Fault rhythms books and stories free download online pdf in Tamil

தப்புத் தாளங்கள்

தப்புத் தாளங்கள்

Author : - C.P.Hariharan

e mail id : - cphari_04@yahoo.co.in

நடராஜும் கவிதாவும் தனியார் நிறுவனங்களில்த் தான் பணி புரிந்து வந்தார்கள். அவர்கள் அலுவலகங்களும் சற்று தொலைவில்த் தான் இருந்தது. அவங்களுக்கு ராகேஷ், ரமேஷ் என்று இரெண்டு பசங்கள் இருந்தார்கள். மூத்தவன் ராகேஷ் பத்தாவதிலும் , இளையவன் ரமேஷ் ஏழாவதிலும் படித்துக்கொண்டிருந்தார்கள். தனியார் நிறுவனம் என்பதால் அவர்களுக்கு வேலை அழுத்தமும் ஜாஸ்தி இருந்தது. அவர்களுக்கு பூர்விக சொத்து என்று சொல்லிக்கொள்ளும்படியாக பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. கடுமையாக உழைத்து சம்பாதித்தால் மட்டுமே வாழ முடியும் என்ற சூழ்நிலை. ஓரளவுக்கு சிரமப்பட்டாலும் நிம்மதியாக வாழ்ந்து வந்தார்கள்.சிறிய குடும்பம். எப்பவும் சுறுசுறுப்பாக இருந்தார்கள்.

வீட்டை சீராக கவனிக்க அவங்களுக்கு நேரமும் இருக்கவில்லை. பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்த பசங்க படிப்பார்கள் என்று தான் அவர்கள் நம்பினார்கள். ராகேஷ் ஓரளவுக்கு படித்தாலும், சிறியவனுக்கு விளையாட்டு புத்தி அதிகம். படிப்பில் அவனுக்கு அவ்வளவுஆர்வம் இருக்கவில்லை. படிப்பில் அவன் ஓர் சராசரி மாணவனாகத் தான் இருந்தான்.அவனும் சிறு பிள்ளை தானே, பெரிய வகுப்பிற்கு வரும்போது கவனித்துக்கொள்ளலாம் என்று அவன் தாய்தந்தையார் நினைத்தார்கள். அப்போது புத்திமதி சொல்லி எச்சரிக்கலா ம் என்று தான் எண்ணினார்கள். அதனாலயே அவன் போக்கிலேயே அவனை

விட்டுவிட்டார்கள். இளையவன் என்பதால் ஜாஸ்தி செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். அவர்கள் கணக்கு தப்பு கணக்காகிடும் என்று

அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவன் ஒரு சுதந்திர பறவை போன்ற அலைந்து திரிந்தான். அவனோட நண்பர்களும் சரியாக இருக்கவில்லை. அவனை கொஞ்சம் கொஞ்சமாக சிகரெட் குடிக்கவும், கஞ்சா சாப்பிடவும் வற்புறுத்தினார்கள்.அவனும் அதை ஒன்றும் பெரிதாக கருதவில்லை. .முதலில் கொஞ்சம் தயக்கம் தோன்றினாலும் பின்னாடி ஒற்றுக்கொண்டான். அவனுக்கு அதுவே ஒரு பழக்க வழக்கமாகிவிட்டது. சிகரெட் குடிக்கிறது, கஞ்சா சாப்பிடுவது அவனால் தவிர்க்க முடியவில்லை. வீட்டிலும் அவனை

கவனிக்க ஆளில்லை என்பது அவனுக்கு இன்னமும் வசதியாக போச்சு.

அப்பப்ப அவனுக்கு மயக்கம் வந்தது. என்னென்னமோ தோன்றியது. எதிலும் கவனம் செலுத்த அவனால் முடியவில்லை. சரியாக தூங்க இயலவில்லை..தன்னந்தனிமையில் தனிமரமாகத் நின்றுத் தவித்தான். ஒரு பொழுது கலக்கம்,ஒரு பொழுது மயக்கம் என்று நிலைமை அவனை தாக்கியது. சின்னஞ்சிறு வயது. தப்பும் சரியும் பிரிச்சு பார்க்க தெரியாத பருவம் அவனுக்கு.

யாரிடம் போய் சொல்வது என்று ஒன்றும் அவனுக்கு.

