Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

இரவுக்கு ஆயிரம் கைகள் - 13

லதா அந்த மைக்ரோபோனை எடுத்துவிடலாம் என ஐடியா குடுத்தாள் . அதிலே ரிஸ்க் இருக்கிறது என்றான் ராம். நானே போய் எடுத்துட்றேன் . என்னவோ எனக்கு பயமாயிருக்கு . இப்போ நீ அங்கே போனா சந்தேகம்தான் வரும் .அசோக் அப்பிடியே கண்டுபிடிச்சாலும் ஒன்னும் பிரச்னை இல்லை .சார் வந்து.. இதோட இந்த டாபிக்கை விட்டுடு . நான் வேற வழியா அதை எடுத்துட்றேன் போதுமா என்றான். தீபக் வந்து எந்த microphone ? ஓ அதுவா லதா சிஸ்டர் மாட்டுனா அன்னிக்கி என் treat என சிரித்தான் .

எதிர்பார்த்தது போல் அஷோக்கிறகு ஜாமீன் கிடைக்கவில்லை .எல்லாரும் சேர்ந்து ட்ரிப் போலாமா என்றான் தீபக் .அதெல்லாம் வேண்டாம்பா இப்போதான் புது ஆபீஸ் தொறந்திருக்கோம் செலவு எக்கச்சக்கமா ஆயிருச்சு .முன்னாடி நானும் தீபுவும் மட்டும் இருந்தோம் . இப்போ தீபுவையும் சேர்த்து நாலு பேரு. நியூ கேஸ் எதுவம் கால் வந்ததா . மனோகர் அப்டின்னு ஒருத்தர் கால் பண்ணாரு அவரு மருமகன் சரியில்லை சொத்துக்காக தன்னை கொலை பண்ண பாக்குறார்னு சொல்றாரு . அதுக்கென்ன போலீஸ்கிட்டே போக வேண்டியதுதானே .அவர் மருமகனே போலீஸ்தானாம் பேரு கிருபாகரன் . எப்படியாவது ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்டாரு .
இதுல நாம என்ன பண்ண முடியும் ?அவர் பொண்ணு கிருபாகரன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டதாகவும் சொன்னார் .மனோகர் கூட appointment fix பண்ணுங்க . டீடெயில்ஸ் கேப்போம் .

ரெண்டு நாள் கழித்து போன் செய்த போது மனோகர் போனை எடுக்கவில்லை . இவன் தீபக்கை வீட்டுக்கு அனுப்பி விசாரிக்க சொன்னான் . அவர் இப்போ எல்லா ப்ரோப்ளேமும் solve ஆயிடுச்சு இனிமே நீங்க காண்டாக்ட் பண்ண வேண்டாம்னு சொன்னதாக சொன்னான். சம்திங் wrong என்றான் ராம் . அவரை பயமுறுத்தி இருக்கலாம் .சரி நீ போய் மத்த வேலைய பாரு தீபக் என்றான் . கொஞ்சி கொஞ்சி அலைகள் ஆட கோடை தென்றல் மலர்கள் ஆட என spb கொஞ்சி கொண்டிருந்தார் டிவியில் . இவன் ரஞ்சனி ராகவை நினைத்தான் . போன் பண்ணி ரொம்ப நாள் ஆச்சே அதற்குள் மொபைல் ஒலித்தது . போனை எடுத்தான் . ஐயோ என் பொண்ணை கொன்னுட்டானுங்க சார் என குரல் வந்தது ... யார் பேசறீங்க வெரி சாரி .. நாந்தான் மனோகர் பேசுறேன் சார் . போன் துண்டிக்கப்பட்டது .

இந்த கேஸ் எடுக்கவா வேண்டாமா என குழம்பி போனான். மறுநாள் பேப்பரில் தந்தை மகள் மரணம் . மகள் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை . மனோகர் ஒய்வு பெற்ற அரசு அதிகாரி .குழந்தை இல்லாத ஏக்கத்தில் மகள் பூர்ணிமா இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது . குடும்ப பிரச்னை காரணமா என போலீஸ் விசாரணை .
சார் கூரியர் என்ற குரல் கேட்டு கலைந்தான். கடிதம் அது மனோகரிடம் இருந்துதான் வந்திருந்தது அவசர அவசரமா பிரித்தான் . தீப்தியிடம் எல்லாம் சொல்லி இருக்கிறேன். ஒரு வேளை நான் உயிருடன் இல்லாவிட்டாலும் இந்த கேஸ் தொடர்ந்து நடத்துமாறு கேட்டு கொள்கிறேன் . கிருபா ரொம்ப மோசவனவன் . என் பேத்தி அதிதியை மீட்டு தீப்தியிடம் ஒப்படைக்கவும் . மிகவும் அவசரம் .தீப்தியின் போன் நம்பர் இருந்தது . அவன் அவனுக்கு தெரிந்த போலீஸ் அதிகாரிகளிடம் விசாரித்தான் . உங்களுக்கு எதுக்கு சார் வம்பு . கிருபா ரொம்ப danger ஆன ஆளு சார் என்றார்கள் .

