Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

இரவுக்கு ஆயிரம் கைகள் - 14

நானே போய் பாக்குறேன் என்றான் ராம். ஓகே சார் .மணி 9 ஆகியிருந்தது .ராம் பிருந்தா ஹோட்டல் அடைந்தவுடன் போன் செய்தான் அந்த left corner ல எல்லோ சுடிதார் .நல்ல அழகாய் இருந்தாள்.நிச்சயம் ஆபத்து இருக்கிறது .அதிதியும் கூட இருந்தாள் . அங்கிள்க்கு ஹாய் சொல்லு . ஹாய் அங்கிள். ரொம்ப சாரி அதிதி கிருபா கூட இருந்த வரை என்னால அவர் பேச்சை மீற முடியாது .உங்க மேல complaint பண்ணியிருக்கிறதா சொன்னார். விஷயத்துக்கு வாங்க . எங்க அப்பா இறந்த கேஸ் ,அக்கா இறந்த கேஸ் ரெண்டுமே suicide போல தெரிஞ்சாலும் அதுல ஏதோ மர்மம் இருக்கு இதுல அப்பாவோட எஸ் பி ஐ லாக்கர் சாவி இருக்கு நாளைக்கு போய் பாருங்க நான் ஏற்கனவே பேசிட்டேன் . ஏதாவது clue கிடைக்கலாம் . சரி நீங்க கிளம்புங்க ஏதாவது மெசேஜ் urgent ஆ சொல்லனும்னா கேஷ் கவுண்டர் கேர்ள் கிட்ட சொல்லி விடுங்க அவங்க என் friend தான் .

என்ன ஆச்சு சார் போனீங்களே கேஸ் எடுக்குறோமோ . அவ என்னவோ குழம்பி நம்மளையும் குழப்ப பாக்குறா .பாவம் அந்த அதிதி அவளுக்காகவேனும் இந்த கேஸ் எடுக்கணும் .தீபக் நீ என் கூட வா . தீபக் எனக்கேதும் நடக்க வாய்ப்பிருக்கு .அப்டி நடந்தாலும் இந்த கேஸ் நீ கண்டிப்பா follow பண்ணனும் . மதிய நேரம் 12 தொட்டிருந்தது . மிஸ்டர் மாரியப்பன் அந்த லாஸ்ட் சீட். வணக்கம் சார். ராம் தீப்தி அனுப்பியிருந்தாங்க உக்காருங்க சார் சாவி கொண்டு வந்திருக்கீங்களா .
இருக்கு அப்போ இந்த லெட்ஜெர்ல கையெழுத்து போட்டு உள்ளே போங்க . லாக்கரில் பத்திரங்கள் இருந்தது லெட்டர் ஒன்றும் மொபைல் ஒன்றும் இருந்தது.

ஒரு சாவியை மாரியப்பனிடம் ஒப்படைத்தான் . ரொம்ப தேங்க்ஸ் என்றான் .தீப்தி பெங்களூரு சென்று விட்டதால் என்ன செய்வதென்று யோசித்தான் , வக்கீல் ஒருவரிடம் பத்திரங்களை காட்டி விசாரித்ததில் மனோகர் சொத்து முழுவதையும் பேத்தி அதிதி பேரில் எழுதியிருந்தார் .லெட்டரை பிரித்தான். டியர் சார், இந்த ரெண்டாவது கடிதம் உங்க கையில் கிடைக்கும் போது என் நிலை என்னவாயிருக்கும்னு சொல்ல முடியாது.என் பொண்ணு பூர்ணிமா மொபைல் போன் .அதுல அவ கடைசியா குடுத்த வாக்குமூலம் இருக்கு. என்னால அந்த போனை ஓபன் பண்ண முடியல .தீப்தி உங்களுக்கு எல்லா ஹெல்பும் பண்ணுவா .என் பொண்ணு சாவுக்கு நீதி கிடைக்கணும் சார் . நன்றி இப்படிக்கு மனோகர் மொபைல் லேட்டஸ்ட் போன் ஆகத்தான் இருந்தது. password லாக் ஆகி இருந்தது .சரி தீபக் நீ போய் இதை விசாரிச்சுட்டு வா. நான் ஆபீஸ் போறேன். suppose ஓபன் ஆச்சுன்னா எனக்கு இம்மீடியட் ஆஹ் போன் பண்ணு .ஓகே சார் .

தீப்திக்கு போனை போட்டான் . உடனடியாக அவள் எடுக்கவில்லை . 10 நிமிஷம் கழித்து கூப்பிடுறீங்களா என்று மெசேஜ் அனுப்பியிருந்தாள் .மறுபடி போனை போட்டபோது கிருபாதான் எடுத்தான் . உனக்கு சொன்னா புரியாதுல்ல திரும்ப திரும்ப ஏன் அவளை தொந்தரவு பண்ற . அவதான் எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டாளாம் . இதுவே கடைசியா இருக்கட்டும் . சாரி கிருபா என்று போனை வைத்தான் .

