Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

இரவை சுடும் வெளிச்சம் - 23

இரவு 23

கீதா பாஸ்போர்ட் ஆபீஸ் நெருங்கிய போது அவளுக்கு ஒரு கால் வந்தது.எடுத்து பேசினாள். என்ன அவசரம் வெளிநாடு போக .. நீ உயிரோடு இருக்க வேண்டாமா ? அப்படியே திரும்பி வீட்டுக்கு போ. அதுதான் உனக்கு நல்லது என்றது அந்த குரல். கீதா பதட்டமடைந்தாள் . வண்டியை திருப்பிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். என்னாச்சு கீதா ஏதாவது பிரச்சனையா போன உடனே திரும்பி வந்துட்டே என்றான் முரளி. அதெல்லாம் ஒண்ணுமில்லை என்னவோ சூழ்நிலை சரியில்லை அப்படின்னு பட்டது,அதான் திரும்ப வந்துட்டேன் என்றாள் . எனக்கு நீ என்ன சொல்கிறாய் என்று புரியவில்லை . உன் விருப்பம் போல செய் என்றான். ராம் சிறையில் உள்ள செல்வத்தின் வக்கீலை சந்தித்தான். அவர் செல்வம் உங்களை சந்திக்க சம்மதம் தெரிவித்து விட்டதாக சொன்னார். கீதாவுக்கு இப்போது தனக்கு உதவ கூடிய நபரான பரந்தாமனும் இல்லை பிரேமாவும் இல்லை என்பதை உணரவே கஷ்டமாக இருந்தது. பேசாமல் ஜானுவிடமே பேசிப்பார்த்தால் என்ன என்று யோசித்தாள். ஜானுவை ஸ்டேஷனில் சந்தித்து பேச அப்பாய்ண்ட்மென்ட் கேட்டிருந்தாள். இரண்டு நாட்களில் சொல்வதாக சொன்னார்கள்.

கீதா ஜானுவை மீட் பண்ண நேரம் கொடுத்திருந்தார்கள்.அவள் முரளியையும் , பையனையும் அழைத்து கொண்டு போனாள். அவளிடம் ஜானு என்ன விஷயம் கீதா இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க?ஏதாவது பிரச்சனையா என்றாள். யாருன்னு தெரியல என்னை வெளிநாடு போக கூடாதுன்னு மிரட்டுராங்க .. நீங்கதான் மேடம் ஹெல்ப் பண்ணனும். ம் அந்த நபர் ஏதாவது ஸ்பெசிஃபிக்கா எதுவும் சொன்னாரா ? இல்லை மேடம்.நீங்க அந்த கால் ரெகார்ட் பண்ணியிருக்கீங்களா . எஸ் மேடம். இருக்கு. இது சீரியஸ் மேட்டர் தான். நான் விசாரிக்க சொல்லுறேன். மேடம் நான் போலீசுக்கு போறேன்னு தெரிஞ்சா இன்னும் பிரச்சனை வரும்.. சரி நான் எனக்கு தெரிஞ்ச பிரைவேட் டிடெக்டிவ் ராமை உங்களுக்கு ஹெல்ப் பண்ண சொல்லுறேன் என்றாள் . அவரே உங்களுக்கு ஃபோன் பண்ணுவார். ரொம்ப தாங்க்ஸ் மேடம்.நீங்க பயப்படாதீங்க என்றாள் .கீதா விடைபெற்றுக்கொண்டாள் .

