தனது வேலைகள் முடிந்து விட்டதால் கான்ஸ்டபிள் முருகனை தேடிக்கொண்டு வெளியே வந்த ஏட்டு கனகாபிஷேகம் முருகன் சென்ட்ரியில் நின்று தம் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். பார்த்தவர்., ஏய்யா எத்தனை வாட்டி சொல்றது இந்த சிகரெட் பிடிக்கிற பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சு நிப்பாட்டிடுனு உடம்புக்கு நல்லதில்லையா. அதுவும் இல்லாம நம்ம ஐயாவுக்கும் இது பிடிக்காதுய்யா. ஏன் சொல்றன்னா டியூட்டி நேரம் தவிர மத்த நேரமெல்லாம் ஃப்ரெண்ட்லியாத்தான பழகுறாரு. டியூட்டி நேரத்துலக்கூட மரியாதையாத்தான பேசறாரு. நம்ம டிப்பார்ட்மெண்ட்ல இந்த மாதிரி ஆஃபிசர்ஸ் கிடைக்கிறது கஷ்டம்யா. அதுக்காவது அவருக்கு மரியாதை கொடுத்து நிறுத்திக்கையா.
DNA கொலைகள் - 1
DNA ️கொலைகள் -1தனது வேலைகள் முடிந்து விட்டதால் கான்ஸ்டபிள் முருகனை தேடிக்கொண்டு வெளியே வந்த ஏட்டு கனகாபிஷேகம் முருகன் சென்ட்ரியில் நின்று தம் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். எத்தனை வாட்டி சொல்றது இந்த சிகரெட் பிடிக்கிற பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சு நிப்பாட்டிடுனு உடம்புக்கு நல்லதில்லையா. அதுவும் இல்லாம நம்ம ஐயாவுக்கும் இது பிடிக்காதுய்யா. ஏன் சொல்றன்னா டியூட்டி நேரம் தவிர மத்த நேரமெல்லாம் ஃப்ரெண்ட்லியாத்தான பழகுறாரு. டியூட்டி நேரத்துலக்கூட மரியாதையாத்தான பேசறாரு. நம்ம டிப்பார்ட்மெண்ட்ல இந்த மாதிரி ஆஃபிசர்ஸ் கிடைக்கிறது கஷ்டம்யா. அதுக்காவது அவருக்கு மரியாதை கொடுத்து நிறுத்திக்கையா.சரினே கொஞ்சம் கொஞ்சமா நிறுத்திடறேன்.சரி, சரி நீ நிறுத்துறது இருக்கட்டும். அய்யா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஃபோன் பண்ணாரு. ஒரு கால் மணி நேரத்துல வந்துருவாராம். இந்தா டீ வாங்கிட்டு வந்துரு என்று பிளாஸ்கை கொடுத்தவர் நீயும் டீ சாப்பிட்டு வந்துடு என்று காசு கொடுத்து அனுப்பினார்.முருகன் டீ வாங்கிக் ...மேலும் வாசிக்க
DNA கொலைகள் - 2
DNA ️ கொலைகள் -2 அந்த நீல நிற ஹோண்டா ஷைன் காட்டுக்கு நடுவே அமைந்திருந்த சாலையில் விரைந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் கவனமுடன்தான் வேலை ஆனால் சில சமயங்களில் டாக்டர் கொடுக்கும் டிக்டேட் படி ரிசல்ட் அமையமாட்டேங்குது. அப்படிப் பார்த்தாலும் எங்க தப்பு செய்யறேன்னு சொல்லவும் மாட்டேங்குறாரு. அது மட்டுமில்லாம உன்ன என்னமோ நெனைச்சேன் ஆனா நான் எதிர்ப்பார்க்கற அளவுக்கு இல்ல. அதுவும் ஃபாரின்ல ப்ரோக்ராம் பண்ணவன் ரிசர்ச் சென்ட்டரல்ல ஒர்க் பண்ணவன்னு சொல்ற ஆனா இப்படி சொதப்பிடறியே கொஞ்சம் கேர்ஃபுல்லா பண்ணுனு சொல்றாரே தவிர எங்க தப்பு பண்றேன்னு சொல்லாம அவரே அதை சரி செஞ்சிடறாரு. நான் என்ன தப்பு பண்றேன்னு சொன்னாத்தான நம்மள டெவலப் பண்ணிக்க முடியும். சரி இன்னைக்கு என்ன ஆனாலும் விடறதில்லை. அவரோட டிக்டேட்டா இல்ல நானானு ஒருகை பார்த்திடறேன் என்று பலவிதமான சிந்தனைகளுடன் வண்டியை விரட்டிக் கொண்டிருந்தவன் பெயர் ரகு, ஃபியூட்சர் ...மேலும் வாசிக்க
DNA கொலைகள் - 3
