Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நிழல் தரும் வசந்தம் - 43

பாஸ்போர்ட் ஆபீஸ் இருவரும் சென்றனர். அவன் வேலை முடித்து வரும் வரை காத்திருந்தாள். லஞ்ச் வீட்டில் ஏற்பாடு செய்திருப்பதாக சொன்னாள்.எதற்காக வீண் சிரமம் என்றான். அதெல்லாம் ஒன்றுமில்லை. தீபாவிடம் இருந்து ஃபோன் வந்தது. என்னாச்சு போய் ரொம்ப நேரம் ஆச்சே எல்லோரும் உங்களுக்காக வெயிட் பண்ணுகிறார்கள் என்றாள். இதோ ஒரு அரை மணி நேரத்தில் வந்து விடுகிறோம் அக்கா என்றாள். குமரனுக்கு அவன் சாக்லேட் பாக்ஸ் ஒன்றை வாங்கியிருந்தான் அதை கொடுத்தான். தாங்க்ஸ் அங்கிள் என்றான். வாருங்கள் எல்லோரும் சாப்பிட போகலாம் என அழைத்தாள் தீபா. பிரேம் என்ன ஆச்சு போன காரியம் என்றான். நல்லபடியாக முடிந்தது என்றான் நீலன். எங்கள் வீட்டு சாப்பாடு எப்படி? என்றாள் ரஞ்சனி. இன்னும் அவன் சாப்பிடவே இல்லை அதற்குள் சர்டிபிகேட் கேட்டாள் எப்படி என்றான் பிரேம்.அவன் அளவாக சாப்பிட்டான். தீபா நீயும் உட்கார் என்றான் பிரேம். பிரேம் சாப்பிட்டு முடித்து கை கழுவி வந்தான். தீபாவுக்கு அவனே என்ன வேண்டும் என கேட்டு பரிமாறினான்.

உனக்கு சென்னை சவுகரியமாக இருக்கிறதா? இல்லை பெங்களூர் ஆபீஸ் வருகிறாயா என்றான் பிரேம். இப்போது சென்னையில் ஒன்றும் கஷ்டமில்லை. நான் யோசித்து சொல்கிறேன் என்றான். சரி உன் விருப்பம். நாங்கள் எல்லோரும் நீ பெங்களூர் வந்தால் நல்லது என நினைக்கிறோம்,ரஞ்சனி உட்பட.ரஞ்சனி பிரேமை பார்த்தாள். சாயங்கலமாக போகலாம் ரெஸ்ட் எடுத்துக்கொள் என்றான். அதெல்லாம் வேண்டாம் ,சில நண்பர்களை பார்க்க வேண்டியிருக்கிறது பார்த்துவிட்டு சென்னை கிளம்புகிறேன் என்றான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அக்கறைக்கும், அன்புக்கும் நன்றி என்றான். பணம் எதுவும் தேவையா என்றான். அதெல்லாம் இருக்கிறது என்றான். நீலன் விடை பெற்றுக்கொண்டான்.

ரஞ்சனிக்கு சற்று வருத்தம்தான். வெளிப்படையாக கேட்டும் அவன் சென்னையை விட்டு வர மறுத்து விட்டான். இதற்கு மேல் நாம் என்ன செய்ய முடியும். அவள் மதியம் நன்கு தூங்கி விட்டாள். 5 30 மணிக்குத்தான் எழுந்தாள். ஃபோன் பார்த்தாள் . நீலனிடம் இருந்து 5 மிஸ்டு கால்கள் வந்திருந்தது.என்ன ஆனதோ தெரியவில்லையே என ஃபோன் செய்தாள். நீலன் என்ன ஆச்சு தூங்கி விட்டேன் என்றாள். நான் பெங்களூர் வர ஏற்பாடு செய்யுங்கள் என்றான்.ரொம்ப சந்தோஷம் நீலன். என்ன திடீரென்று? என்னவோ உங்களையெல்லாம் பிரிந்து போகும்போது தான் நான் எவ்வளவு தனி ஆளாய் இருக்கிறேன் என்று தெரிகிறது என்றான். சரி நீலன் நான் பிரேம் மாமாவிடம் சொல்கிறேன்.
தாங்க்ஸ் ரஞ்சனி.நான் போய் வருகிறேன் . டேக் கேர் பை.


