Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நிழல் தரும் வசந்தம் - 35

தீபாவுக்கு ஃபோன் செய்தான். அவள் எடுத்தாள். பிரேம் எங்கே என்றான். அவர் தூங்குகிறார். கொஞ்சம் அர்ஜண்ட் அவரை எழுப்புகிறீர்களா என்றான். தீபா பிரேம்..பிரேம் ஃபோன் ல ராக்கி ஏகோ அவசரமாம். சரி குடு என்றான். என்ன ராக்கி சொல்லு.. விஷயத்தை சொன்னான். இப்போது என்னை என்ன செய்ய சொல்கிறாய்.. நானே என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்த மாதிரி ஆயிடுச்சே ..10 லட்சமா சரி இதுக்கு யாரும் தெரிய வேண்டாம். நான் பணத்தோட வருகிறேன். இளவேனில் பணத்தை ரமேஷ் அக்கவுண்ட் டில் போடுங்கள் அப்போதுதான் போலீசுக்கு என் மேல் சந்தேகம் வராது என்றான் ராக்கியிடம். பிரேமா ஃபோன் பண்ணியிருந்தாள். என்னால அவனை அரெஸ்ட் பண்ண முடியும்னு நினைக்கலை . ஏன்னா அவன் இப்போ ஆந்திராவுக்கு போயிட்டான்.ரமேஷ் அக்கவுண்ட்டில் பணம் போட்டுவிட்டு வெளியே வந்து ராக்கியை சந்தித்தான் பிரேம்.அவன் ரஞ்சனி போட்டோஸ்,வீடியோஸ் எல்லாம் டெலீட் பண்ணுவானா? என்றான் பிரேம்.

ராக்கி இளவேனிலிடம் பேசினான். சொன்னபடி பணம் போட்டாச்சு. நீ உன்கிட்ட இருக்குறத குடுத்துடு என்றார்கள். ம் நான் ரமேஷ்கிட்ட பேசிட்டு திரும்ப கூப்பிடறேன் என்றான். 5 நிமிடத்தில் கூப்பிட்டான். உன் பொண்ணு போட்டோ, வீடியோ எல்லாம் ஒரு pendrive ல போட்டு என்னோட வீட்ல வெச்சிருக்கேன் போய் எடுத்துக்குங்க . போலீஸ் கிட்ட போவாதீங்க, அப்புறம் எல்லாமே வேஸ்ட்டா போயிடும். பிரேமும், ராக்கியும் உடனே விரைந்தார்கள். டிராயர் ஒன்றில் அந்த பென் டிரைவ் இருந்தது. பிரேம் அதை போட்டு பார்த்து விட்டு உடைத்தும் விட்டான்.நாம் இளவேனில் கணக்கை தீர்க்க வேண்டியது தான் என்றான் பிரேம்.சரி. அந்த வீட்டினை பூட்டி சாவி எடுத்துககொண்டான். அப்போது யாரோ இருவரையும் பின் மண்டையில் தாக்க இருவரும் மயங்கி விழுந்தார்கள்.


கண் விழித்து பார்த்த போது இளவேனில் எதிரே லேப்டாப் உடன் உட்காரந்திருந்தான். பிரேம், ராக்கி இருவரும் நாற்காலியோடு கட்டப்பட்டு இருந்தனர். உங்களை உயிரோட விட்டா என உயிருக்கு ஆபத்து அப்படின்னு ரமேஷ் சொன்னான். என்னடா ரமேஷ் பேரை சொல்லுறனேன்னு பார்க்குறீங்களா.உங்களை அடிச்சி கொண்டு வந்ததே அவன்தான். இது எல்லாமே அவனோட பிளான்தான். நீ தீபாவுக்கு ஃபோன் பண்ணி 50 லட்சம் எடுத்து வர சொல்லு. அப்போதான் நீ உயிரோட வீட்டுக்கு போக முடியும். போதும் உன் பேராசைக்கு எல்லை இல்லையா ?எங்க உயிரே போனாலும் தர முடியாது. அப்போ நானே அண்ணிகிட்ட பேசுறேன்.அவள் பயந்து விட்டாள். ஒரு மணி நேரத்தில் வருகிறேன், பணம் எடுத்து வருகிறேன் என்றாள்.

