Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நிழல் தரும் வசந்தம் - 49

பிரேம் வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஓடி விட்டன. இருக்கும் சம்பளத்தில் அவர்கள் செலவுகளை சமாளித்தார்கள். என்ன தீபா உனக்கு ஏதும் குறையிருக்கிறதா ? என்றான். அப்படி எதுவும் இல்லை என்றாள் . ரஞ்சனி ஃபோன் பண்ணியிருந்தாள். அடுத்த வாரம் வந்து பார்ப்பதாய் சொல்லி இருந்தாள். எதற்கு வீண் அலைச்சல் என்றான் அவள் கேட்பதாய் இல்லை. இது மழைக்காலம் . இதமான குளிர் நிலவியது. இவனுடைய கிளார்க் வேலைக்கு பெரிதாக தொந்தரவுகள் இல்லை, வீடு விட்டால் ஆபீஸ் . ஆபீஸ் விட்டால் வீடு. எப்போதாவது இந்த குழந்தைகள், குமரேசனுடன் சினிமா, பார்க் என்று போய் வருவான். தீபாவுக்குத்தான் கஷ்டம். அவள் இருந்த உலகமே வேறு.ரஞ்சனி வருகைக்காக கொஞ்சம் மளிகை சாமான்களை கூட வாங்கி போட்டிருந்தான் பிரேம்.தீபா குமரனுடன் பேசியிருந்தாள். அவன் ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கியிருந்தான். சுபா அவனுக்கொரு ரிமோட் கார் வாங்கி கொடுத்ததாகவும் சொன்னான். சுபா அவ்வப்போது புகைப்படங்கள் அனுப்பத்தான் செய்கிறாள்.

அந்த வார கடைசியில் ரஞ்சனி, நீலன், சௌமியா, ராக்கி, மோகிதா எல்லோரும் வந்திருந்தார்கள். என்ன நீலன் இளைத்து விட்டாய் என்றான் பிரேம். கிண்டல் பண்ணாதீர்கள். எங்களுக்கு நீங்கள் இருவரும் இல்லாமல் செம போர் என்றான். வா சௌமியா.. மோகிதா என்ன சொல்கிறாள். அவளுக்கு இப்போது ஆட்கள் யார் என்று தெரிகிறது. எப்போதும் அவளை தூக்கி வைத்திருக்க வேண்டும்என்று விரும்புகிறாள். சௌமியா அம்மா எப்படி இருக்கிறார்கள். அவர்கள் பரவாயில்லை. ஓரளவுக்கு தானே எல்லா வேலைகளையும் செய்து கொள்கிறார்கள். ரஞ்சனி தீபாவை பார்த்தாள். அக்கா நீயும் சாமியாரிணி ஆகிவிட்டாய் போல என்றாள். ரஞ்சனி ஸ்வீட் பழம் எல்லாம் வாங்கி கொண்டு வந்திருந்தாள். ஒரு வாரம் தங்கலாமே திருவிழா வருகிறது என்றான் பிரேம். நாங்கள் இரவே கிளம்பி விடுவோம். உங்களை எங்களால் பார்க்காமல் இருக்க முடியவில்லை அதுதான் ஓடி வந்தோம்.

கொஞ்சம் ஓய்வெடுத்துககொள்ளுங்கள் என்று சௌமியாவையும்,ரஞ்சனியயும் உள் அறைக்கு அழைத்து சென்றாள் . என்ன ரஞ்சனி விசேஷம் ஏதும் உண்டா என கேட்டாள் தீபா. எங்களுக்கு ஆபீஸ் நேரமே போதவில்லை என்றாள் ரஞ்சனி. ம் எப்படியாவது அடுத்த வருடம் குட்டி நீலனை அழைத்து கொண்டு வரவேண்டும் என்றாள் தீபா. எல்லோருக்கும் ஆரஞ்சு ஜூஸ் போட்டு கொடுத்தாள் தீபா, நீலனும், ராக்கியும் ஆபீஸ் விஷயமாக பேசிக்கொண்டு இருந்தனர். கதிரேசன் வந்தான். அவனை நலம் விசாரித்தார்கள். உங்களை நம்பித்தான் மாமாவை இங்கு அனுப்பி உள்ளோம் என்றால் ரஞ்சனி. அவனுக்கு ஒரு குறையும் இல்லை என்றான் கதிரேசன். ஒரு கிப்ட் பாக்ஸ் கதிரேசனிடம் கொடுத்து இதை வீட்டில் கொடுத்து விடுங்கள் என்றாள் சௌமியா.

