இரவு 25
ரேவதியிடம் தன்னை அறிமுகபடுத்திக்கொண்ட ராம், பரிதி கொலை விஷயத்தை விளக்கினான். முதலில் தயங்கிய ரேவதி பிறகு நடந்ததை சொன்னாள் . அன்னைக்கு வைரஸ் ஃபீவர் அப்படிங்கிறதுனால நான் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருந்தேன். எனக்கு பக்கத்து பெட்ல பரிதி இருந்தாரு. நான் அப்போ மயக்கமா இருந்தேன். என்னவோ சத்தம் கேட்டது. செக்யூரிட்டியா இருந்த போலீஸ் வெளியே போயிருந்தாங்க. ஸ்டாஃப் நர்ஸ் யாரும் இல்லை. நான் மெதுவா எழுந்து போய் பார்த்தேன் அங்க ஒரு ஆளு பரிதி கழுத்துல தன்னோட தோளுல போட்டிருந்த துண்டு எடுத்து இறுக்கி கொன்னாரு. நான் என் ஃபோன் ல வீடியோ எடுத்தேன். அவர் என்னை கவனிக்கலை . பயந்து போய் திரும்ப என் பெட்டுக்கு திரும்பிட்டேன் அப்புறமா உடனே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துட்டேன். மறுநாள் பேப்பர்ல நியூஸ் வந்ததை பார்த்ததுக்கு அப்புறம் அவர் பெயர் பரிதி அப்படின்னு தெரிஞ்சுகிட்டேன் என்றாள் .ராம் அந்த வீடியோ உங்க ஃபோன் ல இருக்கா. நான் அழிச்சுடலாம் அப்படின்னு பார்த்தேன். பிறகு ஒரு சேஃப்டிக்கு இருக்கட்டும் அப்படின்னு வச்சிருக்கேன் . இப்போ அந்த ஃபோன் எங்க . அது பழைய ஃபோன். நான் புது ஃபோன் வாங்கிட்டேன். அந்த ஃபோன் வீட்டுல இருக்கு. நானே உங்களுக்கு ஈவினிங் அனுப்புறேன் என்றாள். இதனால எனக்கு ஏதும் ஆபத்து வருமா சார் என்றாள் . நான் பார்த்துகிக்கிறேன்.. நீங்க எதுக்கும் பயப்படாதீங்க என்றான். ராம் விடைபெற்றுக்கொண்டான்.
ஜானுவுக்கு விஷயத்தை சொன்னான். வீடியோ ரேவதியிடம் இருந்து கிடைத்ததும் திரும்ப கால் பண்ணுவதாகவும் சொன்னான். ரேவதி இரவு 11 மணிக்கு பரிதி கொலை சம்பந்தப்பட்ட வீடியோவை அனுப்பினாள் . சாரி சார் ஆபீஸ்லேயிருந்து வர லேட் ஆயிடுச்சு என்றாள் .அந்த வீடியோ தெளிவாக இருந்தது. ராம் ரேவதிக்கு நன்றி தெரிவித்தான். ஜானுவுக்கும், கதிருக்கும் அந்த வீடியோவை அனுப்பினான். அவர்கள் மூவரும் அது பற்றி கான்பரன்ஸ் காலில் பேசிக்கொண்டனர். நிச்சயமா ஜி ஆர் அரெஸ்ட் பண்ண இது போதும். ஆனால் அந்த வீடியோவோட உண்மைத்தன்மை பரிசோதனை பண்ணிட்டு வாரண்ட் வாங்கிட்டுத்தான் அரெஸ்ட் பண்ண முடியும் என்றாள் ஜானு. சரி இந்த வீடியோவை முத்துவுக்கு அனுப்பலாமா என்று கேட்டான். ஜானு இப்போது வேண்டாம் என்றாள் . ரேவதி பெயர் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாதென ராம் ஜானுவை கேட்டுக்கொண்டான். எப்படியோ இந்த கேசில் பரிதி குடும்பத்தாருக்கு நியாயம் கிடைத்தால் போதும் என எண்ணிக்கொண்டான்.