மனோகரை பற்றி வீட்டின் அக்கம்பக்கம் விசாரித்ததில் நேர்மையான அதிகாரி அவருக்கு ரெண்டு பெண்கள் , ஒரு பெண் பூர்ணிமா. இன்னொரு பெண் தீப்தி , தீப்தி பெங்களூருவில் வேலை பார்ப்பதாகவும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்று சொன்னார்கள் . அதிதியை கிருபா தம்பதியர் தத்தெடுத்து வளர்த்து வந்தார்கள் .மனோ நல்ல மனுஷன் சார் என்றார்கள் .சவாலான இந்த கேஸ் லதா, தீபக் நடத்தட்டும் என நினைத்து லதாவிடம் சொன்னான் . ஓகே சார் நாங்க பார்த்துக்குறோம் . தீப்தியிடம் பேச முயன்ற போது அப்பா ஏதாவது அப்படித்தான் பண்ணுவாரு .அவருக்கு அவங்க லவ் marriage பண்ணது பிடிக்கலே , அவரே அக்காவை கொன்னுட்டு ட்ராமா போட்டாரு . அப்புறம் ஏன் தற்கொலை பண்ணிகிட்டாரு ?அதை பத்தி உங்களுக்கென்ன சார் கவலை இனிமே நீங்க இதுல தலையிட வேண்டாம் என பட்டென போனை வைத்தாள் தீப்தி.

வீட்டுக்கு நேரில் போனபோது அவர்கள் வீட்டை விற்றுவிட்டு பெங்களூருவுக்கே போய்விட்டதாகவும், கிருபா போலீஸ் வேலையை resign பண்ணிவிட்டான் .
அசோக்கிற்கு ஜாமீன் கிடைத்து விட்டது . எல்லோரும் அலெர்ட் ஆக இருக்கும்படி ராம் சொன்னான் . தீபுவிடம் லதா ஐடியா கேட்டாள். தீபு கிருபா கேஸ் ல என்ன பண்ணலாம் . தீப்தியை மீட் பண்ண முடியுமான்னு பாரு என்றாள்.லதா இந்த முறை போன் செய்த போது அவள் தற்போது சென்னையில்தான் இருப்பதாக சொன்னாள். ஹோட்டல் பிருந்தாவுக்கு மாலை 4 மணிக்கு வரசொல்லியிருந்தாள். தீபக் யாரோ போல் ஒரு மூலையில் அமர்ந்திருக்க,லதா தீப்திக்காக காத்திருந்தாள் . தீப்தி 5 மணி ஆகியும் வரவில்லை. போன் ஸ்விட்ச்ஆஃபில் இருந்தது லதாவின் போன் .அவசர அவசரமா சார்ஜ்ர் காரில் போட்டாள். வாய்ஸ் மெசேஜ் வந்திருந்தது . உயிர் மேல ஆசை இருந்தா கால் பண்ணாத அது யார் குரலென்று தெரியவில்லை .

அசோக் நான் ரிலீஸ் ஆகணும்னா என்னய்யா செய்யணும் வக்கீல் ரகுராமனிடம் கேட்டான் . ஹக்கீம் கிட்ட பேசி பாருங்க . அது நடக்காது அப்பொறம் ஷ்யாமுக்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லேனு ப்ரூவ் பண்ணுங்க . பண்றேன் . இந்த பொம்மை நீங்க வாங்கினேளா இப்போ ரொம்ப முக்கியம் . முக்கியமானதா சொருவி குடுத்துடறா இப்பல்லாம் அதான் கேட்டேன் , இது அந்த லதா குடுத்தா நல்ல பொண்ணு . அப்ப சரி நான் வரேன்.

லதா திரும்ப வாய்ஸ் மெசேஜ் குடுத்தாள் யாருடா நீ பொம்பளைங்கள மெரட்டுறவன்தானே . பதிலேதும் வரவில்லை . தீப்தியின் ப்ரொபைல் படத்தை காட்டி இவங்க இங்க வந்தார்களா என கேஷ் கவுண்டர் பெண்ணிடம் விசாரித்தான் தீபக் . ஆமா வந்து சாப்பிட்டு போயிட்டாங்களே . எத்தனை மணி இருக்கும் . மூணு மணி இருக்கும் ,உங்களுக்கு அவங்களை தெரியுமா . ரெகுலர் customer சார் என்றாள் .ராமிடம் விஷயத்தை அப்டேட் செய்தார்கள். ஏதாவது இன்போர்மஷனோட வாங்க இல்லேன்னா இந்த பக்கமே வராதீங்க..என்றான் .தீபக் நாம ரொம்ப effort போடுறமோ . கொஞ்சம் வெயிட் பண்ணி பாக்கலாமா .அதுவும் சரிதான் இப்போ கிளம்புவோம் . நாளைக்கு தீப்தி வந்தா கவுண்டர் கேர்ள் கிட்ட போன் பண்ண சொல்லிருக்கேன் .