இந்த வீடு ஓய்வெடுக்க சிறந்த வீடு என்றான் நீலன். நீங்கள் மதியம் எதுவும் சமைக்க வேண்டாம். நாங்கள் ஹோட்டல் ஒன்றில் ஆர்டர் செய்கிறோம் என்றான் ராக்கி. இன்று ஒரு நாள் ரெஸ்ட். சரி வா போகலாம் என நீலனை அழைத்து கொண்டு போனான் ராக்கி. பிரேம் தீபாவை பார்த்தான். என்ன பிரேம் ? அவர்கள் வந்ததில் சந்தோஷம் என்றான். மதியம் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டார்கள்.ரஞ்சனி அக்கா நீயாவது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பெங்களூர் வா என்றாள். நானா ? நான் எப்போது என் பிள்ளையை பிரிந்து வந்தேனோ அப்போதே எல்லாவற்றையும் உதறி விட்டேன் என்றாள். எல்லோரும் அமைதியா இருந்தனர். மாலையில் எல்லோருமாய் கோவிலுக்கு போனார்கள். சீக்கிரம் ரஞ்சனிக்கு நல்லது நடக்க வேண்டும் என தீபாவும், பிரேமும் வேண்டிக்கொண்டனர்.

ரஞ்சனி ஆபீஸ் விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணாதே என்றான் பிரேம். உனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தால் என்னை கூப்பிடு .. உனக்காக வருகிறேன் என்றான் . நீலன் நன்றி என்றான். இரவு 8 மணி போல எல்லோரும் கிளம்பினார்கள். நீலனும், ரஞ்சனியும் பிரேம், தீபா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள்.கார் கிளம்பி சென்றது. சௌமியாவுடன் இவன் அதிகம் பேசவில்லை என்பது வருத்தமாய் இருந்தது.ராக்கி கொஞ்சம் பணத்தை தீபாவின் கைகளில் திணித்து சென்றிருந்தான். அதை பிரேம் கவனிக்காதது போல இருந்தான்.பிரேம் எனக்கு பசியில்லை என்றான். தீபா எனக்கும் எதுவும் வேண்டாம் சாப்பிட என்றாள்.பாலாவது குடி என்று சொன்னான் பிரேம். பால் சுடவைத்து அவளுக்கு கொடுத்தான். மழை வேகமாக பெய்ய தொடங்கியது.

திருவிழா தொடங்க இன்னும் ஒரு வாரமே இருந்தது.எல்லாமே இனி சுப ஆரம்பம் தான் என்பது விழாவின் நோக்கம். இவனுக்கு ஒரு நாள் லீவு இருந்தது. கதிரேசன் வீட்டுக்கு போயிருந்தான் . அவன் வெளியூர் போய் விட்டதாக சொன்னாள் அவன் மனைவி. பிரேம் திரும்ப வரும் வழியில் பார்க் ஒன்றை பார்த்தான். மாலைப்பொழுதில் எப்போதும் சிறுவர்கள், சிறுமியர்கள் நிரம்பியிருக்கும் அதை பார்த்தான். வெறுமை நெட்டித்தள்ளியது. அவனுக்கு வேண்டியதை அவன் தேர்ந்தெடுத்துக்கொண்டான். வேறெதையும் அவன் யோசிக்கவில்லை . புரிதல் இல்லாத ஞானம் என்பது சூனியம். அதை கொஞ்சம் கொஞ்சமாக அவன் உணர தொடங்கியிருந்தான். மழை தண்ணீர் ஆங்காங்கே தேங்கி கிடந்தது. இவன் வீட்டுக்கு வந்த போது தீபா கீரை ஆய்ந்து கொண்டிருந்தாள். அவளை வாரி அணைத்துக்கொண்டு என்னை மன்னித்து விடு என்று சொல்ல வேண்டும் போல இருந்தது.

