ஒரு வாரம் கழித்து கொடைக்கானலுக்கு காலேஜ் டூர் போகலாம் என காலேஜ் நிர்வாகம் அனுமதி கொடுத்தது. என்ன மச்சான் ஹேப்பி ஆ இப்பவாவது கொஞ்சம் சிரியேன் என்றான் கிரிஷ். சாம் வருவாளான்னு தெரியல அப்படி இருக்கப்ப எப்படிடா சந்தோஷமா இருக்குறது என்றான் தீபன் , அதெல்லாம் நிச்சயம் வருவாடா . இப்பவே ஃபோன் பண்ணு வேணாம்டா அந்த பிரவீன் கூட இருந்தா பிரச்சனை ஆயிடும் ம் நீ அவனுக்கு பயப்படுறியா ? என்ன இருந்தாலும் நாளைக்கு சம்யுக்தா ஹஸ்பண்ட் ஆக போறவன் இல்ல.. அதெல்லாம் நடக்கும் போது பாத்துக்கலாம் cheerup மச்சி.. ஈவினிங் சாமை மீட் பண்ணும் போது கேட்கிறேன் என்றான் தீபன் . ஓகே ஓகே சம்யுக்தாவே இவனுக்கு 6 மணி போல ஃபோன் பண்ணினாள் . அப்பா கிட்ட கேட்டேன் காலேஜ் டூர் போக பர்மிஷன் கொடுத்து விட்டார். நீ வருவேன்னு தான் நான் பர்மிஷன் கேட்டேன் என்றாள். அதெல்லாம் நிச்சயம் வருவேன் ரொம்ப சந்தோஷம் சாம் அப்பா இப்போ எப்படி இருக்காரு ? முன்னைக்கு இப்போ பரவாயில்ல அம்மா தான் ரொம்ப கவலைப்படுறாங்க .. எல்லாமே சரி ஆயிடும் நீ நம்பிக்கையோட இரு என்றான். ஓகே சாம் காலேஜ் ல பாக்கலாம் ஓகே தீபன் . காலேஜ் டூர் என்றதும் கேட்கவே வேண்டாம் ஒரே கொண்டாட்டம் தான் ஆட்டம் பாட்டம் கும்மாளம் தான். பஸ் கிளம்பியதுமே டான்ஸ் ஆட துவங்கினார்கள் ஹோய் என்ற சத்ததுடன் இனிதே பயணம் துவங்கியது.கதிர் சாமின் பக்கத்தில் போய் அமர்ந்தான். என்னடா அவளுக்கு ஏற்கனவே எங்கேஜ்மெண்ட் ஆக போகுது தெரியும்ல என்று கிண்டல் அடித்தனர். என்ன சாம் நீ ஆடலையா அவங்கல்லாம் ஆடி முடிக்கட்டும் கூட்டத்துல ஆடி என்ன ஆக போகுது என்றாள். ம் நீ வந்ததுல எல்லோருக்கும் சந்தோஷம் என்றான் கிரிஷ்.
கொடைக்கானல் குணா குகை அருகே அலப்பறை கொடுத்தனர். மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது என்றனர், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றனர். கொடைக்கானல் குளிர் ரம்மியமாக இருந்தது. வெளியே ரிசப்ஷன் சோபாவில் அமர்ந்து கிரிஷும் , தீபனும் பேசி கொண்டிருந்தனர். அப்போது சாம் வரவே கிரிஷ் நீ பேசிக்கொண்டிரு மச்சான் நான் போய் டீ சாப்பிட்டு வரேன் என்றான். நாமளும் டீ சாப்பிட போலாமா என்றாள் . நிச்சயமா கிரிஷ் சரியான டீ பைத்தியம் அதுவும் இந்த லொகேஷன் ல கேக்கவா வேணும் என்றான் தீபன் . இந்த டிரஸ் ல நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய் எது இந்த டிரஸ் ஆ சும்மா சொல்லாதே என்றாள் சாம். அப்பா உடல் நிலை சரியா இருந்தா நான் வேற லெவல் டான்ஸ் ஆடியிருப்பேன் என்றாள். ம் நீ தான் டான்ஸ் queen ஆச்சே..அப்போது பிரவீனிடம் இருந்து ஃபோன் வந்தது. இவன் சற்று தள்ளி நின்றான். பிரவீன் அடுத்த வாரம் அவளுடைய கையில் நிச்சயதார்த்த மோதிரம் அணிவித்திருப்பான் என எண்ணிக்கொண்டான். அவனுக்கு சாக்லேட் வேணுமாம். வாங்கி வர சொல்கிறான் என்றாள் சாம்.