ரஞ்சனிக்கு சந்தோஷமாய் இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு பிரேமிடம் விஷயத்தை சொன்னாள். சரி ரஞ்சனி நான் பார்த்துக்கொள்கிறேன். நீ முகம் கழுவி வா . காபி ரெடி என்றான்.நீலன் நம்முடைய வீட்டிலேயே தங்கிக்கொள்ளலாம் என நினைக்கிறேன் என்றான்.தீபா மறுப்பேதும் சொல்லவில்லை.அவனை ரொம்ப நெருக்கடிக்கு ஆளாக்க வேண்டாம் என்றாள் தீபா. அது அப்படியில்லை ஆபீஸ் இங்கிருந்து பக்கம் அதனால்தான் சொன்னேன். ரஞ்சனி நான் கொஞ்சம் ஷாப்பிங் போய் வருகிறேன் என்றாள். தீபா எனக்கு ஒரு சாரி என்றாள். எனக்கு டாய்ஸ் என்றான் குமரன். ஓகே ஓகே என்று காரை எடுத்து கொண்டு கிளம்பினாள். அவள் நீலனுக்கு டிரஸ் எடுக்கத்தான் போயிருந்தாள். டி ஷர்ட், ஜீன்ஸ் எடுத்தாள்.அவளுக்கு எதுவும் எடுத்து கொள்ளவில்லை. அக்காவுக்கும், குமரனுக்கும் தேவையானதை வாங்கினாள்.

பிரேம் நீலனின் ட்ரான்ஸ்பர் குறித்து டிஸ்கஸ் செய்தான். ஒரு சிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பாலானோர் ஒத்துக்கொண்டனர்.அது குறித்த official மெயில் ஒன்றை சென்னை ஆபீசுக்கு அனுப்பினான். இன்னும் ஒரு மாதத்தில் அவனை பெங்களூர் அனுப்பி விடுவதாக சொன்னார்கள். ரஞ்சனிக்கும் இந்த தகவலை சொன்னான் பிரேம். எப்படியோ நீ நினைத்ததை சாதித்து விட்டாய் ரஞ்சனி என சௌமியா சொன்னாள்.ஒரு மாதத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் .அவள் மனம் சற்றே நெர்வஸ் ஆக இருந்தது.பிரேம் சில சமயங்களில் ரஞ்சனி குறித்து கவலைப்படவும் செய்தான். அவள் வெளிப்படையாக சொல்லவில்லையே தவிர நீலன் மீது அளவில்லா காதல் கொண்டிருந்தாள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏன் இவ்வாறு காத்திருக்கிறாள் என்பது அவளுக்கே உண்டான பிரத்யேக குணம்.

சௌமியாவுக்கு பிரசவ தேதி நெருங்கி கொண்டிருந்தது. அவனுக்கு பிரேம் ஆறுதல் கூறினான். தைரியமாய் இரு ராக்கி சௌமியா அம்மா இருக்கிறார்கள்.. நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் என்றான்.ஹாஸ்பிடலில் முன் கூட்டியே சொல்லி வைத்திருந்தான்.சௌமியா கொஞ்சம் கவலையோடுதான் இருந்தாள். ராக்கியின் அப்பா, அம்மா இன்னமும் பாரா முகமாய்த்தான் இருக்கிறார்கள். ஒரு முறை நான் வேண்டுமானால் பேசிப்பார்க்கவா என்றான் பிரேம். அதெல்லாம் வேண்டாம். அவர்கள் மாற மாட்டார்கள். எங்கள் விதிப்படியே நடக்கட்டும் என்றான் ராக்கி. சௌமியா அம்மாவிடம் உங்கள் ஆசீர்வாதம் மட்டும் போதும் என்றான் ராக்கி.நீலனுக்கு பெங்களூர் மாற்றல் ஆகிவிட்டது. நாளை பெங்களூர் வருவதாய் ஃபோன் பண்ணியிருந்தான். நீ எங்கள் வீட்டில் தான் தங்குகிறாய் என்று பிரேம் கண்டிப்புடன் சொன்னதை அவனால் தட்ட முடியவில்லை. பிரேமை ரயில்வே ஸ்டேஷன் போய் அழைத்து வந்தாள் ரஞ்சனி. வெல்கம் தொ பெங்களூர் என்றான் பிரேம்.

