Read kalam badhil sollum by c P Hariharan in Tamil Motivational Stories | மாட்ருபர்த்தி

Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

kalam badhil sollum

காலம் பதில் சொல்லும்

C.P.Hariharan

திலீப் பட்டப்படிப்பை முடித்திருந்தான். பார்க்க சற்று சிவப்பாகத் தான் இருப்பான். கிட்டத்தட்ட வட்டசதுர முகம், வாட்டசாட்டமாக, வசீகரமாக இருப்பான். அவனுக்கு ஒரு அண்ணனும், ஒரு தங்கச்சியும் இருந்தார்கள். அவனுக்கு ஒரு வேலையும் கிடைத்தது. அவன் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று தான் இருப்பான். யாரையும் மதிக்கும் குணம் அவனிடம் கிடையவே கிடையாது. அவனுக்கு கிடைக்கும் சம்பளத்தையும் தாறுமாறாக செலவு பண்ணி வந்தான். வரவு எட்டணா என்றால் செலவு பத்தணா. ஒரு உதவாக்கறை போன்ற வாழ்ந்து வந்தான். எல்லோரையும் மதிப்பீடு சைய்தான். ஒரு வேலையும் ஒழுங்காக செய்ய மாட்டான் ஏனோ தானோ என்று சோம்பேறித்தனமாகத் தான் பணியாற்றுவான். அப்படியே குண்டுச்சட்டில குதிரையோட்டி காலத்தை கரைத்தான்

காலப்போக்கில் ஒரு அரசாங்க வேலை உள்ள பெண்ணை கல்யாணமும் பண்ணிக்கொண்டான், என்றாலும் அவளுக்கு ட்ரான்ஸபெர் கிடைக்காததால் வேலையை விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கண்ணில கண்டதை காசுக்கு வாங்கி நெருக்கடியை சந்தித்தான். அவன் வாழ்க்கையையே ஒரு விளையாட்டாகத் தான் நினைத்தான். அப்பப்ப குடி, சீட்டாட்டம் என்று தான் இருப்பான். எப்போது எங்கே செல்வான், எப்போது வீட்டிற்கு வந்து சேருவான் என்று யாருக்கும் ஒன்றும் சொல்ல முடியாது. அவன் தன எதிர் காலத்துக்காக எதுவும் சேமிக்கவில்லை. யார் சொல்பேச்சையும் கேட்டுக்கொள்ளமாட்டான். யாருக்காகவும் ஏதையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் அவனுக்கு கிடையாது. அவனுக்குனு ஒரு வழி, பேர்வழி. அவன் ஒரு அவசரக்குடுக்கையாகத்தான் இருந்தான். சரியாக யோசிச்சு எந்த ஓர் முடிவையும் எடுக்கமாட்டான். வருவதை வந்தபடி சந்திப்போம் என்றமனப்பான்மையுடையவன். யாருக்காகவும் எதுக்காகவும் கவலையே படமாட்டான். அவனை சொல்லியும் குற்றமில்லை.அவன் வளர்ந்த சூழ்நிலையும் அப்படி தான். ஒரே வீட்டுக்குள் ஐந்து பேர் இருந்தும் யாரை பற்றியும் யாருக்கும் தெரியாது. யார் எப்போது எங்கே சென்றுவருகிறார்கள் என்று யாரும் ஒருபோதும் ஒருவருக்கொருவரை கேட்டுக்கொண்டதில்லை. ஐந்தில் படித்தது தானே ஐம்பதிலும் விளையும். எல்லோருமே ஒரு தனித்த தனி ரகம்.

அவன் மனைவி திவ்யாவும் நடுத்தர குடும்பத்தில் சேர்ந்தவள் தான்.மிகவும் சிரமப்பட்டுதான் பட்டப்படிப்பை முடித்திருந்தாள். எளிமையாக இருப்பாள். ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லை. தன் வீட்டில் யாருக்கும் இனிமேலும் பாரமாக இருக்கக்கூடாது என்று எண்ணித்தான் கல்யாணத்துக்கும் ஒற்றுக்கொண்டாள்.

அவள் புகுந்த வீட்டின் சுற்றுசூழல்கள் நன்றாக அமைந்திருந்தது. வீட்டு பக்கத்திலேயே ஒரு பூங்கா இருந்தது. அப்பப்ப வீசும் இளம் தென்றல் மனதுக்கு இதமாக இருந்தது.

