Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

இரவுக்கு ஆயிரம் கைகள் - 5

மீரா மொத்த பணத்தையும் அவங்க joint அக்கௌண்டுக்கு அதாவது ஷியாம் மீரா அக்கௌண்டுக்கு மாத்தியிருந்தார்கள் .R2 போலீஸ் ஸ்டேஷன்க்கு லேப்டாப் வந்ததும் இன்ஸ்பெக்டர் ரவி சுறுசுறுப்பானான் . நிபுணர்களை வரவழைத்து பார்த்ததில் மீராவின் கைரேகை தேவைப்பட்டது .மீராவின் உடல் மார்ச்சுவரியில் இருந்ததால் கைரேகை கலெக்ட் செய்யப்பட்டு லேப்டாப் லொகின் ஆனது .மீரா வெளிநாட்டுக்கு போவதற்க்கு உரிய ஆவணங்கள் இருந்தன . வேறு எதுவும் இல்லை என்பது ஏமாற்றமளித்தது .அவளுடைய சர்ச் ஹிஸ்டரி உள்ளிட்டவையிலும் ஏதுமில்லை.
ரவி சிங்காரத்துக்கு போன் செய்து விஷயத்தை சொன்னான் .சே மீரா விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டோமே என சிங்காரம் வருந்தினான் .

ராம் அந்த பென் டிரைவ்வில் hidden files இருக்கிறதா என சோதித்தான் இருந்தது. டாட்டா ரெகவரி சாப்ட்வேர் போட்டு அதில் அழிக்கப்பட்ட போட்டோக்களையும் fileகளையும் திரும்ப எடுத்தான் . சிங்காரம் இருந்தான் ஷ்யாமும் இருந்தான் .யு எஸ்சுக்கு மீரா வும் ஷ்யாமும் ட்ரிப் போய் வந்தது அங்குள்ள பாங்கில் தான் பணம் மொத்தமும் இருப்பது தெரிய வந்தது .தீபு மலைத்து போனாள். அப்பு கைக்கு எப்படி அந்த ஹார்ட் டிஸ்க் கிடைத்தது என்ற மர்மம் மட்டும் விலகவே இல்லை என்றாள் தீபு . பொறு அதன் பின்னணியில் சிங்கப்பூரில் யார் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்போம்

அப்புவினுடைய நண்பர்கள் குரூப்பில் ஷியாம் என்பவர் பற்றி அப்பு ஏதாவது சொல்லி இருக்கிறானா என விசாரித்தான் .அவனுடைய ரூம் மேட் முத்து என்பவரும் அப்பு இறந்ததற்கு பிறகு ரூமை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கே சென்று விட்டதாகவும் சொன்னார்கள். கம்பெனியில் விசாரித்த போது அங்கே அப்புவுக்கு நல்ல பேர் ஒரு தொந்தரவும் கிடையாது என்றனர் .முத்துவின் அட்ரஸ் வாங்கினான் ராகவ். நேரில் போய் பார்ப்பது என முடிவெடுத்தான் .முத்துவின் சொந்த ஊர் தூத்துக்குடி பக்கத்தில் ஒரு கிராமம் .
தூத்துக்குடியில் சொந்த வீடு இருந்தது முத்துவுக்கு .அவர்கள் ஓரளவுக்கு வசதியானவர்கள்தான் .முத்துவின் போட்டோவை வாட்ஸாப்ப் செய்திருந்தார்கள் . இவன் முன்பே போன் செய்து இருக்கலாம் ஆனால் அது அவருக்கும் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும் என நினைத்தான் .

முத்து ஊரில் இல்லையென்று சொன்னார்கள் இவனுக்கு ஏமாற்றமாய் இருந்தது ரெண்டு நாளில் வந்து விடுவதாக சொல்லிவிட்டு மெட்ராஸுக்கு போயிருக்கிறார் என்றும் சொன்னார்கள் .இவன் அங்கேயே தங்கி பார்த்து விட்டு போகலாம் என முடிவெடுத்தான் . அவன் வந்தா போன் பண்ண சொல்றேன் வேண்டாம்மா விஷயம் கொஞ்சம் urgent . சரி நான் வெளியே எங்கயாவது தங்கி கொள்கிறேன் என்றான் .