இந்த புல்வெளி, பசுமை எல்லாம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது இங்கேயே ஒரு வீடு வாங்கி செட்டில் ஆக வேண்டும் என்றாள் சாம். அதெல்லாம் நடக்கும் நிச்சயம் என்றான் தீபன் . ரொம்ப குளிர்கிறது போகலாம் என்றாள். கூர்க் போனார்கள் , ஊட்டி போனார்கள் அவர்கள் இருவரும் சேர்ந்தே இருந்தார்கள். ஹனி மூன் எங்கே போகிறீர்கள் என்று கேட்டுவிட்டு நாக்கை கடித்து கொண்டான் தீபன் . டேய் முதலில் ஒண்ணு தெரிஞ்சுக்கோ எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை .. அப்பவோட கட்டாயத்துல தான் இந்த நிச்சயதார்த்தமே நடக்குது. நீ வேற என்னை ஹனிமூன் அப்படின்னு டென்ஷன் பண்ணாதே என்றாள். திரும்ப வரும் போது அருமையாக டான்ஸ் ஆடினாள் சாம். அவள் டான்ஸ் ஆடினால் நாள் பூரா பார்த்துக்கொண்டே இருக்கலாம். இரண்டு நாட்கள் விடுமுறை காலேஜுக்கு. திங்கள் அன்று எல்லாம் தவறாமல் காலேஜ் வந்து விட வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். எல்லா போட்டோவிலும் சாமும்,தீபனும் நெருக்கமாக இருந்ததை பார்த்து அப்செட் ஆனான் பிரவீன். நீ அவன் கூட இருந்ததுதான் அதிக நேரம் போல என்றான். அவள் சிரித்தாள். எப்படியும் நீ என்னை விடப்போறதில்லை தீபன் என் பெஸ்ட் ஃப்ரெண்ட். அவனை தப்பா பேசாதே அவனே வருத்தப்படுவான். இதெல்லாம் தானா நடந்தது என்றாள். எல்லாமே இந்த நிச்சயதார்த்ததோட முடிச்சிக்க அதுக்கப்புறம் நீ முழுசா எனக்கு சொந்தம் அவன் இங்கே வரவோ போகவோ கூடாது என்றான். மேலும் பேசினால் அவள் உடைந்து போய் அழக்கூடும் என்பதால் அமைதி காத்தாள் . திங்கள் கிழமை உற்சாகத்தோடு காலேஜ் போனாள் . தீபன் வந்திருக்கவில்லை . ஃபோன் செய்து பார்த்தாள் . தீபனுக்கு ஜுரம் அதான் வரவில்லை என அவன் அம்மாதான் சொன்னார்.
மாலை போய் பார்க்கவேண்டும் என எண்ணிக்கொண்டாள் . போய் பார்த்த போது வீடு பூட்டியிருந்தது அவங்க ஹாஸ்பிடல் போயிருக்காங்க என்று பக்கத்து வீட்டில் சொன்னார்கள். இப்போ வந்துடுவாங்க நீ உள்ள வாம்மா என்றார்கள். பரவாயில்லை சும்மா வா என்று உள்ளே அழைத்து போனார்கள். 7 மணிக்கு தான் தீபன் வந்தான். என்ன ஆச்சு கொடைக்கானல் குளிர் ஒத்துக்கலையா ? அதெல்லாம் ஒண்ணுமில்லை திடீர்னு தான் இப்படி ஆச்சு என்றான்.அவனுடைய அம்மா அவளை விசாரித்தாள் காப்பி கொடுத்தாள்..சரி தீபன் உடம்பை பார்த்துக்க நாளைக்கு ஃபோன் பண்ணுறேன் என்றாள். சரி சாம் .