சொன்னபடி பணம் எடுத்து வந்திருந்தாள். அவள் கொடுத்ததும் சரியாக இருக்கிறதா என சரி பார்த்தான். அப்போது அவன் காலில் அந்த புல்லட் உரசி சென்றது. சுட்டது ரஞ்சனி தான். எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை கெடுப்ப என மறுபடியும் சுட்டாள். அவன் சுருண்டு விழுந்தான். இந்த துப்பாக்கி ? மீராவோடது. சரி வாங்க போயிடலாம் . பிரேமையும், ராக்கியையும் கட்டவிழ்த்து அழைத்து சென்றாள். திரும்ப வந்து அவனுடைய ஃபோன், லேப்டாப் இரண்டையும் எடுத்துகொண்டாள். இளவேனில் மயக்கமானான். ரமேஷ் ஃபோன் பண்ணியிருந்தான். பிரேம் நீ தப்பு பண்ணி விட்டாய் என்றான் ரமேஷ், அப்போதுதான் அந்த ரூமில் காமிரா இருப்பதை பார்த்தான் பிரேம்.இப்போது அநியாயமாய் மீரா உயிர் போக போகிறது என்றான். வேண்டாம் அவளை விட்டு விடு.அப்படியென்றால் அந்த பணத்தை அங்கேயே விட்டு செல் என்றான். அவன் சொன்னபடி செய்தார்கள்.

ரமேஷ் தன்னை திட்டமிட்டு ஏமாற்றி விட்டான் . ஃபோன் லொகேஷன் கண்டுபிடித்து போவதற்குள் எப்படியும் தப்பித்து விடுவான். எப்படியும் யாராவது இந்த பணத்தை எடுக்க வருவார்கள் என்று சொன்னான் பிரேம். நாம் கீழே காரில் காத்திருப்போம் என்றான் ராக்கி. நீ வீட்டுக்கு போ ரஞ்சனி என்றான். சரி என்று அவள் கிளம்பினாள் . கொஞ்ச நேரத்தில் போலீஸ் வாகனம் வந்தது. இன்ஸ்பெக்டர் பிரேமா..இதை அவர்களால் நம்ப முடியவில்லை. பணம் எடுத்துக்கொண்டு வந்ததும் வண்டியில் இருந்த தினேஷ் நோக்கி புன்னகைத்தாள்.இனி உன் அம்மாவை கூப்பிட்டு கொண்டு போகலாம் . மேலதான் இருக்காங்க, அம்மா என கத்திக்கொண்டு ஓடினான். அவள் துப்பாக்கியை அவன் பக்கம் நீட்ட நீ வேகம் வண்டி எடு என்றான் பிரேம் . மயிரிழையில் தினேஷ் தப்பித்தான். இவர்கள் வண்டி கொண்டு அவள் மேல் இடித்திருந்தனர். அவள் எழும் முன் அவளது காலில் வண்டியை ஏற்றினான் ராக்கி. திரும்பி பார்த்தான் தினேஷ்.

எங்கே மீரா என்றான் பிரேமாவிடம். 3rd ஃபுளோர் . அங்கு கட்டப்பட்ட நிலையில் இருந்த மீராவை அழைத்து வந்தார்கள். போலீசுக்கு தகவல் சொன்னர்கள். ரமேஷை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ராக்கிக்கு நன்றி சொன்னான் பிரேம். எனக்கு இளவேனில் இப்படி செய்தது கூட ஆச்சரியமில்லை. ரமேஷ் இப்படி செய்வான் என கனவிலும் நினைக்கவில்லை என்றான். ரஞ்சனி ரொம்ப கஷ்டப்படுத்தி விட்டேன் உன்னை என்றான் பிரேம். பரவாயில்லை மாமா. மீராவை வீட்டுக்கு சாப்பிட அழைத்திருந்தார்கள். தினேஷ் கூட வந்திருந்தான்.ரொம்ப ரிஸ்க் எடுத்து இருக்கீங்க மீரா என்றான் ராக்கி. நான் அவன் கிட்ட மாட்டி இருக்க கூடாது என்னால உங்களுக்கெல்லாம் சிரமம் . பிரேமா என் பையனை கொல்ல முயற்சி பண்ணியிருக்கா நல்ல வேளை நீங்க காப்பாத்துனீங்க .. வாங்க சாப்பிடலாம் என அழைத்து போனாள் ரஞ்சனி.

