சிங்காரம் சிறையில் இருந்தபடி கட்டளைகளை பிறப்பித்தபடி இருந்தான்.
திவ்யாவை கடத்தியவர்கள் கால் செய்தார்கள் . ஈவினிங் 5 மணிக்கு பக்கத்துல இருக்குற ரம்யா பாருக்கு வந்துடு ஹார்ட் டிஸ்க் குடுத்துட்டு குழந்தையை அழைச்சிட்டு போ .அவர்களுக்கு password குறித்த விவரங்கள் தெரியாது . எனினும் திவ்யாவின் safety கருதி password நீக்கினான்.ஹார்ட்டிஸ்க் ல் லொகேஷன் அறியும் சாப்ட்வேர் ஒன்றையும் இன்ஸ்டால் செய்தான்.அந்த footage இல் இருப்பது ஷியாம் தான் என்பதை ரஞ்சனி உறுதிபடுத்தி இருந்தாள். ஆனால் ஷ்யாமின் சடலமாக தனக்கு காட்டப்பட்டது ஒரு பாதி எரிந்த சடலம் என்றிருந்தாள்.
இவன் கணக்கு போட்ட மாதிரி ஹார்ட் டிஸ்க் மட்டுமே அவர்கள் நோக்கமாயிருக்காது . ஷியாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பது கூட இருக்கலாம் . நீ வரும்போது ரஞ்சனியும் அழைத்து கொண்டு வா என்று அடுத்த கால் பண்ணும் போது சொன்னார்கள் . ராம் ஜாமீனில் வந்து விட்டான் .நீங்க ஒன்னும் டென்ஷன் ஆகாதீங்க சிங்காரம் ஜெயிலுக்குள்ள இருக்குற வரை கவனமாத்தான் இருப்பான் .நீங்க தைர்யமா போங்க என்றான்
ரம்யா பார் மதுபிரியர்களால் நிரம்பியிருக்கவில்லை .காலியாய் இருந்தது .இன்று காந்தி ஜெயந்தி என்பது அவனுக்கு நினைவு வந்தது. ஹார்ட் டிஸ்க் குடு குடுத்தான் பக்கத்தில் லேப்டாப் உடன் உட்கார்ந்திருந்த பையனிடம் குடுத்து செக் பண்ண சொன்னார்கள் .திவ்யாவை ஒப்படைத்தார்கள் . இனி எங்க விவகாரத்தில் தலையிட வேண்டாம் அப்புறம் யாருமே இருக்கமாட்டீங்க என்றான்
பேசாம நாம யு எஸ் க்கே போயிடலாமா உனக்கு வேலை கிடைக்கும் எனக்கு கிடைக்காதே என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க கண்டிப்பா கிடைக்கும் .இதை ரஞ்சனி வாய் தவறி சொல்லவில்லை .உங்கள இழந்துட்டு வாழ நான் விரும்பல .சரி எதுக்கும் உங்க வீட்டு பெரியவங்க கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வா .அதுக்குள்ள அப்புவோட மர்ம மரணத்துக்கு காரணமானவர்களை தண்டிக்க ஏற்பாடு பண்றேன்.
