Read Mella Thiranthathu Kathavu by c P Hariharan in Tamil Motivational Stories | மாட்ருபர்த்தி

Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

Mella Thiranthathu Kathavu

மெல்ல திரந்தது கதவு

ராகேஷும் தினேஷும் ஒரே பள்ளிக்கூடத்தில்த்தான் பன்னெண்டாவது வரலும் படித்து முடித்தார்கள் தொடர்ந்து ஒரே கல்லூரியில் பி.டெக்.பட்டமும் பெற்றுக்கொண்டார்கள் இரண்டு பேரும் உற்ற நண்பர்களாக இருந்தார்கள்

இருவரும் பார்க்க ஓரளவுக்கு அழகாகத் தான் இருந்தார்கள் ராகேஷுக்கு அடர்த்தியான மீசை இருந்தது

அவன் சிவப்பாக வாட்டசாட்டமாக தோத்தமளித்தான் தினேஷோ கிரீதா வைத்திருந்தான்

ராகேஷுக்கு படித்துமுடித்ததும் உடனடியாக ஒரு வேலையும் கிடைத்து விட்டது.

கூடிய சீக்கிரம் அவன் திருமணமும் சட்புட்ட்ன்னு நடந்து முடிந்தது ராகேஷோ லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணிக்கொண்டான்

ராகேஷின் தாய் தந்தைக்கு அந்த கல்யாணத்தில் கொஞ்சம் கூட விருப்பம் இருக்கவில்லை அந்த அதிர்ச்சியில் அவன் தந்தை காலமாகி விட்டார் ராகேஷுக்கு ஒரு தங்கச்சி இருந்தாள் அவள் பெயர் ரேகா

தினேஷ், ராகேஷ் வீட்டுக்கு போய் ரொம்ப நாளாச்சே என்று எண்ணி அடுத்த நாளைக்கு அவங்க வீட்டிற்கு போகலாம் என்று நினைத்திருந்தான்

அதுக்குள்ளாலேயே அவனுக்கு ராகேஷின் தந்தை காலமான தகவலும் வந்து சேர்ந்தது

தினேஷுக்கோ நாய் படாத பாடுவிட்டும் ஒரு வேலையும் கிடைக்கவில்லை அவன் படிப்பு முடிந்ததுமே அவனுக்கு ஏழரை சனியும் ஆரம்பமானது என்னதான் படித்து கிழித்தாலும் தகவல் நுட்பக்கத்தில் திறமை இருக்கிறவர்களுக்கு மட்டும் தானே வேலையும் கிடைக்கிறது

எங்க இன்டெர்வியூவுக்கு போனாலும் ஏதோ ஒரு நொண்டி சாக்கை சொல்லி தள்ளித்தானே விடுறாங்க தகவல் நுட்பக்கத்தில் கொஞ்சம் கூட சீர்திருத்தம் செய்யலாம் என்றால் அதுக்கும் பணம் தேவை படுதே. யாரிடம் போய் கடன் கேக்கிறது அப்படியே கடன்வாங்கி பெயர்ச்சி எடுத்தாலும் சரியாக ஒன்றும் சொல்லி தறவங்க யாரும் இல்லையே எல்லோரும் எதிர்மறையாகத் தானே பேசுகிறார்கள் ஏனோ தானோ என்று பாடம் சொல்லி தந்து கடன் தொலைக்கிறாங்க.நம் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கிறாங்க

கல்வியும் வாணிகமாகிவிட்டதே இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எப்படி தான் தப்ப்பிக்க முடியும் என்று ஒன்றும் புரியவில்லையே

தனக்குன்னு என்னக்கித்தான் ஒரு விடிவுகாலம் காலம் வரும்

தினேஷுக்கு ராகேஷிடம் ஏகப்பட்ட பொறாமை ஏற்பட்டது இவனுக்கு மட்டும் எப்படி எல்லாம் நல்லதே நடக்குது அவனை போன்ற தானே தானும் மிகவும் சிரமப்பட்டு படிச்சான். அவன் ஏற்கனவே பணக்காரன் தானே பணமும் குப்பையில் வெய்த்த வாழை போன்ற சேருகின்ற இடத்தில் தானே சேருகிறது

பணம் இல்லை என்றால் யாரும் எட்டிக்கூட பார்க்கமாட்டாங்களே எல்லோரும் திசை மாறித்தானே போவாங்க தினேஷின் தந்தை வேலையில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார் அவனுக்கு இரெண்டு தங்கச்சிகள் இருந்தார்கள் குடும்ப பாரம் முழுவதும் அவன் தலையில் வீழ்ந்தது