DNA️கொலைகள்-3பலவித அவஸ்தை போராட்டங்களுக்குப் பின் திறக்கப்பட்ட அந்த சவப்பெட்டியைக் கண்டு முதலில் அலறியவன் தோட்டக்காரன் ஜெபாஸ்டியன்.அய்யோ அம்மா... நீங்களா..ஜெபாஸ்டியன் அலறியதும் அதுவும் அம்மா நீங்களா என்று கேட்டதும் கூடியிருந்த கூட்டம் மேலும் பதற்றமாகி உள்ளிருந்த உடலை பார்க்க முண்டியடித்து முன்னே வந்தது. கூட்டத்தை ஒருவழியாக சாமளித்துவிட்டு ஜெபாஸ்டியனிடம் திரும்பிய இன்ஸ்பெக்டர் ரவி.,யாரு யா இது?அய்யா.. இவங்க ஃபாதரோட சிஸ்டர் ரோஸ்லின் மேரி. ஆனா இவங்க எப்படி இங்கேனு தெரியலையே..ஃபாதரோட சிஸ்டரா?.. நீ சொல்றதை பார்த்தா இவங்க இங்க இருக்குற மாதிரி தெரியலையே.ஆமாங்க அவரோட அக்கா லண்டன்ல இருக்குறாங்க.இவங்க இங்க வரத பத்தி உனக்கு எதுனா தெரியுமா? இதைப் பத்தி ஃபாதர் ஏதாவது.. எப்பவாச்சும் சொன்னாரா?இல்லைங்களே.. இவங்க வரது பத்தி எதுவும் தெரியாதுங்களே.. ஆனா...தோ பாரு ஜெபாஸ்டியன் உனக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் மறைக்காம ஒன்னுவிடாம சொல்லிடு. இல்லைனா ஏதாவது சின்ன சிக்கல்னா, உன்மேல தப்பேயில்ல, நீ குற்றமே செய்யலைனாலும் அப்புறம் ...மேலும் வாசிக்க
DNA கொலைகள் - 4
DNA ️ கொலைகள்-4தனது லேபிள் எதையோ வேகவேகமாக கிளியரிங் செய்து கொண்டு நடுநடுவே யாருக்கோ ஈமெயில் அனுப்பிக் கொண்டிருந்த டாக்டர் ராயர் தனது கைப்பேசி சிணுங்க, பார்த்தவர் டிஸ்பிளேயில் ஃபாதர் மோசஸ் எனத் தெரிய பேசத் துவங்கினார்.ஹலோ ஃபாதர் எப்படி இருக்கீங்க? உங்களைப் பார்த்தும் பேசியுமே ரொம்ப நாளாச்சு எப்ப இந்த பக்கம் வரீங்க?நான் வரது இருக்கட்டும் என்கிட்ட இருந்து உங்களுக்குப் ஃபண்டு வந்துக்கிட்டுதான இருக்கு.ஹா... ஃபண்டு வந்துகிட்டுதா இருக்குது. ஆனா ஃபாதர் ஏன் ஒருமாதிரி பேசறீங்க?அதைத்தான் திரும்ப சொல்றேன் எங்கிட்டயிருந்து உங்களுக்குப் ஃபண்டு வந்துக்கிட்டுதா இருக்குதே தவிர, உங்ககிட்ட இருந்து ரிசல்ட் வரவே மாட்டேங்குதே. எப்பதா ரிசர்ச்ச முடிச்சு ரிசல்ட்ட கொடுப்பீங்க?அதிகபட்சம் இன்னும் ஒன் இயர்க்குள்ள முடிச்சிடலாம்.என்ன விளையாடறீங்களா டாக்டர்? நாம ஏற்கனவே லண்டன்ல பழகியிருந்தாலும், நான் இந்தியாவுல செட்டில் ஆகணும்னு வந்தப்போ எனக்கு உதவி பண்ணீங்களேனு அந்த பிரெண்ட்ஷிப் அடிப்படையில உங்களுக்கு மானிட்டரி ஹெல்ப் பண்ணா, நீங்க ...மேலும் வாசிக்க
DNA கொலைகள் - 5
DNA ️ கொலைகள்-5தேவன் திருச்சபை தோட்டத்தில் அனைத்து ஃபார்மாலிக்டைசையும் முடித்து ரோஸ்லின் மேரியின் உடலை ஆம்புலன்ஸில் அனுப்பி விட்டு இன்ஸ்பெக்டர் ரவி ஜீப்பிற்கு வந்தார். அவரோடு கான்ஸ்டபிள் முருகனும், ஏட்டு கனகாபிஷேகமும் கேட்டனர் அடுத்து என்ன சார் மூவ்மெண்ட். நேரமும் மிட்நைட் ஆயிடுச்சு. ஜீப்பிலேயே வீட்டுக்கு போயிடறீங்களா? வண்டியைக் கூட காலையில் வந்து எடுத்துக்கலாமே.இல்லைங்க. ஸ்டேஷனுக்கு வந்துட்டே போறேன். விஷயத்தை எஸ்.பி.க்கிட்ட சொல்லிடலாம்னு பார்த்து ஆஃபிஸுக்கு ரெண்டு முறை ஃபோன் பண்ண பட் லைன் கிடைக்கலை. ரெண்டு முறையும் எங்கேஜ்டாவே இருந்தது. ஒன்னு எஸ்.பி.க்கிட்ட பேசிடனும். இல்லைனா அவர மீட் பண்ண நாளைக்கு அப்பாயின்ட்மெண்ட் வாங்கிடணும். ரெண்டுல ஏதாவது ஒன்னு நடந்தாத்தான் கொஞ்சமாவது மைன்ட் ஃப்ரீயாகும். சரி வாங்க ஸ்டேஷனுக்கு போவோம் என்று ஜீப்பில் ஏறினார்.ஸ்டேஷனுக்கு வந்தவர் வரும் போதே கான்ஸ்டபிள் முருகனை டீ வாங்கி வரச் சொல்லிவிட்டு, அது வந்ததும் ஆயாசமாய் ஒரு நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி ...மேலும் வாசிக்க