Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நிழல் தரும் வசந்தம் - 33

 ரஞ்சனி கூட இளவேனில் நெருக்கமாக பழக தொடங்கினான். தீபா இதை கண்டும் காணாமல் இருந்தாள்.மீரா தன் அலுவலகத்தை 10 மணி போல திறந்தாள். எந்த ஒரு அவசரகதியும் இல்லாதது போல அவள் நடந்து கொண்டாள். அவளுக்கு ஒரு அசிஸ்டண்ட் இருந்தாள். ரம்யா. அவள் 11 மணிக்குத்தான் வருவாள். மீராவுக்கு அந்த காலை வேளையில் எந்த ஒரு முக்கியமான கேசும் இருக்கவில்லை. என்ன ஒரு துரதிர்ஷ்டம் . ரம்யா வந்தால் தான் மீராவுக்கு எல்லாவிதமான ஐடியாவும் வரும். அவள் டிடெக்டிவ் ஏஜென்ஸி ஒன்றை யாருக்கும் தெரியாமல் நடத்தி வந்தாள். ரம்யா வந்தவுடன் இருவரும் ஒரு பார்சல் டீ வாங்கி குடிப்பார்கள். அதன் பிறகு ரம்யா கிளையண்ட் வார வேண்டும் என்பதற்காக காத்திருப்பாள். இடையில் அவளே செய்தித்தாள் பார்த்து ஏதாவது ஹெல்ப் வேண்டுமா என கேட்பாள்.மீராவுக்கு காலேஜ் படிக்கிற பையன் இருக்கிறான். சொந்த வீடு இருக்கிறது. ஆனால் கணவன் உயிரோடு இல்லை. அவள் அதிகம் தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டதில்லை. ஆகையால் வரும் சொற்ப வருமானமே போதும்.

அவளுடைய பையன் பெயர் தினேஷ். அவன் நன்கு படிக்க வேண்டும் என்பதற்காக என்னவெல்லாமோ முயற்சி செய்தாள். ஒன்றும் நடக்கவில்லை . காலேஜ் முடிந்ததும் வந்துவிடுவான் நேராக கடைக்கு. அதை கடை என்று தான் சொல்ல வேணும். ரம்யாவுக்கு தையலும் தெரியும். அதனால் அக்கம்பக்கத்து வீடுகளில் துணி தைக்க தருவார்கள். இப்படியாக அவர்கள் பிழைப்பு ஓடியது. தினேஷ் வந்தவுடன் அவனுக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கி கொடுப்பாள்.தன்னையும் அவர்களுடன் சேர்த்து கொள்ள சொன்ன போது பிடிவாதமாக மறுத்து விட்டாள். என்ன ரம்யா ஒரு வாரம் ஆச்சு ஒருத்தரையும் காணவில்லை. atleast மிஸ்ஸிங் கேஸ் வருதா என்றாள் அது கூட வரவில்லை. அப்போதுதான் அந்த கால் வந்தது. வணக்கம் மேடம் என் பெயர் ராக்கி என்று சொன்னான். சொல்லுங்க ராக்கி . எனக்கு ஒரு ப்ரோஃபைல் பேக்ரவுண்ட் செக் பண்ணனும். ஆயிரத்து ஐநூறு ஆகும் என்றாள். என்ன மேடம் சொல்லறீங்க. ஏன் அதிகமா இருக்கா ? சரி நான் நேரில் வருகிறேன் என்றான்.

சௌமியாவும். ராக்கியும் மீராவுக்கு வணக்கம் சொன்னார்கள். என்னை யார் உங்களுக்கு ரெஃபர் செய்தார்கள் என்றாள். நீங்க உண்மையிலேயே ஃபேமஸ் மேடம் என்றாள் சௌமியா. பையன் போட்டோ இருக்கா . இருக்கு. எந்த ஊரு? சொன்னான்.அர்ஜண்ட் ஆ ஆமாம் மேடம். பெண்ணை தனியா அவன் கூட அனுப்ப வேண்டாம். நான் ரெண்டு நாளுல கூப்பிடறேன் என்றாள். அட்வான்ஸ் 500. குடுத்தான். இருங்க டீ சாப்பிட்டுவிட்டு போகலாம். ரம்யா முகத்தில் பிரகாசம். சௌமியா நாங்க உங்களைத்தான் நம்பி வந்திருக்கோம் என்றாள். டீ குடிங்க மத்தத நான் பார்த்து கொள்கிறேன் என்றாள். ரம்யா அந்த ப்ரோஃபைல் வாங்கி படிக்க ஆரம்பித்தாள் .இருவரும் காரில் வந்திருந்தார்கள். உங்க ஃபோன் நம்பர் குடுத்துட்டு போங்க என்றாள் மீரா. சௌமியா நம்பர் கொடுத்தான்.

