ஷிம்லாவுக்கு ஹனிமூன் செல்ல கிளம்பினர் ரஞ்சனியும், நீலனும்.சிம்லாவின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 2,206 மீட்டர்கள் (சுமார் 7,238 அடி) ஆகும். இது இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகராகவும், ஹிமாலய மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது.உயர்ந்த புள்ளி: ஜக்கூ மலை (Jakhoo Hill) - 2,438 மீட்டர். இது ஒரு புகழ்பெற்ற மலைப்பாங்கான இடமாகும் (Hill station). நீ ஏற்கனவே ஷிம்லா போயிருக்கிறாயா ரஞ்சனி. இல்லை இதுதான் முதல் தடவை. எனக்கும் இதுதான் முதல் தடவை என்றான்.சிம்லா இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரம் மற்றும் மிக முக்கிய சுற்றுலாத்தலமாகும்.இது இமயமலைத் தொடரில் அமைந்துள்ளதால் "மலைகளின் ராணி" என்று அழைக்கப்படுகிறது.பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இது கோடைக்கால தலைநகரமாக விளங்கியது.இங்கு ஆண்டு முழுவதும் குளுமையான மற்றும் இனிமையான காலநிலை நிலவுகிறது.பனிமூட்டமான மலைகள், பசுமையான காடுகள் மற்றும் இயற்கை காட்சிகள் இதன் சிறப்பு.மால் ரோடு (Mall Road) மற்றும் ரிட்ஜ் மைதானம் (The Ridge) ஆகியவை இங்குள்ள பிரபலமான இடங்கள்.யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமான கல்கா-சிம்லா ரயில்வே மலைப்பயணம் மிகவும் பிரபலம்.
ஜக்கு கோவில் (Jakhu Temple) போன்ற பழமையான கோவில்கள் இங்கு அமைந்துள்ளன.பனிக்காலத்தில் பனிப்பொழிவை ரசிக்கவும், கோடையில் குளிர்ச்சியை அனுபவிக்கவும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர்.
அமைதியான சூழல், காலனித்துவ கட்டிடக்கலை மற்றும் ஷாப்பிங்கிற்கு சிம்லா மிகச்சிறந்த இடமாகும். இந்த வரிகளை வாசித்து கொண்டு வந்தான் நீலன். 5 மணி நேர பயணத்தில் அவர்கள் ஷிம்லா வந்து சேர்ந்தார்கள்.
சில்லென்ற காற்று அவர்களை தழுவி சென்றது. எல்லா ஹனிமூன் ஜோடிகளை போல அவர்களும் கை கோர்த்து கொண்டனர். அவர்கள் புக் பண்ணியிருந்த ஹோட்டலுக்கு டாக்ஸி பிடித்து போனார்கள். ரிசப்ஷன் பெண் இவர்களை வரவேற்றாள் . இவர்களுடைய ஐடி கார்ட் செக் செய்யப்பட்டு ரூமுக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். நீலன் நாம் செல்ல வேண்டிய இடங்களின் லிஸ்ட் வைத்து இருக்கிறாயா? அதுதான் வரும்போதே வாசித்தேனே. அடிக்கிற குளிருக்கு நமக்கு ரூமில் தான் வேலை அதிகம். நீ எப்பவுமே இப்படித்தானா? நான் ஒன்றும் தப்பாக சொல்லவில்லையே. நீலன் காபி சொல்லேன் என்றாள். பிஸ்கட் கூட சேர்த்து சொன்னான். 10 நிமிடங்களில் வந்தது. அவள் கை மருதாணி நன்கு சிவந்திருந்தது. நீலன் உன் ஃபோன் காமிரா நல்ல குவாலிடி யாக இருக்குமா. இல்லை காமிரா ஒன்று வாங்குவோமா என்றாள். நாம் புதிதாக காமிரா ஒன்று வாங்குவோம் என்றான்.
