இரவு 22
அடி பட்டிருந்த ரவியை ஹாஸ்பிடலில் போய் பார்த்தான் ராம். அவன் தான் தப்பு செய்து விட்டதாக வருந்தினான். சரியான சமயத்தில் நீங்கள் அங்கு வராவிட்டால் என் கதையே முடிந்திருக்கும் என்றான். அதை விடு உன் உடம்பை பார்த்துக்கொள் மற்றதெல்லாம் அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்று ராம் சொன்னான். விடை பெற்றுக்கொண்டான். குமாரை சிறைச்சாலைக்கு போய் பார்த்தான் ராம். அவன் நான் இப்போதான் சார் நிம்மதியா இருக்கிறேன். நீங்க எனக்காக ரொம்ப ரிஸ்க் எடுத்துருக்கீங்க எப்படி சொன்னாலும் நான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன் என்றான். நீ இனிமேதான் ஜாக்கிரதையா இருக்கணும். நாம அந்த மினிஸ்டர் கூட மோதிட்டு சும்மா போயிட முடியாது. சரிங்க சார். நான்உன் வக்கீல்கிட்ட இது சம்பந்தமா பேசறேன் .ராம் பரிதி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மினிஸ்டரின் பி ஏ வை தொடர்பு கொள்ள முயன்றான். ஆனால் அவர் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. ராம் இரண்டு நாட்களாக கடுமையாக அலைந்ததில் லேசான சோர்வு ஏற்பட்டது.கதிரை தொடர்பு கொண்டு இந்த பரிதி கேஸ் விஷயமாக பழனிசாமி என்ற மினிஸ்டரின் பி ஏ வை போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது. நீ அவரை பற்றிய விவரங்களை கொஞ்சம் விசாரித்து பாரேன் கதிர் என்றான்.
நிச்சயமாக சார் நான் பார்த்துகொள்கிறேன் என்றான்.
கதிர் பழனிசாமியில் போன் கால் ஹிஸ்டரி எடுத்து ஆய்வு செய்தான். ஜானு அவனுக்கு இதில் உதவி செய்தாள். பழனிசாமி கடைசியாக தன் மகளுடன் பேசியது தெரிந்தது. அந்த பெணணுக்கு கல்யாணமாகி வேளச்சேரியில் இருப்பது தெரிந்தது.கதிர் அவள் தங்கியிருந்த பிளாட்டுக்கு போனான். அவள் எதுவும் பேச மறுத்து விட்டாள் . பழனிசாமி தலைமறைவுக்கான காரணம் என்ன என்று கேட்டான். ஜானுவும் அங்கே மப்டியில் வந்து விசாரித்தாள். ஆனால் அந்த பெண் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றாள். இப்போது என்ன செய்வது மேடம். நாம் வேறு யாரையாவது அணுகி விசாரிக்க வேண்டியதுதான் என்றாள். அதே கால் லிஸ்டில் பரிதியிடம் பழனிசாமி பரிதி இறப்பதற்கு அரைமணி நேரம் முன்பு பேசியதும் தெரிய வந்தது. அது 10 நிமிஷம் பேசிய அழைப்பாக இருந்தது. சரி கதிர் லேட் ஆயிடுச்சு நாளைக்கு பார்க்கலாம் என்றாள் ஜானு.ஓகே மேடம்.
