ஸ்ரீ கேசில் மறக்க முடியாத வாழ்க்கை பாடங்களை ராம் கற்றுக்கொண்டான் . தற்கொலைக்கு தூண்டுவதும் குற்றம்தான் . டி ஜெ முருகன் என்ன காரணத்திற்காக பொய் சொன்னான் என்பது தெரியவில்லை .பயம் மனிதனை குற்றவாளி ஆக்குகிறது . ஸ்ரீக்கு எந்த குற்ற உணர்வும் இல்லாததும் ஆச்சயர்யமாய் இருந்தது . கோபி,பவன் பேராசை பெரு நஷ்டத்துக்கு உதாரணம்.
தீபக் ,லதா இருவருமே நீண்ட விடுப்பில் போயினர். இன்னும் எத்தனை முடியாத வழக்குகள் இவனுக்குக்காக காத்திருக்கிறது. இதையும் கடந்துதான் ஆகவேண்டும்.இப்படியாக யோசித்து கண் அயர்ந்துவிட்டான் . மணி மதியம் 3 ஆகி இருந்தது . எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தினான் . லதாவும் , தீபக்கும் நாளை திரும்ப வருவார்கள். இன்ஸ்பெக்டர் ரமேஷ் போன் பண்ணியிருந்தான் ஒரு கேஸ். பெண்ணுக்கு அப்பா அம்மா இல்லை . லவ் marriage .வேறொருத்தரோடு பையனுக்கு தொடர்பு .பையனை காணவில்லை , தேடுகிறார்கள் . அந்த illegal தொடர்புடைய பெண்னுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கிறது . அவனை கடத்தி கொண்டு போய்விட்டார்கள் என புகார் .பையனை கண்டுபிடித்து தர சொல்லி கலெக்டர் ஆபீஸ் முன் பெண் தீக்குளிக்க முயற்சி.
எதுக்கு ரமேஷ் இந்த கேஸ் . அவ எனக்கு தங்கச்சி முறை வேணும் பாக்கவே பாவமா இருக்கு . சரி பாக்குறேன் . வீடு அட்ரஸ் மெசேஜ் பண்ணு. எப்படி பாஸ் உங்களுக்கு மட்டும் இது மாதிரி கேஸ் கிடைக்குது ?என்றான் தீபக் . ஒரு robbery ,ஒரு சேசிங் எதுவுமில்லாம கேஸ் . டேய் தீபக் ஓகே ஓகே நான் கிளம்பிட்டேன். லதாவையும் கூடி போ . ரொம்ப ரிஸ்க்கான கேஸ்.
சொல்லும்மா என்ன நடந்தது . உன் பேரென்ன? உன் புருஷன் பேரென்னஎன் பேரு கீர்த்தி என் புருஷன் பேரு ராம்குமார் . என்னோட பிரசவ காலத்துல ஹெல்ப்புக்கு வந்தாங்க பேரு கிரிஜா . அப்புறம் என் புருஷனுக்கும் அந்த பொம்பளைக்கும் பழக்கமாயிடுச்சி .
இப்போ என் புருஷன கடத்திட்டாங்க . எனக்கு ரொம்ப பயமாயிருக்கு . அந்த லேடி புருஷன் பேரு ராஜபாண்டி . அந்த லேடி போன் நம்பர் குடுங்க
பேசி பார்க்குறேன் .பேசி பார்த்தான் ஒன்றும் பலனில்லை
பேசாம கோர்ட்ல மனு போட்டு பாப்போமா . என்கிட்டே வக்கீலுக்கு பணமில்லைங்க . சரி உங்க புருஷன் ஸ்நேகிதங்க யாருக்காச்சும் அவர் எப்போவுமே எங்க போவாருன்னு தெரியுமா . தெரியும் சாயங்காலம் ஆனா 6 மணிக்கு தோப்பு பக்கம் இருக்குற டாஸ்மாக்குக்கு வந்துடுவார் .