அவனுடைய அறைக்கு கூட்டி போனாள் ரஞ்சனி. நீ உன் சொந்த வீடு போல கருதிக்கொள் என்றாள். நான் என்ன செய்து இந்த நன்றிக்கடனை தீர்ப்பேன் என்றான். அதெல்லாம் அப்புறம். நீ ரெஸ்ட் எடு. ஆபீஸ் போகும் போது உன்னையும் அழைத்து போகிறேன் என்றாள். அவனுக்கு அதிர்ஷ்டகுறைவு உண்டு.ஆனால் இவர்கள் செலுத்தும் அன்பு அவனை திக்குமுக்காட செய்து விட்டது.மணி காலை 9 30 இருக்கும். கதவு தட்டப்பட்டது. இவன் தயாராய் இருந்தான். குமரன் தான் நின்றிருந்தான். வாங்க அங்கிள் சாப்பிடலாம் என்றான். நீ ஸ்கூல் போகவில்லையா என்றான். இனிமேல் தான் அம்மா அழைத்துகொண்டு போவார்கள் என்றான். என்ன நீலன் இந்த மாற்றம் உனக்கு பிடித்திருக்கிறதா? நிச்சயமாக.பிரேம், நீலன், ரஞ்சனி மூவரும் ஒரே காரில் பயணித்தனர். சௌமியா ரொம்ப நெர்வஸ் ஆக இருக்கிறாள். ஈவினிங் அவளை போய் பார்க்க வேண்டும் , லீவு எடுத்துக்கொள்ள சொல்லி இருக்கிறேன் என்றான் பிரேம்.


சௌமியாவை சரியான நேரத்தில் ஹாஸ்பிடலில் சேர்த்தான் ராக்கி . அவளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ராக்கி கண்களில் கண்ணீருடன் சௌமியாவை அணைத்து கொண்டான். பிரேம் விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்தான். எல்லாம் சுகம் என்றான் ராக்கி. ராக்கியை கட்டி அணைத்து வாழ்த்துக்கள் என்றான். சௌமியா அம்மா மகிழ்ச்சியில் எல்லோருக்கும் சாக்லேட் குடுத்து கொண்டிருந்தாள். சௌமியா மயக்கத்தில் இருக்கிறாள். சிறிது நேரம் கழித்து பார்க்கலாம் என்றான் ராக்கி. தீபா, ரஞ்சனி அவர்களோடு நீலனும் வந்திருந்தான். சாக்லேட் கொடுத்தான் ராக்கி. குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது . என் கவலையெல்லாம் போய் விட்டது என்றான் ராக்கி. மயக்கம் தெளிந்து விட்டது சௌமியாவுக்கு வாருங்கள் போய் பார்க்கலாம் என்றான் ராக்கி.பிரேம் கையை பிடித்து கொண்டாள். என் மகளை பார்த்தாயா பிரேம். அவள் உன்னை போலவே இருக்கிறாள் என்றான். பிரேம் வெளியே வந்து டாக்டரிடம் பேசினான். தீபாவும், ரஞ்சனியும் குழந்தையை கொஞ்சினர். நீலன் வாழ்த்துக்கள் ராக்கி என்றான்.