கதிரை யாரோ ஃபாலோ பண்ணுவது போல உணர்ந்தான். டூ வீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தான். யாரோ கால் பண்ணினார்கள். எடுத்து பேசினான். என்ன கதிர் ரொம்ப நேரமாச்சே அதுதான் ஃபோன் பண்னினேன் என்றாள் தீபாலி.நான் இப்போதான் கிளம்பினேன். நீ டோர் லாக் பண்ணிட்டு தூங்கு ஒரு அரைமணி நேரத்தில் வந்துவிடுவேன் என்றான். சரி கதிர். அவர்கள் 3 பேர் காரில் இருந்தார்கள் இவனை தாக்க வந்தார்கள். வண்டியை வேகமாக ஓட்டினான். ராமுக்கு கால் பண்ணினான். ராம் என்னாச்சு கதிர் ஏதும் பிரச்சனையா ? இங்கே மூணு பேர் என்னை அட்டாக் பண்ண வராங்க என்றான். சரி நான் உடனே வரேன் . ஜானுவும் ஸ்பாட்டுக்கு வந்து விடுவதாய் சொன்னாள். கதிர் வண்டி ஒருபுறம் சாய்ந்து கிடக்க.. கதிர் பள்ளத்தில் விழுந்து கிடந்தான். ராம் பள்ளத்தில் இறங்கி அவனை கைத்தாங்கலாக அழைத்து வந்தான்.அவங்க வந்த வண்டி நம்பர் தெரிஞ்சுதா கதிர். அது ஏதோ டூரிஸ்டு வண்டி மாதிரி இருந்தது. ராம் நான் கதிரை வீட்டுல டிராப் பண்ணிடறேன் என்றான். ஜானு ஹாஸ்பிடல் ஏதும் போகணுமா என்றாள். அதெல்லாம் ஒண்ணும் வேணாம் மேடம் லேசான அடிதான் என்றான். ராம் ரொம்ப சாரி தீபாலி என்னாலதான் இப்படி கதிருக்கு ஆயிடுச்சு என்றான். பரவாயில்லை சார் நான் பார்த்துக்கிறேன் என்றாள் .
பழனிசாமி போலீசில் ஸரண்டர் ஆனார். மீடியாக்கள் சுற்றி வளைத்து கேள்வி கேட்ட போது தனக்கும் எந்த கொலைக்கும் சம்பந்தமில்லை என்றார். பழனிசாமி எதுவா இருந்தாலும் இனிமே என் வக்கீல்கிட்ட கேளுங்க என்றும் சொன்னார்.பழனிசாமி சம்பந்தப்படவில்லை என்றால் யார்தான் பரிதியை கொன்று இருப்பார்கள். பார்வதியிடம் நேரிடையாக கேட்டுவிட்டான் ராம் . பார்வதி நீ பழையபடி பழி வாங்கும் படலத்தில் இறங்கி விட்டாயா ? அதெல்லாம் இல்லை . ஸ்ரீதரும் எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றான். பரிதி யார் யாரிடம் டிரைவர் ஆக வேலை செய்தான் என தெரிந்து கொள்ள விரும்பினான். பரிதி மகன் முத்துவுக்கு ஃபோன் செய்தான். சொல்லுங்க சார் உங்க அப்பா டிரைவரா எவ்வளவு வருஷம் வேலை செஞ்சாரு என்றான். 10 வருஷமா கந்தவேல் கவுன்சிலர் கிட்டதான் வேலை செஞ்சாரு. ஆனா அந்த கவுன்சிலரே என் அப்பாவை மிரட்டி சாகடிக்க வச்சிட்டார். சரி முத்து வேற ஏதாவது தகவல் தேவை என்றால் கூப்பிடுகிறேன் என்றான்.
பழனிசாமி ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். ராம் எவ்வளவோ முயன்றும் அவரை சந்திக்க முடியவில்லை. பரிதி வேறு ஏதாவது கொலை கேசில் சாட்சியாகவோ , நேரடி சம்பந்தப்பட்டு இருந்தானா என ஜானுவை ரெகொர்ட்ஸ் பார்த்து செக் செய்யும் படி ராம் கேட்டுக் கொண்டிருந்தான். அவள் இரண்டு நாள் டைம் கேட்டிருந்தாள் . தீபு கதிருக்கு ஃபோன் பண்ணி நலம் விசாரித்தாள். இப்போ ஓகே மேடம் ஒரு பிரச்சனையும் இல்லை என்றான். மறுபடி யாராவது ஃபாலோ பண்ணுனாங்களா ? இல்லை மேடம். சரி கதிர் உடம்பை பார்த்துக்குங்க.. நான் அப்புறமா மீட் பண்ணுறேன் என்றாள்.ராமுக்கு ஜானு ஃபோன் செய்தாள். ராம் ஒரு கெட்ட செய்தி..அதோடு ஒரு நல்ல செய்தி..நான் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்றாள். முதலில் கெட்ட சேதியை சொல்லுங்கள். முனீரும் , கீதாவும் தங்கள் தண்டனை காலம் முடியும் முன்பே ரிலீஸ் ஆகிறார்கள். என்ன காரணம் ஜானு ?ஏதோ தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறார்கள். உண்மையிலேயே இது கெட்ட செய்திதான் என்றான். நல்ல செய்தி ? மீரா மெயின் எக்ஸாம்ஸ் பாஸ் ஆகிவிட்டாள். வாழ்த்துக்கள் மேடம் என்றான். அடுத்து இன்டர்வியூதான். அதில் செலக்ட் ஆகிவிட்டால் போதும் . நெக்ஸ்ட் ட்ரைனிங் தான் . நிஜமாகவே ரொம்ப சந்தோஷமா இருக்கிறது . சரி ராம் வைக்கிறேன் என்றாள். மீராவுக்கு புதிய உடைகளும், ஃபோன் ஒன்றும் வாங்கி கொடுத்தாள் ஜானு.
