ஷியாம் போலீசுக்கு அதிக தொந்தரவு கொடுக்கவில்லை .குற்றங்களை ஒப்புக்கொண்டான் . அவன் ஏன் அப்புவை கொன்றான் என்ற கேள்விக்கு சிசிடிவி footage எடுத்த விவகாரத்தில் தற்செயலாக நடந்த விபத்து என்றான் . முத்துவின் கொலையையம் ஹமீதின் கொலையையும் தான்தான் ஆள் வைத்து செய்ததாகவும் சொன்னான். மீரா பண விஷயத்தில் பேராசைப்பட்டாள் என்றும் சொன்னான் . அவனை சம்பவம் நடந்த இடங்களுக்கு அழைத்து போனார்கள் . அவன் திரும்பவும் அதை செய்து காட்டினான் . தூத்துக்குடிக்கும் அழைத்து போனார்கள் .ஒரு சாட்சி கூட இல்லையே, கைரேகை கூட இல்லாதது போலீசாருக்கு பெருத்த ஏமாற்றத்தை உண்டு பண்ணியது .இந்த கேஸ் நிக்காதுப்பா என பேசிக்கொண்டார்கள் .
ராம் நடப்பவற்றை தெரிந்த source மூலம் நாள்தோறும் அறிந்து வந்தான். எல்லா சாட்சிகளையும் அழித்து விட்ட ஷ்யாமுக்கு போலி பாஸ்போர்ட் கேஸ் மட்டும் வெளியே வர தடையாய் இருந்தது .
சிறையில் ஷ்யாமை ஒரு கோஷ்டியினர் இரும்பு வாளி கொண்டு தாக்கியதில் இடது கை உடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அவன் சட்டபூர்வமாகவே வெளியே வருவதற்கு வாய்ப்பிருந்ததால் எஸ்கேப் ஆகும் எண்ணம் அவனுக்கு இல்லை . ரெண்டு போலீஸ் அவனுக்கு காவல் இரவு டூட்டியில் இருந்தார்கள் . இவனை தாக்கியது சிங்காரத்துக்கு வேண்டிய ஆட்கள்தான் என விசாரணையில் தெரிய வந்தது .சிங்காரம் மரணத்துக்கு பிறகு அவன் இடத்துக்கு வர ஏகப்பட்ட போட்டி இருந்தது .ஷ்யாமை யார் போடுகிறார்களோ அவர்கள் தானாகவே அந்த இடத்துக்கு வந்து விடுவார்கள் என்ற பேச்சு இருந்தது .குணமாக இன்னும் ஒரு வாரம் ஆகுமென்று சொல்லிவிட்டார்கள். ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டுமென்றும் அவர் மனநலம் பாதிக்கபட்டிருப்பதாகவும் சொல்லி certificate வாங்கினார்கள் . அசோக்கின் ஏற்பாடுதான் அது. அதை ஷியாம் என்றுமே விரும்பியதில்லை . ஆனால் வெளியே வருவதற்கு அதை விட்டால் எளிய வழி ஏதுமில்லை .
ஆஸ்பத்திரியில் எல்லா சவுகரியங்களும் வழங்கப்பட்டது . போன் மூலம் அசோக்குடன் ஓரிரு முறை பேசினான். ரகுராமன் வந்து பார்த்துப் போனார் .
டெல்லி போலீஸ் ராமினுடைய உதவியை நாடினார்கள் . அவனை எங்க custody ல எடுக்கிறோம் ஹெல்ப் பண்ணுங்க சார் என்றார்கள் .அவனை மனநோயாளின்னு ப்ராஜெக்ட் பண்ணி ரிலீஸ் பண்ண போறாங்க சார் இப்போ போய் நீங்க என்ன பண்ண முடியும் . நாங்க custody ல எடுத்தோம்னா வழியிலே அவனை முடிச்சிடுவோம் சார் என்றார்கள் .