தெரியவில்லை. அவனுக்கு அச்சமும், பயமும் முந்தி நின்றது. மனஅழுத்தமும் அதிகரித்தது. ஒரே குழப்பமாக இருந்தான். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எப்படி தன்னை மீட்பது என்று அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. அவன் வாடிக்கையாக செல்லும்

அந்த பார்க்கில் ஒரு சின்ன சிவன் கோவிலும் இருந்தது. அந்த கோவில் பூசாரியும் அப்பப்ப அவனை எச்சரித்தார்.

குறிப்பிடத்தக்க செயலாக்கம் படிப்பில் இல்லை என்பதால் பெற்றோர் ஆசிரியர்களின் கூட்டங்களிலும் அவனை இன்னும் சீர் திருத்த வேண்டியிருக்கு என்று எச்சரித்தார்கள். இல்லை என்றால் பள்ளியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டியிருக்கும் என்று கூறினார்கள்.

பெற்றோர்கள் எடுத்து சொன்னாலும் அவன் எதுவும் காதில் வாங்கிகொள்ளவில்லை. அடுத்த மாதத்திலிருந்து அவனை ஒரு தனிபோதனைக்கு அனுப்புவதாக முடிவெடுத்தார்கள்.

அவன் வகுப்பு தோழர்கள் அடக்க ஒடுக்கமாகத் தான் இருந்தார்கள். அவர்கள் படிக்கும் பள்ளியின் கட்டுப்பாடு கணிசமாகத் தான் இருந்தது. அது ஒரு பிரபலமான பள்ளிக்கூடம்தான். சிறந்த ஆசிரியர்கள். சுற்று சூழ்நிலைகளும் நன்றாகவே அமைந்திருந்தது.

அம்மா அப்பாவுக்குத் தான் பசங்களை கவனிக்க நேரமே இல்லையே.

அவனால் படிப்பிலும் கவுனம் செலுத்த முடியவில்லை. சிகரெட் வாங்கக் கூட

அவனிடம் பணம் கிடையாது. அப்பப்ப கடன் வாங்கி தன் தேவைகளை

நிறைவேற்றிக்கொண்டான். போக போக கடனும் அதிகரித்தது. கடைக்காரன் பணம் திருப்பி கொடு என்று அவனை மிரட்டினான், கட்டாயப்படுத்தினான். ஊருக்கு போய் வந்ததும் கடனை அடைப்பதாக கூறினான்.

ஊரிலிருந்து திரும்பி வந்த பிறகும் அவன் கையில் சல்லிக்காசு கூட இருக்கவில்லை. கடைக்காரன் திரும்பவும் அவனை மிரட்டினான். அவர்கள் வாக்குவாதம் சண்டை சச்சரவில் முடிந்தது. கடைக்காரனும் அவன் கூட்டணியும் சேர்ந்து அவனை கண்டபடி கண்மூடித்தனமாக அடித்து உதைத்தார்கள். நெடுநேரம் வாக்குவாதமும் சண்டையும் நீடித்தது.

அவனை இப்படி குரூரமாக மனசாட்சியின்றி எட்டி ஒதைப்பார்கள் என்று அவன் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. கடைசி வரலும் அவன்

அவர்களிடம் போராடினான்.

இதற்க்கு முந்தியும் நிறைய சண்டை சச்சரவு அந்த பார்க்கில் நிகழ்ந்ததுஅவன் பார்த்ததுண்டு. என்றாலும் அவனுக்கு புத்தியில் ஒன்றும் உறைக்கவில்லை. நிலைமை எல்லை மீறி போனது.

பார்த்தவர்களெல்லாம் வேடிக்கை தான் பார்த்தார்களே தவிர சண்டையை யாரும் விலக்கி விடவில்லை. யாரோ எக்கேடோ கெட்டு போகட்டும் என்று தானே இந்த உலகமும் நினைக்கிறது. ஊர் வம்பை விலைக்கு வாங்க யாரும் விரும்பவதில்லையே.

அவர்கள் உடம்பின் பாதிக்கப்படக்கூடிய பகுதிலயில் அடித்ததால் அவன் இறந்து விட்டான். அவன் இறந்ததும் அவர்களுக்கு தெரியவில்லை. அவன் மயக்கம் போட்டு வீழ்ந்தான் என்றுதான் நினைத்தார்கள்.

பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அவனை தூக்கி சென்றார்கள். அவன் ஏற்கனவே உயிர் இழந்ததாக டாக்டர்ஸ் கூறினார்கள். அது அவர்களுக்கு

மிகவும் அதிர்ச்சியை தந்தது. அவர்கள் அங்கேயிருந்து தப்பிச்சு

ஓட முயன்றார்கள். ஒருவன் மட்டும் பிடிப்பட்டான். அவன் மூலம் குற்றவாளியை பிடித்தார்கள்.

கோயில் பக்கத்தில் இருக்கும் ஒரு பூங்காவில் தான் அவனை கொலை பண்ணினார்கள். அவங்களும் அவன் இப்படி இவளவு சீக்கிரம் உயிர் இழந்து விடுவான் என்று நினைக்கவில்லை. பணம் திருப்பி தராத கோவத்தில் கண்ட படி அடித்து உதைத்தார்களே தவிர அவனை கொல்லணும் என்று அவர்கள் திட்டமிடவில்லை. தகவல் ஊரெங்கும் காட்டு தீ போன்ற

பரவியது. எல்லோரும் அதிர்ந்து போனார்கள்.

நீண்ட நேரம் ஆகியும், அவன் வீட்டுக்கு வந்து சேரலை என்று நினைத்து அண்ணனும் அவனை தேட முயன்றான். அப்போது தான் இப்படி ஓர் வ்யவகாரம் நடந்திருக்கு என்பதே அவனுக்கு தெரிய வந்தது.

வீட்டிற்கும் தகவல் சென்றுவிட்டது. அப்போது தான் கவிதாவும் அலுவலகத்திலிருந்து வீடு வந்து சேர்ந்திருந்தாள். அவள் பயணக் களைப்பில் இருந்தாள். அவள் நிலைகுலைந்து தடுமாறினாள். போட்டது போட்டபடி என்று மருத்துவமனைக்கு சென்றாள். தன் மகன் இறந்த தகவல் தெரிந்ததும் அங்கேயே மயக்கம் போட்டு வீழ்ந்துவிட்டாள். ராகேஷும் வீட்டிலிருந்து

வறத்துக்குள்ளாலேயே காரியத்தை கச்சிதமாக முடித்திருந்தார்கள். அது அவனுக்கு மிக பெரிய அதிர்ச்சியை தந்தது. அவனுக்கு தம்பியை பார்ப்பதா இல்லை அம்மாவை கவனிப்பதா என்று ஒன்றும் தலை கால் புரியவில்லை. உடனடியாக தன் தந்தையை வரவழைத்து, நிலமையை ஓரளவுக்கு சமாளித்தான். அம்மாவும் தன் நினைவுக்கு வர நெடு நேரம் ஆகிவிட்டது. துன்பதுயரங்கள் தனியாக வருவதில்லையே, ஒருசேரத் தானே வருகிறது என்று திணறினான்.

காவல் விசாரணை தொடர்ந்தது.

கொன்றவனை உடனடியாக கைய்யோட கைது செய்தார்கள்.

எல்லோரும் நியாயத்துக்காக போராடினார்கள். நியாயத்துக்குக்காக ஊர்வலம் வந்தார்கள். அங்கே இருக்கும் கஞ்சா, சிகரெட் விற்பனை செய்யும் வெற்றிலை கடைகளை எரித்துவிட்டார்கள். சூழ்நிலை கலவரம் போன்ற ஆகிவிட்டது.

உற்றார் உறவினர்கள் வ்யவகாரம் ஆகிடும் என்று எண்ணி அவர்களிடமிருந்து விலகி நின்றார்கள். யாரும் துக்கம் விசாரிக்க கூட வரவில்லை, அவர்கள் தங்கள்

உறவுக்காறங்களே கிடையாது என்று மற்றவங்களிடம் கூறினார்கள்.எல்லோரும் அவங்கவங்களுக்கு எந்த வில்லங்கமும் வந்திட கூடாது என்று தானே

நினைக்கிறார்கள். மற்றவங்களை பற்றி யாரும் கவலைப்படுவதில்லையே.

அவனை சீர்திருத்தம் செய்வதற்கு முன்பே,அவன் இவளவு சீக்கிரம் காலமாகிவிடுவான் என்று அவன் வீட்டினர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் இதயம் வெடித்தது. மனதை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டார்கள், விதிக்கு புத்தி அனுசரிக்கும் என்பார்கள். அதனால் தானே அவன் விஷயத்தில் ஒரு முடிவெடுக்கவும் தாமதமாகி விட்டது.. அவன் சையலுக்கு ஏற்ப தண்டனையும் கிடைத்துவிட்டது. முற்பகல் செயல் பிற்பகல் விளையும் என்பார்கள் . இனிமேல் வருந்தி பயன் ஒன்றும் இல்லையே. என்று எண்ணினார்கள். அவனை கொன்ற குற்றவாளிகளை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இவன் தானே தெரிஞ்சோ தெரியாமலோ தப்பான கூட்டணியில் மாட்டிக்கொண்டான்.