சரி நான் போய் பாக்குறேன் . நல்லா தெரியுமா இவரை கடத்தி வெச்சிருக்காங்களா இல்ல இவரே போய் அவங்க கூட சேந்துக்கிட்டாரா . இல்ல சார் அவ புருஷன் மெரட்டுன உடனே கொஞ்ச நாள் திருந்தி இருந்தாரு அதுக்கப்புறம் அந்த பொம்பளையும் அவரும் பிரிஞ்சு இருந்தாங்க இப்போ மறுபடியும் அந்த பொம்பள இவரை தூக்கிட்டு போயிடுச்சு . ராஜபாண்டிக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்குற மாறி தெர்ல . எதுக்கும் ராஜபாண்டி கிட்டேயும் பேசி பாப்போம் . நாளைக்கு பஞ்சாயத்து இருக்கு அங்க வாங்க தம்பி என்றான் .
ஊர் தலைவர் கிரிஜா,ராஜ்குமார் ,ராஜபாண்டி,கீர்த்தி எல்லோரும் ஆஜராயினர் . ராஜ்குமார் கண்டுக்கவேயில்லை. மிரட்டி இருப்பா சார் என்றாள் கீர்த்தி . அத்து விட்டுடுங்க சாமி என்றான் ராஜபாண்டி . சரிப்பா அந்த பொண்ணு என்ன சொல்லுதுனு கேப்போம் . சரி அத்து விட்டுடுங்க என்றாள் கிரிஜா . எனக்கு ஒரு நியாயத்தை சொல்லிட்டு அத்து விடுங்க என்றாள் கீர்த்தி .உன் பேர் என்னம்மா கீர்த்தி எந்த ஊரு. பக்கத்துக்கு ஊரு செட்டிப்பாறை . அப்படியா என்னப்பா நீ இந்த பொண்ணு கூட வாழ்ந்துட்டு ஒரு கைகுழந்தையும் குடுத்துட்டு இப்போ அடுத்தவன் பொண்டாட்டி கூட போறேன்னா என்ன நியாயம் இது. எனக்கு வாழ இஷ்டம் இல்லேங்கய்யா . அப்போ உங்க ஊரு பஞ்சாயத்துல சொல்லி அத்து விட்டு வந்து இங்கே இரு . அது வரை இந்த ஊரு பக்கம் தலை வெச்சு படுக்க கூடாது . கிரிஜா நீ என்னம்மா சொல்ற .பஞ்சாயத்து தீர்ப்புக்கு கட்டுப்படுறேன் அப்படி இவன் என்னை ஏமாத்துனா இதே பஞ்சாயத்து வாசல்லே தொங்கிப்புடுவேன் பார்த்துக்கங்க என்றாள் . ராஜ்குமார் கீர்த்தி தம்பதி தீபக்கை சந்தித்தனர் . குழந்தையும் இவளையும் கொன்னுடுவேன்னு மெரட்டுனா சார் எனக்கு வேற வழி தெர்ல . சட்டப்படி அவகிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுனு தெரியல . தெரியாம தப்பு பண்ணிட்டேன் என்றான் ராஜ்குமார். போலீசுக்கு போனால் என்ன என்றான் தீபக் . அதுவும் பண்ணி பார்த்தாச்சு . ராமுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னான் தீபக் . ஆள் கிடைச்சுட்டாப்ல இல்ல அதோட விட்டுடு அவர்களுக்குள்ளே பேசி தீர்த்துக்கிடட்டும் .அப்டி இல்ல சார் கீர்த்தியை பார்த்தா பாவமாயிருக்கு . மறுபடி ஏதாவது ஒண்ணுன்னா நாளைக்கு இந்த ஊரு பஞ்சாயத்து இருக்கு நீங்க வாங்க சார். சரி நான் வரேன் தீபக் .
