Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நிழல் தரும் வசந்தம் - 16

பிரேம் இன்னும் ஒரு வாரத்தில் ஊருக்கு வந்து விடுவதாக சொன்னான். தீபா உற்சாகமடைந்தாள். குமரகுருவும் வரப்போவதாக தகவல் கிடைத்தது . அவர் ஒரு 15 நாள் தங்குவதாகவும் திரும்ப போகும் போது ரஞ்சனியை இரண்டு மாதங்கள் சுற்றி பார்க்க அழைத்து போவதாகவும் சொல்லி இருந்தார். ரஞ்சனியும் தீபாவும் அதற்கான ஏற்பாட்டை செய்து கொண்டிருந்தனர்.அதே சமயம் பிரேம் தீபா ஹனிமூன் ஏற்பாடும் குமரகுரு செய்திருந்தார். இதனால் சகோதரிகள் இருவருமே பயணம் செய்ய ஆவலாய் இருந்தனர். சொன்ன மாதிரி சுபா இந்த சண்டே வந்து விட்டாள். அவள் வருகைக்காக அவளுக்கு பிடித்ததை வீட்டிலேயே சமைத்து வைத்திருந்தனர்.சுபா காலை 11 மணி போல வந்தாள். வேலையெல்லாம் எப்படி போகிறது என்று ரஞ்சனி விசாரித்தாள். நன்றாக போகிறது. பிரேமிடம் பேசினேன் அவனுக்கு தீபாவை பிரிந்து இருப்பதில் விருப்பமில்லை . நீங்கள் சொல்லித்தான் எங்களுக்கு தெரிகிறது. அவர் அதை வெளிக்காட்டிக்கொள்வதில்லை .


கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்து கொள்ளுங்கள். சமையல் முடியும் தருவாயில் இருக்கிறது என்றார்கள் தீபாவும், ரஞ்சனியும். இருங்கள் நானும் வருகிறேன் . மூவரும் கிச்சன் உள்ளே சென்றனர். நீங்கல் இவ்வளவு சிரமப்பட்டு இருக்க வேண்டியதில்லை என்றாள் சுபா. அவள் கூல் ஐஸ் கிரீம் வாங்கி வந்திருந்தாள். அதை ஃபிரிஜ் உள்ளே வைத்தாள். நீங்களும் எங்களுக்கு ஒரு சிஸ்டர் போலத்தான் என்றாள் ரஞ்சனி. மூவரும் கிச்சன் சுத்தம் செய்தனர். மதியம் 2 மணிக்கு உணவு மேஜைக்கு எல்லாவற்றையும் எடுத்து சென்றனர். தீபா இருவரையும் உட்கார வைத்து பரிமாறினாள். நீயும் உட்கார் தீபா என்று அவளையும் உட்கார வைத்தனர். சாப்பாடு நன்றாக இருக்கிறது என்று சுபா சொன்னாள் . பிரேம் இல்லாமல் எனக்கு எதிலும் பிடிப்பே இல்லை என்றாள் தீபா. எல்லாம் சரியாகிவிடும்.நீ கவலைப்படாதே.

பிரேம் சொன்னபடி அந்த வார கடைசியில் வந்துவிட்டான்.தீபாவால் சந்தோஷ கண்ணீரை அடக்க முடியவில்லை. ரஞ்சனி அவள் அப்பாவை கட்டிக்கொண்டாள். ஒரு நல்ல பயணமாக அமைந்தது என்று குமரகுரு சொன்னார். பிரேம் நீ ரெஸ்ட் எடுத்து கொள். மற்றதை அப்புறம் பேசிக்கொள்ளலாம் . பிரேம் தன்னுடைய அறைக்கு சென்றான். தீபா அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.கிருஷ்ணா மறுபடி பேசவில்லையே என்றான். இல்லை நாங்களும் பேசவில்லை என்றாள். நீ இளைத்து போய்விட்டாய் தீபா சரியாக சாப்பிடுகிறாயா இல்லையா இதுவே எனக்கு பெரிய கவலையாய் இருந்தது. அதுக்கென்ன நான் நல்லாத்தான் சாப்பிடுகிறேன். ஊரில் இருந்து அப்பா ஃபோன் பண்ணியிருந்தார்கள். அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம் . ஹாஸ்பிடலில் சேர்த்துள்ளார்களாம் என்றான். நான் இரண்டு நாட்கள் கழித்து வருகிறேன் என்று சொல்லி இருக்கிறேன். நானும் வருகிறேன் . வேண்டாம் தீபா உனக்கு சிரமமாக இருக்கும். தவிர உனக்கு காலேஜ் இருக்கிறது ஒரு 10 நாட்கள் ஆவது ஆகும் நான் திரும்பி வர என்றான். ஏன் இப்படி பண்ணுகிறாய் பிரேம். நான் திட்டமிடவில்லை. சரி குளித்துவிட்டு வா சாப்பிடலாம்.