இன்னும் மூன்று நாட்களில் சௌமியாவையும், குழந்தையையும் வீட்டுக்கு அழைத்து போகலாம் என்று சொன்னார்கள்.பிரேம் சௌமியா அப்பாவை நினைத்து கொண்டான். அவர் எவ்வளவு ஆசையுடன் அவளுடைய முதல் திருமணத்தை நடத்தினார். தீபா என்ன யோசனை பிரேம் என்றாள். எனக்கு ஒரு பையன்தான் அதுதான் யோசித்தேன். உனக்கு இன்னும் என் மேல் ஆசையிருக்கிறதா பிரேம்.அடுத்த பெண் குழந்தைக்கு நான் தயார் என்றாள். அவன் சிரித்தான். நாம் அதை கடந்து விட்டோம் என்றான். நீயே என்னுடைய எல்லாம் என்றான். இப்படி பேசியே இத்தனை வருடம் ஓடிவிட்டது என்றாள். குமரனை ஸ்கூலில் இருந்து அழைத்து வர வேண்டும், நான் போகிறேன் என புறப்பட்டாள் தீபா.ரஞ்சனி , நீலன் இருவரும் வீட்டுக்கு போனார்கள். எவ்வளவு கியூட் ஆக இருக்கிறது குழந்தை என்றாள் ரஞ்சனி. நீயும் சிறு வயதில் அப்படித்தான் இருந்திருப்பாய் என்றான். எப்படி சொல்கிறாய். நீ உண்மையில் கோபப்படும் போது தான் அழகாகிறாய் என்றான்.

பிரேம் இரவு 10 மணிக்குத்தான் வந்தான். தீபா சாப்பிடுகிறாயா பிரேம்? இல்லை தீபா எனக்கு பசியில்லை நீ போய் படுத்துக்கொள் என்றாள். என்னாச்சு உனக்கு ஏன் பசியில்லை. குழந்தையை பார்த்த சந்தோஷமே மனது நிறைந்து விட்டது. என்ன பெயர் வைக்கலாம் என சௌமியா கேட்டாள். நான் உன்னிடம் கேட்டு சொல்கிறேன் என சொன்னேன். தீபா யோசித்தாள். பிரியசகி எப்படி இருக்கிறது . பழைய பெயராய் இருக்கிறது.மோகிதா எப்படி இருக்கிறது . மோசமில்லை என்றாள். ஒத்துக்கொள்ள மாட்டாயே என்றான். மூன்று நாள் கழித்து சௌமியா குழந்தையுடன் தன் வீட்டுக்கு வந்தாள். ராக்கி நீ வேண்டும் என்கிற நாள் வரை லீவு எடுத்து கொள் என்றான் பிரேம். தாங்க்ஸ் பிரேம். சௌமியாவுக்கு லீவு இருந்தது. பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. எல்லோரும் மோகிதா என்ற பெயர் நன்றாய் இருக்கிறதென்று சொன்னார்கள்.

ஃபங்சன் வந்திருந்தவர்களை நீலனும், ரஞ்சனியும் உபசரித்தார்கள். எல்லோரும் சந்தனமும், குங்குமமும் வைத்து ஆசீர்வதித்தார்கள். இவனுக்கு நிறைவாய் இருந்தது. நீலன் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.இது என்ன கேள்வி ? நமக்கு நாமே இடைவெளியோடு ஏன் இருக்கிறோம் . இது காலத்தால் பதில் சொல்ல வேண்டிய கேள்வி. சுபா அக்கா நாளை வருகிறார்கள் என்றான். சௌமியா அக்காவை பார்க்க . லலிதாவையும் அழைத்துகொண்டு வருகிறார்கள்.நீலன் நீ சுபா அக்காவிடம் சொன்னாயா ? நான் உன்னிடமே சொல்ல தயங்குகிறேன். நான் உண்மையில் யார்? என்றான். நீ என் .. சொல்லிவிட்டு தயங்கினாள். அங்கிருந்து சென்றாள். பிரேமுக்கு சுபா ஃபோன் செய்திருந்தாள். நாளை இந்தியா வருகிறேன். அதோடு முக்கியமான விஷயம் பேச போகிறேன் என்றாள். எல்லாம் முக்கியம் தான். நீ முதலில் வா என்றான். அவளை ஏர்போர்ட் சென்று பிக்அப் செய்தார்கள் நீலனும், பிரேமும். அவள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான் நீலன். நீ எப்படி உயர்ந்து விட்டாய் நீலன் என்று அழுதாள் . பிரேம் அவர்களை சமாதானபடுத்தினான்.