அவர்களும் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி அவனை ஒப்படைக்க கோரினார்கள் . ஆனால் அசோக் தனக்கிருந்த செல்வாக்கால் அதை முறியடித்தான் . அசோக்கின் பின்புலமும் கட்டப்பஞ்சாயத்துதான் . க்ரானைட் business வெளி தோற்றத்துக்கு செய்து வந்தான் . என்ன சார் ஷ்யாமை உயிரோட வெளியே விடுவார்களா என்று ரகுராமனிடம் கேட்டான் . அதுக்கென்ன சார் பண்ண முடியும் நாம full சப்போர்ட் பன்றோம் அப்புறம் ஆண்டவன் விட்ட விதி என்றார். யாரு இந்த ராம் .அவனாலே நமக்கு ஏதும் தொந்தரவு வருமோ டெல்லி போலீஸ் எல்லாம் அவன் பெற சொல்றானே . அவ ஒரு சின்ன பையன் சார். வக்கீலுக்கு படிச்சுட்டு டிடெக்ட்டிவ் agency நடத்துறான் . அவனால இப்போதைக்கு எந்த பிரச்னையும் இல்ல சார்
என்ன தீபு ஹனி மூன் போகலையா என்றான் ராம் . எங்கே இவருக்கும் சூப்பர்மார்க்கெட்டே கதின்னு இருக்க வேண்டி இருக்கே . தீபு நீ சந்தோசமா இருக்கில்லே அது போதும். சார் நான் எப்ப டூட்டில சேர? ஒரு குழந்தை கிழந்தை உண்டாகட்டும் அப்பறோம் நானே கூப்பிட்டாலும் வரமாட்டே என்றான் ராம் . ஓகே மா டேக் கேர்
எவ்வளவு துடிப்பான பெண் தீபு அந்த துப்பாக்கி சம்பவம் மட்டும் நடக்காதிருந்தால் அவளுடைய வாழ்க்கையே மாறி இருக்காது .
அவனுக்கு தெரிந்த மன நல டாக்டரிடம் appointment வாங்கி இருந்தான் . ஷியாம் பற்றி எல்லா விஷயங்களையும் சொன்னான் . அவர் சொன்னது ஒருத்தர் திட்டமிட்டு கொல்லும்பொது அவர் மன நோயாளி என கருதப்பட வாய்ப்பு குறைவு . ஆனால் அதை நிரூபிப்பது கடினம் . மேற்கொண்டு மன நலம் குணம் பெற நீண்ட காலம் பிடிக்கும் . அதனால்தான் ஒரு சிலர் குறுக்கு வழியை கடைபிடிக்கின்றனர் .ஒரு வேளை கேஸ் அமெரிக்கா சட்டப்படி மாறுமோ என்னவோ நீங்கள் விசாரித்து பாருங்கள் என்றார். தேங்க்ஸ் டாக்டர்
இவனும் youtube விடீயோக்களையும் மேலும் கூட படித்த நண்பர்களையும் ஆலோசித்தான் . இவன் கேஸ் எதிர்த்து வாதாட ஒருத்தரும் இல்லையே நீ வேணா எதிர்த்து வாதாடு என்றனர் . பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினர் கூட இதை நினைக்கவில்லையே என்று யோசித்தான் .
ஆஸ்பத்திரியில் இருந்து சிறைக்கு செல்லும் வழியில் வண்டி நிறுத்தப்பட்டது . உன்னை போட சொல்லி சொல்லிட்டாங்கய்யா இறங்கி ஓடு என்றார் போலீஸ் . ஷியாம் ஏதோ பிளான் பண்ணுகிறார்கள் என்ன விளையாடுகிறீர்களா அசோக் தெரிஞ்ச என்ன ஆகும் தெரியுமா? உன்னை போட சொன்னதே அந்த ஆள் தான்யா இறங்கு .என்ன பயந்துட்டியா இது வெறும் ஒத்திகைதான் . நீ அலெர்ட்டா இருக்கியா எங்களை அட்டாக் பண்ணுவியான்னு பார்த்தோம் . ஷியாம் ஒன்றும் பேசவில்லை .