ரஞ்சனியோடு கல்யாணம் நினைக்கவே மகிழ்ச்சியாய் இருந்ததது ஆனால் அதற்கு தகுதியானவன்தானா ?என யோசித்தான் எப்படியோ அவள் என்னை விரும்புகிறாள் அதுவே போதும் .அந்த நினைப்பே அவனுக்கு இனிப்பாய் இருந்தது
தீபு போன் பண்ணியிருந்தாள். ராம் சென்னைக்கு வர சொன்னதை சொன்னாள். அதிக ஆபத்தில்லாமல் குழந்தை மீட்கப்பட்டதை எண்ணி சந்தோஷப்பட்டாள் .ராம் சற்றே இளைத்திருந்தான். என்ன சார் பொசுக்குன்னு ஜெயிலுக்கு போயிட்டிங்க .அதெல்லாம் சாதாரணம் ராகவ் அங்க போனதுல சிங்காரத்தை பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சிக்க முடிஞ்சது. என்ன நீங்க அவன் ஆபீஸ் போனப்போ டெட் பாடி பார்த்தா சொன்னா தீபு ஆமா சார்
இன்டெரெஸ்ட்டிங் .இன்னும் ரெண்டு நாள்ல சிங்காரம் ஜாமீன்ல வந்துடுவான்.அவனும் ஷ்யாமும் crime பார்ட்னர்ஸ் என்ன ராம் சொல்லறீங்க
ஷ்யாமும் சிங்காரமும் சேர்ந்துதான் பணத்தை fraud பண்ணியிருக்காங்க
ஆனா மொத்த பணத்தையும் ஷியாம் கிட்டே குடுத்து safety பண்ண சொல்லி இருக்கான் சிங்காரம் .மங்காத்தா படம் பாத்தீங்களே அதே போல அடுத்து ஷியாம் அரெஸ்ட் ஆவான் இவன் வெளியே போய் புது business ஸ்டார்ட் பண்ணுவான் .ஷியாம் சாகலே திஹார் ஜெயிலில் தான் இருக்கான் வேற பேர்ல .இதெல்லாம் ரஞ்சனிக்கு தெரிய வேண்டாம் ராம் ஓகே .
அந்த செயின் ஷ்யாமோடாதுதான்னு அத வித்த நகை கடை காரன்கிட்டே
confirm பண்ணிட்டேன் .ஷ்யாம்தான் அப்புவையும் கொன்னிருக்கணும் .ஆனா அந்த ஹார்ட் டிஸ்க் எப்புடி அப்பு கைக்கு போச்சுன்னு தெர்ல
இட்ஸ் ஓகே அதையும் கண்டுபிடிப்போம் . தீபு அந்த ஆபீஸ்ல வேலை செஞ்ச ஆளுங்களை சப்ளை செஞ்ச நிறுவனத்துக்கிட்டே கொஞ்சம் காசடிச்சு அந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடி .
சொன்னபடி சிங்காரம் ஜாமீனில் வெளியே வந்துவிட்டான் .அந்த சிசி டிவி footage காட்டி அதில் இருக்கும் ஷியாம் சாகவில்லை என ஷ்யாம்தான் மொத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாக வாதாடி ஜாமீன் பெற்றார்கள் .ஷியாம் இவனுக்கும் அல்வா குடுத்து விட்டு தலைமறைவாகிவிட்டான் . சிங்காரம் டேய் ஷியாம் நீ எங்கே இருந்தாலும் உன் சாவு என் கைல தாண்டா .அவனை தேட சொல்லி சொன்னனே என்ன ஆச்சு அவனுக்கு உதவி செஞ்ச மீராவைத்தான் கொன்னு பொதச்சுட்டோமே இப்போ யாரை கேக்குறது .டேய் அவ வீட்டுக்கு போங்க ஏதாவது எழுதி வெச்சுருப்பா ஜாக்கிரதை இந்த கேஸ் முடியறவரை யாரையும் போட வேண்டாம் .
அந்த பொண்ணு பேரு மீரா ஆபீஸ்ல அக்கௌன்ட் செக்ஷன்ல வேலை செஞ்சிருக்கா .இது போதும் அவளோட அக்கௌன்ட் செக் பண்ண முடிஞ்சுதா இல்லே சார் இந்த டீடெயில்ஸ் எடுக்கறதுக்குள்ள உயிர் போய் உயிர் வந்துடுச்சு . மீராவின் வீட்டுக்குள் ஆஃபீஸ்ர்கள் போல் புகுந்தார்கள் நாங்க அமலாக்கத்துறையிலேருந்து வரோம் மீரா காணாம போயிட்டான்னு கம்பளைண்ட் குடுத்தீங்கள்ல அது சம்பந்தமா சர்ச் பண்ண வந்திருக்கோம் .
