Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நிழல் தரும் வசந்தம் - 13

கல்யாணம் அதிகாலை வேளை என்பதால் இரவு நேரத்தோடு தூங்கிவிட்டாள் தீபா. ரஞ்சனியும் பிரேமும் விழித்து கொண்டு இருந்தனர். என்ன மாமா தூக்கம் வரலியா நாளைக்கு ஃபர்ஸ்ட் நைட் ல தூங்கிட போறீங்க என்றாள். என்ன ரஞ்சனி எப்படி தூக்கம் வரும் . எப்படியோ ஆரம்பிச்சு இப்போ கல்யாணம் . எனக்கு சந்தோஷமாகவும் அதே சமயம் குற்ற உணர்வாகவும் உள்ளது. அதெல்லாம் முடிஞ்ச கதை மாமா. அக்காவை சந்தோஷமா வெச்சுக்கோங்க அது போதும் என்றாள். நீ சொல்லுறதும் சரிதான். சுபாவும் வந்துவிட்டாள் . நீ இன்னும் பழசை நினைத்து கொண்டிருக்காதே பிரேம் என்றாள். போய் நேரத்தோடு தூங்கு . சரி சுபா. பனி அவன் மனதிலும் வெளியிலும் படர்ந்திருந்தது. சுபாவும்,ரஞ்சனியும் கல்யாண போட்டோஷூட் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அவன் அம்மாவை தேடி போனான் பிரேம். அவள் ஏதோ அடுக்கி வைத்து கொண்டிருந்தாள். இவனை பார்த்ததும் பிரேம் என்ன வேணும் இந்நேரத்துக்கு ?பால் சுட வைத்து தரவா என்றாள். சரி குடு என்றான். நடப்பதெல்லாம் கனவு போல இருக்கு என்றான். எல்லாம் நல்லதுக்குதான் .

இவன் தூங்கிவிட்டான். பிரேம் அப்பாதான் பதட்டத்துடன் எழுப்பினார்.டேய் பிரேம் மணி ஆகுது பாரு .. எல்லோரும் கோவிலுக்கு கிளம்பிட்டாங்க என்றார். சாரி பா இதோ கிளம்பறேன் . நைட் ரொம்ப நேரம் முழிக்காதேன்னு சொன்னேனே கேட்டியா ? இவன் குளித்து ரெடி ஆகி வந்தான். தீபா அவன் அறையில் வந்து உட்கார்ந்து இருந்தாள். என்ன தீபா ? காப்பி என்றாள். தாங்க்ஸ் தீபா . சீக்கிரம் கிளம்பி வா பிரேம் எல்லோரும் வெயிட் பண்ணுறாங்க . இவனுடைய தம்பி நன்கு பொருத்தமாக டிரஸ் பண்ணியிருந்தான். இவனுடைய அப்பா அம்மா காலில் விழுந்து வணங்கினான். கோவிலுக்கு புறப்பட்டார்கள். பிரேம் அம்மா சற்றே பதற்றத்துடன்தான் இருந்தாள். குமரகுரு தீபா தன்னிடம் பேசாதது குறித்த வருத்தத்துடனே இருந்தார்.அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ரஞ்சனி ஒண்ணும் கவலைபடாதீங்க அப்பா என்றாள். கோவில் பூஜை நடைபெற்றது. கிருஷ்ணா, சௌமியா, லலிதா, கதிரேசன் அவன் குடும்பம் எல்லோரும் இவர்களை வரவேற்றனர்.

அய்யர் மந்திரங்கள் சொல்ல மேளதாளங்கள் முழங்க பிரேம்
தீபா கழுத்தில் தாலி கட்டினான் . எல்லோரும் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தீபா அப்பா என்னை மன்னித்து விடு தீபா என்றார். அதெல்லாம் ஒன்றுமில்லை நீங்கள் எடுத்த முடிவு சரிதான் என்றாள். அவர் காலில் விழுந்து வணங்கினர். பிரேம் அம்மா அப்பா காலிலும் விழுந்தனர். ரஞ்சனி கோவில் பிரகாரத்தை சுற்ற வேண்டும் என்று சொன்னாள் . இவன் கையை இறுக்கமாக பிடித்திருந்தாள் தீபா. சௌமியா இருக்கிற இடமே தெரியாத மாதிரி இருந்தாள். குமரகுரு எல்லோரும் சாப்பிட போங்க என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர் மனம் தீபாவிடம் பேசியதில் நிறைவடைந்திருந்தது. பிரேம் அம்மா கடைசியா என் பிள்ளைக்கு ஒரு நல்லது நடந்திருக்கு என்றாள்.