ராகேஷின் மனைவி ப்ரியாவோ காலத்துக்கு தகுந்தாற் போன்ற தாம் தோம், தாட் போட் என்று தான் இருந்தாள் அவளுக்கு ஒருவருக்கொருவரை விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை கிடையாது. தான் புடிச்ச முயலுக்கே மூன்று கொம்பு என்று இருப்பாள்

அப்படியே தனம் தனம் சண்டை சச்சரவிலேயே காலம் கரைந்து விட்டது வாழ்க்கையில் வந்ததையெல்லாம் எதிர்கொண்டு தானே ஆகணும் வாழ்க்கையே ஒரு போராட்டம் போன்ற ஆகிவிட்டதே

கவலை பட்டு பயன் ஒன்றும் இல்லை என்றாலும் கவலை படாமல் இருக்கவும் முடியவில்லையே

கல்யாணத்துக்கு மிந்தி எவ்ளவு நிம்மதியாக இருந்தோம் என்று ராகேஷ் வருந்தினான் எதுக்கு எடுத்தாலும் இப்படி ஏட்டிக்கு போட்டியாகவே இருந்தால் வாழ்க்கை எங்க தான் போய் முடியும்

இருக்கிற பிரச்னையெல்லாம் பற்றாது என்று அவள் வீட்டுக்குள்ளேயே ஒரு நாய் குட்டியையும் வளர்த்தி வந்தாள். அதன் பின்னாடியே சுற்றி வந்தாள்

வாழ்க்கையே ஒரு புரியாத புதிர் போன்ற அவனுக்கு தோன்றியது. எதுவும் நாம நின்னைத்தபடி நடக்கவில்லையே

தனக்கு மட்டும் ஏன் எல்லாமே எதிர்மறையாகவே நடக்கிறது என்று வருந்தினான்

எவ்ளவு முயர்ச்சி பண்ணியும் தினேஷுக்கு சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு வேலை கிடைக்கவில்லை.

இந்த உலகத்தில் பணம் தானே எல்லாம் பணம் இல்லையென்றால் பிணத்துக்கு சமம் தானே

யாரும் பணம் இல்லாதவர்களை மதிக்கறதில்லை மட்டுமல்லாமல் மதிப்பீடு தானே செய்கிறார்கள்

இப்படி சிலம்பொலி போல் புலம்பியே காலம் கரைந்து விட்டதே தவிர உருப்படியாக எதுவும் செய்ய முடியவில்லையே. நம்ம பிரச்சனைகளை யாரிடமாவது சொல்லலாம் என்றால் இந்த உலகத்தில் நம்மை புரிஞ்சுகிறவங்க யாரும் இல்லையே அப்படியே சொன்னாலும் கேலி தானே பண்ணுவாங்க

உற்ற தோழன் ராகேஷிடமாவது சொல்லலாம் என்றால் அவனுக்கும் கல்யாணமாகிவிட்டதே அவனையும் மிந்தி மாதிரி சந்தித்து இயல்பாக பேச முடியவில்லையே அவனும் தனக்கென்றே ஒரு தனிப்பட்ட உலகத்தையே உருவாக்கிக்கொண்டானே எது எப்படி இருந்தாலும் வாழ்ந்து தானே ஆகணும் அவன் மனம் அளவில்லாத வெள்ளம் கண்டால் ஆடும் ஓடம் போல் ஆடியது

ராகேஷோ கல்யாணம் என்கிற விதியின் வலையில் சிக்கி சிக்குநூறாகிவிட்டான் வாழ்க்கையில் யாரையும் வற்புறுத்தி எதுவும் சாதிக்க முடியாதுஎன்று நம்பினான் எல்லோரும் அவங்கவங்க பாதையில் தானே செல்ல விரும்புவாங்க

அவனுக்கும் தன் துன்பதுயரங்களை யாரிடம் போய் சொல்வது என்று ஒன்றும் புரியவில்லை

கோயிலுக்கு போய் என்னதான் தோப்புக்கரணம் போட்டாலும் நடக்க இருக்கிறது நடந்து தானே தீரும்

என்னதான் தாழ்ந்த மனப்பான்மை இருந்தாலும் பிரியா கூட வாழ்க்கையை தொடர்வது அவ்ளவ் சுலபமாக அவனுக்கு தெரியவில்லை பிறந்த வீடு பக்கத்திலேயே இருந்ததால் அடிக்கடி சண்டை போட்டுகொண்டு அங்கே சென்றுவிடுவாள் அன்று பெற்றோர் சொல் பேச்சை கேட்டிருந்தால் இந்த நிலைமை நேர்ந்திருக்காதே என்று வருந்தினான் இன்று இவள் சொல் பேச்சுக்கு ஏற்ப ஆடவேண்டியதா போச்சே அன்று தன் விருப்பம் தானே முக்கியமாக பட்டது காதல் தானே முந்தி நின்றது.காதல் கண்ணை மறைத்து விட்டதே அவளை சரியாக புரிந்துகொள்ள முடியவில்லையே அவன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதால் வேலையில் ஏகப்பட்ட அழுத்தம் இருந்தது வீட்டையும் அலுவலகத்தையும் சமாளிப்பதுற்குள் அவனுக்கு போதும் போதும் என்றாகி விட்டது ஒரு புறம் வேடன், மறுபுறம் நாகம்