எதற்கும் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசி பார்ப்போமே என்று பேசியபோது எங்களை விட்டுடுங்க சார் . அவன் ரொம்ப மோசமானவன் என்றார்கள் .
ராகவ் மூலமாக அப்புவின் மனைவியிடமும் பேசினார்கள் . அவளும் ஒத்துக்கொள்ளவில்லை . மீராவின் வீட்டில் எங்களுக்கு எதுனா ஆச்சுன்னா யார் சார் பொறுப்பெடுத்துப்பாங்க என்றனர் .ராகவ் எனக்கு என்ன செய்றதுன்னே தெர்ல . யு எஸ் அனுப்புவோமா ஷ்யாமை அங்கே இன்னும் தண்டனை கடுமையா இருக்கும் .ஷியாம் மற்ற கைதிகளால் தாக்கப்பட்ட பிறகு உக்கிரமாக இருந்தான் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை .
அப்புவோட லேப்டாப் இருக்கு அதில் ஏதாவது இருக்கானு பாக்கறீங்களா என்று கேட்டாள் அப்புவின் மனைவி . ராகவ் அரைமனதாக சம்மதித்தான் . அது அவன் பழைய password தேங்க்ஸ் மச்சான் போட்டதும் லொகின் ஆனது . அப்பு லேப்டாப் பை டைரி போல பயன்படுத்தி வந்திருக்கிறான் . நிறைய மியூசிக் குறிப்புகள் ,பாட்டுகள் எல்லாம் இருந்தன . அப்புவால்தான் ஷியாம் தண்டனை அனுபவிக்க போகிறான் என ராகவ் மனது சொன்னது .
இன்று ரஞ்சனியை சந்தித்தேன் . நாங்கள் சேர்ந்து பாடிய காலம் முதல் இன்றுவரை அவள் மேல் காதல் குறையவில்லை . ரஞ்சனியை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களை சும்மா விடக்கூடாது .ரஞ்சனி விவகாரத்தில் எப்படியும் பிரச்னைகள் வரும் அதையெல்லாம் சமாளிக்க வேண்டும் .
இப்படியாக நீண்ட தேதியிட்டு பதிவு செய்திருந்தான் .நான் இதை எடுத்துட்டு போறேன் . வேற ஏதாவது தகவல் ஞாபகம் வந்தாலும் உடனே சொல்லுங்க . ராம் இந்த நியூஸ் கேட்டு ஒரு புது தெம்பு வந்தவனாக இருந்தான் . அந்த லேப்டாப் ல வீடியோ எதாவது இருக்கானு செக் பண்ணுங்க ராகவ் . நான் செக் பண்ணிட்டேன் ராம் ஒன்னும் இல்லே
அப்படியா நீங்க அந்த லேப்டாப் சென்னை அனுப்புங்க . நான் பார்த்துகிறேன் என்றான் .மூன்று நாட்களுக்கு பிறகுதான் அந்த லேப்டாப் ராமின் கைகளுக்கு கிடைத்தது . அப்புவினுடைய டைரியை தொடர்ந்து வாசித்தான்
தூத்துகுடியில்தான் ஷியாம் இறந்திருக்கிறார் அங்கே ரோடு accident . இது நம்ப முடியாததாய் இருக்கிறதே . எதோ மர்மம் இருக்கிறது .
இன்று முத்துவிடம் இது பற்றி சொன்னேன் அவன் அந்த சம்பவத்தை ஒன்லைன் இல் படித்துவிட்டு இது சுங்கச்சாவடி அருகே நடந்திருக்கிறது என்றான் . எனக்கென்னவோ இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என படுகிறது .செல்விக்கு இன்று பிறந்தநாள் அவளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் அவள் கிடைத்தது என் அதிர்ஷ்டம் .ரஞ்சனி பற்றிய நினைப்பில் மியூசிக் கிளாஸ் போகவில்லை நாளை கட்டாயம் போக வேண்டும்.