மதியம் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தீபா என்ன எப்போ பார்த்தாலும் என்னை கிண்டல் பண்ணுவே இப்போ என்னை சைலன்ட் ஆயிட்ட என்றான். ரஞ்சனி சிரித்தாள். அக்காவுக்கு வெட்கம் எல்லாம் வருகிறதே என்றாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை பிரேம் இப்போ பொறுப்பு கூடி இருக்கு அது தான் . சீக்கிரமே குட்டி தீபா, பிரேம் எல்லாம் வரணும். இங்கே ஆட்கள் எண்ணிக்கை குறைவா இருக்கு என்றாள் ரஞ்சனி. தீபா என்ன அவசரம் அதுக்கு? பிரேமே எனக்கொரு குழந்தை மாதிரிதான் எப்ப என்ன செய்வான் அப்படின்னு தெரியாது என்றாள். சௌமியாவும் அவள் கணவரும் வந்தார்கள் சாப்பிட்டீர்களா என விசாரித்தான். கல்யாணம் ரொம்ப சிறப்பா நடந்தது என்றார்கள். தாங்க்ஸ் சௌமியா தாங்க்ஸ் சார் . நீங்கள் ரெண்டு பேரும் வந்ததில ரொம்ப சந்தோஷம். இருங்க ஒரு ரெண்டு நாள் கழித்து போகலாம் என்றான்.சௌமியாவ விட்டா இங்கேயே தங்கிடுவா எனக்கு கொஞ்சம் அர்ஜண்ட் வொர்க் இருக்கு அதனால நைட் கிளம்பறோம் . சரி சார் .

தீபா கையை சௌமியா இன்னும் பிடித்துக்கொண்டிருந்தாள் . யு ஆர் சோ லக்கி என்றாள் அவள் காதுகளில். தாங்க்ஸ் அக்கா என்றாள் தீபா. சௌமியா கஷ்டப்பட்டு கண்ணீரை அடக்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றாள் . சுபா ஏதோ வேலையாய் இருந்தாள். பிரேம் அப்பா குமரகுருவிடம் பேசிக்கொண்டிருந்தார். ஒரு ரெண்டு மாசம் பிரேமை வெளிநாடு அழைத்துகொண்டு போகலாம் என இருக்கிறேன் என்றார். பிஸினஸ் கத்துக்கட்டும் என்றார். தாராளமா கூட்டிட்டு போங்க அவன் உங்க சொந்தம் என்றார். இப்படியாக அவர் பேச்சு இருந்தது. தீபா பசிக்குது என்றாள். சரி போய் சாப்பிடலாம் என்றால் யாராவது ஒருவர் ப்ரெசெண்ட் கொடுக்க வந்து கொண்டே இருந்தார்கள். ரஞ்சனி நான் இப்போது சில பாடல்களை பாட போகிறேன் எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்கவும் என்றாள். அப்போது தீபாவும்,பிரேமும் சாப்பிட சென்றனர். சாப்பாடு போடும் இடத்தில் கொஞ்சம் கூட்டம் குறைவாக இருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டு கொண்டனர். பிரேம் நீ எப்பவும் இப்படியே இருக்கணும் என்றாள்.