முனீரும், கீதாவும் ரிலீஸ் ஆகும் செய்தியை கேட்டு பார்வதி அதிர்ந்தாள். என்ன சட்டமோ ? அப்பவே அவளை ஜெயிலிலே வைத்து முடிச்சிருக்கணும் என்றாள் . பார்வதி இப்போ எதுக்கு அவ பேச்சு என்றான் ஸ்ரீதர்.
தீபுவும், ராமும் முனீர்,கீதா ரிலீஸ் பற்றி பேசிக்கொண்டனர். ஜான் இறந்த பிறகு அவ்வளவாக வேலை இல்லை முனீருக்கு. பழைய ஆட்கள் இப்போது யாரும் இல்லை.பரந்தாமனும் இல்லை.. பிரேமாவும் இல்லை. கீதா கணவனோடும், பையனோடும் வெளிநாட்டுக்கு போய் அங்கேயே செட்டில் ஆக விரும்பினாள்.முனீர், கீதாவும் சிறையை விட்டு வெளியே வந்தார்கள். முனீர் நேராக தன்னுடைய பழைய மண்ணடி ஆபீஸ் போனான். கீதாவை அவள் கணவன் வந்து அழைத்து போனான். கீதா சிறையில் இருந்த காரணத்தால் அவள் பாஸ்போர்ட்டில் சில மாற்றங்கள் தேவைப்பட்டது. அதற்காக அவள் அலைந்து கொண்டிருந்தாள். மண்ணடி அப்படியே இருக்கவில்லை. வேறு ஒரு ஆள் அந்த ஏரியாவை கைப்பற்றி இருந்தான்.முனீர் இப்போது தனியாளாக இருந்தான். அவனுக்கு உதவி செய்ய யாரும் இல்லை.ராம் ஜானுவுக்கு ஃபோன் பண்ணி பரிதி கேஸ் சம்பந்தமா டீடெயில்ஸ் கேட்டிருந்தேனே என்றான். நானே ஈவினிங் நேர்ல வரேன் அப்போ டிஸ்கஸ் பண்ணுவோம் என்றாள்.