முத்துவின் நண்பன் ஹமீது சம்பவத்தை நேரில் பார்த்திருக்கிறான் . அவன் அங்குள்ள டோல் பிளாசாவில் வேலை பார்த்து வந்திருக்கிறான் .
அவனிடம் விசாரிக்க வேண்டும் ரஞ்சனியிடம் இப்போதைக்கு சொல்ல வேண்டாம் .இதன் பின்னணி என்ன என்பதை அறிந்த பிறகே சொல்லலாம் .
ராம் தொடர்ச்சியாக வாசித்ததில் அந்த சம்பவத்தில் ஒரு ஆள் brief கேஸ் எடுத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி விட்டதாகவும் அந்த பதிவு தன்னிடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தான் .ஹமீது அந்த சிசிடிவி footage ஹார்ட் டிஸ்கில் போட்டு முத்துவிற்கு அனுப்பியதாகவும் அதை பார்த்த பின்பே அது ஷியாம்தான் என தெரிய வந்தது .
அதற்கு பிறகே அப்புவிற்கு மிரட்டல்கள் வரத்தொடங்கின . மிஸ் ஆன சிசிடிவி footage கேட்டு ஷ்யாமும் ஹமீதை தொந்தரவு செய்தனர் . இறுதியில் அவனை கொல்லவும் செய்தனர் .அவன் குடுத்த தகவல் படி சிங்கப்பூரில் இருந்த அப்புவையும் முத்துவையும் மிரட்ட தொடங்கினர் .அப்பு பின் வருமாறு எழுதியிருந்தான் என்னை இப்பொது மிரட்டுவது வேறு யாருமில்லை ஷ்யாம்தான். அந்த footage கொடுத்துவிடலாம்தான் ஆனால் அதற்கு பிறகு என்னை கொன்று விடுவார்கள் . ராகவிற்கு இதை அனுப்பி விடலாம் அவன் பார்த்துக்கொள்வான்
ஷியாம் அதில் நேரடியாகவே மிரட்டி இருந்தான் . என்ன அப்பு footage வெச்சிக்கிட்டு என்ன செய்ய போறே . நீ என் நண்பர்களை கொன்னிருக்க வேண்டாம் . அவங்க மொதல்ல சொல்ல மாட்டேன்னுட்டாங்க அப்புறம் சொல்ல வெச்சேன் செத்துட்டாங்க . அப்பு நீங்க இதுல தலையிட வேண்டாம் . ரஞ்சனிக்கு இந்த விஷயம் தெரியவே கூடாது
டியர் ராகவ் நாளைக்கே எனக்கு ஏதாவது நடந்தால் அதுக்கு ஷியாம்தான் பொறுப்பு .ரஞ்சனிக்கு நான் அவளை விரும்புவது தெரிய வேண்டாம் . அவ என்னை தப்பா நெனைச்சுடக்கூடாது
அப்பு கொல்லப்பட்ட தேதியை நினைவு படுத்தி அன்று எடுக்கப்பட்ட விடீயோக்களை ஆராய்ந்தான் . அப்பு இறந்த நேரத்தில் ஒரு விடியோவும் பதிவாயிருந்தது .அதை கவனமாக பார்க்க தொடங்கினான் . என்ன அப்பு வீட்டை வித்துட்டு போனா உங்களை விட்டுடுவேனா என்ற குரல் கேட்டு அப்பு திடுக்கிட்டு திரும்பி பார்த்தான் .ஷியாம் .கண் இமைக்கும் நேரத்தில் அப்பு வெப் காமெராவை ஆன் செய்திருந்தான் . கொலைக்காட்சி முழுக்க பதிவாயிருந்தது .நீண்ட பெருமூச்சுடன் ராம் லேப்டாப்பை அணைத்தான்.