தீபா, பிரேம் அப்பா,பிரேம் தம்பி ஆகியோர் லேட் ஆக சாப்பிட வந்தனர். பிரேம் பரிமாறினான். என்ன மாப்பிள்ளையே பரிமாறுகிறார் என்றான் பிரேம் தம்பி.அகெல்லாம் அப்படித்தான் என்றான். லலிதா வாழ்த்து தெரிவித்து விட்டு கிளம்பிவிட்டாள். தீபாவின் கிளாஸ்மேட்ஸ் வந்திருந்தார்கள். எல்லோரையும் பிரேமுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.மாலை 3 மணி அளவில்தான் எல்லோரும் ரிலாக்ஸ் ஆக இருந்தார்கள். எல்லோருக்கும் மாலை விருந்து 7 மணிக்கு என்றார் குமரகுரு.சுபா தூங்கிக்கொண்டிருந்தாள் . பிரேம் அப்பா நைட் எல்லாம் தூங்காததால் அவரும் தூங்கி கொண்டிருந்தார். இந்த டிரஸ் மாத்தனும் என்றான் பிரேம் . அதுக்கென்ன மாற்றிக்கொண்டு வாருங்கள் என்றார் குமரகுரு. மாலை வேளையில் குமரகுருவுக்கு வேண்டிய பிஸினஸ் ஆட்கள் எல்லோரும் வந்து போயினர். வீடு ஒளி விளக்குகளால் அலங்கரிக்க பட்டிருந்தது. பிரேம், தீபா முதலிரவுக்கு நல்ல நேரம் பார்த்து வைத்திருந்தாள் பிரேம் அம்மா.


எல்லாம் நல்லபடியாக முடிந்தது. இனிமேல்தான் ஆரம்பம் என்றாள் ரஞ்சனி. கிருஷ்ணா மையமாக சிரித்தான். கிருஷ்ணா விடைபெற்றுக்கொண்டான். கதிரேசன் வாழ்த்து தெரிவித்தான் . அவனும் கிளம்பிவிட்டான். முதலிரவு அறை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. குமரகுரு வந்து அடிக்கடி ஏதாவது மாற்றம் தேவைப்படுமா என பார்த்து போனார். இரவு விருந்து பரிமாறப்பட்டது. சுபா புதுமணப்பெண்ணை அலங்கரிக்க உதவினார். எப்படியும் மேக்கப் இல்லாம போயிடும் என்று சிரித்தாள் ரஞ்சனி.போடி நானே டென்ஷன் ல இருக்கேன் என்றாள் தீபா. என்ன பிரேம் மாமா நீங்களும் பதட்டமா இருக்கீங்க அக்காவும் பதட்டமா இருக்கா என்றாள். ஏய் வாலு உனக்கு கல்யாணம் ஆகுறப்போ தெரியும் என்றான். குமரகுரு எல்லோருக்கும் நன்றி சொல்லி வழி அனுப்பி வைத்தார்.

மணி இரவு 11 30 ஆகிவிட்டது. தீபா பிரேம் கூட ஃபோன் மூலம் பேசினாள். எல்லோரும் ரொம்ப நெர்வஸ் ஆக இருக்காங்க. நீ நெர்வஸ் ஆக இல்லையா என்றான்.நீ இருக்கும் போது நான் ஏன் பயப்பட போகிறேன் என்றாள். நான் உன்னிடம் பேச வேண்டும் என்றான். நானும் தான் என்றாள். இருவரும் சிரித்தார்கள். ஒரு வழியாக அவர்களை முதலிரவு அறைக்குள் அனுமதித்தார்கள். தீபா அமைதியாய் இருந்தாள். என்ன செய்ய போகிறாய் பிரேம் என்று மனதுக்குள் கேள்விகளோடு இருந்தாள். பிரேம் இங்கே வந்து உட்கார் என்றான். நான் இன்னைக்கு ஒண்ணும் பண்ண போவதில்லை. அதற்கு ஒரு லொகேஷன் பார்த்து வைத்திருக்கிறேன் என்றான். நிஜமாவா ? ஆமாம் உனக்கு பிடித்த லொகேஷன் ஒன்றில் உன் விருப்பப்படி நடக்கும் என்றான். ரொம்ப தாங்க்ஸ் பிரேம் என்றாள்.தவிர நீ இப்போது படித்துக்கொண்டிருக்கிறாய் இப்போது போய் மற்ற எதுவும் வேண்டாம் என்றான்.இது யாருக்கும் தெரிய வேண்டாம் .ரஞ்சனிக்கு கூட தெரிய வேண்டாம் என்றான்.சரி பிரேம்