என்ன ராக்கி அந்தம்மா மேல உனக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருக்கா? இவங்க காசுக்கு ஆசைப்படலை அது ஒண்ணே போதும் என்றான். ஆபீஸ் லேட் ஆயிடுச்சு சீக்கிரம் போ என்றாள். பிரேம் ரஞ்சனியிடம் எப்படிம்மா இருக்கார் மாப்பிள்ளை என்றான். அவர் ரொம்ப அப்பாவியும் இல்லை எனக்கு பிடிச்சிருக்கு அவர் கேரக்டர் என்றாள். இவன் லேட் ஆக வருவதை அறிந்த பிரேம் என்ன ராக்கி லேட் என்றான். சௌமியா எனக்கு காய்ச்சல் அதுதான் டாக்டர் பார்த்துட்டு வறோம் என்றாள். அப்புறம் என்ன லீவு எடுத்துக்க வேண்டியது தானே என்றான். அதெல்லாம் வேண்டாம். டேப்லெட் எடுத்து இருக்கிறேன் என்றாள். ராக்கி வேலையை பார்க்க போய்விட்டான். ரஞ்சனி என்கிட்ட சொல்லாம இளவேனில் கூட வெளியே எங்கேயும் போக வேண்டாம். சரி மாமா. அவனை என்கிட்ட பேச சொல்லு என்றான் .

மதியம் வீட்டுக்கு வந்துவிட்டான் பிரேம். என்ன பிரேம் லஞ்ச்சுக்கு வந்து விட்டாய் என்றாள். உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அதான் வந்தேன் என்றான். சொல்லு பிரேம். நீ ஏன் ரஞ்சனி எது பண்ணினாலும் சைலன்ட் ஆ இருக்கிற. நேற்று அவ இளவேனில் கூட எங்க போனா? தெரியலியே . நாம ரொம்ப கவனமா இருக்கணும் பொண்ணு நம்ம பொண்ணு என்றான். சரி பிரேம்.அவளை பெஸ்ட் பிஸினஸ் உமன் ஆக்குனது எல்லாம் வீணாக கூடாது. சரி என்னாச்சு திடீர்னு இப்படி சொல்லுற என்றாள். என்னவோ என் உள்ளுணர்வு சொல்லுது நாம தப்பு பண்ணுகிறோம் என்று. நான் பார்த்துக்கிறேன் நீங்க சாப்பிடுங்க என்றாள்.
தீபாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. என்ன திடீர்னு இப்படி சொல்கிறார் என்று.

ரமேஷ் ஃபோன் பண்ணியிருந்தான். அவங்க ஒரு 50 பவுனாவது போட சொல்லுறாங்க என்றான். சரி செய்து விடுவோம்.மாப்பிள்ளைக்கு கார் ஒண்ணு . சரி அதையும் செய்துவிடுவோம்.நீ அவங்ககிட்ட சொல்லு எல்லாத்தையும் செய்வோம் அப்படின்னு. பையன ரஞ்சனிக்கு பிடிச்சிருக்கு அது ஒரே காரணம்தான் நான் எல்லாம் செய்ய ஒத்துக்கிறேன். என்ன ரம்யா இந்த கேஸ் எடுத்துக்கலாமா என்றாள் மீரா. இது என்னவோ ஒன்னுமில்லாத கேஸ் மாதிரி தெரியுது.அதுதான் நாம் தப்பு பண்ணும் இடம்.பெரிய மனுஷங்க அப்படின்னாலே எல்லாத்தையும் செக் பண்ணனும் என்றாள். சரி மேடம்.சாயங்காலம் ரஞ்சனி வந்தவுடன் போனை எடுத்து கொண்டு மாடிக்கு போனாள் . ஏன் ரெண்டு நாளா ஃபோன் பண்ணலை என்றான். ஆபீஸ் டியூட்டி கொஞ்சம் அதிகம் என்றாள். நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன்னு உனக்கு தெரியாது . சரி போதும் பேசினது ஏதாவது கொடு என்றாள்.