பிரேம் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் தூங்கினான். இவள் லேப்டாப்பில் ஏதோ பார்த்து கொண்டிருந்தாள்.அப்போது ரஞ்சனி வந்தாள்.அவர் தூங்குகிறார் நாம் வெளியே போய் பேசுவோம் என்றாள் தீபா. என்ன ரஞ்சனி ஏதாவது முக்கியமான விஷயமா என்றான். நீங்கள் தூங்குங்கள் நான் சும்மாதான் வந்தேன் . அவன் எழுந்து உட்கார்ந்தான். கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா ரஞ்சனி என்றான். அவள் போய் எடுத்து வந்தாள். என்ன ரஞ்சனி உனக்கு பொருத்தமானவரை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான் போல என்றான். இப்போ என்ன அவசரம் மாமா எல்லாம் காலப்போக்கில் நடக்கட்டும் . இருவரும் வெளியே போனார்கள். சாயங்காலம் தூக்கம் முடித்து வெளியே வந்தவன் தீபா , தீபா என குரல் கொடுத்தான். அவர்கள் ஷாப்பிங் போயிருப்பதாக சொன்னார்கள் வீட்டில் வேலை பார்ப்பவர்கள். இவன் முகம் கழுவி வந்து காப்பி குடித்தான்.


7 மணி போல வந்தார்கள் இருவரும். இவனுடைய அறையில் எல்லோருக்கும் வாங்கி வந்த பொருட்கள் இருக்கின்றன. அதை எடுத்து வா ரஞ்சனி என்றான். அவளும் எடுத்து வந்தாள். என்னென்னவோ வாங்கி வந்திருந்தான். தீபா நீ இப்படி வாங்குவாய் என்று எதிர்பார்க்கவில்லை . நான் எழுதிகொடுத்ததை தவிர எல்லாமும் வாங்கி இருக்கிறாய். தீபா நீ அம்மா கூட பேசினாயா ம் இப்போது வரும்போது பேசினேன். பணம் அவர்கள் அக்கவுண்ட்டில் போட்டுள்ளேன் . தாங்க்ஸ் தீபா. குமரகுரு வந்தார். நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன் என்றார். காப்பி குடுக்கவா என்றாள் தீபா. சரி கொடு. பிரேம் அடுத்த முறை பயணம் செய்யும்போது கவனமாக இரு என்றார். சரி மாமா. தீபா இரவு டின்னர் வெளியே போகலாம் என்று சொன்னாள். இவன் மறுப்பேதும் சொல்லவில்லை. மனசெல்லாம் அவள் அம்மா நினைவாகவே இருந்தது.

ரஞ்சனி காலேஜ் போயிருந்தாள்.தீபா எனக்கு காலேஜ் போக வேண்டாம் என்றாள். அதென்ன தீபா அப்படி சொல்லிவிட்டாய் எவ்வளவு கஷ்டப்பட்டு சீட் வாங்கினோம். நீ இன்னும் ஒரு வருஷம் படி என்றான். சரி நான் போய் வருகிறேன் என காலேஜ் கிளம்பி சென்றாள். இவன் இரவு 9 மணிக்கு டிரைன் புக் பண்ணியிருந்தான். தீபா ஸ்டேஷன் வந்திருந்தாள். எனக்கு அப்டேட் பண்ணு பிரேம் பணம் வேண்டுமானால் சொல்லு தயங்காதே என்றாள். நிச்சயம் நான் திரும்ப வந்ததும் அடுத்த ட்ரிப் நம்ம ஹனிமூன் தான். நீ சந்தோஷமாய் இருப்பது எனக்கு முக்கியம் என்றான். கதிரேசனும், பிரேம் தம்பியும் தான் எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இவன் போய் சேர்ந்ததும்தான் நிம்மதியாய் இருந்தது பிரேம் அப்பாவுக்கு. அவன் அம்மாவுக்கு சலைன் எறிக்கொண்டிருந்தது. அவள் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள்.