என்ன இப்படி வியர்க்கிறது உங்களுக்கு என்றாள். ஆமா என்றான். சட்டையை மாத்துங்க என்றாள்.உள்ளேயிருந்து புது சட்டை ஒன்றை கொண்டு வந்து கொடுத்தாள். சௌமியா வந்தப்போ கொடுத்தா.இவன் அந்த சட்டையை அணிந்து கொண்டான். எப்படி இருக்கு.. உங்களுக்கென்ன குறை பிரேம் என்றாள். நான் கொஞ்சம் படுக்கிறேன் மயக்கமாய் இருக்கிறது என்றான். சரி என்றாள். சிறிது நேரத்தில் கண் அயர்ந்து விட்டான். கண் விழித்து பார்த்த போது மணி 2. தீபா யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தாள். இவன் எழுந்து போய் முகம் கழுவிக்கொண்டான். அவர் எழுந்து விட்டார் அப்புறம் கூப்பிடுகிறேன் என்றாள். பெங்களூர் ஸ்நேகிதி ஒருத்திதான் ஃபோன் பண்ணியிருந்தாள். அவள் மகனுக்கு பிறந்த நாள் என்றாள். சரி வா பிரேம் சாப்பிடலாம் என்றாள்.
என்னவோ தோன சாப்பிட்டு முடித்ததும் கை கழுவி விட்டு அவள் முந்தானையில் கை துடைத்தான். அவளை அணைத்துக்கொண்டான். அவள் போய் வாசல் கதவை சாத்திவிட்டு வந்தாள். அவர்கள் தங்களை மறந்தார்கள்.


பிரேம் திருவிழாவிற்கு டிரஸ் எடுக்க வேண்டும் என்றாள். ஜீன்ஸ் தான் உனக்கு பிடிக்கும் என்றான். அதெல்லாம் அப்போ. இப்போ நீ எது எடுத்து குடுத்தாலும் ஓகே என்றாள். அவளை 10 வருடமாக பார்க்கிறான். அவள் மனம் சிறு குழந்தை போல தவித்து கொண்டே இருக்கிறது.மேற்கொண்டு எதுவும் பேசாமல் சாயங்காலம் போவோம் ஷாப்பிங் என்றான்.
தீபாவும், இவனும் குறைந்த விலையில் ஆடை எடுத்துக்கொண்டனர். அவர்கள் தேவைகளை குறைத்துக்கொண்டார்கள். நம்முடைய 11 வது கல்யாண நாள் வருகிறதே உனக்கு என்ன வேண்டும் என்றான். நாம் எங்கேயாவது புண்ணியதலத்துக்கு போய் வருவோம் என்றாள். காசி போவோமா என்றான். உங்கள் விருப்பம் என்றாள். காசிக்கு போக டிரைன் டிக்கெட் புக் செய்தான்.

கதிரேசன் மூத்த பெண் பெரிய மனுஷி ஆகிவிட்டாள் என்று செய்தி சொன்னான் . அவனுக்கு ஒரு மூவாயிரம் காசை கொடுத்தான். என்கிட்ட இப்போதைக்கு இவ்ளோதான் இருக்கு என்றான் பிரேம். பரவாயில்லை பிரேம். நீ அன்பாய் தருவதால்தான் இதை வாங்கி கொள்கிறேன் என்றான் கதிரேசன்.வீட்டில் எல்லா ஏற்பாடுகளையும் கவனித்தாள் தீபா. அவள் பெண்ணுக்கு சடங்குகள் செய்தாள். சிறுமி வெட்கத்தில் ஆழ்ந்திருந்தாள். பிரேம் வந்தவர்களுக்கு சாப்பாடு பரிமாறினான். இனி வேறு வீடு மாறி போக வேண்டும் கொஞ்சம் சவுகரியம் உள்ள வீடாய் பார்க்க வேண்டும் என்றான் கதிரேசன். சின்னவள் விவரம் அறியாமல் விளையாடிக்கொண்டிருந்தாள்.

