Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நிழல் தரும் வசந்தம் - 21

ரமேஷுடைய கல்யாண நிச்சயதார்த்தமும், தீபாவின் வளைகாப்பு விழாவிற்கும் முன்பாக பிரேம் வந்து சேர்ந்தது அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது. ரஞ்சனி எப்படி இருக்கிறாய் என விசாரித்தான். நீங்கள் சொன்ன மாதிரி வரவில்லை நான் கோபமாய் இருந்தேன் என்றாள். ஆர்டர் வர சற்று தாமதமாகிவிட்டது. எல்லோரும் உன் அப்பா இல்லாத குறையை பற்றியே பேசினார்கள்.நீ சீக்கிரம் கம்பெனி வந்து அந்த குறையை போக்கு என்றான். நான் கொஞ்சம் ஃபிரெஷ் ஆகிவிட்டு வருகிறேன் .சரி மாமா. எல்லோரும் ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். தீபா எங்கள் எல்லாரையும் நன்கு கவனித்து கொள்கிறாள் என பிரேம் அம்மா சொன்னாள் . சாப்பிட்டு முடித்ததும் பிரேம் அப்பாவுடன் வெளியில் கார்டன் பக்கம் நடந்தான். பிரேம் நீயில்லாம தீபா தவித்து விட்டாள் இனி இப்படி பண்ணாதே என்றார். ரமேஷ் நிச்சய தேதிகளில் ஒன்றை செலக்ட் செய்யும்படி சொன்னார்.

முதலில் வளைகாப்பு விழா என்றான். வீடு சிறப்பாக அலங்கரிக்க பட்டு இருந்தது. அப்பா ஊருக்கு போய் எல்லோரையும் விழாவுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். அங்கிருந்து வருபவர்களுக்காக வாகன வசதியும் செய்திருந்தார். தீபாவை அழைத்துக்கொண்டு போய் டாக்டர் ஆலோசனை பெற்று வந்தான்.வளைகாப்பிற்கு முதல் நாளே ரமேஷ் வந்துவிட்டான். எல்லா ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தான். ரஞ்சனி மற்றும் தீபா தோழிகள் எல்லோருக்கும் அழைப்பு அனுப்பபட்டு இருந்தது.சுபா வர மாட்டாள்.கதிரேசன் வருவதாக சொல்லி இருக்கிறான்.விழாவுக்கு தேவையானவற்றை பிரேம் அப்பா வாங்கி வந்திருந்தார். சில முக்கியமான உணவு வகைகளை சமைத்து வைத்து இருந்தனர். தீபா இதை இவ்வளவு கிராண்ட் ஆக செய்ய வேண்டுமா என்றாள். எல்லாம் நல்ல விஷயத்தை கொண்டாடுவது போலத்தான். வளையல்கள் வாங்கி வந்திருந்தார்கள்.

குமரகுருவை நினைத்து கொண்டான். அவர் இல்லாதது அவனுக்கு வருத்தமாய் இருந்தது. அவருடைய படத்துக்கு மாலை அணிவித்தான். தீபா அவர் படத்தை வணங்கினாள் . ரஞ்சனி எப்பவும் போல விழாவுக்கென பிரத்யேக ஆடையுடன் வந்திருந்தாள். அடுத்த வருஷமாவது உன்னை கல்யாண கோலத்தில் பார்க்க வேண்டும் என்றான் பிரேம். இப்போதைக்கு என்னை இப்படியே விட்டு விடுங்கள் மாமா. சரி . எல்லோரும் சடங்குகளை செய்தார்கள். தீபாவுக்கு சந்தனம், குங்குமம் வைத்து விட்டார்கள். அவள் முகம் மலர சிரித்தாள். சிறிய பெண்ணாக இருந்தவள் இன்று பொறுப்புள்ள தாயாக போகிறாள்.காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது.