இன்னும் இரண்டு நாட்களே நிச்சயதார்த்ததுக்கு இருந்தன . தீபன் அதற்குள் குணமாகிவிட வேண்டும் என நினைத்து கொண்டாள் . தான் சதா அவன் நினைப்பாகவே இருப்பதை அவளால் உணர முடிந்தது. மறுநாள் எப்படியோ காலேஜ் வந்த சேர்ந்தான் தீபன் அவனுக்கு சாம் கவலைப்படுவாளே என்பதே பெரிய யோசனையாக இருந்தது. அவள் இவனை ஆழமாக பார்த்தாள். எல்லோரும் என்ன பேசிக்கிறாங்க தெரியுமா என்றான். என்ன பெருசா பேசிக்க போறாங்க நீயும் நானும் லவ் பண்ணுறோம் அப்படித்தானே ? எனக்கு அது உண்மையா இருந்தா சந்தோஷம்தான் என்றாள். நீ என்ன சொல்லுறேன்னு உனக்கு புரியுதா ? அதெல்லாம் கேட்காதே இப்போ எப்படி இருக்கு ஜுரம் என்று தொட்டு பார்த்தாள். பரவாயில்லை . நான் நாளைக்கு காலேஜ் வர மாட்டேன். நீ நாளை மறுநாள் காலையிலேயே வீட்டுக்கு வந்து விடு என்றாள். அப்பா அம்மாவையும் முடிந்தால் அழைத்து கொண்டு வந்து சேர் என்றாள். ஓகே சாம்
சாம் நிச்சயதார்த்ததுக்கு வர சொல்லிவிட்டு போய்விட்டாள் .இவன் மனதளவில் அவள் பிரிவுக்கு தயாராகி கொண்டிருந்தான். இவன் காலையிலேயே அவள் வீட்டுக்கு போயிருந்த பொது பந்தல்காரர்கள், மேளக்காரர்கள் எல்லோரிடமும் போனில் பேசிக்கொண்டிருந்தான் பிரவீன். இவனை பார்த்ததும் சாம் சாம் என வீட்டின் உள்ளே பார்த்து குரல் கொடுத்தான். அவள் வெளியே வந்து தீபனின் கையை பிடித்து கொண்டாள் . உள்ளே வா என அழைத்தாள் . சாம் அப்பா ஒரு நாற்காலியில் அமர்ந்து காபி குடித்து கொண்டிருந்தார். வாப்பா தீபன் என்று சொன்னார். இவனை சோபாவில் உட்காரவைத்து விட்டு இரு காபி கொண்டு வரேன் என உள்ளே போனாள் சாம் .அப்பா அம்மா வரலியா என்றாள் . அவங்க ஈவினிங் வருவாங்க என்றான். நான் பியூட்டி பார்லர் வரை போறேன் என்னை ட்ராப் பண்ணுறியா என்றாள் . சரி போகலாம் என்றான். அவன் பிரவீன் காரை எடுத்து கொண்டான். என்ன சாம் கல்யாண களை வந்துவிட்டது போல என்றான். அவள் வெளியே வேடிக்கை பார்க்க துவங்கினாள் .நேத்து நைட் சரியா தூங்கலியா என்றான் . எப்படி நான் அவ்வளவு மோசமாகவா இருக்கிறேன் என்றாள் . என்னவோ நீ தூங்கி எழுந்தால் இன்னும் அழகாய் இருப்பாய் என்று தோன்றியது. இப்படியே பேசிக்கொண்டிரு எனக்கு அது பிடித்திருக்கிறதென்றாள் . பியூட்டி பார்லர் வந்ததும் நீ வரவேற்பறையில் வெயிட் பண்ணு என்று சொல்லிவிட்டு போனாள் .ஒரு மணி நேரம் கழித்து தேவதை மாதிரி வந்தாள் .எப்படி இருக்கிறேன் கதிர் என்றாள் . நல்ல நேர்த்தியாக மணப்பெண் போல் இருக்கிறாய் என்றான். திரும்ப வருகையில் கேக் ஆர்டர் செய்ய வேண்டுமென்றாள் . இவன் அவள் கொடுத்த குறிப்புகளின் படி கேக் ஆர்டர் செய்தான். என்ன ஒரே தாடியுமாய் இருக்கிறாய் என்றாள் . ஈவினிங் வரும்போது நீட் ஆக இருக்க வேண்டும் என்றாள் .சரி சாம்.