எனக்கு உன்னிடம் எதையாவது பேசவேண்டும் போல இருக்கிறது. கிடார் எடுத்து வந்திருக்கிறாயா நீலன். ஆமாம் நிச்சயம் நாம் தூங்க கூடாது. இந்த பனி இரவை, அதன் அடர்த்தியை ரசிக்க வேண்டும் என்றாள் . நான் ஒரு அரைமணி நேரம் தூங்குகிறேன். பிறகு ஃபிரெஷ் ஆகி வெளியே சுற்றிப்பார்க்க போகலாம் என்றாள். சரி நான் போய்
டூரிஸ்டு கைட் பற்றி விசாரித்து வருகிறேன்.ஒரு மணிநேரம் கழித்து இருவரும் அறையை விட்டு மலர்ந்த மலர் போல வந்தார்கள். அந்த டிரைவர் பெயர் குல்தீப் . அவனே வழி காட்டியாய் இருந்தான். ஜக்கூ மலைக்கு போகலாம் என்று முடிவெடுத்தார்கள். ஹனுமன் கோவில் அங்கே இருக்கிறது. ஆரஞ்சு வண்ணத்தில் அந்த கோவில் மிளிர்ந்தது. ஷிம்லாவில் இருந்து மணாலிக்கும் போய் வர வேண்டும் என்று ரஞ்சனி சொன்னாள் . 6 மணி நேர பயணம் அது. அவர்களின் கைட் சொன்னதான் சாராம்சம் .சிம்லாவில் பாரம்பரியமான பல கட்டடங்கள் உள்ளன, அவை டுடோர்பெதன் மற்றும் நவ-கோதிக் கட்டிடக்கலைகளில் காலனித்துவ காலத்திலிருந்தே வடிவமைக்கப்பட்டு உருவாக்கபட்டவை. மேலும் இங்கு பல கோயில்கள் மற்றும் தேவாலயங்கள் உள்ளன. இங்கு உள்ள காலனித்துவ கால கட்டிடக்கலை, தேவாலயங்கள், கோயில்கள், நகரத்தின் இயற்கை சூழல் போன்றவை சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. நகர மையத்தின் முக்கியமான இடங்களாக சிறீ அனுமான் ஜக்கு (சிலை) , ஜாகூ கோயில், வைஸ்ரீகல் லாட்ஜ், கிறிஸ்து தேவாலயம், மால் சாலை, தி ரிட்ஜ், அன்னடேல் ஆகியவை உள்ளன. நகர மையத்தின் வடக்குப் புள்ளி ஜாக்கூ, தெற்கே அன்னடேல், கிழக்குப் புள்ளி சஞ்சௌலி, மேற்குப் புள்ளி சோட்டா சிம்லா போன்றவை ஆகும்.சிம்லா நகரம் காளியின் அவதாரமான சியாமளா அன்னையின் பெயரிலிருந்து வந்தது. இந்த அம்மனுக்கான காளி பாரி கோயிலானது ரிட்ஜ் அருகே பாண்டனி மலையில் உள்ளது. மற்றொரு பதிப்பின் படி, சிம்லாவின் பெயர் 'சியாமாலயா' என்ற சொல்லிலிருந்து வந்தது, நீல பலகைக்கல் என்பது இதன் பொருளாகும். ஆனால் பொதுவாக, சமூகம் முதலில் சொன்ன காரணத்தையே மிகவும் நம்பக்கூடியதாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், நியாயமானதாகவும் கருதுகிறது.
நாம் நாளை மணாலி போகலாம் என்று சொன்னான். அவர்கள் காலையிலேயே கிளம்பி விட்டார்கள்.மணாலி வரலாறை படிக்க தொடங்கினான்.
மணாலி என்பது இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில், பியாஸ் நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு அழகான மலைவாழிட நகரம். இது கடல் மட்டத்திலிருந்து 2,050 மீட்டர் (6,726 அடி) உயரத்தில் உள்ளது. இமயமலையின் முக்கிய சுற்றுலாத் தலமான மணாலி, சாகச விளையாட்டுகள் (பாரா கிளைடிங், ட்ரெக்கிங்) மற்றும் பனிப்பொழிவிற்குப் பெயர் பெற்றது. இது பழைய மற்றும் புதிய மணாலி என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மணாலி பற்றிய முக்கிய விவரங்கள் அமைவிடம்: குலு பள்ளத்தாக்கின் வடக்கு முனை, இமாச்சலப் பிரதேசம்.