ஜானு ராமுக்கு ஃபோன் பண்ணினாள். இண்டரெஸ்ட்டிங் கேஸ் ராம். கீதாவை அதுதான் அந்த லேடி கிட்நாப்பர இப்போ யாரோ மர்டர் பண்ணிடுவேன் அப்படின்னு மெரட்டுராங்க .. அவங்க ஸ்டேஷன் வந்து என்னை பார்த்து அந்த நபரை கண்டுபிடிக்க சொல்லி கேட்டாங்க. ஆனா போலீஸ் இதுல தலையிட்டா சேஃப்டி இல்லைனு சொல்லி வருத்தப்பட்டாங்க. நான் உங்களை சிபாரிசு பண்னினேன் என்றாள் . சரி ஜானு டீடெயில்ஸ் அனுப்புங்க. நான் செல்வம் மீட் பண்ண போறேன் அதோட பரிதி கேசுல பிஸி. தீபுவை விட்டு விசாரிக்க சொல்லுறேன் என்றான். ஓகே ராம் தாங்க்ஸ் என்றாள் . ராம் தீபுவிடம் விஷயத்தை சொன்னான். யாரு ரம்யாவை கடத்துன கீதாவா ? ஆமாம் அவங்களேதான். ரொம்ப பிரச்சனைல இருக்காங்க. பிளீஸ் ஹெல்ப் பண்ணு என்றான். ஓகே சார் நான் பார்த்துக்கிறேன்.
ராம் செல்வத்தை சிறையில் சந்தித்தான். அவர் தயங்கியவாறே பேச தொடங்கினார். முனியாண்டியை கொன்னது கந்தவேல்தான். நான் அந்த ஸ்பாட்டுக்கு லேட்டா போனேன். ஆனா பரிதி எனக்கெதிரா சாட்சி சொல்லி அந்த கேசுல என்னை மாட்டி விட்டுட்டான் . ஆனா எனக்கு அவனை பழி வாங்குற நோக்கமெல்லாம் இல்லை. வேற யாருக்காவது அந்த நோக்கம் இருக்குமா? நீங்க யாரையாவது சந்தேகப்படுறீங்களா? முனியாண்டி மகன் மேல . அவன்தான் கந்தவேல் மேலேயும் . பரிதி மேலேயும் பகையா இருந்தான். அவனை கந்தவேல் ஆளுங்க அடிச்சி போட்டுட்டாங்க. அதுல அவனோட வலது கை செயலிழந்து போயிடுச்சி . அதோட அவன் என்னை வந்து பார்த்தான். எனக்காக என் விடுதலைக்காக போராடுனான் . சரி சார் அவர் பேரு ? பன்னீர். சரி சார் நான் அவரை போய் பார்க்கிறேன் என்றான்.

தீபு கீதாவை அவள் வீட்டில் போய் சந்தித்தாள். தீபுவை வரவேற்ற கீதா அவளது கணவனையும், பையனையும் அறிமுகபடுத்தி வைத்தாள். தீபு அந்த கால் ரெகார்டிங் கவனமாக கேட்டாள் . எதுவும் பிடிபடவில்லை. நாம் நாளைக்கு இருவரும் பாஸ்போர்ட் ஆபீஸ் போனால் என்ன என்றாள் தீபு. எனக்கு இன்னமும் பயமாய் இருக்கிறது. அதெல்லாம் பயப்பட வேணாம் . நாளைக்கு நானும் வருகிறேன். நாளைக்கு 10 மணிக்கு உங்களை பாஸ்போர்ட் ஆபீஸில் சந்திக்கிறேன் என்றாள் தீபு. ஓகே மேடம். தீபு அங்கிருந்து கிளம்பும் முன் வீட்டின் முன் பகுதியில் சிசிடிவி பொறுத்தும்படி சொல்லிவிட்டு போனாள். ராம் தீபுவிடம் கீதா கேஸ் பற்றி விசாரித்தான். நாளைக்கு நானும் பாஸ்போர்ட் ஆபீஸ் போகிறேன் என்னதான் செய்கிறான் அவன் என்று பார்ப்போம் என்றாள். தீபு என்றாலே துணிச்சல் என்றான் ராம். கிண்டல் பண்ணாதீர்கள் சார். எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றாள் .ராம் அந்த இரவு அத்தனை சோதனையாக இருக்கும் என்று நினைக்கவில்லை. முனீரின் ஆட்கள் ராமின் காரை மோதுவது போல வந்து இடித்தார்கள். ராம் தடுமாறினாலும் வண்டியை வேகமக செலுத்தினான். அவர்கள் மூன்று பேர் இருந்தார்கள். காரில் வந்திருந்தார்கள்.அவர்கள் ராம் காரை விடாமல் தூரத்தினார்கள். ராம் துப்பாக்கியை எடுத்தான். அவர்கள் முதலில் சுட்டார்கள். இதை ராம் எதிர் பார்க்கவில்லை. ஒருவன் திடீரென நாட்டு வெடிகுண்டு எடுத்து ராம் வண்டியின் டையர் பகுதியில் வீசினான். வண்டி நிலைக்குலைந்தது. ஆனால் ராம் இறங்கி ஓடினான்.இருட்டுக்குள் காட்டுக்குள் இறங்கி ஓடினான் . அவர்கள் சிறிது தூரம் ஓடி வந்தார்கள். ராமுடைய காரை தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பி ஓடினார்கள்.முனீருக்கு ஃபோன் பண்ணி தப்பி விட்டான் தலைவரே என்றார்கள். சே அவனை எப்படியாவது தேடி கண்டுபிடியுங்கள் என்றான் முனீர்.