என்னாச்சு தீபக் ஒன்னும் பண்ணமுடியாது அப்டின்னு சொல்லிட்டாங்க சார், ஈமெயில் password வேற ஏதாவது key வர்ட் இருந்தா ட்ரை பண்ணி பாக்க சொன்னாங்க . சிம் கார்டு கழட்டி செக் பண்ணதுல ஒன்னும் மெசேஜ் இல்ல . மெசேஜ் எல்லாம் delete பண்ணி இருக்காங்க . சரி தீபக் நீ வந்துடு .

மறுபடி தீப்தியே கூப்பிட்டாள். தயங்கியவாறே போனை எடுத்தாள். பேங்க் போனீங்களே என்ன ஆச்சு விஷயத்தை சொன்னான் .அந்த மொபைல் என்னாச்சு? அதுவும் use இல்ல . தீப்தி பூர்ணிமா மரணத்துல சந்தேகமா இருக்கு திரும்ப போஸ்டமோர்டெம் பண்ணனும்னு ஒரு லெட்டர் type பண்ணி குடுங்க . அவங்கள உங்க வழக்கப்படி புதைக்கத்தானே செஞ்சீங்க . ஆமா சார் நான் ஏற்கனவே குடுத்துருக்கேன் ஆனா இன்ஸ்பெக்டர் பரமசிவம் அதை கண்டுக்கவேயில்ல .சரி நான் பாத்துக்கிறேன் அதோட copy இருந்தா வாட்ஸாப்ப் பண்ணுங்க . ஓகே சார் பண்றேன் .

மறுநாள் இன்ஸ்பெக்டர் பரமசிவத்தை சந்தித்தான் ராம். இவனை பார்த்தவுடனே அவன் வெளியே கிளம்புவது போல் பாவனை செய்து கிளம்பி போய்விட்டான் . இவன் அங்கிருந்தவர்களிடம் விசாரித்தான். அந்த போஸ்டமோர்டெம் ரிப்போர்ட்ல பெரிசா ஒன்னும் இல்ல சார் நீங்க போங்க.
வேணும்னா டாக்டர் சத்யம் தான் ரிப்போர்ட் குடுத்தார் அவர்கிட்டே கேளுங்க . டாக்டர் சத்யம் என சொல்லி பார்த்துக்கொண்டான் . ஆமா நான்தான் சைன் பண்ணிகுடுத்தேன். அதுல யாரும் அவங்கள போர்ஸ் பண்ண மாதிரி தெரியல சார் . இட்ஸ் எ pure suicide என்றார். அவங்க பின் மண்டைல யாரோ தாக்குன மாதிரியும் ரத்தம் நெறைய லாஸ் ஆயிருக்குன்னும் சொல்றாங்களே . வெளியே போங்க சார் . வெளியே போங்க. நான்சென்ஸ்.வந்துட்டானுக டாக்டர் படிப்பு படிச்சா மாறி.

இவன் அமைதியாக வெளியேறினான் .போஸ்டமோர்டெம் செய்த ஆளிடம் ஏற்கனவே விசாரித்திருந்தான் . தீப்தியிடம் விஷயத்தை சொன்னான் . நான் ஊருக்கு வரதுக்குள்ளேயே அவசர அவசரமா அடக்கம் பண்ணீட்டாங்க. இப்போ என்ன பண்ண போறீங்க ராம் . இன்ஸ்பெக்டர் பரசிவம் மேல ஒரு complaint லெட்டர் கமிஷனர் கிட்டே குடுக்க போறேன் .ஓகே சார் .அந்த போனை ஓபன் பண்ண ஏதாவது password டைரில எழுதி இருக்கலாம் தேடி பாருங்க அவங்க things handbag எல்லாத்தயும் ஒரு தடவ செக் பண்ணுங்க .பண்றேன் சார் என்றாள்.கமிஷனர் அலுவலகத்தில் மனோகர் எழுதிய லெட்டரையும், தீப்தி குடுத்த கம்பளைண்ட் copy இணைத்து மனுவாக கொடுத்தான். போலீஸ்துறை இரு முனை கத்தி போன்றது என்பதை ராம் அறிவான் . இருப்பினும் இந்த ரிஸ்க் அவசியம் என நினைத்தான்.

கொஞ்ச நாளில் மறு போஸ்டமோர்டெம்க்கு உத்தரவு வந்தது அதை வீடியோ பண்ணவும் கோர்ட் ஆணையிட்டிருந்தது . தீப்தி ஊரிலிருந்து வந்திருந்தாள். கிருபாவும் வந்திருந்தான்.உடல் தொண்டியெடுக்கப்பட்டு போஸ்டமோர்டெம் செய்யப்பட்டது. police மறு போஸ்ட்மார்ட்ட அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்யவதாக சொல்லி இருந்தார்கள் .