பிரேம் பயப்பட வேண்டாம் நான் டாக்டர் கிட்டே பேசிட்டேன் என்றான். உன்னுடைய பயணம் எப்படி இருந்தது என்றான் கதிரேசன். பரவாயில்லை ஓரளவு சமாளித்தேன் என்றான். கதிரேசன் வீட்டுக்கு போய் வாங்கி வந்த பொருட்களை கொடுத்தான். எதுக்கு அண்ணா இதெல்லாம் என்றாள் கதிரேசன் மனைவி இதில் என்னம்மா இருக்கிறது என்றான்.மறுநாள் தான் கண்விழித்து பார்த்தாள் பிரேம் அம்மா. பிரேம் வந்துட்டான் என்றார் பிரேம் அப்பா. அவன் அவள் கையை பிடித்துக்கொண்டான். நான் எங்கேயும் போக மாட்டேன் என்றான். அவன் கண்கள் கலங்கிவிட்டன. எனக்கு ஒன்னுமில்ல என்றாள். டாக்டர் 10 நாட்கள் கழித்தே டிஸ்சார்ஜ் செய்தார். தீபா இடையில் ஃபோன் பண்ணிய வண்ணம் இருந்தாள். அவள் பிரேம் அம்மாவிடம் பேசவும் செய்தாள்.

பிரேம் நீங்கள் எல்லோரும் என்னுடன் வந்துவிடுங்கள் என்றான். அது உனக்கு ரொம்ப கஷ்டமாய் இருக்கும் பிரேம். அது தவிர மரியாதையா இருக்காது என்றார்.குமரகுரு பிரேம் அப்பாவிடம் பேசினார். ரொம்ப நன்றி சம்பந்தி என்றார். பிரேம் அவன் தம்பியிடம் சில விஷயங்களை சொன்னான். பிரேம் தம்பி ரமேஷ் சொந்தமாக பிசினஸ் தொடங்க போவதாக சொல்லிக்கொண்டிருந்தான். பிரேம் திரும்ப ஊருக்கு கிளம்பினான். தீபாவை அழைத்து வந்திருக்கலாம் என நினைத்தான்.ஸ்டேஷன் கார் எடுத்து வந்திருந்தாள் தீபா. என்ன பிரேம் அத்தை என்ன சொன்னார்கள். அவர்கள் நம்மை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுகிறார்கள். அவர்கள் எல்லோரையும் அழைத்து கொண்டு வந்துவிட வேண்டியது தானே என்றாள். கேட்டேன் அப்பா முடியாதென்று சொல்லிவிட்டார். நீ ரொம்ப சோர்வாக இருக்கிறாய் வா போகலாம் .

ரஞ்சனிக்கு எக்ஸாம்ஸ் நடக்கிறது படித்து கொண்டிருக்கிறாள். குமரகுரு பிரேம் கூட சிறிது நேரம் பேசினார் . தீபா அவனை அணைத்துக்கொண்டாள் . நான் உன்னை ரொம்ப கஷ்டபடுத்துகிறேனா தீபா அப்படி இல்லை எல்லாம் ஒரு குழந்தை பிறந்தால் சரியாகி விடும் என்றாள். இவன் சிரித்தான். என்ன பிரேம் சிரிக்கிறாய். நான் இதை எதிர்பார்க்கவில்லை.அவளை கட்டியணைத்து முத்தமிட்டான். நாம் நமக்கென ஒரு குடும்பம் நிச்சயம் இருக்கும் என்றான். நான் படிப்பை தொடர போவதில்லை பிரேன் என்றாள் . நன்றாக யோசித்து சொல் என்றான். நான் அப்பாவிடமும் பேசினேன் .அவர் உன்னை கேட்க சொன்னார். எனக்கு கொஞ்சம் டைம் கொடு. ஏன் தீபா இந்த திடீர் முடிவு. என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. சரி இந்த வருட எக்ஸாம்ஸ் எழுது . நாம் முடிவு செய்வோம் என்றான்.