ரமேஷ் மேல் உள்ள கேஸ் வாபஸ் வாங்கும்படி பூஜா கெஞ்சினாள். இவன் ஸ்டேஷன் போய் கம்ப்ளைண்ட் வாபஸ் வாங்கினான்.ரமேஷ் முகத்தை பார்க்க கூட பிரேம் விரும்பவில்லை.பிரேமா சஸ்பெண்ட் செய்யப்பட்டாள்.ரஞ்சனி நான் எஜுகேஷன் டிரஸ்ட் மேல் கவனம் செலுத்த போகிறேன் என்றாள். சரி உன் விருப்பம் போல செய் .ரஞ்சனி கல்யாணம் கேன்ஸல் ஆனதை சுபாவிடம் வருத்தத்துடன் தெரிவித்தான் பிரேம்.இளவேனில் விவகாரத்தை மறக்க முயன்றான் பிரேம். ஆனால் ரமேஷ் செய்த துரோகத்தை மறக்க முடியவில்லை.எதிர்பாராத இந்த சம்பவங்களால் பிரேம் சற்று அமைதி இழந்தவனாக காணப்பட்டான்.ரஞ்சனியோ, தீபாவோ அதைப்பற்றி அதிகம் பேசவில்லை.

சௌமியா , ராக்கி தலையிடாவிட்டால் இளவேனில் இந்நேரம் ரஞ்சனி கழுத்தில் தாலி கட்டியிருப்பான். அவள் வாழ்க்கையும் கேள்விக்குறி ஆகி இருக்கும். குமரகுருவையும் , தன் அப்பாவையும் அடிக்கடி நினைத்து கொண்டான். எப்படியாவது ரஞ்சனிக்கு ஒரு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கும் போது ஏதாவது ஒரு இடைஞ்சல் வந்து கொண்டே இருக்கிறது. இனிமேல் ரஞ்சனி தன்னை நம்பமாட்டாள் . அவளே அவள் வாழ்க்கையை தீர்மானிக்க போகிறாள் என்றே நினைத்தான். தீபா என்ன எப்ப பார்த்தாலும் ஒரே யோசனை என்றாள். நமக்கு நேரம் சரியில்லை அதனால்தான் இப்படி நடக்கிறது என்றாள். தீபா அவன் தலை கோதினாள் . நீ பயப்படுற அளவுக்கு இப்ப ஒண்ணும் நடக்கவில்லை.

சௌமியா ஃபோன் பண்ணியிருந்தாள் ராக்கி பர்த்டே நாளை கொண்டாடுகிறோம். எல்லோரும் மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்து விடுங்கள் என்றாள்.கண்டிப்பாக வருகிறோம் என்றாள் தீபா. வாங்க வெளியே போகலாம் ஏதாவது கிப்ட் வாங்கி வரலாம் ராக்கிக்கு.பிரேம் கிளம்பினான்.பிரேம் , குமரன், தீபா, ரஞ்சனி எல்லோரும் சரியாக 4 மணிக்கே வந்து விட்டார்கள். ராக்கி வாங்க சார் என வரவேற்றான். டீ கொடுத்தார்கள். ஆபீஸ் ஸ்டாஃப் கொஞ்சம் பேர் வந்திருந்தார்கள். அவன் அப்பா , அம்மாவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறான் என்று சௌமியா சொல்லி இருந்தாள்.5 30 மணி போல கேக் வெட்டினார்கள். சௌமியா , ராக்கி இருவரும் இணைந்து ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடினார்கள். இவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. குமரன் டான்ஸ் ஆடினான். வெள்ளி குத்து விளக்கு ஒன்று வாங்கி வந்திருந்தான் பிரேம். அதை பரிசளித்தான் . ராக்கி நீ எங்களுடைய வாழ்வில் மாற்றத்தை கொண்டுவந்தவன். எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றான் .