கீதாவின் கணவன் முரளி சந்தோஷமாய் இருந்தான். தன் பையன் அம்மா இல்லாமல் வளர்வதை அவன் விரும்பவில்லை. எப்படியோ போராடி கீதாவை வெளியில் கொண்டு வந்துவிட்டான். முனீருக்கு குமரஜோதி ஃபோன் பண்ணினான். உங்களை பார்க்க வேண்டுமே என்றான். அதுக்கென்ன என்ன விஷயம் சொல்லுங்க? முனீர் எச்சரிக்கையாக இருந்தான். நான் குமரஜோதி . இந்த மெடிக்கல் ஷாப் விவகாரத்தில் என் பெயர் கெட்டுவிட்டது . அதனால் வியாபாரம் சரியில்லை. இதற்கு காரணமான எஸ் ஐ ஜானுவையும்,ராமையும் பழிவாங்க வேண்டும் என்றான். நீங்க நேர்ல வாங்க பேசிக்குவோம் என்றான் முனீர்.ஈவினிங் ஜானு ராமை சந்தித்தாள். பரிதி 5 வருஷம் முன்னாடி ஒரு கொலை கேசுல சாட்சி சொல்லியிருக்கான். அந்த கொலையை நேரில் பார்த்ததாகவும் சொல்லியிருக்கான். அது ஒரு பொலிடிகல் மர்டர் . முனியாண்டி அப்படிங்கிறவர் தான் கொலையானவர். அவரை கொன்றது செல்வம் அப்படிங்கிறவர்.செல்வத்துக்கு ஆயுள் தண்டனை கிடைத்து இப்போ ஜெயிலிலே இருக்கார் என்றாள். ஆனா முனியாண்டியை கொன்றது கந்தவேல் அப்படின்னு விசாரணை குறிப்புல இருக்கு. முதல்ல கந்தவேல் மேல சந்தேகம் இருந்தது அப்புறம் அப்படியே மாறி செல்வம் மேல பரிதி சாட்சி சொல்லவும் எல்லாம் மாறி விட்டது என்றாள் . ரொம்ப தாங்க்ஸ் ஜானு இதுக்காக ரொம்ப முயற்சி பண்ணியிருக்கீங்க. கந்தவேலு இப்போ ஜெயிலில் இருக்கான் சுமதி கொலை கேசுல .
ராம் இந்த பரிதி கேஸ் சிக்கலா இருக்கே தீபு என்றான். அப்படித்தான் எனக்கும் தோணுது. இப்போ எங்கேயிருந்து ஆரம்பிக்கிறது. செல்வத்தை மீட் பண்ணலாம்னு நினைக்கிறேன் என்றான். அது சரியா வருமா ? நிச்சயம் சரியாய் வரும் என்றாள் தீபு. கீதா அன்று காலை சீக்கிரமே தயாராகி கொண்டிருந்தாள். என்ன கீதா எங்கேயாவது வெளியே போகிறோமா என்றான். இல்லை நான் மட்டும் 10 மணிக்கு பாஸ்போர்ட் ஆபீஸ் போறேன் என்றாள் . தனியாகவா போகிறாய் என்றான். அதனால பரவாயில்லை. பையன் தனியா இருப்பான். நீங்க கூட இருந்து பார்த்து கொள்ளுங்கள் என்றாள் . அவள் டூ வீலர் வைத்திருந்தாள். சரி பார்த்து போயிட்டு வா என்றான் முரளி. முனீரை சந்தித்தான் குமரஜோதி.அவர்கள் ஒரு உணவகத்தில் சந்தித்தார்கள். சொல்லுங்க சார் நானும் அந்த ஜானுவால பாதிக்கப்பட்டவன்தான். பேசாம ஜானு கதையை முடிச்சிடவா என்றான் முனீர். அதெல்லாம் வேண்டாம் அவ அந்த போஸ்ட் ல இருக்குற திமிர்லதான் ஆடிக்கிட்டு இருக்கா.அவளை வேலைய விட்டு அனுப்புற வேலை ..அதை நான் பார்த்துக்கிறேன். நான் சொல்ல வந்தது ராம் பத்தி .. ராம் போட்டோவை காட்டினான். இவனா இவன் கொஞ்ச வருஷம் முன்னாடி என்கிட்ட கீதா அப்படிங்கிற பொம்பளைய கொல்ல கொட்டேஷன் கேட்டு வந்தான். அதெல்லாம் சும்மா டிராமா. ஓ சரி இவன் ஒரு பிரைவேட் டிடெக்டிவ். இவனை முடிச்சு கொடுக்கணும் என்றான் குமரஜோதி . சரி சார் பண்ணிடலாம் . ஆனா ரொம்ப கவனமா பண்ணனும். பேமண்ட் எல்லாம் பக்காவா இருக்கும் என்றான். ராம் செல்வத்தை சந்திக்க அவரது வக்கீல் உதவியை நாடினான் . அவர் நான் செல்வத்திடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்றார். கீதா டூ வீலரில் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விரைந்தாள்.