பொருளாதாரம்: சுற்றுலா மற்றும் ஆப்பிள் தோட்டத் தொழிலை நம்பியுள்ளதுசிறப்பு: ஹிடிம்பா தேவி கோயில், ரோதங் கணவாய், சோலாங் பள்ளத்தாக்கு ஆகியவை முக்கிய சுற்றுலா இடங்கள்.பருவகாலம்: குளிர் காலத்தில் பனிப்பொழிவும் (டிசம்பர்-பிப்ரவரி), கோடையில் இதமான காலநிலையும் இருக்கும்.
அவர்கள் புதியதோர் காமிரா வாங்கியிருந்தார்கள்.அவள் எடுத்த படங்களின் லைட் எல்லாவற்றிலும் நன்றாக இருந்தது.மலை உயரத்தில் இருந்து எடுத்த போட்டோ காலை வேளையில் எடுத்த போட்டோ என எல்லாமே சிறப்பாக இருந்தது. நீலனும் ரஞ்சனியும் அந்த இடத்தின் வரலாறு, அதன் சமூக பின்னணி பற்றி தெரிந்து கொள்ள விரும்பினார்கள். மாலை இரவு உணவுக்கு பின் அங்கிருக்கும் கார்டன் ஒன்றில் கிடார் உடன் நீலன் மெல்லிசை வாசித்தான். அது அவளுக்கு பிடித்த ஒன்று. சிலர் நின்று கவனித்தார்கள். அவனுடைய மொழி அத்தனை பரிச்சயமில்லாததால் எளிதில் அவன் இசையுடன் அவர்களால் ஒத்து போக முடியவில்லை. சில சமயம் அவன் சொந்தமாக எழுதி பாடினான். எப்படியோ அவர்கள் அந்த தேனிலவை இசையுடன் கொண்டாடினார்கள். மணாலியில் பாரா கிளைடிங், ட்ரெக்கிங் அனுபவம் சிறப்பாக இருந்தது. அவன் பயணக்கட்டுரை ஒன்றை எழுத தொடங்கி இருந்தான். பெங்களூர் விட்டு ஷிம்லா வந்து ஒரு வாரம் ஆகி விட்டிருந்தது. இயற்கையின் வனப்பில் அவர்கள் தங்களை மறந்திருந்தார்கள்.பிரேம் ஃபோன் பண்ணியிருந்தான். என்ன ஹனிமூன் முடிக்க ஐடியாவே இல்லையா என்றான். தீபா வேறு நாமும் அங்கே போவோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள். இல்லை இரண்டு நாட்களில் கிளம்பி விடுவோம் என்றான் நீலன்.
அவர்களுடைய பிரத்யேக உடைகள், வாங்கிய பொருட்கள் எல்லாவற்றையும் பேக் செய்வதற்குள் போதும் போது மென்றானது.என்னால் இந்த ட்ரிப் மறக்கவே முடியாது என்றான் நீலன்.என்னாலும் தான் . டிரைவர் மற்றும் வழிகாட்டி குல்தீப்புடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். அவனுக்கு நினைவு பரிசு ஒன்றும் வழங்கினர். திரும்ப பெங்களூர் செல்லவே மனம் இல்லையென்று ரஞ்சனி சொன்னாள். ஆனால் அவளுக்கான கடமைகள் காத்துக்கொண்டிருந்தன, நீலனும், ரஞ்சனியும் செய்ய வேண்டிய வேலைகள் ஏராளமாய் இருந்தது. அவர்கள் அந்த தேனிலவு முடிந்து வரும் போது நிறைய பொறுப்புகளை சுமக்க ஆயத்தமாய் இருந்தார்கள்.