என்றபோல் ஆகிவிட்டது அவன் நிலைமை

அடுத்து என்ன பண்ணுவது என்று ஒன்றும் தெரியாமல் தவியா தவித்தான் ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் பாடுகிற மாட்டை பாடித் தான் கறக்கணும் என்பார்கள் கொஞ்ச நாள் பொரறுத்திருந்து அவள் வழிக்கே போயி பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்தான் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்தால் எந்த ஒரு பிரச்சினனைக்கும் சரியான தீர்வு கிடைக்காது என்று நம்பினான். உணர்ச்சிவசப்பட்டு அவளிடம் பேச போயி ஏதாவது ஏடாகூடமாக நடந்திட போகிறது என்று பயந்து தன்னை கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்டான் எந்த ஒரு பிரச்சினனைக்கும் உடனடியாக முடிவு கிடைப்பதில்லையே

ஒருவன் கல்யாணம் ஆகியும் தவித்தான் என்றால் இன்னொருவன் கல்யாணம் ஆகாமல் தவித்தான்

ஒரு மலையோர பகுதியில்த் தான் அவங்க படித்த கல்லூரியும் இருந்தது. அதன் பக்கவாட்டிலேயே ஓர் அருமையான நதியும் இருந்தது. எங்கும் பச்சைப்பசேர் என்று பசுமை நிறைந்திருந்தது.அப்பப்ப மலையோரம் வீசும் இளம் தென்றல் மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது அந்த கல்லூரியின் சுற்றுசூழலும் அமைப்பும் மிகவும் பிரமாதமாக இருந்தது அங்கே படிக்கறதுக்கும் கொடுப்பினை வேண்டும்

கல்லூரி வாழ்க்கை எவ்ளவு சுவாரசியமாக இருந்தது அன்று எவ்ளவு ஆரவாரமாக,குதூகலமாக இருந்தோம்.இன்று வாழ்க்கையே ஒரு கலவரம் முடிந்துவிட்டபோன்ற ஆகிவிட்டதே ஏதோ நஞ்சில் ஆசை வந்து என்னென்னமோ ஆகி போச்சே வாழ்க்கையில் ஒன்றும் நிரந்தரம் இல்லையே ஏதோ கொஞ்சம் நேரத்தை சேமிப்பதற்க்காக குறுக்கு வழி என்று நினைத்து ஒரு பூங்கா வழியாக போனதினால்த் தானே ப்ரியாவையும் சந்திக்க நேர்ந்தது இவளவு பிரச்சனைகளுக்கும் காரணமானது கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள் ஆனாலும் ஒருவருக்கொருவராக வாழ்வதற்கும் கொடுப்பினை வேண்டுமே

பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் படித்தது தான் வாழ்க்கையின் பாடம் என்று கணம்மூடித்தனமாக நம்பினோமே ஆனால் வாழ்க்கையின் பாடமோ மிக ரகசியமாகவும் அதிர்ச்சியாகவும்

தானே இருக்கிறது வாழ்க்கையில் துன்பங்கள் வரும்போது மட்டுமே மும்பு எவ்வளவு சுகமாக இருந்தோம் என்றும் நாபகத்துக்கும் வருகிறது

கால போக்கில் எல்லாம் சரியாகிடும் என்று தனக்குத் தானே ஆறுதல் அளித்துக்கொண்டான் எதுவும் உடனடியாக சீர்திருத்த முயன்ன்றால் கஷ்டமும் நஷ்டமும் தானே மிஞ்சும்

ஆனால் முயலாமல் எதுவும் நடக்காது என்று எண்ணினான்

பல முறை ராகேஷை சந்தித்தும் தன் பிரச்சினைகளை அவனிடம் கூற முடியவில்லையே

இப்படி உற்ற நண்பர்களாக இருந்தும் தன் பிரச்சனைகளை பகிர்ந்துகொள்ள இயலாமல் தடுமாறி தனி ஒருவனாக இருவரும் வாழ்க்கையின் வண்டியை ஓடினார்கள்

யாரோ எக்கேடோ கெட்டுப்போகும் என்று நினைக்கும் உலகத்தில் யாரிடமிருந்தும் ஆறுதல் எதிர்பார்க்க முடியாதே

உள்ளுக்குள்ளேயே புழுங்கி மன உடைச்சலுக்கு ஆளானார்கள். மனதை கட்டுப்படுத்த முடியாமல் இருவரும் குடிக்க ஆரம்பித்தார்கள் குடி போதை பிரச்சனைகளை இன்னும் அதிகரித்தது