காலை டிபன் எல்லோருக்கும் பரிமாறினான் தீபன். கடைசி பந்தியில் அவனை உட்கார வைத்து பரிமாறினாள் சாம். நீ ஏன் சிரமப்படுகிறாய் அதெல்லாம் ஒன்றுமில்லை என்றாள் . பிரவீன் இவனை அழைத்து கொஞ்சம் பணம் கொடுத்து மாலைகள் தயாரா என்று பார்த்து வர சொன்னான். நீ அவனை ரொம்ப கொஞ்சுகிறாய் சாம் நான்தான் மாப்பிள்ளை என்றான். எல்லோரும் சிரித்தார்கள். அவளுக்கு உள்ளூர தான் யார் பக்கம் என சந்தேகம் உண்டாயிற்று.
தீபன்பரபரவென எல்லா வேலைகளையும் செய்தான், கிரிஷ் மதியம் போல வந்தான் . அவனும் தன் பங்குக்கு வேலைகளை செய்தான். மாலை 6 மணிக்கு வீட்டில் நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தினான் தீபன். மதியம் 3 மணி போல வீட்டுக்கு போய் வருகிறேன் சாம் என்று சொல்லிவிட்டு போனான். சீக்கிரம் வந்துவிடு நீ இல்லையென்றால் எனக்கு கையும் ஓடாது காலும் ஓடாது என்றாள் . வரும்போது ஆர்டர் செய்த கேக் வாங்கி வா என்றும் சொன்னாள் .சரி சரி நீ டென்ஷன் ஆகாமல் இரு என்றான். வீட்டுக்கு போகிற வழியில் சலூனில் சொல்லி shave செய்து கொண்டான். தன்னால் மாப்பிள்ளை தோழனாக முடியாது என்று அவனுக்கு தெரியும். மாலை 4 மணி போல திரும்ப வரும்போது மாலைகளோடு வந்தான் கதிர். கேக்கும் வாங்கி வந்திருந்தான். மேளக்காரர்கள் 5 மணி அளவில் வந்தார்கள். என்னடா எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்றான் பிரவீன். நீ கவலைப்படாதே எல்லாம் சிறப்பாக நடக்கும் என்றான் தீபன் . அய்யர் பைக்கில் வந்திறங்கினார். அவர் சொன்ன பொருட்கள் எல்லாம் வந்திருக்கிறதா என பார்த்தார். நிச்சயதார்த்த பத்திரிகை தயார் செய்யப்பட்டது. மணப்பெண்ணாக சாம் வருவதை பார்த்த பிரவீன் மிகுந்த உற்சாகம் அடைந்தான். அவனுடைய தோழர்கள் ஏதோ கிண்டல் செய்த வண்ணம் இருந்தனர். சாம் சிறு பெண்ணாக இருந்தவள் இப்போது பொறுப்புகள் சுமக்கும் மணப்பெண்ணாக மாறி இருக்கிறாள். இருவரும் நிச்சயதார்த்த பத்திரிகை வாசித்தபின் மாலை மாற்றிகொண்டனர். பிறகு மோதிரம் மாற்றிக்கொண்டனர். அவளுடைய மனமும் உடலும் ஏதோ இயந்திர கதியில் இயங்கியது. தான் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறோமோ என்று எண்ணினாள் . நிச்சயதார்த்தம் இனிதே நிறைவுற்றது எல்லோருக்கும் சந்தோசம். ஒரு சிறிய கிப்ட் பேக் தீபன் பரிசளித்தான். கதிர் அப்பா அம்மா வந்திருந்தார்கள் . அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள் ப்ரவீனும் சாமும். கல்யாண தேதி பிறகு அறிவிக்கப்படும் என அய்யர் சொன்னார். அவள் அறைக்குள்ளே போனதும் அவளுடைய கண்கள் கலங்கி விட்டன. பிரவீன் இப்போ ஏன் கண் கலங்குற என்றான். நீ ஆசைப்பட்ட மாதிரி தானே எல்லாம் நடந்தது என்றான். நீ இன்னும் ஏதாவது சொல்ல நினைக்கிறாயா என்றான். ஒண்ணுமில்லை நான் கொஞ்சம் தனியா இருக்கணும் என்றாள் .அவள் தீபனுக்கு போன் பண்ணினாள் எங்கே இருக்கிறாய் தீபன் இங்கே தான் கிட்சன் பக்கத்துல. நீ வா என் ரூமுக்கு என்றாள் . இவன் என்னாச்சு இப்போ நான் வந்தா டேய் வாடான்னா அவன் கிரிஷிடம் சொல்லிவிட்டு அவள் அறைக்கு போனான். அவள் நீ என்னதான்டா நினைக்கிற என்றாள்