மீரா ரூம் மாடிலேதான் இருக்கு போய் பாருங்க .மாடி ரூமை திறந்து விட்டனர் .எப்படியாவது மீராவை கண்டுபிடிச்சி குடுங்க சார் நாங்க ரொம்ப சிரமப்படுறோம் . மீரா ரூம் ல் இருந்த லேப்டாப்ப்பை எடுத்து கொண்டனர் . அவளுடைய கணக்கு புஸ்தகங்கள், நோட்டு புத்தகங்கள் எங்கும் நிறைந்திருந்தன .மறுநாள் தீபு ,ராகவ், ராம் மூவரும் மீரா வீட்டுக்கு போயினர் .அரசு கொடுத்ததாக சொல்லி 10000 ரூபாயை கொடுத்தனர் .நாங்க அவங்க ரூமை பாக்கலாமா.நேத்துதான் ஒரு குரூப் வந்தாங்க லேப்டாப் எடுத்துட்டு போனாங்க .ஓ அப்படியா ஒரு போட்டோ மட்டும் எடுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு மீரா ரூமை இன்ச் இன்ச்சாக ஆராய துவங்கினர் . கட்டிலுக்கடியில் பென் டிரைவ் ஒன்று கிடந்தது அதை பத்திரப்படுத்தினர் .அவளுடைய போட்டோ ஒன்றையும் எடுத்துக்கொண்டனர் .கொஞ்சம் லேட்டாக வந்துவிட்டதாக எண்ணி கொண்டனர் .
பாவம் மீரா இறந்தது கூட தெரியாமல் இருக்கிறார்களே .மறுநாள் மீராவின் புகைப்படத்தோடு செய்தி வெளியிடும்படி செய்தான் ராம் .
மீராவின் உடல் அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்டது .போலீஸ் மெத்தனத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்க பட்டது .சிங்காரம் மீதான போலீசின் பார்வை மீராவின் மரணத்துக்கு பிறகு மாறியது .உடனடியாக சிங்காரம் சரணடையவும் அவனுடைய ஜாமீனை ரத்து செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது .
மீராவை கொன்னு புதைச்சது போலீசுக்கு எப்புடி தெரிஞ்சுது. சரி போகட்டும் எதுக்கும் அங்கே நம்ம ஆள் ரெண்டு பேரை யாராவது
வந்தங்களான்னு விசாரிக்க சொல்லு . மீரா கழுத்து நெரிக்கப்பட்டு கொள்ளப்பட்டிருந்தாள். அவளுடைய லேப்டாப் எவ்வளவு முயன்றும்
லொகின் செய்ய முடியவில்லை . மறுபுறம் அவளுடைய பெண் டிரைவ் ஓபன் ஆனது . அதில் ஷ்யாமுடன் அவள் இருந்த அந்தரங்க புகைப்படங்கள் இருந்தன.எதற்கும் ஷியாம் சிசிடிவி footage இன்னொரு முறை பாப்போம் அதில் ஏதாவது clue கிடைக்கலாம் என முடிவு செய்து அதை பார்த்தனர் .
விபத்து நடந்த காரில் கூட ஏதாவது இருக்கலாம். அதை இந்நேரம் போலீஸ் பார்ட் பார்ட்டாக பிரித்திருப்பார்கள். ராம் நீண்ட யோசனையில் ஆழ்ந்தான் . இப்போதைக்கு ஷ்யாமை கண்டு பிடிப்பதுதான் ஒரே வழி .இன்னொரு ரிஸ்க்கான வழி இருக்கிறது அது சிங்காரத்துடன் நேரடியாக டீல் பேசுவது . எதற்கும் இன்ஸ்பெக்டர் ரமேஷிடம் தனது சந்தேகத்தை தெரிவித்தான் ராம்.
அந்த கார் முக்கால்வாசி எரிந்துவிட்டது. எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லை வாங்க பாக்கலாம் என்றான் .நாளைக்கி ஈவினிங் வரிங்களா என்றான் . கார் மிகவும் சேதமடைந்திருந்தது பின்பக்க கதவு இறுகி போய் லாக் ஆகி இருந்தது .ஒரு மெக்கானிக்கை வரவழைத்து திறந்தார்கள் ஒரு சிறிய purse ஒன்று கிடந்தது .அதை kerchief கொண்டு எடுத்தான் ராம் .அதில் மீராவின் புகைப்படம் இருந்தது.இன்டர்நேஷனல் atm கார்ட் ஒன்றும் இருந்தது . ரொம்ப தேங்க்ஸ் ரமேஷ் நீங்க மட்டும் ஹெல்ப் பண்ணேல்லனா நாங்க இந்த எவிடென்ஸ் மிஸ் பனிருப்போம் .ராம் கார்டு ஐ போட்டோ எடுத்து கொண்டு அவனிடமே கொடுத்துவிட்டான் . கார்டு இன்னும் expiry ஆகவில்லை . நான் இந்த கார்டு பற்றிய டீடெயில்ஸ் உங்களுக்கு ரெண்டு நாளில் சொல்லுகிறேன் என்றான் ரமேஷ் . அதிலுள்ள கைரேகையும் ஒப்பிட்டு பார்த்து மீராவுடையதுதானா என confirm செய்கிறேன் என்றான் .