அந்த பூங்காவில் வண்ண வண்ண பூக்கள் மலர்ந்திருந்தது. பட்டாம்பூச்சிகள் அந்த பூக்களின் தேனருந்த வட்டமிட்டு பறந்து கொண்டிருந்தது. பஞ்சவர்ண கிளிகள் மர கிளைகளில் ஊஞ்சல் ஆடியது. அவளும் அப்பப்ப இயற்கையின் அழகை ரசிப்பது பழக்க வழக்கமானது. ஊரெங்கும் மல்லிகை, செம்பகம், தாழம் பூக்களின்

நெறுமணம் பரவியது. எங்கெங்கும் பூவாசம். பசுமை நிறைந்த இடம். அது அவளுக்கு பரவசத்தை தந்தது.

வீட்டிற்கு தேவையான காய் கனிகளை வீட்டை சுற்றியிருந்த தோப்பிலேயே உருவாக்கினாள்.

புகுந்த வீட்டிலயாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்க முடியும் என்று கனவு கண்டாள். ஆனால் அவளின் கனவுகள் நீண்ட நாள் நீடிக்கவில்லை.

திலீபின் நடத்தை அவளுக்கு இன்னுமும் திகிலூட்டியது.

இவனை நம்பி, இருக்கிற அரசாங்க வேலையையும் விட்டுட்டு வந்தோமே என்று சலிப்பானாள். தன்னை விட பெரிய முட்டாள் இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது என்று வருந்தினாள்.

வேலையை ஒழுங்காக செய்ய விரும்புவர்களுக்கு வேலையும் கிடைப்பதில்லை. வேலையில் இருப்பர்வகளுக்கோ

.ஒழுங்காக வேலை செய்ய மனமும் இல்லை. ஒரு வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது.

உணர்ச்சிவசப்பட்டு, எடுத்தோம் கவுத்தோம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது என்று நினைத்தாள். நிதானமாக எடுக்கும் முடிவுகள் தானே பலனை தரும்.

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள்.

ஒரு பெண்ணுக்கு புகுந்த வீட்டில் இருப்பது தானே மதிப்பையும் நிம்மதியையும் தரும்.

வாழ்க்கையில் ஒன்றும் நிரந்தரம் இல்லையே.

எல்லா பிரச்சன்னைகளுக்கும் ஓர் முடிவு இருக்கும் என்று நம்பினாள்.

அவனை கொஞ்சம் கொஞ்சமாகத் தான் தன் வழிக்கு கொண்டுவரமுடியும் என்று நம்பினாள். அதற்காகவே முயன்றாள். ஆனால் அவள் முயற்ச்சிகள் ஒன்றும் பயனளிக்கவில்லை. நாளுக்கு நாள் நிலைமை எல்லை மீறி கை விட்டு போய்விட்டது. அவளால் எதையும் கடைபுடிக்க இயலவில்லை. அவளுக்கு என்ன பண்ணுவது, ஏது பண்ணுவது என்று ஒன்றும் தலை கால் புரியவில்லை. ஏதாவது சொன்னால் அவன் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பான். இனிமேலும் எதுவும் சீர்திருத்தம் செய்யமுடியாது என்று அவளுக்கு உறுதியாகிவிட்டது. என்றாலும் கொஞ்சம் பொறுத்துத்தான் பார்ப்போம் என்று நினைத்தாள்.

உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்காது என்று நினைத்தாள். இவனை நம்பி வாழ்ந்தால் குடும்பம்

நடுத்தெருவுக்குத் தான் வந்து சேரும் என்பது அவளுக்கு உறுதியாகிவிட்டது.

சீரும் சிறப்போட வாழ்வதற்க்கும் கொடுப்பினை வேண்டுமே.

ஒரு வேலைக்கு செல்வதை விட வேறு வழியொன்றும் அவளுக்கு தெரியவில்லை அதற்காக தீவிரமாக முயன்றாள். பள்ளிக்கூடங்களில் விண்ணப்பம் அனுப்பினாள்.

அப்படி வறுமையில் இருக்கும்போது தான் ஒரு நாள் ஒரு பிச்சைக்காரியும் வீட்டு வாசலில் வந்து நின்றாள் திவ்யாவுக்கோ நிறைபறை போன்றவே நிறைஞ்ச மனசு. தனக்குனு ஒன்றும் இல்லை என்றாலும் எல்லாத்தையும் அடுத்தவங்களுக்கு அள்ளிக்கொடுக்கும் வானம் போன்ற விசாலமான மனப்பான்மை அவளுக்கு.