லதாவிடம் போனை ஓபன் செய்ய முயற்சி செய்யுமாறு சொல்லி இருந்தான் . லதா தான் வழக்கமாக password சேமிக்கும் முறைகளில் முயற்சித்தாள். திடீரென அவங்க husband பேரென்ன சார் என்றாள் . கிருபாகரன் கிருபா என்றதும் அவள் கண்களில் மின்னலடித்தது . கிருபா என்று type செய்தும் ஓபன் ஆகவில்லை. கிருபா ஐ லவ் யு என்று type பண்ணியதும் ஓபன் ஆனது.குழந்தை அதிதி பேசும் வீடியோ தான் நிறைய இருந்தது . deleted விடியோவும் செக் செய்தான் அதிலும் ஒன்றும் இல்லை. பூர்ணிமா தற்கொலைதான் செய்து கொண்டாளா என யோசித்தான் . குழந்தை இல்லை என்று சொன்னார்களே .உண்மையில் அதனால் இருக்குமோ .

போனை ஓபன் பண்ணியாச்சு தீப்தி .என்னாச்சு சார் ஏதாவது information கெடைச்சுதா ஒன்னும் இல்லே . அவ ரெண்டு போன் வெச்சிருந்தா சார் . நீங்க வெச்சிருக்க போன்ல இல்லேன்னா இன்னொரு போனை கண்டுபிடிக்கணும் .அதை கிருபாதான் ஒளிச்சி வெச்சிருப்பான் . நான் தேடி பாக்குறேன் . சீக்கிரம் தீப்தி அவனால குழந்தைக்கும் ஆபத்து வரலாம் . புரியுது சார்

இன்னொரு போனா அதை எங்கே போய் தேடுவது . இரண்டாவது போஸ்ட்மோர்ட்ட அறிக்கையும் வந்து விட்டது. பூர்ணிமா பலமான ஆயுதத்தால் சுத்தி போன்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டு ரத்தம் போய்தான் இருந்திருக்கிறாள் . தூக்கு போட்டதனால் அல்ல . கேஸ் மறுபடி ஓபன் செய்ய வேண்டும் என உத்தரவு வந்தது .பழைய வீட்டை போலீஸ் சோதனை செய்தது . இவனும் போயிருந்தான் . வாசலில் இருந்த சிசிடிவி கமெராக்கள் பழுதாகி இருந்தது . என்ன நடந்தது என அக்கம்பக்கத்தில் விசாரித்தார்கள் போலீஸ் . ராத்திரி ரெண்டு மணி இருக்கும் அலறல் சத்தம் கேட்டது என்னனு பார்த்தா கிருபா பூர்ணிமா தூக்குல தொங்கிட்டதா சொன்னாப்ல . உடனே நாங்க போய் பாடியை இறக்குனோம். ஏதாவது அவங்களுக்குள்ள பிரச்னை சே சே அவங்க ரொம்ப ஒத்துமையா இருந்தாங்க சார் .

கொல்லைப்புறம் ஏதோ துர்நாற்றம் அடிக்க அந்த இடத்தை தோண்டிய போது ஆண்பிணம் ஒன்று தட்டுப்பட்டது .மோசமான நிலையில் இருந்ததால் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது எதற்கும் சிசிடிவி கேமரா விடீயோக்களை செக் செய்ய முயற்சித்த போது போலீஸ் அவற்றை எடுத்துக்கொண்டு விட்டது . காணாமல் போன நபர்கள் உடன் ஒப்பிட்டு பார்த்ததில் கிருபாவினுடைய நெருங்கிய நண்பன் குமாரின் சடலம் என தெரிய வந்தது . பூர்ணிமா இறப்பதற்கு சற்று நேரம் முன்புதான் குமாரும் இருந்திருக்கிறான் அதே போல பலமாக தாக்கப்பட்டு இருந்திருக்கிறான் . சுத்தியல் அருகிலிருந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது . செல்போன் ஒன்றும் கிடைத்தது அது பூர்ணிமாவுடைய போனேதான். குமார் எப்படி அன்னேரத்துக்கு அங்கே வந்தான் அப்போது மனோஹன் எங்கிருந்தார் . ஒரே நேரத்தில் இருவரை கொள்ள வேண்டிய அவசியம் என்ன என பல கேள்விகள் ஓடின .தீப்தி அதிர்ந்து போனாள். குமார் அண்ணனா மை god அவர் ரொம்ப நல்ல மாதிரி ஆச்சே என்றாள் .

கேஸ் வேறு திசையில் போய் கொண்டிருந்த நிலையில் கிருபாவை அர்ரெஸ்ட் செய்ய போலீஸ் பெங்களுரு விரைந்தது . ஆனால் அதற்கு முன்பே அவன் அங்கிருந்து தப்பி இருந்தான் .தீப்தியை சென்னை வந்துவிடும்படி ராம் எச்சரித்தான் . இன்னும் ரெண்டு நாட்களில் நான் அங்கே இருப்பேன் இங்கே இருக்க எனக்கும் பயமா இருக்கு என்றாள். ராமுக்கு கிருபாதான் கொலை செய்தானா என்ற சந்தேகம் இருந்தது . எது எப்படியோ இந்த கேஸ் கிருபா கைது செய்யப்பட்டால்தான் உண்மை தெரிய வரும் .

கேஷ் கௌண்ட்டர் கேர்ள் இடமிருந்து போன் வந்தது . தீப்தி விஷத்தை குடித்து விட்டாளாம் உடனடியாக போய் பார்க்கும்படி சொன்னாள் . ராம் திகைத்து நின்றான் .