ராஜு லொட்ஜ் ல் ரூம் போட்டான் .தூத்துக்குடியில் அதிகம் சுற்றி பார்க்க இடங்கள் இல்லையெனினும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று வரலாம் என யோசித்தான் .முத்து ஊரில் இருப்பதற்கான எல்லா அடையாளங்களும் இருந்தன .என்னவோ மறைக்கிறார்கள் . காத்திருப்போம் . ராம் இங்கே முத்துவை பாக்க வந்திருக்கேன் தூத்துக்குடிக்கு ஓகே ஓகே சொல்லியிருந்தா நாங்களும் வந்திருப்போமே ஏற்கனவே உங்களுக்கு ரொம்ப தொந்தரவு கொடுத்தாச்சு என்றான் .

lodge owner ராஜுவிடம் முத்து எனும் நண்பரை பாக்க வந்திருப்பதாக சொல்லி இருந்தான் .சிங்கப்பூர் முத்தா என்றார் .ஆமா சார் அவனுக்கு உடம்பு சரியில்லேனு வேலையை விட்டு வந்துட்டான் .நீங்க அவன் பிரண்டா பிரண்டோட பிரண்டு . இங்கே எல்லா சவுகரியமும் இருக்கு. நிம்மதியா இருக்கலாம் என்றார் .

திருச்செந்தூர் போய் வந்தான் .அலை கடலென திரண்டிருந்த கூட்டத்தை பார்த்து வியந்தான் .மதியம் விஜய் படம் பார்த்தான் .மூணாம் நாள் காலையிலேயே முத்து இவனை தேடி கொண்டு வந்துவிட்டான் . நீங்க ஏன் சார் இங்கெல்லாம் வரீங்க மொதல்ல கிளம்புங்க எல்லாருக்குமே ஆபத்து .ஏன் முத்து பதட்டமாகுறீங்க அப்பு இறந்ததுதுக்கு அப்புறம் எதுவுமே சரியில்ல சார். நானே உங்கள வந்து பாக்குறேன் இப்போ தயவு செஞ்சு கிளம்புங்க என்றான் . இவ்ளோ தூரம் வந்திருக்கேன் சும்மா திரும்பி போக முடியாது என் குடும்பமும் ஆபத்துல இருக்கு .சரி நீங்க பிடிவாதக்காரனு அப்பு அப்பவே சொல்லி இருக்கான் . வாங்க வீட்டுக்கே போவோம் . பரவாயில்ல வாங்க சார்.
அப்பு எனக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்கான் சார் . ஆனா அவன் என்கிட்டயும் சில உண்மைகளை சொல்லல .ஏதோ பிரச்னையில் மாட்டி இருக்கன்னு தெரியும் எப்படி அவனுக்கு உதவுறதுனு தெர்ல .அவன் திடீர்னு ஊருக்கே போயிடலாம்னு இருக்கேன் முத்து வேண்டிய ஒருத்தவங்களுக்கு பிரச்னை அப்டின்னான் . கடனெல்லாம் இருக்கேப்பா அப்டின்னு கேட்டதுக்கு வீட்டை வித்து அடைக்க வேண்டியதுதான்னு சொன்னான் . நான்தான் அவனுக்கு அந்த ஹார்ட் டிஸ்கை இங்கேயிருந்து என் நண்பன் ஹமீது கிட்டே இருந்து வரவழைச்சு குடுத்தேன் .அத பார்த்த அப்பு ரொம்ப தேங்க்ஸ் முத்து இத நான் எப்பவும் மறக்க மாட்டேன்னு சொல்லிட்டு போனான் .அதுக்கப்புறம் அவனை நான் பாக்கவேயில்லை .ரெண்டு நாள் கழிச்சு என் friend ஹமீது accident ல செத்தப்புறம்தான் அதோட சீரியஸ்நெஸ் புரிஞ்சது . ஹமீது விபத்துல சாகல அது oru ஹிட் அண்ட் ரன் கேஸ்.