ராம் கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வந்துட்டு போக முடியுமா ரமேஷ்தான் கூப்பிட்டு இருந்தான். எப்போ வரணும் நாளைக்கு 10 மணிக்கு . வா ராம் எப்படி இருக்க நல்லா இருக்கேன் . இவர் கிருபா கிருபாகரன் . உன் மேல complaint கொடுத்துருக்கார் . நான்தான் அதெல்லாம் வேண்டாம் அப்டின்னு சொல்லி உன்னை வரச்சொன்னேன். இனி உங்க விஷயத்துல ராம் தலையிடமாட்டான் சார் . நான் guarantee தரேன் . ரொம்ப தேங்க்ஸ் ரமேஷ் சார் . தேங்க்ஸ் ராம் சார் என்றான் .

உனக்கு ஏன்டா இந்த வேலை எவ்ளோ ஈஸியான கேஸ் எல்லாம் இருக்கு .போயும் போயும் இவன் கேஸ் . சரி ரமேஷ் நான் ஒன்னும் பண்ணலை .ஓகே டா ஜாக்கிரதை .

லதாவையும் தீபக்கையும் அழைத்து விசாரித்தான் . கிருபாவை பார்த்ததை சொன்னான்.

அசோக்கிற்கு லதா மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது .என்ன லதா செக்யூரிட்டி கேமரா வேணும்னு கேட்டேனே அது வந்து சார் நீ உடனே ஆபீஸ் வா பேசுவோம் .அந்த பொடியனை அனுப்பாதே . லதாவுக்கு ஒருபுறம் யோசனையாய் இருந்தாலும் மைக்ரோ போனை எடுத்துவிடலாம் என ஒரு நப்பாசை .

வா லதா உக்காரு அப்டின்னு சொன்னான் அசோக் . கதவை சாத்தி ஏசி யை போட்டான் . ரம்யா இங்கே வாம்மா லதா வந்திருக்காங்க அந்த செக்யூரிட்டி இன்சார்ஜ் வர சொல்லு கூடவே இரு நான் இப்போ வந்துடறேன் என சொல்லி நகர்ந்தான் . அப்பாடா என்று யோசித்தாள். பவர் cut ஆனாலும் செக்யூரிட்டி கேமரா வேலை செய்யுமா தெரியலையே என்றாள் ரம்யா . சரி இந்த ரூம் கேமரா மட்டும் ஆப் பண்ணுங்க நான் அதுக்குள்ள requirements ரெடி பண்றேன் .பவர் ஆப் செய்தார்கள் .இவள் அவசர அவசரமாக மைக்ரோ போனை எடுத்தாள். அசோக் வந்துவிட்டான் . என்னம்மா requirements ரெடி பண்ணிட்டயா .பண்ணிட்டேன் சார் .

ஒரு வழியாக தப்பித்து விட்டோம் என நினைத்தாள்.லதா ஒரு நிமிஷம் இந்த பொம்மைக்குள்ள ஏதாவது வைச்சா அதோட effect எவ்ளோ தூரம் இருக்கும் . இதுக்குள்ளயா சார் ஒரு எபக்ட்டும் இருக்காது . நான் வேண்ணா கேட்டு சொல்றேன் சார் என்றாள் .சரிம்மா பாத்து போ.


லதா அன்று எல்லோருக்கும் treat வைத்தாள். இதுக்கெல்லாமா treat வைப்பாங்க என்று புலம்பினான் தீபக். ம்ம் அடிக்கடி நீ அங்கே போற மாதிரி இருக்கும் என்றான் ராம். நான் ஏன் போறேன் அப்படியே போனாலும் எனக்கு பயமில்லே என்றாள் . தீபக் சூப்பர் சிஸ்டர் என்றான்.

தீபக்குக்கு கால் வந்தது அப்படியா நன் உடனே வரேன் . என்னப்பா ஆச்சு அந்த பொண்ணு தீப்தி அந்த ஹோட்டலுக்கு வந்திருக்காளாம். கேஷ் கவுண்டர் பொண்ணு கால் பண்ணுச்சு . தீபக் நீ போக வேண்டாம் . இனிமே நாம அதுல இன்வோல்வ் ஆக வேண்டாம் . கொஞ்ச நேரத்தில் மறுபடி போன் அடித்தது . ஸ்பீக்கர் ல போடுங்க . நான் தீப்தி பேசுறேன் என்ன பயந்துடீங்களா தில்லு இருந்தா மட்டும் வாங்க ஓகே நான் வைக்கிறேன் .ராம் விழுந்து விழுந்து சிரித்தான் .