பஞ்சாயத்து முரட்டு ஆசாமிகளால் நிறைந்து இருந்தது . இவனுக்கு ராம் இன்னும் வரவில்லையே என்று இருந்தது . என்னப்பா ஆரம்பிக்கலாமா இருங்க சார் ராம் சார் வந்துடட்டும் என்றான் தீபக் . நீ யாருப்பா அது வந்து டவுன் கட்டப்பஞ்சாயத்தா அதெல்லாம் இங்கே செல்லாது ஊர்க்கட்டுப்பாடு தெரியும் ல . அதற்குள் ராம் வந்து விட்டான் .கிரிஜா ஆவேசமாய் வாதிட்டாள் . இப்போ என் புருஷனையும் இவனுக்காக அத்து விட்டுட்டேன் . வேணுமுன்னா நானும் சேர்ந்து இவங்க கூட வாழ தயார் . ராம் இந்த பொண்ணுக்கு வேறு சிலரோடவும் தொடர்பு இருக்கு என்றான் . உன் நாக்கு அழுகி போயிடும் என்றாள் . என்கிட்டே ஆதாரம் இருக்கு . பஞ்சாயத்துல போட்டு காட்டுனா அப்புறம் நீ ஊருக்கு வெளியே தலை காட்ட முடியாது . என்ன மெரட்டுறீங்களா . சாத்தியமா எனக்கு அப்படி யார் கூடையும் தொடர்பு கெடயாது . சரி உன் போனை குடு யார் கூடெல்லாம் உனக்கு connection இருக்குனு நிரூபிக்கிறேன் . அதெல்லாம் ஒன்னும் நீங்க நிரூபிக்க தேவையில்லை . நீ இவன் சொத்துக்கு ஆசைப்பட்டுதான் இப்படியெல்லாம் பண்றேன்னு ஊருக்கு தெரியாது ஆனா எனக்கு தெரியும் . இந்தா போனு நிரூபிச்சு காட்டு .ஒரு நம்பருக்கு காலை போட்டான் . என்ன கிரிஜா ஆளையே காணோம் சாயங்காலம் வருவியா பணம் போட்டு உடுறேன். நீ யாருப்பா என்னையா யாருன்னு கேக்குற கிரிஜா இல்லையா ? சரி வெச்சுடறேன் . இதை கேட்ட மொத்த பஞ்சாயத்தும் அதிர்ந்தது. இது ஏதோ ஏமாத்து வேலை . கிரிஜா அழுது புலம்பினாள் .சரிம்மா இது உன் போன் தானே உன் கண்ணு முன்னாடிதான் பேசினார் . அப்போ எனக்கு ஒரு முடிவை சொல்லிட்டு அவ கூட அவனை வாழ சொல்லுங்க . மாச மாசம் ஒரு தொகையை பஞ்சாயத்து மூலமா கிரிஜாவுக்கு குடுக்க வேண்டியது . இனிமே கிரிஜா எந்த தொந்தரவும் செய்யமாட்டேனு எழுதி குடுக்க வேண்டியது . இதுக்கு எல்லோரும் சம்மதமா. கீர்த்தி தீபக்க்கும். ராமுக்கும் மனமார நன்றி சொன்னாள்.
நான் ராஜபாண்டி கிட்டே பேசியிருந்தேன். அவர்தான் இந்த ஐடியா குடுத்தாரு . அவரு ரொம்ப வருத்தப்பட்டாரு . ராஜபாண்டிதான் கிரிஜா போன்ல டார்லிங் 1 டார்லிங் 2 அப்டின்னு save பண்ணியிருக்கும்னு சொன்னாரு . எப்டியோ ஒரு பொண்ணு வாழ்க்கையை காப்பாத்தியாச்சு. இல்லே ராஜபாண்டிகிட்டே கூட கிரிஜா சேர்ந்து வாழ சொல்லி இருக்கேன் , கொஞ்சம் பணமும் கொடுத்தேன் .நான் ராஜபாண்டி கிட்டே பேசியிருந்தேன். அவர்தான் இந்த ஐடியா குடுத்தாரு . அவரு ரொம்ப வருத்தப்பட்டாரு . ராஜபாண்டிதான் கிரிஜா போன்ல டார்லிங் 1 டார்லிங் 2 அப்டின்னு save பண்ணியிருக்கும்னு சொன்னாரு . எப்டியோ ஒரு பொண்ணு வாழ்க்கையை காப்பாத்தியாச்சு. இல்லே ராஜபாண்டிகிட்டே கூட கிரிஜா சேர்ந்து வாழ சொல்லி இருக்கேன் , கொஞ்சம் பணமும் கொடுத்தேன் .