எனக்கும் தொடர்ச்சியா மிரட்டல் கால் வந்தது .நான் அங்கேயிருந்து resign பண்ணிட்டு இந்த ஊருக்கு வந்துட்டேன் .ஹ்ம்ம் இப்போதுதான் அவனுக்கு தூத்துக்குடியில்தான் ஷியாம் இறந்தது ஞாபகம் வந்தது .நீ பயப்படவேண்டாம் முத்து .எல்லாம் solve ஆயிடும் .இங்கே இப்போ என்ன பண்றே .நான் ஏற்க்கனவே apprentice முடிச்சதுனாலே எலக்ட்ரிசிட்டி போர்டு ல வேலை பார்க்குறேன் . சரி முத்து நான் கிளம்பறேன் இருங்க சார் போலாம் இன்னைக்கி என் பொண்ணுக்கு பர்த்டே அதை சிம்பிள் ஆ celebrate பன்றோம் பிரியாணியோட .திரும்ப சென்னைக்கு ட்ரைன் ஏறினான் ராகவ் .ராமை பார்த்து ரொம்ப நாளாச்சே . ஸ்டேஷனுக்கு வந்திருந்தான் ராம் . தீபு எப்படி இருக்காங்க அவ நல்லா இருக்கா .இந்த தடவ நம்ம வீட்ல ஸ்டே பண்றீங்க என்றான் .

ராமுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை இருந்த போதும் வீட்டை நீட்டாக வைத்திருந்தான் .ஏன் சார் கல்யாணம் பண்ணிக்கலே . நாமளே எப்போடா ஜெயிலுக்கு போவோம் நாலு கேசு கிடைக்கும்னு இருக்கோம் .நீங்க வேற சார் ஏதாவது மீரா விஷயத்துல அப்டேட் . pen டிரைவ் விவகாரத்தை சொன்னான் .யு எஸ் போறீங்களா ராகவ். யாரு நானா இல்ல சார் திவ்யாவையும் ரஞ்சனியையும் விட்டு இனி நான் எங்கயும் போக மாட்டேன்
இட்ஸ் ஓகே ஷியாம் பத்தி ஒரு இன்போர்மஷனும் இல்ல அதான் எனக்கு கவலையா இருக்கு .தூத்துக்குடி போனீங்களே என்னாச்சு முத்துவை பார்த்தேன் பாவம் பயந்து போய் இருக்காரு .நீங்க ரெஸ்ட் எடுங்க நான் ஆபீஸ் வரைக்கும் போய்ட்டு வரேன்.

இவன் டிபன் சாப்பிட்டுவிட்டு கண்ணயர்ந்தான் .தீபுவிடமிருந்து கால் வந்திருந்தது . ஹாய் தீபு எப்படி இருக்கீங்க பாஸ் அங்கே இல்லையா இல்லையே தீபு அவர் ஆபீஸ் வரதாதான் சொல்லிட்டு போனாரு .மணி 3 ஆகி இருந்தது .அவர் போன் சுவிட்ச் ஆப் ல இருக்குது . சம்திங் wrong அவர் எப்போவுமே இப்படி பண்ண மாட்டார் .நீங்க அங்கேயே இருங்க அரைமணி நேரத்துல வரேன் .

அடுத்த பிரச்னையா என யோசிக்கும் போதே தீபுவும் ராமும் சிரித்து கொண்டே வந்தார்கள் .என்ன சார் பயந்துடீங்களா அட போங்கப்பா நான் எம்பசி வரைக்கும் போயிருந்தேன் .என் விசா சம்பந்தமா போனை பிடுங்கி வெச்சுட்டாங்க. அதுக்குள்ள தீபு பசிக்குது வெளிய எங்கேயாவது சாப்பிட போலாமா ஓகே டன் என்றான் ராகவ்