கர்ணனை விட்டால் தானம் பண்ணும் வரிசையில் அவளாகத் தான் இருக்கும் என்பது போல.நேற்று மிஞ்சியிருந்த மீன் குழம்பையும், பழங்கஞ்சியையும் ஊத்தி வந்தவளின் பசியாற்றினாள். என்றாலும் இவள் தன்னிடம் பிகிச்சை கேட்பது

பிச்சைக்காரியிடம் பிச்சை கேட்பது போன்றத் தானே என்று அவளுக்கு தனக்குள் சிரிப்பு எழுந்தது. நாலு பேர்க்கு நல்லது செய்தால் ஏதோ ஒரு வழிக்கு தனக்கும் நல்லதே நடக்கும் என்று நம்பினாள்.

திலீபோ, இங்கே நின்று நேரத்தை வீண் பண்ணாதே, இங்கே ஒன்றும் கிடைக்காது,

மட்டுமல்லாமல் இந்த தெருவிலேயே யாரும் ஒன்றும் தரமாட்டார்கள்,நடையை கட்டு

என்று வந்தவளிடம் அழுத்தம்திருத்தமாக,ஈன் இரக்கம் பச்சாதாபம் இன்றி ஆணி அறைந்தது போல் கூறினான். அவனுக்கு தானும் இல்லை தர்மமும் இல்லை என்ற மனப்பான்மை.

பிறந்த வீட்டிற்க்கு தான் கொஞ்ச நாள் சென்றுவரலாம் என்றால் தன் வீட்டு பொருளாதாரமும் அதுக்கு இடம் கொடுக்கவில்லை.

இரண்டு பசங்களை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு அவளுக்கு இருந்தது. இனிமேல் ஒரு சக்ர வண்டியாகத் தான் வாழ்க்கையின் வண்டியையும் ஓட்டணும் என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்து விட்டது. எவ்ளவோ கெஞ்சி கூத்தாடியும் அவன் ஒன்றும் பொருட்படுத்தாமல் தானே நடந்துகொள்கிறான்.

கூடிய சீக்கிரம் அவளுக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலை கிடைத்துவிட்டது. அவள் ஓர் நிம்மதி பெருமூச்சிழுத்தாள். என்றாலும் கணவர் சரியில்லையே என்ற வருத்தம் அவள் மனதை உறுத்தியது.

முழு குடும்பப் பொறுப்பும் அவள் தலையில் வீழ்ந்தது. செய்யும் தொழிலே தைவம் என்று நினைத்தாள். ஓயாத அலைபோல் உழைத்தாள்.

அவள் தன் துன்பதுயரங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்பலை.

. யாரை சார்ந்தும் வாழவும் அவளுக்கு புடிக்காது.

வருத்தப்பட்டு பயன் ஒன்றும் இல்லையே என்று எண்ணினாள்.

ஒரு நாள் இல்லை என்றால் ஒருநாள், அவளுக்கும் விடிவுகாலம் வரும் என்று நினைத்தாள்

வீட்டுக்கு வீடு வாசப்படி, விஷயங்கள் ஆசைப்படி. எங்கெங்கும் போராட்டம் தான்

எல்லாமே ஒன்றாட்டம் தான் என்று யாரோ பாடின பாட்டின் வரிகள் அவள் நினைவுக்கு வந்து அலை மோதியது.

அப்படியே காலம் கரைந்தோடியது,

முதல் பய்யன் ஸ்ரீதருக்கு ஒரு வேலையும் கிடைத்து விட்டது. அவனுக்கும் கல்யாணத்தை பண்ணிவைத்தார்கள். கூடிய சீக்கிரம் அவனுக்கு ஒரு ஆம்புளையும் பிறந்தது. திவ்யா பூரித்தது போனாள்.

இரண்டு வருஷங்களுக்கு பிறகு ஒருநாள் திவ்யாவுக்கு அதிகாலையிலிருந்தே

ஏதோ ஒரு விபரீதம் நடக்க இருக்கிறது என்பது போல் முன் எச்சரிக்கையாக எல்லாமே ஏதிர்மறையாகவே நடந்தது. அதிகாலையிலேயே தண்ணீர் கிளாஸ் கை தவறி விழுந்து உடைந்தது. விளக்கு ஏற்றின போது அது அவசகுனமாக அணைந்தது.

