Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

இரவுக்கு ஆயிரம் கைகள் - 45

பாஸ் சதீஷ்ங்கிறவங்க உங்களை பார்க்க வந்திருக்காரு. என்ன விஷயமா? அவரோட கேர்ள் பிரண்டு murder சம்பந்தமா .சரி வர சொல்லு தீபு. வாங்க சதீஷ் உட்காருங்க. சொல்லுங்க என்ன நடந்தது. என் பேரு சதீஷ் இங்க பக்கத்துல குமரன் இன்ஜினியரிங் காலேஜ் ல பைனல் இயர் படிக்கிறேன்.நானும் என் classmate ப்ரியாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புனோம். மூணு நாளைக்கு முன்னாடி அவளை காணோம்னு போலீஸ்ல complaint கொடுத்து இருந்தோம். நேத்து காலைல highway ஓரத்துல அவ இறந்து கிடந்ததா தகவல் வந்தது.போலீஸ் விசாரிக்கிறாங்க ஆனா எனக்கு அதுல நம்பிக்கையில்லை . நீங்கதான் எப்படியாவது அந்த கொலைகாரனை கண்டுபிடிச்சி கொடுக்கனும். கழுத்தை நெறிச்சு கொன்னுருக்காங்க சார். ம்ம் ஏதாவது பாலியல் ரீதியா துன்புறுத்தி இருக்காங்களா ?அப்படியெல்லாம் எதுவும் இல்லை சார். அவ போட்டிருந்த கோல்ட் செயின் மட்டும் காணாம போயிருக்கு. போலீஸ் நகைக்காக நடந்த கொலைன்னு சந்தேகப்படுறாங்க.உங்க போன் number,ப்ரியாவோட போட்டோ மத்த டீடெயில்ஸ் எல்லாம் குடுத்துட்டு போங்க நான் விசாரிக்கிறேன்.

ப்ரியாவுடைய அப்பா உடைந்து போய் அழுது கொண்டிருந்தார். ப்ரியாவுக்கு அம்மா இல்லை ஒரே ஒரு பிரதர் மட்டும் இருந்தான். பார்த்திபன். பார்த்திபன் சதீஷும் ப்ரியாவும் லவ் பண்ணது உங்களுக்கு தெரியுமா ? நல்லா தெரியும் ஆனா அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியாது.உங்க வீட்ல யாராவது அவங்க லவ் க்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்களா ?அப்படி எதுவும் இல்லை சார். ப்ரியா ரொம்ப போல்ட் ஆன பொண்ணு. அவளே சதீஷ லவ் பண்ற விஷயத்தை என்கிட்டே சொன்னா .உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா ? எனக்கு இப்போ இருக்குற சூழ்நிலையில எதுவுமே தோணல சார். அவங்க கடைசியா எங்க போறேன்னு ஏதாவது தகவல் சொல்லிட்டு போனாங்களா?அவங்க routine என்ன? எப்போவுமே நாந்தான் காலேஜ் ல morning drop பண்ணுவேன் ஈவினிங் சதீஷ் வந்து வீட்டுல விட்டுடுவான்.எப்போவுமே அவ 8 மணிக்குள்ள வந்துடுவா. அன்னிக்கி 10 மணி ஆகியும் அவ வரலை. சதீஷ் அவளை ஆட்டோல போக சொல்லிட்டான்னு எனக்கு மெசேஜ் வந்தது. ப்ரியாவோட போன் சுவிட்ச் ஆப் ல இருந்தது.எல்லா எடத்துலையும் தேடினோம். friends வீட்டுல கூட விசாரிச்சோம். எல்லோரும் சேர்ந்து அவளை தேட ஆரம்பிச்சோம். போலீசுக்கும் தகவல் சொன்னோம்.ஆனா அவளை ரெண்டு நாள் கழிச்சு இறந்ததுக்கு அப்புறம்தான் கண்டு பிடிக்க முடிஞ்சது. வேற எங்கெல்லாம் போவாங்க ரெகுலரா ?ஸ்வேதா பியூட்டி பார்லர்னு ஒன்னு இருக்கு ஒவ்வொரு வாரமும் அங்கே போவா. அவளுக்கு நெறைய friends இருகாங்க அதனாலே என்னால இங்கதான் போயிருப்பான்னு சொல்ல முடியல. அவங்க போன் ? அதுவும் கிடைக்கல சார்.