ரமேஷிடம் நகைகளை பற்றி கேட்ட போது இன்னும் இரண்டு மாதங்களில் மீட்டு கொடுத்து விடுகிறேன் என்றான். இவனுக்கு கேட்க சங்கடமாய் இருந்தாலும் அவை குமரகுரு நினைவாக தீபாவிடம் இருந்தவை . அதை மறக்க முடியாது, வளைகாப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. தீபா தன் அம்மா இல்லாத குறையை பெரிது படுத்தியதில்லை. ஆனால் அவள் தாயாகும் போது அவள் அம்மாவை பற்றி நினைக்காமல் இல்லை.ரமேஷின் நிச்சயதார்த்த தேதி அடுத்த மாசம் 10 ம் தேதியில் வைத்து கொள்ளலாம் என்றான் பிரேம். பிரேம் அப்பா சிறிது யோசித்து நான் பெண் வீட்டாரிடம் சொல்லி விடுகிறேன் என்றார்.ரமேஷுக்கு பார்த்த பெண் ரமேஷின் சொந்த ஊரை சேர்ந்த பெண் என்பதாலும், மேலும் தீபாவால் அவ்வளவு தூரம் டிராவல் பண்ண முடியாதென்பதாலும் பெங்களூரிலே வைத்து கொள்ளலாம் என்றான் . சரி உன் விருப்பம் பிரேம்.

சௌமியா சுபாவின் கல்யாணத்துக்கு வந்திருக்கிறாள். இது எப்படியோ குரூப் போட்டோ மூலம் பிரேமுக்கு தெரிய வந்தது. அவன் மனம் பழசை எல்லாம் அசை போட்டது. நான் தவறு செய்யவில்லை ,ஏமாற்றவும் இல்லை என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். சுபா ஃபோன் பண்ணுவதே இல்லை. எங்கிருந்தாலும் நன்றாய் இருக்கட்டும். தீபா களைப்பாய் படுக்கை அறைக்கு வந்தாள் . என்ன தீபா ஏதாவது தேவையா ? தண்ணீர் எடுத்து வர வா என்றான். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் நீ ஏன் இப்படி முகத்தை வைத்திருக்கிறாய் பிரேம். நீ ரமேஷிடம் நகைகளை கேட்டிருக்க வேண்டியதில்லை என்றாள். அதெப்படி உன் அப்பா உனக்கு போட்டதை இவன் வாயை மூடினாள். எல்லாம் சரி ஆகிவிடும். இருவரும் போட்டோ எடுத்ததை பார்த்து கொண்டிருந்தனர். நன்றாக வந்திருக்கிறது என்றாள்.


அவள் கால்களை பிடித்து விட்டான். இதெல்லாம் எப்படி கற்றுக்கொண்டாய் பிரேம். சினிமா பார்த்துதான் . சிரிக்காதே இது எல்லோருக்கும் தெரியும் என்றான். ரஞ்சனிக்கும் ஒரு மண வாழ்க்கை அவசியம் என்றாள். நானும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். அவள் பக்குவமாக முடியாது என்கிறாள். அதுவும் சரிதான். என்னை பார்த்து அவள் கற்றுக்கொண்டுவிட்டாள். சிறு வயதிலேயே காதல் கொண்டு பிறகு கல்யாணம் ஆனதையெல்லாம் பார்த்து கொண்டுதானே இருந்தாள். போதும் நீ ஓய்வெடுத்துக்கொள். நான் வேறு உன்னிடம் தொணதொண பேசிக்கொண்டிருக்கிறேன் என்றான். நீ பேசுவதை பாப்பாவும் கேட்கும் பிரேம் . அப்படியா சொல்கிறாய். ம் நீயாவது என் பேச்சை கேட்கிறாயே என்றான். காலை வாக்கிங் போக சொல்லியிருக்கிறார் டாக்டர். நிச்சயம் போவோம். ரஞ்சனியும் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறாள். தீபா இவன் மடியில் தலைவைத்து தூங்கி போனாள். இவன் அமர்ந்தபடியே தூங்கிக்கொண்டிருந்தான். 2 மணி போல எழுந்து அவளை படுக்க வைத்தான்.