வீட்டு வாசலில் கோலம் போட வெளியில் வந்ததும் பூனை எதிர்பாராமல் குறுக்கே சென்றது.

சமையல் அறையில் பால் பொங்கி வழிந்தது.

அன்று இரவு திடீரென்று ஸ்ரீதருக்கு உடம்பு ஐஸ் போன்ற ஜில் என்று இருந்தது.

அவனுக்கு என்னாச்சு என்று திலீபுக்கு ஒன்றும் புரியவில்லை.

உடனடியாக டாக்டரை அழைத்தார்கள். அவர் வந்து அவனை சோதித்தார்

அவன் காலமாகி அரை மணி நேரம் ஆகிடுத்து என்று அவர் கூறினார்

திலீபுக்கு கையும் ஓடலை காலும் ஓடலை.

இதுநாள் வரலும் வாழ்க்கையை ஒரு விளையாட்டாக மட்டும் தானே நினைத்தோம் என்று வருந்தினான். கடவுள் இவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்திட்டாரே. எல்லோரும் பக்கத்தில் இருந்தும் ஒரு வாய் தண்ணீர் கூட அவனுக்கு அருந்த வாய்ப்பில்லாமல் இப்படி உயிரை இழந்து விட்டானே என்று புலம்பினான்.

அவனால் நடந்தது எதுவும் ஜீரணிக்க முடியவில்லை.

யார் என்னதான் ஆறுதல் அளித்தாலும் புத்திர சோகம் அவ்வளவு சுலபமாக மறக்கக்கூடியது இல்லையே. இனிமேலாவது குடும்பத்துக்கு உருப்படியாக ஏதாவுது செய்யணும் என்ற ஒரு திருப்பம் அவன் மனதில் ஏற்பட்டது. அடுத்தவங்களை குறை சொல்லியே காலத்தை காரைத்தோமே தவிர உருப்படியாக வாழ்க்கையில் எதுவும் செய்யவில்லையே. அதுக்கு சரிசமமாக தண்டனையை கடவுள் கொடுத்திட்டார் போல. இப்படியும் ஒரு ஓகி போன்ற புயல் அவன் வாழ்விலும் வரும் என்று அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லையே.

அடுத்தவங்களுக்கு துன்பதுயரம் வந்தபோதெல்லாம் எதுவும கண்டுகொள்ளவில்லையே. இப்ப தனக்கென்று ஒரு தர்ம சங்கடம் வந்தபோது தானே அடுத்தவங்க கஷ்டமும் தெரிய வருகிறது.

அப்பப்ப கோயிலுக்கு போகும் போது கூட, தனக்கு வேண்டி மட்டும் தானே சுயநலமாக பிரார்த்தனை பண்ணினோம். அக்கம் பக்கம் யாரார் கோயிலுக்கு வந்திருக்காங்க என்று கூட கவுனிக்கவில்லையே. அதனாலயோ என்னவோ சுயஉறுதியின் பலனை இன்றுஅனுபவிக்கிறோமோ என்னமோ என்ற உறுத்தல் அவனை உரு குலைத்தது. அவன் முரட்டுப்பிடிவாதம் அவனை இந்த நிலைமைக்கு ஆளாக்கிவிட்டது அவனை இன்னும் ஆழமாக யோசிக்க வைத்தது.

மருமகள் சுதாவின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியானது. அப்படியே ஒரு வருஷம் ஓடி மறைந்தது.

அப்போது தான் தன் இரண்டாவது பய்யன் ஸ்ரீநிவாஸை தன் மருமகளுக்கே கல்யாணம் பண்ணினால் என்ன என்ற ஒரு யோசனையும் திலீபுக்கு தோன்றியது. திவ்யாவுக்கும் அது தான் சரியான முறை என்று தோன்றியது. ஸ்ரீநிவாஸும் ஒற்றுக்கொண்டான்

குடும்பம் என்று வரும்போது தியாகம் பண்ணித்தானே ஆகணும். கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள் என்று தனக்கு தானே ஆறுதல் அளித்துக்கொண்டான். அகால மரணம் என்று ஒரு பக்கம் அவங்களுக்கு வருத்தம் இருந்தாலும் மரணம் பல பிரச்சென்னைகளுக்கு தீர்வாகிவிட்டது.

முற்றும்

Author : C.P.Hariharan

Email id : cphari_04@yahoo.co.in