ராம் எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் யோசித்தான். ப்ரியா உடல் கிடந்த இடத்திற்கு சென்றான். டூட்டி போலீஸ் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.அந்த இடம் அதிக ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக இருந்தது.அதன் அருகே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் டோல் கேட் இருந்தது அதை தாண்டித்தான் வண்டிகள் வந்திருக்க வேண்டும்.அங்கே டோல் கேட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தான் . பெரிதாக எதுவும் சிக்கவில்லை. நகைக்காக கொலை நடந்திருப்பதாக ராம் நம்பவில்லை. இது ஏதோ திட்டமிட்ட கொலை மாதிரி இருந்தது. பிரியா இறந்த நேரம் இரவு 10 மணி என்று போஸ்டமோர்டெம் ரிப்போர்ட் சொன்னது. காணாமல் போன அதே தினமே இறந்தும் போயிருக்கிறாள்.

ரெண்டு நாட்கள் கழித்து போலீஸ் விக்ரம் என்பவனை கைது செய்தது. அவனே நகை கடையில் அடகு வைக்க போன போது மாட்டிக்கொண்டதாக இன்ஸ்பெக்டர் சொன்னார். அவனை அழைத்துக்கொண்டு போய் கொலை நடந்தது எப்படி என விசாரித்தனர்.ப்ரியா லிப்ட் கேட்டு அவணுடைய ஜீப்பில் ஏறியதாகவும் அந்த சமயத்தில் அவளுடைய செயினை பார்த்ததும் அவளை மிரட்டி பார்த்தும் ப்ரியா கொடுக்காததால் அவளை கொன்று வீசி விட்டதாக சொன்னான்.போலீஸ் அதோடு கேஸ் முடிந்து விட்டதாக நினைத்தார்கள்.விக்ரமுடைய கைரேகைகளும் ப்ரியா உடலில் கிடைத்த கைரேகைகளை ஒத்து போயின.ப்ரியாவுடைய போன் எங்கே என்ற கேள்விக்கு அதை புதரில் வீசி விட்டதாக தெரிவித்தான்.அதையும் போலீசார் தேடி எடுத்தனர். விக்ரமுடைய போனை வாங்கி பார்த்த போதும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

ப்ரியாவுடைய காண்டாக்ட் லிஸ்டில் விக்ரம் பெயர் இருக்கிறதா என சோதித்தான் ராம். மேலும் ப்ரியாவுடைய சோசியல் அக்கௌன்ட்களையும் சோதித்தான்.விக்ரம்தான் அந்த கொலையை செய்தான் என கிட்டத்தட்ட உறுதியானது.சதீஷ் நகைக்காக கொலை செய்யும் அளவுக்கு போவார்களா என இன்ஸ்பெக்டரிடம் கேட்டான். அவன் சொல்லுற டீடெயில்ஸ் எல்லாமே ஒத்து போகுதே சார் அப்புறம் என்ன என்றார்.விக்ரம் புகைப்படத்தை ப்ரியாவுடைய நண்பர்களிடம்
காட்டி விசாரித்த போதும் யாருக்கும் விக்ரமை தெரியவில்லை.பியூட்டி பார்லருக்கும் போய் விசாரித்தான் அன்று ப்ரியா அங்கு வரவில்லை என தெரிவித்தனர்.டோல் கேட் வீடியோவில் விக்ரம் சொன்ன நேரத்திற்கு ஜீப்பில் வருவது சிசிடிவியில் தெரிந்தது.