ரஞ்சனி மனதையும் உடலையும் இளவேனில் பக்கமே வைத்திருந்தாள். அவளுக்கு மனதார தன் கணவன் என்றே கனவுகளில் வாழ்ந்தாள் . கல்யாணத்துக்கு முன் குல தெய்வம் கோவிலுக்கு போக வேண்டும் என்றான் பிரேம்.இன்னும் 6 வாரம் இருக்கிறது கல்யாணத்துக்கு. நாம ஏற்பாடுகளை வேகமா செய்வோம் என்றான் .ஸ்வாமிகளை பார்க்க போயிருந்தான் . அவர் என்ன காரியம் செய்தாய் பிரேம். நீ போகிற பாதை தவறு என்று தெரிந்தும் செய்கிறாய் என்றார். போய் கண்டுபிடி எல்லாவற்றையும் கண்டுபிடி என்றும் சொன்னார். இவன் கலங்கி போய்விட்டான். வீட்டுக்கு வந்தவன் பதட்டமாய் இருப்பதை பார்த்ததும் தீபாவும், ரஞ்சனியும் ஓடி வந்தனர். என்னாச்சு மாமா ஏதும் பிரச்சனையா ஸ்வாமிகள் என்னவோ சொல்கிறார் எனக்கு புரிய மாட்டேன் என்கிறது. நீ கவலைப்படாதே பிரேம் கல்யாணத்தை ஜாம் ஜாம் என்று நடத்தி விடலாம் என்றாள் தீபா.

சௌமியா , ராக்கி இருவரும் பிரேமை பார்க்க வந்திருந்தனர். வா சௌமியா என்றான். குமரன் ஓடி வந்தான் சௌமியாவை கட்டிக்கொண்டான். அவள் ஒரு சாக்லேட் குடுத்தாள். என்ன பிரேம் வரதட்சணை பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்றான். 50 பவுன், மாப்பிள்ளைக்கு கார் கேட்கிறார்கள்.நீ ஏன் டென்ஷன் ஆக இருக்கிறாய் பிரேம் உடம்பு சரியில்லையா ? அதெல்லாம் ஒன்றுமில்லை. இந்த கல்யாணத்தை நல்லபடியாக நடத்த வேண்டும் அந்த டென்ஷன் தான். சரி பிரேம் நான் தீபவிடம் பேசிவிட்டு வருகிறேன். கிச்சன் உள்ளே போனாள். என்ன ஆச்சுன்னு தெரியல ரொம்ப டென்ஷன் ஆக இருக்கிறார். நைட் டின்னர் சாப்பிடுவிட்டு போகலாம் என்றாள் தீபா. பிரேம். தீபா, சௌமியா , ரஞ்சனி எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். குமரனுக்கு சௌமியா ஊட்டி விட்டாள்.

ராக்கி ரஞ்சனியிடம் நீ எஜுகேஷன் டிரஸ்ட் ஆரம்பிக்க போகிறாயாமே என்றான். ஆமாம் அப்பா பெயரில். சந்தோஷம் ரஞ்சனி ,நைட் ரொம்ப நேரம் போனில் பேச வேண்டாம்.இது என்னுடைய வேண்டுகோள் என்றான்.சரி ராக்கி . சௌமியா ரெண்டு நாளாகிவிட்டது மீராவிடம் இருந்து ஃபோன் வரவில்லையே என்றாள். ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. மீரா வெளியூர் போயிருக்கலாம் என்றான். நாளையம் ஃபோன் எடுக்கவில்லை என்றால் நேரில் போய் பார்ப்போம்.மீரா 11 மணி போல ஃபோன் செய்தாள் ராக்கிக்கு. என்ன ஆச்சு மேம் .நான் இப்போது ஆந்திரா போய் கொண்டிருக்கிறேன் . திரும்ப வந்ததும் விவரமாக பேசுவோம் என்றாள். சரி மேம். பிரேம் ரஞ்சனி
ஆசைப்பட்ட மாதிரி எஜுகேஷன் டிரஸ்ட் குமரகுரு பேரில் துவங்க தீர்மானித்தான். தீபாவையும் சேர்த்து விடலாம் என்றும் யோசித்தான்.