ராம் தடுமாறியவாறே ஃபோன் பண்ணினான் தீபுவுக்கு. தீபு விரைந்து வந்தாள். யார் ஆட்கள் அப்படின்னு தெரிஞ்சுதா என்றாள் தீபு. ராமை ஹாஸ்பிடலில் சேர்த்தாள் . காலில் லேசான அடி . மற்றபடி ஒன்றும் இல்லை. ஜானு விஷயம் கேள்விபட்டு ஹாஸ்பிடல் வந்தாள். ராம் புன்னகைத்தான். இது முனீர் வேலையாத்தான் இருக்கும் என்றான். ஜானு அந்த ரவுடிகளை நான் நாளைக்குள் பிடிக்கிறேன் வந்து அடையாளம் காட்டுங்கள் என்றாள். அவசரப்படவேண்டாம் என்றான். நானே அவனிடம் பேசுகிறேன் என்றான். யாரிடம் ?முனீரிடம் . இது சரியா வருமா ராம் சார். வேறு வழியில்லை அவன் பின்னால் யார் இருக்கிறார்கள் எதிரி பலம் தெரிய நேராய் பேசுவதை தவிர வேறு வழியில்லை என்றான். நீங்க நல்லா ரெஸ்ட் எடுத்து கொள்ளுங்கள் என்றாள் ஜானு. அப்ப நான் கிளம்புறேன். தீபு நீ கூட கிளம்பு. இங்கே இருக்க வேண்டாம் என்றான். நிச்சயமாக சொல்கிறீர்களா ஆமாம். நான் பார்த்துக்கொள்கிறேன் பயப்படும்படி ஒன்றும் இல்லை.ஜானு அந்த ரவுடிகளை அரெஸ்ட் பண்ணும் வரை எங்கும் வெளியில் போக வேண்டாம் என்றாள் . கதிர் ஃபோன் பண்ணி நலம் விசாரித்தான்.இவன் தாங்க்ஸ் என்று மட்டும் சொன்னான்.

மறுநாள் சாயங்காலம் ஒரு பத்து பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்திருந்தாள் ஜானு. ராமுக்கு ஃபோன் பண்ணி ஸ்டேஷன் வர சொன்னாள். நீங்க வந்து அடையாளம் காட்டுங்க யாராயிருந்தாலும் நான் டீல் பண்ணிக்கிறேன் என்றாள். அவன் வந்தான். ஒருவன் மட்டும் அவன் நினைவில் நின்றான் நாட்டு வெடிகுண்டு வீசியவன் . அவனை போலீஸ் கைது செய்தது. அவன் வாயை திறக்கவில்லை. யார் அவனை அனுப்பியது என்ற கேள்விக்கு பதில் இல்லை. நிச்சயமாக இவன்தானா ராம்? நிச்சயமாக நீங்கள் ஒரு கம்ப்ளைண்ட் எழுதி கொடுத்துவிட்டுப் போங்கள் என்றாள். அந்த ரவுடியிடம் ஜானுவின் விசாரணை தொடர்ந்தது.ராம் பன்னீர் சந்திப்பை தள்ளிப்போட்டான். அஜய் என்ன பண்ணுகிறான் என தன்னுடைய சோர்ஸ் மூலம் விசாரித்தான். அவன் ஐபிஎஸ் பெயில் ஆகிவிட்டதால் திரும்ப படிக்கிறான் என்ற தகவல் கிடைத்தது.