ஷ்யாமை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது போலீஸ் .அதற்குள் அவன் திகார் சிறையிலிருந்து ரிலீஸ் ஆகி விட்டதாக தகவல் கிடைத்தது .
ஷ்யாமின் பாஸ்ப்போர்ட்டும் முடக்கப்பட்டது.சிங்காரத்தின் பாஸ்ப்போர்ட்டும் முடக்கப்பட்டது .
நான் ஊருக்கு போறேன் சார் என்றான் ராகவ். சரி ராகவ் careful ஆ இருங்க.நான் உங்களுக்கு அப்டேட் பண்றேன் என்றான் ராம் .
நீண்ட நாட்களுக்கு பிறகு ரஞ்சனியையும் திவ்யாவையும் பார்க்க போகிறோம் என்பதே மகிழ்ச்சியாய் இருந்தது .அவர்களும் இவன் வரவில் பூரித்து போனார்கள் .
சிங்காரத்துக்கு தலையே வெடித்து விடும் போலிருந்தது.லேப்டாப் ஓபன் ஆகாதது ஒருபுறம் பாஸ்போர்ட் லாக் ஆனது மறுபுறம் என யோசனையில் ஆழ்ந்தான் .வேற யாரோ ஒருத்தன் இன்வோல்வ் ஆயிருக்காண்டா அவனை கண்டுபிடிக்கணும் .அவனை என் கையாலேயே கொல்லணும் என்றான் .
மறுபுறம் தன்னுடைய வீட்டு பெரியவர்கள் சம்மதம் தெரிவித்து விட்டதாக சொன்னாள் ரஞ்சனி . மொதல்ல இந்த பிரச்னையெல்லாம் முடியடட்டும் ஹாப்பியா உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றான் .அவள் இவனை கட்டிக்கொண்டாள் .திவ்யாவை ரஞ்சனி வேலை பார்க்கும் ஸ்கூலிலே சேர்த்தார்கள் .எப்படியோ இருந்த தன் வாழ்வு அர்த்தமுள்ளதாக மாறியதாக நினைத்தான் .தினமும் திவ்யாவை ஸ்கூலுக்கு கொண்டு போய் விடுவதும் வருவதும் சாதாரண நிகழ்வுதான் என்றாலும் அவனுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது .
ராம் போன் பண்ணியிருந்தான் .அது மீராவுடைய கை ரேகை தான் என்றும் அந்த கார்டில் இருந்த பணம் மொத்தமும் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டதாகவும் சொன்னான். அது வேறு ஒரு அக்கௌண்டுக்கு மாற்றப்பட்டிருந்தால் அது குறித்தும் விசாரிங்களேன் ராம் என்றான் .விசாரிக்கிறேன் ராகவ்
கல்யாணம் எப்போ எங்களுக்கும் invitation உண்டுள்ள கண்டிப்பா சார்
சிங்காரம் தன்னுடைய அடுத்த திட்டத்தை வகுத்தான் . லேப்டாப் போலீஸ் கிட்டே ஒப்படைக்கலாம் நம்மள விட அவங்க சீக்கிரமா ஓபன் பண்ணுவாங்க அதிலிருக்கிற information எல்லாம் இன்ஸ்பெக்டர் ரவி மூலமா நமக்கு தெரிய வரும் .நான் ஏற்கனவே ரவி கிட்டே பேசிட்டேன் அவனுக்கு நான் நெறைய ஹெல்ப் பண்ணியிருக்கேன் அவன் கண்டிப்பா இதை செய்வான் .இந்த லேப்டாப் எப்படியாவது R2 ஸ்டேஷனுக்கு போகணும் ஏற்பாடு செய்.