ரஞ்சனி எல்லோருக்கும் டிபன் பரிமாறினாள் .நீ எதுக்கு இதெல்லாம் பண்ணுகிறாய் என்றாள் சௌமியா. நீங்களும் எனக்கு அக்காதான் என்றாள். பிரேம் சௌமியா சந்தோஷமாய் இருப்பதை பார்க்க ஆசைப்பட்டான் எப்பவுமே. விடை பெற்றுகொண்டார்கள்.அவன் ஆபீஸ் வேலைகளில் கவனம் செலுத்த முற்பட்டான்.ரஞ்சனி நம்முடைய ஆபீஸ் ஸ்ட்ரக்சரில் சில மாற்றங்களை கொண்டுவரலாம் என நினைக்கிறேன் மாமா என்றாள்.நீ டிராப்ட் பண்ணிக்கொண்டு வா நான் பார்க்கிறேன். மீட்டிங் போது டிஸ்கஸ் பண்ணுவோம் என்றான். சரி மாமா. தீபா மதியம் சாப்பாடு எடுத்து வந்திருந்தாள்.நீயும் சாப்பிடு என்றான். ரஞ்சனி, தீபா, பிரேம் மூவரும் சாப்பிட்டனர். தீபா நீ ஆபீஸ் வர விரும்புகிறாயா என்றான். வேண்டாம் எனக்கு குமரனுடன் இருக்கே நேரம் போதவில்லை. இதில் நான் எங்கே ? சரி போகட்டும். இந்த வீக்கெண்ட் என்ன பிளான் வைத்திருக்கிறாய் என்றான். நான் என்னைக்கு அதெல்லாம் பண்னினேன். ரஞ்சனி நீயே சொல் என்றான்.கன்னியாகுமரி போய் வரலாம் என்றாள். அது தூரம் அல்லவா. எனக்கு போக வேணும் போல இருக்கிறது. சரி ஃப்ளைட் புக் பண்ணு.ரொம்ப தாங்க்ஸ் மாமா. நீ எல்லா ஏற்பாட்டையும் செய் தீபா. சௌமியாவும், ராக்கியும் கூட வருகிறார்களா என கேள்.

விவேகானந்தர் பாறை, வள்ளுவர் சிலை போன்றவற்றை கண்டு மகிழ்ந்தனர். சௌமியாவும், ராக்கியும் வந்தது பிரேமுக்கு மகிழ்ச்சி. குமரன் போட்டிங் போவதை மிகவும் விரும்பினான்.தீபா பிரேம் எனக்கு இந்த கடல் வெளி ரொம்ப பிடித்திருக்கிறது என்றாள். அது நிலையில்லாமல் போய் கொண்டே இருக்கிறது. எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டன நாம் வாழ்வில் என்றாள் தீபா.மேலும் சில அருகில் இருந்த சுற்றுலா தளங்களுக்கும் பயணப்பட்டார்கள்.மூன்று நாட்கள் போனதே தெரியவில்லை. திரும்ப பெங்களூர் வரவே மனசில்லை குமரனுக்கு.எல்லோரும் எடுத்து கொண்ட போட்டோக்கள் நிறைய இருந்தன. அதை திரும்ப திரும்ப பார்த்து கொண்டிருந்தான் பிரேம். மறக்க முடியாத பயணம் என்றான். அடுத்த முறை மாலத்தீவுகள் போக வேண்டும் என ரஞ்சனி சொன்னாள். சௌமியா அதை ஆமோதித்தாள். அது எங்கே இருக்கிறது என தீபா கூகிள் மூலமாக தேடத்துவங்கினாள் .

நிறுவனத்தில் மாறுதல் செய்ய வேண்டிய இடங்களை டிராப்ட் செய்து கொண்டு வந்தாள் ரஞ்சனி . சரி இது பற்றி விவாதிப்போம் என்றான். சிலர் கடுமையாக எதிர்த்தார்கள். சிலர் நடுநிலையாக இருந்தார்கள். இதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும், செலவு எவ்வளவு ஆகும் என அலசினார்கள் . வெளியில் இருந்து ஒரு கம்பெனி மூலமாக மாற்றங்களை செய்ய முடிவெடுத்தார்கள்.