மறுநாளே மீட்டிங் போட்டு விஷயத்தை ஆபீஸ் ஸ்டாஃப் எல்லோருக்கும் சொன்னான். எல்லோருக்கும் அதில் சந்தோஷம். சாயங்காலம் வீட்டுக்கு வந்தபொது இளவேனில் டீ குடித்து கொண்டிருந்தான். இவனை பார்த்ததும் எழுந்து கொண்டான். உட்காருப்பா சும்மா என்றான். அப்பா அம்மா செலவுக்கு கொஞ்சம் பணம் கேக்குறாங்க . நான் அனுப்புறேன். ரஞ்சனி ஆபீஸ் விட்டு வரலையா, அவளுக்கு கொஞ்சம் வேலை ஜாஸ்தி அதுதான் வர முடியல 8 மணிக்கு வருவா. நீங்க இருந்து பார்த்துட்டே போங்க . தீபா நைட் மாப்பிள்ளை இங்கதான் சாப்பிட போறாரு என்றான். 8 மணிக்கெல்லாம் வந்துவிட்டாள் ரஞ்சனி.வா இளவேனில் எப்போது வந்தாய் ஏன் எனக்கு ஃபோன் பண்ணவில்லை என கேள்விகள் அடுக்கினாள். சரி நான் டிரஸ் மாத்தி வருகிறேன் என்று உள்ளே போனாள்.

தீபா எல்லோருக்கும் டிபன் பரிமாறினாள். இளவேனில் ரஞ்சனி பக்கத்தில் அமர்ந்திருந்தான். அவன் முகம் ரஞ்சனி இருந்த திசையிலே இருந்தது. சாப்பிடுப்பா வேடிக்கை அப்புறம் பாக்கலாம் என்றான் பிரேம். தீபா அவனை வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தாள்.ரஞ்சனி அந்த டிரஸ்ட் விஷயத்துக்கு அப்பரோவாள் கிடைக்கட்டும் . பிறகு எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்றான். சரி மாமா. மீரா ஃபோன் செய்திருந்தாள் . நான் இன்னும் ஆந்திராவில் தன் இருக்கிறேன். இங்கே வேலை முடியவில்லை ரெண்டு நாளிலே வருகிறேன் என்றாள். ராக்கி கவலைப்பட்டான். என்ன நடக்குமோ எனக்கு டென்ஷன் ஆக இருக்கிறது என்றான். நீ ஏன் டென்ஷன் ஆகிறாய். மீராவால் முடியாவிட்டால் நாமே களம் இறங்குவோம் என்றாள். சரிதான் .

தீபா, தீபா என்று கூப்பிட்டான். ரஞ்சனி இன்னமும் தூங்குகிறாள் பார் , நைட் எல்லாம் ஃபோன் பேசாதே என்றாலும் கேட்பதில்லை . சாரி மாமா என்று எழுந்து வந்தாள். நீ ஆபீஸ் வர வேண்டாம் . வீட்டிலேயே இரு இன்றைக்கு என்றான். நான் கிளம்புகிறேன் என போய்விட்டான். எல்லாம் சரியாகத்தான் இருக்கிரது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். மீரா எதை தேடினாலோ அது கிடைக்கவில்லை. அவள் ஊர் திரும்ப போகுமுன் இன்னொரு முறை அவளை பார்த்தால் என்ன என்று தோன்றியது. மீரா நன்றாக தெலுங்கு பேசக்கூடியவள். ரம்யா கடையை பார்த்துக்கொண்டிருந்தாள். மேடம் போய் நான்கு நாளாச்சே என்று சொல்லி கொண்டிருந்தாள். மீரா அவனை அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை. திரும்பி பார்க்காமல் ஓட துவங்கினாள். அவள் ஃபோன் அடித்து கொண்டே இருந்தது.