வரவு எட்டணா என்றால் செலவு பத்தணா என்று ஆகிவிட்டது நிலைமையை எப்படி சமாளிப்பது என்று அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை யாரிடமும் ஒன்றும் சொல்லவும் கொள்ளவும் முடியாமல் தவித்தார்கள்

இருவர் பிரச்சனைகளும் முடியாத தொடர்கதை போன்ற தொடர்ந்தது தினேஷுக்கு பணகஷ்ட்டத்தில் இருந்து ஓய்வே கிடைக்கவில்லை அவன் ஓயாத அலையாக அலைந்து திரிந்தான் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு இருக்கும் என்று நம்பினான்

ராகேஷோ தன் வேலையில் கவுனம் செலுத்த தடுமாறினான் ஒரு நாள் இல்லையென்றால் ஒருநாள் தனக்கும் ஒரு சூர்யோதயம் இருக்கும் என்று எண்ணி தனக்குத் தானே ஆறுதல் அளித்துக்கொண்டான்

ப்ரியாவோ ஒரு வேலையும் செய்யாமல் வெட்டிப்பேச்சு பேசியே நேரத்தை வீணடித்தாள்

ஒரு நாள் பிரியாவின் பிரண்டுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக தகவல் வந்தது அவளுக்கும் ஓர் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை முளைத்தது அன்று முதன்முதலாக அவளுக்கு ராகேஷிடம் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஈடுபாடு சிலிர்ப்பும் ஏற்பட்டது அவள் மனதில் பட்டாம்பூச்சிகள் வட்டமிட்டு பறந்தன இளமை ஊஞ்சல் ஆடியது அன்று முதல் அவள் ராகேஷை நேசிக்க ஆரம்பித்தாள்

நீண்ட நான்கு வருஷ இடைவேளைக்கு பிறகு அவர்கள் முதல் இரவும் நடந்து நிகழ்ந்தது ராகேஷ் கனவிலும் நினையாததெல்லாம் நிறைவேறக்கண்டான் கூடிய சீக்கிரம் அவர்களுக்கு ஒரு பெண் குழ்நதையும் பிறந்தது ராகேஷ் இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்தான்

அவனால் நடந்தது எதுவுமே ஜீரணிக்க முடியவில்லை அவனுக்கு தலை கால் புரியவில்லை நாம எது சொல்லியும் கேட்காதவள் இப்படி எப்படி

திடீர் என்று மாறிவிட்டாள் என்ற ஆழ்ந்த சிந்தனையில் முழுகினான் தன் பொறுமை ஜெயிச்சதாக நினைத்தான்

தினேஷ் பக்கமும் இளம் தென்றல் ஒன்று வீசத்தான் செய்தது அவனுக்கும் காலம் தெளித்து விட்டது அவனுக்கு ஓர் நல்ல கம்பெனியில் எதிர்பாராமல் வேலை கிடைத்து விட்டது அவன் எவ்ளவ் துன்பதுயரங்களை சந்தித்தும் தன்னன்பிக்கையை இழக்காமல் விட முயற்ச்சியில் இருந்தான்

பிடிமானம் ஒன்றும் இல்லாதபோதிலும் அவன் தன நன்பிக்கை அவனுக்கு பலன் அளித்தது

அவனுக்கு வாழ்க்கையை ஓர் அளவுக்கு சமாளிக்க முடியும் என்ற நன்பிக்கை வந்தது

தனது இரெண்டு தங்கச்சிகளையும் நல்லா படிக்க வைத்து நல்ல இடத்தில கலயாணமும் பண்ணணும் என்று உறுதியாக இருந்தான்

ஒரு காலத்தில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு படித்தோம்

படிச்சு ம முடித்ததும் வேலைக்காக அவதிப்பட்டோம்

ன் பிரச்சனைகளை தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு புழுங்கினோம்

ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கிறதை விட்டிட்டு அன்யோன்யம் பொறாமை பட்டோம்

கடவுள் எவ்ளவு தான் சோதனைகளை தந்தாலும் எல்லா சோதனைகளுக்கும் ஒரு தீர்வும் கண்டிப்பாக கொடுக்கிறார் இனிமேலாவது யார் மீதும் பொறாமைப் படாமல் அடுத்தவங்களுக்கு உதவியாக மட்டும் இருக்கணும் என்று நினைத்தான் தினேஷ்

வாழ்க்கையின் பாடங்கள் நாம பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் படிக்கிற பாடங்களை விட சிறந்தது என்று இருவரும் புரிந்துகொண்டார்கள்

முற்றும்

Author : சி.பி.ஹரிஹரன் – டெல்லி