தீபு சொன்னபடி பாஸ்போர்ட் ஆபீஸ் வந்து விட்டாள். கீதா வீட்டிலிருந்து கிளம்பி விட்டதாக ஃபோன் செய்திருந்தாள். ராம் ஜாக்கிரதை தீபு என சொல்லியிருந்தான். அவனும் வருவதாகத்தான் இருந்தது . கடைசி நிமிடத்தில் வேண்டாம் என தீபு சொல்லிவிட்டாள். கீதா வந்து விட்டாள். இருவரும் வண்டியை பாரக்கிங் பகுதியில் விட்டார்கள். அப்போது தீபுவுக்கு ஃபோன் வந்தது. நெருப்போடு விளையாடாதே மரியாதையாக திரும்ப போய்விடுங்கள். இல்லையென்றால் கீதா உயிரோடு இருக்க மாட்டாள் என்றான். தீபு உனக்கு என்னதான் வேண்டும் என்றாள். அவன் போனை வைத்து விட்டான். சுற்றி முற்றி பார்த்தாள். கீதா என்ன சொன்னான் அவன் என்றாள் . அதெல்லாம் ஒன்றுமில்லை யாரோ நம்மை குளோஸ் ஆக வாட்ச் பண்ணுகிறார்கள். நாம் திரும்ப போவோம் என்றாள் தீபு. ராமுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னாள் . சரி நேராக நம்முடைய ஆபீஸ் வந்து விடு, கீதாவை அழைத்து கொண்டு வா என்றான். ராமை பார்த்ததும் அழத்தொடங்கி விட்டாள் கீதா. அவன் என்னை நிம்மதியாக இருக்க விடமாட்டான் போல இருக்கிறது என்றாள் .

அழாதீர்கள் கீதா. யாரோ திட்டமிட்டுத்தான் இதை செய்கிறார்கள். நான் இதை கண்டுபிடிக்கிறேன் நிச்சயமாக என்றான்.சிறையில் இருக்கும் போது யார் கூடவாவது பழக்கம் ஏற்பட்டதா ? அப்படி யாரும் இல்லை. சிறையில் இருக்கும் போது புதிதாக யாராவது உங்களை சந்தித்தார்களா . இல்லை சார், நான் யாரிடமும் அதிகம் பேச வில்லை என்றாள் . கீதா மொபைல் மூலமாகத்தான் அவளை பற்றி அறிந்து கொள்கிறார்கள். இதை டெஸ்ட் செய்ய கொடுத்து அனுப்பு தீபு என்றான். தீபு அதை வாங்கி கொண்டு சென்றாள். இன்னும் ஒரு இரண்டு மணி நேரத்தில் நானே உங்களை போனில் கூப்பிடுகிறேன். இப்போது நீங்கள் வீட்டுக்கு கிளம்புங்கள் என்றான். நீங்கதான் சார் என்னை காப்பாத்தணும் என்றாள். கண்டிப்பாக நீங்க பயப்படாதீங்க. இரண்டு மணி நேரம் கழித்து வந்த மொபைல் டெஸ்ட் ரிப்போர்ட்டில் அதில் ஒட்டு கேட்கும் பக் ஒன்று இருந்ததை கண்டுபிடித்து அகற்றினார்கள். ராம் யார் இதை செய்து இருப்பார்கள் என யோசித்தான். ஏதாவது ரிப்பேருக்கு கொடுத்தீர்களா என்றான். ஆமாம் சார் அந்த கடை அட்ரஸ் அனுப்புங்கள் என்றான்.

அந்த கடை மண்ணடியில் தான் இருந்தது. முனீர் மறுபடி கீதாவை மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. வேறு யாரோ இதை செய்கிறார்கள். கடையில் வேலை பார்க்கும் யாரோ இதை செய்திருக்கிறார்கள் என ஊகித்தான்.இந்நேரம் அவனுக்கு பக் நீக்கியது தெரிந்திருக்கும். கடைக்கு ஃபோன் செய்து விசாரிக்கலாம் என நினைத்தான். வேண்டாம் அது சிக்கலாகிவிடும். ஜானுவுக்கு ஃபோன் பண்ணி சொன்னான். நான் விசாரிக்கிறேன் ஆனால் வேறு பெயரை சொல்லி என்றாள் . ஜானு அந்த கடைக்கு போனாள். அங்கு மொபைல் ரிப்பேர் பார்ப்பவர்களில் ஒரு பெண்ணும் இருந்தாள்.