காலையில் ரஞ்சனி முதல் ஆளாக இவனை கூப்பிட்டாள். மாமா அக்கா எழுந்து விட்டாளா என்றாள். அவள் அசந்து தூங்கி கொண்டிருக்கிறாள். நானே எழுப்புகிறேன் அக்கா அக்கா வாக்கிங் போக வேண்டும் என்று சொன்னாயே அவள் விழித்து பார்த்தாள் . சரி போகலாம். மூவரும் மெதுவாக நடந்தார்கள். பனி லேசாக பெய்து கொண்டிருந்தது. தீபா கையை ரஞ்சனி பிடித்திருந்தாள். எவ்வளவு வருஷ பழக்கம் அது.தீபா அம்மா இறந்த பிறகு எல்லாமே ரஞ்சனிக்கு தீபா தான். டீ குடிக்கலாமா என்றாள் தீபா. இங்கு கடை எதுவும் இல்லையே . அந்த தெருமுனையில் ஒரு கடை இருக்கிறது அங்கு போவோம். அன்பு டீ ஸ்டால். என்ன ஒரு பொருத்தம் என்றான். மூவரும் டீ குடித்துவிட்டு மறுபடியும் நடக்க தொடங்கினார்கள். பிறக்க போவது பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்றாள் ரஞ்சனி. அது ஆணாக இருந்தாலும் எனக்கு ஓகே தான் என்றாள் தீபா.

எப்போது ஆபீஸ் வர போகிறாய் ரஞ்சனி. இந்த மாதம் இறுதியில் ரிசல்ட் வந்துவிடும். அடுத்த மாதமே ஜாயின் செய்துகொள்ளலாம் என இருக்கிறேன் என்றாள். நீ எப்போது வருவாய் என எல்லோரும் என்னை கேட்கின்றனர்.சும்மா சொல்லாதீர்கள் மாமா. நான் வந்து கற்றுக்கொண்டு பிறகு கம்பெனி நிர்வாகத்தை கவனிக்க டைம் எடுக்கும் என்றாள். ம் அது உன் திறமை மேல் எனக்கிருக்கும் நம்பிக்கை என்றான். அக்கா நான் டிகிரி வாங்கும்போது நீயும் காலேஜ் வர வேண்டும் . நானும் வருவேன் என குழந்தையும் வருவான். சரி வீட்டுக்கு போகலாம்.7 மணி போல வீடு வந்து சேர்ந்தார்கள்.
நிச்சயத்துக்கான தேதி நெருங்கியதால் எல்லாரும் பரபரப்பாய் இருந்தார்கள் . பெண் இன்ஜினியரிங் படித்திருந்த படியால் எல்லோருக்கும் சந்தோஷம் . கல்யாணத்துக்கு பிறகு வேலைக்கு போவாள் என்றார்கள்.

பூஜா பெண்ணின் பெயர். ரமேஷ் பூஜா சொல்லி பார்த்தாள் தீபா. நன்றாக இருக்கிறது பேர் பொருத்தம். பூஜா போட்டோவில் அழகாய் இருந்தாள். குடும்பத்திற்கேற்ற பெண்ணாகவும் இருப்பாள் என பிரேம் அம்மா சொன்னாள். திட்டமிட்டபடி அய்யர் வந்துவிட்டார். ரமேஷ் போனில் பேசியபடி இருந்தான்.பூஜா குடும்பத்தார் வந்துவிட்டார்கள். பிரேம் அப்பா இருப்பதிலேயே நல்ல வேஷ்டி கட்டி கொண்டிருந்தார். அவர் புது உடைகளை அவ்வளவாக விரும்புவதில்லை. பூஜாவும், ரமேஷூம் எல்லோருக்கும் வணக்கம் சொன்னார்கள். பூஜா மேக் அப் சற்று தூக்கலாக இருந்தது.பிரேம் அப்பா தாம்பூலம் மாற்றிக்கொள்ள தயாராய் இருந்தார். மோதிரம் மாற்றிக்கொண்டனர். பூஜாவை எல்லோருக்கும் பிடித்திருந்தது. கல்யாண தேதி வாசிக்கப்பட்டது. எல்லோருக்கும் திருப்தி. சாப்பாடு பரிமாறப்பட்டது. பூஜாவிடம் பேசினாள் தீபா. அவள் இப்போதே வேலைக்கு முயற்சி பண்ணிக்கொண்டிருப்பதாக சொன்னாள்.