அவர்களை பிக்அப் செய்ய தீபாவும்,பிரேமும் ஏர்போர்ட் வந்திருந்தனர். தீபாவுக்கு ரொம்ப சந்தோஷம். அவள் ரஞ்சனியை கட்டிப்பிடித்து கொண்டாள். நீலன் உன்னுடையது நல்லதொரு பயணக்கட்டுரை என பாராட்டினான். உன்னுடைய புகைப்படங்களும் அவ்வளவு அழகு என ரஞ்சனியை பிரேம் பாராட்டினான்.
வந்த களைப்பு தீர அவர்கள் தூங்கினார்கள். பிரேம் ஆபீஸ் கிளம்பி போய்விட்டான். தீபா கிச்சன் உள்ளே இருந்தாள். குமரன் எப்படி இருக்கிறான் என கேட்டாள் ரஞ்சனி. அவன் உண்டு அவன் வேலையுண்டு என்று பிஸி ஆக இருக்கிறானாம். என்னிடம் சாப்பிட்டாயா என கேட்டான். வேறு எதுவும் பேசவில்லை. இந்த வார இறுதியில் மறுபடி பேச வேண்டும் என்றாள். சூப் வைத்திருக்கிறேன் நீயும், நீலனும் குடியுங்கள் என்றாள் தீபா. அதை எடுத்து கொண்டு போய் நீலனை எழுப்பினாள். அவன் அவளை அணைத்து முத்தமிட்டான். ஹனிமூன் முடிந்து விட்டது என்றாள்.வா மதியம் ஆபீஸ் போவோம் என்றாள். லஞ்ச் சாப்பிட்டுவிட்டு போகலாம் என்றாள் தீபா.
மதியம் சாப்பாடு சுட சுட தயார் பண்ணியிருந்தாள் தீபா. ரஞ்சனி நீயே உன் கணவனை கவனி என்று சொல்லிவிட்டு போய்விட்டாள். அவள் ரஞ்சனி எடுத்த புகைப்படங்களையும். புதிதாக வாங்கிய காமெராவையும் ஆர்வமாக பார்த்தாள் . இயற்கை அழகு அற்புதமானது என்றாள் தீபா. ரஞ்சனியும்ம் நீலனும் ஆபீஸ் சென்றார்கள். பிரேம் வெளியே போயிருந்தான். அரை மணி நேரத்தில் வந்து விடுவதாக சொல்லி போயிருக்கிறான். அவன் வரும் போது பூங்கொத்து இரண்டு வாங்கி வந்திருந்தான். அவற்றை இருவருக்கும் கொடுத்தான். நீலன், ரஞ்சனி இருவருக்கும் ஒரு நல்ல செய்தி. என்ன மாமா ஏதாவது ப்ரமோஷன் ஆ ? என்றாள் ரஞ்சனி. ஆமாம் . எனக்கு எதற்கு மாமா ப்ரமோஷன். நான் சொல்வதை கவனமாக கேள். நீ இப்போது சிறு பெண் இல்லை. உனக்கென எல்லாமும் தெரிந்திருக்கிறது.நான் நினைப்பது சரியென்றால் இதுதான் நீ கம்பெனிக்கு உன்னுடைய உழைப்பை திரும்ப செலுத்த சரியான நேரம். சௌமியாவும், ராக்கியும் வந்தார்கள்.
என்ன சொல்ல வருகிறார் மாமா என ராக்கியை கேட்டாள் ரஞ்சனி. எல்லாம் நல்ல விஷயம் தான். இனி எல்லா நிர்வாகப் பொறுப்பும் ரஞ்சனியையே சாரும். அவள் எடுக்கும் முடிவுகளே கம்பெனியை வழி நடத்தி செல்லும் என்றான் பிரேம். இது அவசரத்தில் எடுத்த முடிவு அல்ல. எல்லோருடைய கருத்தும் கேட்டு எடுத்த முடிவு.நீலன் இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றான். ரஞ்சனி ஒரு நிமிடம் திகைத்து போய்விட்டாள். உன்னுடைய அப்பாவின் கனவு இது என்றான். டாகுமெண்ட்ஸ் எல்லாவற்றிலும் கையெழுத்து போட்டாள் . பிரேம் நிம்மதி பெருமூச்சு விட்டான்.