தீபா தன் விருப்பபடி படிப்பை நிறுத்தினாள் . இவன் அவளை கட்டாயபடுத்த விரும்பவில்லை.ரஞ்சனி ஆர்வமாக படிக்க தொடங்கி இருந்தாள். இன்னும் ஒரு வாரத்தில் ரஞ்சனி குமரகுரு கூட போக தயாராய் இருந்தாள். அவள் போன கையோடு இவர்கள் ஹனிமூன் பயணம். குமரகுரு சற்றே சோர்வடைந்தவர் போல இருந்தார். என்ன மாமா என்ன ஆச்சு என்றான். ஒன்றுமில்லை எனக்கும் வயசாகிறது அல்லவா என்றார். புரிகிறது . சீக்கிரம் பேரனோ பேத்தியோ பார்க்க வேண்டும் எனக்கு . சரி மாமா. பிரேம் நீ தான் என்னுடைய ஒரே நம்பிக்கை. அடுத்த வாரம் ரிஜிஸ்டர் ஆபீஸ் போவோம் . ரஞ்சனி, தீபா மற்றும் உங்களுக்கான என் சொத்தின் பங்கை மாற்றி எழுத போகிறேன். இதுக்கென்ன அவசரம் மாமா .. எனக்கு எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. அதனால்தான் இந்த முடிவு.

தீபா ஒத்துக்கொள்ளவில்லை உங்களுக்கு ஓய்வு தேவை அப்பா என்றாள். இனிமேல் ஓய்வெடுத்து என்ன செய்யப்போகிறேன் தீபா. சொத்து பிரிப்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றாள். அதெல்லாம் வேண்டாம். ரஞ்சனி , தீபா, பிரேம் மூவரோடும் ரிஜிஸ்டர் ஆபீஸ் போய் எல்லாவித பாரமாலிட்டிகளையும் முடித்தார். பிரேம் பேரில் கம்பெனி நிர்வாக பொறுப்புகளை கொடுத்திருந்தார்.அந்த வார கடைசியில் ரஞ்சனி குமரகுரு கூட கிளம்பி போனாள். தீபாவும் இவனும் வழியனுப்ப ஏர்போர்ட் போயிருந்தார்கள். அவருடைய கடமையை செய்து முடித்து விட்டார். தீபா அமைதி ஆகிவிட்டாள் . என்ன தீபா அமைதி ஆகிவிட்டாய் என்றான்.என்னவோ யோசனையில் இருந்தேன் என்றாள்.

பிரேம் அம்மா , அப்பா , தம்பி எல்லோரையும் வந்துவிடும்படி தீபாவே பேசி பார்த்தாள். பலன் இல்லை. பிரேம் அப்பா உறுதியாக இருந்தார் அவர் முடிவில். ஏற்கனவே நிறைய உதவி செய்துவிட்டீர்கள் என்றார். ரஞ்சனி ஃபோன் பண்ணியிருந்தாள். அக்கா இங்கே சிங்கப்பூர் அருமையாக இருக்கிறது என்றாள். அவள் போட்டோக்கள் சிலவற்றை அனுப்பி இருந்தாள்.உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்றாள். பிரேம் என்ஜாய் பண்ணு ரஞ்சனி என்றான்.தீபா தன் மனதில் அவள் அப்பா குறித்த கவலையில் இருந்தாள்.சுபா பிரேமுக்கு ஃபோன் பண்ணியிருந்தாள். என்ன பிரேம் எப்போது ஊரில் இருந்து வந்தாய் என்றாள். நான் கொஞ்சம் பிஸி ஆக இருந்தேன் . இந்த வாரம் வந்து உன்னை பார்க்கிறேன் என்றான். சரி பிரேம்.