பஞ்சாயத்து தலைவருக்கும் பணம் குடுத்தேன் . சில சமயம் ரொம்ப நியாயம் பேசுனா எடுபடாது .
தீபுவிற்கு ஆண்குழந்தை பிறந்து இருந்தது . இனி எல்லாமே மாறிடும் என்றான் ராம். பெயர் சூட்டு விழாவும் சிறப்பாக நடை பெற்றது.தினேஷ் என்று மூன்று முறை காதில் சொன்னார்கள் . சீக்கிரமே டூட்டிக்கு வரணும்னு என் மனசு துடிக்குது . ஆனா பிள்ளையை நெனச்சாலும் தீபு புலம்பினாள் . சரி தீபு இப்போ ஒன்னும் urgent ஒர்க் எதுவும் இல்லே . நீ பொறுமையா வா உன் இடம் எப்போவுமே இருக்கும் .
ராகுவும் ரஞ்சனியும் வந்திருந்தார்கள். உங்க விஷேஷம் எதுவும் இல்லையா எங்களுக்கு திவ்யாவே போதும்னு முடிவு பண்ணிட்டோம் . ஷியாம் கேஸ் என்னவாயிற்று என்ன ராகவ் கேட்டான் . ரஞ்சனியும் ராம் முகத்தையே பார்த்தாள். விசாரிச்சுக்கிட்டு இருக்காங்க . அங்க இருக்குற நம்ம குரூப்ல அப்பப்போ அப்டேட் பண்றாங்க என்றான். நாம ஒரு குரூப் ஸ்டார்ட் பண்ணா என்ன என்றான் தீபக் . எதுக்குப்பா பரவாயில்ல சார் அட்மினா லதா அக்காவே இருக்கட்டும் . குரூப்புக்கு என்ன பேர் வைக்கலாம் . ராம் அண்ட் அஸோஸியேட்ஸ். நல்லா இருக்கே என்றாள் ரஞ்சனி . சென்னைக்கு வரும்படி ராகவையும் ,ரஞ்சனியையும் கேட்டுக்கொண்டான் . அடுத்த தடவை திவ்யாவையும் அழைத்து கொண்டு வரும்படி சொன்னான் .
அடுத்தது லதா கல்யாணம்தான் என தீபக் கிண்டல் செய்து வந்தான். மாப்பிள்ளை யாரு நம்ம செக்யூரிட்டி கேமரா அசோக் தான். அவன்தான் ஜெயிலுக்கு போயிட்டானே. இருந்தா என்ன . லதா தீபக்கின் காதலி பிடித்து திருகினாள் . மொதல்ல ராம் சாருக்கு கல்யாணம் அப்புறம்தான் . சரிதான் கடைசில என் டாபிக் வந்துடீங்களா போய் வேலைய பாருங்க என்றான் ராம் . வாழ்க்கை இப்படியே ஸ்மூத் ஆகா போனால் போதுமென்று தோன்றியது . ஹக்கீம் போன் செய்திருந்தார் . கேரளாவுக்கு வர சொல்லி , தீபுவுக்கு குழந்தை பிறந்த விஷயத்தை சொன்னான் . ரொம்ப சந்தோஷப்பட்டார். தீப்பூவையும் அழைச்சுக்கிட்டு வாங்க என்றார் . கண்டிப்பாக என்றான்.