எல்லோரும் கிளம்பி போனார்கள்.பிரேம் இந்த கல்யாணத்துக்கு உன்னால் ஆன பங்கை கொடு என்றார் அப்பா. நிச்சயம் செய்கிறேன் என்றான். ரமேஷ் ஊருக்கு போய்விட்டான். தீபா ஏதோ சிறிய வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.ரஞ்சனி ரிசல்ட் பார்க்க போயிருந்தாள். மதியம் 12 மணிக்கு ரிசல்ட் என்று சொன்னார்கள். அவள் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்திருந்தாள். காலேஜ் ஃபர்ஸ்ட் வந்திருந்தாள். இத்தனை நாள் காத்திருந்தது வீண் போகவில்லை. குமரகுரு கனவு பலித்தது . அவள் 2 மணி போல வீட்டுக்கு வந்தாள் தீபாவை கட்டிக்கொண்டாள்.மாலை ஃபிரண்ட்ஸ் எல்லோருக்கும் பார்ட்டி கொடுப்பதாய் சொல்லி இருந்தாள். அவள் கேக் ஆர்டர் செய்ய சொல்லி பிரேமிடம் சொன்னாள். அவனும் உற்சாகமாக பாராட்டினான். பிரேம் அப்பா, அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிகொண்டாள்.

தீபா நேரம் ஆச்சே இன்னும் ரஞ்சனி வரவில்லையே என கவலை கொண்டாள். பிரேம் அவளை அழைத்து வந்திருந்தான். என்னாச்சு ஏன் லேட் ஒண்ணுமில்லை பசங்க ஒண்ணு சேர்ந்தா கலாட்டா தானே அதுதான் நேரம் போனதே தெரியல என்றாள். எனக்கு எதுவும் சாப்பிட வேண்டாம் அக்கா. உனக்கு கேக் வாங்கி வந்தேன் என்றாள். ஃபிரிஜ்ல் வை நாளைக்கு எடுத்துககொள்கிறேன். பூஜா ஃபோன் பண்ணி இவளை வாழ்த்தினாள் .ரமேஷூம் வாழ்த்தினான். எல்லோரிடமும் போனில் பேசிவிட்டு 1 மணிக்கு தூங்க போனாள் ரஞ்சனி. அவள் அப்பா இல்லாததை நினைத்து பார்த்தாள். அவர் நினைவலைகள் வந்து போயின. குமரகுரு இவர்கள் விஷயத்தில் கண்டிப்பாய் இருந்ததால்தான் சாதிக்க முடிந்தது.

கல்யாண மண்டபம் களை கட்டி இருந்தது. ரமேஷ் பூஜா பெயரில் பிளெக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. விடிகாலையிலேயே எல்லோரும் தயாராகி கோவிலுக்கு போனார்கள். தீபா என்ன யோசிக்கிறீர்கள் அப்பா என் பங்குக்கு ஏதாவது செய்ய சொன்னார். அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம். நீ அதை பற்றி கவலைப்படாதே பிரேம் நான் பேசிககொள்கிறேன் என்றாள். பூஜா மணப்பெண் அறையில் இருந்து தோழிகள் சூழ வந்தாள். அய்யர் மந்திரம் சொல்ல மேலதாளம் முழங்க ரமேஷ் பூஜா கழுத்தில் தாலி கட்டினான் .தீபா பெண்ணுக்கு ஒரு செயின் போட்டாள் . அதன் மதிப்பு அதிகம். ஏன் தீபா இப்படி உன்னிடம் இருப்பதெல்லாம் வாரி கொடுக்கிறாய் என்றான். அவள் நாம் குடும்பத்து பெண்ணாகிவிட்டாள் . இனி நாம் அவளை பிரித்து பார்க்க கூடாது என்றாள்.