கோயில் காவலனும் எல்லாம் பார்திட்டும் ஒன்றும் தெரியாதது போல தான் நடித்தான். பார்த்தவங்க யாரும் சாட்சிக்கு வரவோ வாக்குமூலம் தரவோ

தயாராகவில்லை.

எல்லோரும் தந்தை தாயாரைத் தான் குறை சொன்னார்கள். ஊர் வாயை அடக்க முடியாதே. இப்படி எல்லோரும் சொல்லிக்கொள்ளும்படி

. ஆகிடுத்தே என்று கவிதா வருந்தினாள். ஒரே நிமிடத்தில் அவள் வாழ்க்கையின் கனவுகள் கண்ணீரில் கரைந்தது.

இந்த ஊர் உலகமெல்லாம் நாலு நாள் தானே சொல்லும். எல்லோருக்கும் பதிலளிக்க முடியாதே.. யாரோ என்னமோ சொல்லிக்கொண்டு போகட்டும் என்று விட்டுவிட்டார்கள்.

,கொஞ்சம் முன்னாடி தான் வீட்டிலிருந்து இப்ப வாறேன் என்று சொல்லிசென்றிருந்தான். இப்படி ஒரேயடியாக சென்றுவிடுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை என்பதால் தானே சண்டையே ஆரம்பித்தது. கொஞ்சம் பணம் தான். அதை வீட்டில சொல்லியிருந்தால் சமாளித்திருக்கலாம். பிரசென்னையை கச்சிதமாக முடித்திருக்கலாம்.

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே

அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்பதிலே என்பார்கள்.

பசங்க தப்பு பண்ணினால், தாய் தந்தையாரைத் தானே இந்த உலகம் சுற்றிக்காட்டும். நடந்தது எதுவும் தவிர்க்க முடியவில்லையே என்று

கவிதா வருந்தினாள். நடக்க இருக்கிறது நடந்து தானே தீரும். முதலிலேயே கண்டிச்சு வளர்த்திருந்தால் இந்த நிலைமையை தவிர்த்திருக்கலாம்

என்று வருந்தினார்கள். தப்பு தாளங்கள் , தவறிய பாதங்கள்

இனி எப்படி வாழ்வதென, எனஎழுதிய வேதங்கள் என்ற போல் ஆகிவிட்டது

நிலைமை. அவர்கள் கவனக்குறைவு அவர்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது. எவளவு முயன்றும், நடந்தது எதுவும் அவங்களால் ஜீரணிக்க முடியவியலை. ஒரு சில கேடப்பயல்களின் கூட்டணி அவனை இல்லாமல் செய்தது. ஒரு குடும்பம் அநியாயமாக பாதிக்கப்பட்டது.

இந்த நஷ்டத்துக்கு எதுவும் ஈடாகாது என்று தவித்தார்கள். ஒரு பாவமும் சைய்யாத அவர்களுக்கு இவளவு சோதனைகளை சந்திக்க நேர்ந்தது. ஒரு சில நேரங்களில் கடவுள் இருக்காரா இல்லையா என்று கூட அவங்களுக்கு சந்தேகம் எழுந்தது.எல்லாம் கை விட்டு போன பிறகும் இன்னும் எதற்க்காக உயிர் வாழணும் என்று அவர்களுக்கு தோன்றியது. என்றாலும் முதல் பையனுக்காவது

ஒரு சரியான வழியை காட்டணும் என்பதால் வாழ்ந்து தானே ஆகணும்.

என்று தனக்குத் தானே ஒருவருக்கொருவர் ஆறுதல் அளித்துக்கொண்டார்கள்.

வாழ்க்கை தந்த பாடம், ஒரு போதும் மறக்க முடியாத மிக பெரிய பாடம் என்று

அவர்களுக்கு உறுத்தியது. இனிமேல் எச்சரிக்கையாக இருக்க கற்றுக்கொண்டார்கள்.

முற்றும்

Author : - C.P.Hariharan

e mail id : - cphari_04@yahoo.co.in

பகிரப்பட்ட

NEW REALESED