விக்ரமின் குடும்பத்தார் அவனை ஜெயிலில் வந்து சந்தித்தார்கள். ப்ரியாவின் செயின் முக்கிய எவிடென்ஸ் ஆக பயன்பட்டது.ப்ரியாவுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களை பார்த்துக்கொண்டிருந்தான் சதீஷ். அவளும் இவனும் சேர்ந்து பண்ணிய ரீல்ஸ்களை பார்த்துக்கொண்டிருந்தான்.விக்ரமுக்கும் சதீஷுக்கும் அதிக வயசு வித்தியாசமிருக்காது.விக்ரம் வேலையில்லாமல் சுற்றி
வந்ததாக தெரிவித்தான்.ராம் இந்த கேஸ் முடிந்து விட்டதாக நினைக்கும் வேளையில் அந்த போன் வந்தது.
நீங்க நினைக்கிற மாதிரி விக்ரம் கொலைகாரன் இல்ல என்றது.யார் நீங்க? என்ற கேள்விக்கு எந்த பதிலும் இல்லை. அது ஒரு ஆணின் குரல். ப்ரியாவின் பிரதர் பார்த்திபனிடம் சொல்லி விக்ரம் பற்றி ஏதாவது தகவல் கிடைக்குமா என விசாரிக்குமாறு சொல்லி இருந்தான் ராம். ப்ரியாவுடைய இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட்டையும் , facebook அக்கௌன்ட்டையும் பார்த்த போது ஒருவர் நெருக்கமான friend ஆக ராமுக்கு தோன்றியது. ஸ்வாதி. ஸ்வாதி ஊரில் இல்லை என அவளின் அப்பா பிரபாகர் கூறி இருந்தார்.அவ ஏதோ காலேஜ் பசங்களோட டூர் போறேன்னு திடீர்னு கெளம்பி போயிட்டா என்றார். அவங்க வந்ததும் என்னை காண்டாக்ட் பண்ண சொல்லுங்க என்றான் ராம். ஸ்வாதி இத்தனை நெருக்கமாய் இருந்தும் ஒரு போன் கூட பண்ணவில்லை என சதீஷும் ,பார்த்திபனும் வருத்தப்பட்டனர்.
மேற்கொண்டு ப்ரியா ரெகுலராக போகும் லைப்ரரி, ஷாப்பிங் மால் போன்ற இடங்களிலும் விசாரித்தார்கள். ஸ்வாதி ஊரிலிருந்து வந்து விட்டாள் என்ற தகவல் கிடைத்தது .விஷயத்தை அப்பா சொன்னாரு அவ என் கிளோஸ் friend தான் . எனக்கும் தெரியாம சில விஷயங்கள் இருக்கலாமில்லையா ..ஏன் அப்படி சொல்லறீங்க . நீங்களே சொல்லுங்க முன்ன பின்ன தெரியாத ஒருத்தனோட அந்த ராத்திரி நேரத்துல எதுக்காக போகணும்.நீங்க சொல்ற விக்ரம் அவளுக்கு பழக்கப்பட்ட friend ஆஹ் கூட இருக்கலாம் என்றாள். ம்ம் நீங்க சொல்றதும் சரிதான். ஆனா எங்கேயுமே அவனோட காண்டாக்ட் டீடெயில்ஸ் ப்ரியாகிட்ட இல்லையே என்றான் ராம். அதுதான் அவ உயிருக்கே ஆபத்தை வரவழைச்சிருக்கு .ப்ரியா ஏற்கனவே சதீஷை லவ் பண்றது உங்களுக்கு தெரியும்தானே .எனக்கும் தெரியும் என் friends , ப்ரியா friends எல்லோருக்குமே தெரியும் . ஆனா விக்ரம் friend ஆஹ் இருக்குறத பத்தி ஏன் மறைச்சான்னு தெரியல என்றாள் ஸ்வாதி. சரி ஸ்வாதி வேற ஏதாவது தகவல் தெரிஞ்சா கூப்பிடுங்க.ஸ்வாதி என்ன இப்படி சொல்றாங்க? சதீஷ் நீங்க என்ன நினைக்கறீங்க?ஏற்கனவே விக்ரமுக்கும் பிரியாவுக்கும் பழக்கம் இருக்குமா? சே சே ஸ்வாதி சொல்றது தப்பு எனக்கு சின்ன வயசுலே இருந்து ப்ரியாவை தெரியும் அவ எதையும் மறைச்சதில்லை.சரி சதீஷ் ஸ்வாதிக்கு லவர் யாரும் இருக்காங்களா அவங்க பின்னணி குறித்தும் விசாரிக்கணும். ஸ்வாதி டூர் போனது நிஜம்தான் என தெரிய வந்தது .

ப்ரியாவின் அறையை பார்வையிட்டான் ராம். பார்த்திபனிடம் அனுமதி கேட்டு பீரோவை சோதனை செய்தான். பார்த்திபன் வேற ஏதாவது ஸ்பெஷல் கிளாசுக்கு போகிற வழக்கம் இருந்ததா ப்ரியாவுக்கு என்றான். இல்லை சார். விக்ரம் பற்றி ஏதேனும் தகவல் கிடைக்குமா என்பதே ராமின் நோக்கமாக இருந்தது . ஸ்வாதியின் கால் ஹிஸ்டரியையும் ,விக்ரமின் கால் ஹிஸ்டரியையும் செக் பண்ணி பார்க்க வேண்டுமென்று ராமுக்கு தோன்றியது.
போலீஸ் அதை ஏற்கனவே செக் பண்ணி பார்த்து விட்டதாக சொன்னார்கள். அதில் வித்தியாசமாய் ஒன்றுமில்லை என்றும் சொன்னார்கள்.