காலையில் ரஞ்சனி , பிரேம் அம்மா வந்து பார்த்தார்கள். என்ன தீபா எல்லாம் சுகம்தானே என்றாள். ஆமாம் அத்தை என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க என்றாள். அவள் குளித்து வந்து விளக்கேற்றினாள் .தீபா சீக்கிரமே இந்த வீட்டுக்கு வாரிசு வரணும் என்றாள். பிரேமை பார்த்து அவன் தம்பி சிரித்தான். அவன் அப்பா அவனை கூப்பிட்டு குமரகுரு அவனை வெளிநாடு அழைத்து போக இருப்பதை பற்றி சொன்னார். சரி அப்பா நீங்களும்,மாமாவும் எடுத்த முடிவென்றால் சரியாகத்தான் இருக்கும் என்றான். இவன் போய் குளித்து விட்டு வந்தான். தீபா இவனுக்கு டிபன் பரிமாறினாள். புது தாலி மின்ன அவளை பார்க்கவே பரவசமாய் இருந்தது பிரேமுக்கு. சுபா காலையிலேயே கிளம்பி விட்டாள் வேலைக்கு போக வேண்டும் என.தீபா நீயும் வா சாப்பிடு என்றான். எனக்கென்ன அவசரம் என்றாள். அட சும்மா வா என்றான். ரஞ்சனி என்ன ஒரு பாசம் என்றாள்.

இன்னும் ஒரு மாதத்தில் தான் அழைப்பு அனுப்புவதாக குமரகுரு சொன்னார். தீபாவுக்கு பிரேமை வெளிநாடு அனுப்புவதில் விருப்பமில்லை ஆனால் அவன் எதிர்காலமும் முக்கியம் என்பதால் ஒத்துக்கொண்டாள் . பிரேம் , தீபா, ரஞ்சனி ஏர்போர்ட் போயிருந்தார்கள். தீபா அவள் அப்பா கையை பிடித்து கொண்டாள். உனக்கென்று ஒரு குடும்பம் வந்தாயிற்று இனி நீதான் எல்லாவற்றையும் பார்த்து கொள்ளவேண்டும் என்றார். நிச்சயமாக . பிரேம் நான் சொன்னதெல்லாம் நினைவு இருக்கட்டும் . பிரேம் அப்பா , அம்மா, தம்பியை ரயில்வே ஸ்டேஷன் போய் வழி அனுப்பி வைத்தார்கள்.பிரேம் அம்மா தீபாவை கட்டிப்பிடித்து முத்தமிட்டாள் . எல்லாம் உன் கையிலதான் இருக்கு என்றாள்.

ரஞ்சனி ஏதோ வாசித்து கொண்டிருந்தாள். பிரேம் நல்லபடியாக எல்லாம் முடிந்தது என்றான். போட்டோ ஆல்பம் வந்திருக்கிறது பாருங்க மாமா என்றாள். பிரேம் தீபா பொருத்தம் நன்றாக இருந்தது. நான் ஆபீஸ் போய் விட்டு வருகிறேன் என்றான். என்ன மாமா அவசரம். இல்லை நான் போகவில்லை என்றால் சரியாக வராது. சரி வரும்போது எனக்கேதாவது வாங்கி வாருங்கள் என்றாள். சரி ரஞ்சனி. ஆபீஸ் வந்ததும் தீபா மனதில் என்ன ஓடும் என்ற சிந்தனையே ஓடியது. ஆனால் ரொம்ப நாள் குழந்தை தள்ளி போடக்கூடாது என நினைத்தான். அவன் மனம் அவள் மேல் உள்ள ஆசையை வெளிப்படுத்த துடித்தது. சௌமியா ஃபோன் பண்ணியிருந்தாள்.பிரேம் நானே ஃபோன் பண்ணணும்னு இருந்தேன் என்றான். கல்யாணம் ரொம்ப சிறப்பாக இருந்தது என்றாள். தாங்க்ஸ் சௌமியா.
நீ உன்னை மாற்றிக்கொள் பிரேம் தீபாவை நன்றாக பார்த்துக்கொள் . அதோடு என்னை சுத்தமாக மறந்துவிடு என்றாள்.