பிரேம் காலப்போக்கினை நினைத்து பார்த்தான். காசிக்கு போவதாய் சொல்லி விட்டு இருவரும் கிளம்பினார்கள். என்ன பிரேம் உன் முகம் சந்தோஷமாய் இருக்கிறது.என்னவோ எனக்கு தோன்றாதது உனக்கு தோன்றி இருக்கிறது. நானும் எத்தனையோ தடைகளை தாண்டி விட்டேன். ஆனாலும் மனத்திருப்தி இல்லை. இறைவன் திருவடிகளில் சேர்ந்தால் தான் அது கிடைக்குமென்று நினைக்கிறேன் என்றான். நீ வீண் கற்பனைகளை விட்டு விடு பிரேம். நான் இருக்கிறேன் எப்போதும் உன்னோடு என்றாள். காசி விஸ்வநாதரை தரிசித்தார்கள். அங்கே அருகில் உள்ள புண்ணிய தலங்களுக்கு போய் வந்தார்கள். அவன் மனம் நிறைந்திருந்தது. மறுநாள் காலையிலயே போனில் வாழ்ததுக்கள் குவிய துவங்கி விட்டது. இவன் எல்லோருக்கும் நன்றி சொன்னான். நான் காசியில் இருக்கிறேன் என்றான். சில பேர் நேரில் வந்து பார்க்க துடித்தார்கள். குமரன் வீடியோ காலில் வந்தான். என்னை மன்னிப்பாயா குமரா என்றான் பிரேம்.அதெல்லாம் விடுங்கள் எப்போது யு எஸ் வருகிறீர்கள் என்றான்.

ரஞ்சனி நல்ல சேதி சொன்னாள். அவள் இப்போது உண்டாகியிருக்கிறாள். 3 மாசம் என்றாள். டாக்டர் உறுதிபடுத்தி உள்ளார் . நீலன் நீ அப்பாவாக போகிறாய் வாழ்ததுக்கள் என்றான். தீபா கண் எல்லாம் கலங்கி விட்டது. அக்கா இதற்கு போய் அழுகிறாயே என்றாள் ரஞ்சனி. நான் அருகில் இல்லாமல் போய்விட்டேனே நீ எப்படி சமாளிப்பாய் என்றாள். அதெல்லாம் நீ வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்றாள்.வீடு வந்து சேர்ந்தார்கள். இப்போது கதிரேசன் வீடு மாறி விட்டான். பழைய வீட்டில் இல்லை.ரஞ்சனிக்கு குழந்தை பிறக்கும் போது நாம் அங்கு இருந்தாக வேண்டும் என்றான் பிரேம்.அவளுக்கென பிடித்ததை செய் அடுத்த மாதம் போய் பார்த்து வருவோம் என்றான். நிச்சயமா ? கண்டிப்பா. கொஞ்சம் கம்பெனியில் அட்வான்ஸ் வாங்கி சில பலகாரங்களை செய்தாள் தீபா. அடுத்த மாதம் பெங்களூர் போவதற்கு டிரைன் டிக்கெட் புக் செய்தான். ரஞ்சனி சிறு பெண்ணாய் இருந்தவள் தாய் ஆக போகிறாள். நீலன் குடும்பம் மேலும் முன்னேற வேண்டும் என்றான் பிரேம். இவர்கள் காசிக்கு போனது அவர்கள் குடும்பத்தில் நல்ல நேரத்தை கொண்டு வந்திருக்கிறது. ஸ்டேஷன் வந்து பிரேமையும்,தீபாவையும் அழைத்து போனான் நீலன்.ரஞ்சனி கொஞ்சம் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறாள் என்றான். அக்கா என்று கட்டிக்கொண்டாள். இனி நீ தனி ஆளில்லை .பிரேம் மாமா கடைசியாக வந்து விட்டீர்கள் . நாங்கள் உன்னை விட்டு எங்கும் போகமாட்டோம் என்றான் பிரேம் . நீலன் ஃபிரெஷ் ஆகி விட்டு வாங்க சாப்பிடலாம் என்றான்.தீபா அவள் செய்த பலகாரங்களை ரஞ்சனியிடம் கொடுத்தாள்.