தீபு செமையாக ஆர்டர் செய்தாள். இவன் புன்னகையுடன் இருவரையும் பார்த்தான் . தீபு எப்போவுமே இப்படித்தான் . அடுத்த வாரம் யு எஸ் போறேன் தீபு என்றான் ராம் . என்ன திடீர்னு ஷியாம் பணத்தை எடுக்கறதுக்கு முன்னாடி அவன அரெஸ்ட் பண்ணனும் .அவனால மீரா இல்லாம இல்ல மீராவோட டெத் செர்டிபிகேட் இல்லேன்னா நாமினி இல்லாம பணத்தை எடுக்க முடியாது . அவன் எப்படியும் வெளியே வருவான் .நான் யு எஸ் போறது ஷியாம் வேற ஏதாவது பிளான் பண்ணியிருக்கானான்னு பாக்கத்தான் .

நீங்க இங்க இருங்க ராகவ் மீரா வீட்டுக்கு நிச்சயம் ஷ்யாமோ இல்லே வேற யாரோ டெத் செர்டிபிகேட் வாங்க வருவாங்க. அவங்கள கிளோஸ் ஆ மானிட்டர் பண்ணு தீபா ஏற்கனவே ஒரு கேமரா ஒன்னு மாடிலே செட் பண்ணியிருக்கேன் .இதுவரைக்கும் சந்தேகப்படுறமாதிரி யாரும் வரலே வேற எங்கே மீரா கேமரா வெச்சிருக்கே அது secret என்று சொல்லி சிரித்தாள் . சிங்காரம் இன்ஸ்பெக்டர் ரவியை வறுத்தெடுத்தான் எப்படி மீரா இறந்த விஷயம் வெளியே லீக் ஆயிற்று ? ரவி வேறொரு ஐடியா செய்தான்.

ராம் வழியனுப்ப யாரையும் வர வேண்டாமென சொல்லிவிட்டான். தீபுவுக்கு இது ஏமாற்றமாய் இருந்தது .ஏற்கனவே இன்ஸ்பெக்டர் ரவியின் சந்தேக பார்வை அவன் மீது விழுந்து விட்டது . மீராவின் வீட்டில் விசாரித்தபோது ரெண்டாவது குரூப் வந்து 10000 தந்தார்கள் என்ற போதே ரவிக்கு மின்னலடித்தது .

தீபுவும் ராகவும் அவ்வப்போது ராமிடம் பேசி வந்தார்கள் . ராம் ஊருக்கு போன ரெண்டாவது நாளில் இன்ஸ்பெக்டர் ரவி மீராவின் அறையை சோதிப்பது தெரிந்தது . அவனுக்கு எதுவும் கிடைக்க போவதில்லை என்றால் தீபு . ஷியாம் ஒரு வேலை மாறுவேஷத்தில் இருந்தால் என சந்தேகத்தை கிளப்பினான் ராகவ் .நான் already 5 6 டிசைன் போட்டு வெச்சிருக்கேன் உங்களுக்கு அனுப்புறேன் என்றாள். ராமுக்கு ஏற்கனவே அனுப்பிட்டேன்.தீபு இன்டெலிஜெண்ட் கேர்ள் தான் என வியந்தான் .

இவனுக்கு போர் அடித்தது . கடற்கரைக்கு போகலாமா என்றான் கொஞ்சம் பொறுங்க சார் கிட்டே பேசிட்டு வரேன் போகலாம் . மரீனா பீச் அவனுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை தந்தது . நீ யாரையும் லவ் பண்ணலயா தீபு என்ன விடுங்க நீங்க படிக்கிறப்போ ரஞ்சனியை லவ் பண்ணலையா அதான் என் பிளாஷ் back சொன்னேனே அவ ரொம்ப கோவக்காரி .நான் ஒரு பையனை லவ் பண்ணேன் ஒன்னு சைடு லவ் தான் .ஏரியா பையன்தான் . தெனமும் பார்ப்பேன் பேசுவேன் ஆனா மனசுக்குள்ள ஒரு பயம் சொன்னா நம்மள ஒதுக்கிடுவானோன்னு .இப்பவும் பேசறேன் பழகுறேன். அவனுக்கு கல்யாணமாகி ரெண்டு பிள்ளைகள் இருக்கு .அந்த பரவசம் மட்டும் போகல .