு தானே முக்கியம். அடுத்தவங்க என்ன செய்கிறார்கள், செய்யவில்லை என்பதில் கவுனம் செலுத்துவதை விட, அடுத்து என்ன செய்வது என்று யோசிப்பதே மேல் என்று நினைத்தார்கள். நமக்கு சும்மா இருந்தாலும் ஓசியில், ஏசியில் இருந்தபடியே ஊதியம் கிடைக்கிறதே. அப்புறம் வீணா எதற்கு அலட்டிக்கணும், ஊர் வம்பை விலைக்கு வாங்கணும், இனியும் பேசினால் குட்டையை குழப்பறது போன்ற ஆகிவிடும் என்று எண்ணி வந்த வழியே திரும்பி சென்றார்கள்.

முற்றும்

Author : C.P.Hariharan

e mail id : cphari-04@yahoo.co.in

பகிரப்பட்ட

NEW REALESED