முனியாண்டி மகன் பன்னீர் ஃபோன் பண்ணியிருந்தான். உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டுமே நேரில் வர முடியுமா என கேட்டான். ராம் வருகிறேன் என்றான். ராமை வரவேற்ற பன்னீர். எனக்கு இப்போ ஒரு வேண்டுகோள்தான். செய்யாத கொலைக்கு தண்டனை அனுபவிக்கிற செல்வத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என்றான். அது ரொம்ப பழைய கேஸ் ஆச்சே என்றான் ராம். இந்நேரம் எல்லா எவிடென்சும் அழிச்சிருப்பாங்களே . இல்லை ராம் சார் அந்த வக்கீல் சரியா வாதாடலை. அதோட போலீஸ் ரொம்ப அலட்சியமா இந்த கேஸ் ஹாண்டில் பண்ணினாங்க. நீங்க நினைத்தால் செல்வத்தை காப்பாத்த முடியும் பிளீஸ் என்றான். என்கிட்ட எல்லா டீடெயில்சும் இருக்கு. இதுதான் அந்த பைல் என கொடுத்தான். போட்டோஸ், கேஸ் டாகுமெண்ட்ஸ், அப்பாவோட போஸ்ட்மார்டம் ரிப்போர்ட், கோர்ட் தீர்ப்பு எல்லாமே இருக்கு என்றான். ஓகே பன்னீர் நீங்க இவ்வளவு தூரம் சொல்லுறதால நான் இந்த கேஸ் விசாரிக்குறேன் என்றான் ராம்.ரொம்ப தாங்க்ஸ் சார்.
ராம் தீபுவிடம் முனியாண்டி மர்டர் கேஸ் பற்றி சொன்னான். நீங்க இதை எப்படி ஹாண்டில் பண்ண போறீங்க? என்றாள் . பழைய மெதட் படி ஜீரோவில் இருந்து துவங்கணும் என்றான். செல்வத்தை நினைச்சா பாவமா இருக்கு.அவருக்காக இதை கண்டிப்பா செஞ்சாகனும் என்றான். ஓகே தீபு இந்த டாகுமெண்ட்ஸ் எல்லாத்தையும் வெரிபை பண்ணிட்டு எனக்கு சொல்லு. வேற ஏதாவது டாகுமெண்ட்ஸ் வேணும்னாலும் சொல்லு. நான் அரேஞ்ச் பண்ணுறேன். ஓகே சார். இரண்டு நாட்கள் கழித்து ஜானுவிடம் இருந்து ஃபோன் வந்தது. ராம் லேப்லேயிருந்து சோனபிரமதிவன் வந்திருக்கு இது உண்மையான வீடியோதான். நான் மேலதிகாரிகளிடம் பேசி வாரண்ட் அரேஞ்ச் பண்ணுறேன் என்றாள் . ரேவதியிடம் இருந்து கால் வந்தது ரொம்ப பதட்டமான குரலில் யாரோ எனக்கு ஃபோன் பண்ணி வீடியோ கேட்டு மிரட்டுறாங்க சார். நீங்கதான் ஹெல்ப் பண்ணனும் என்றாள். நீங்க பயப்படாதீங்க நான் உடனே வருகிறேன் என்றான்.
ரேவதி அழுது கொண்டிருந்தாள். இப்போ ஒண்ணும் நடக்கலை . நான் அந்த நம்பர் டிரேஸ் பண்ண சொல்லியிருக்கேன். அந்த வீடியோவ பத்தி சரியா தெரியாம யாரோ வேகா கால் பண்ணியிருக்க வாய்ப்பிருக்கு. நீங்க தைரியமா இருங்க. நான் கிளம்புகிறேன் என்றான். ராம் சார் உங்களை நம்பித்தான் இருக்கோம் என்றார் ரேவதி அப்பா.அதற்கப்புறம் ரேவதிக்கு எந்த மிரட்டல் காலும் வரவில்லை. ராம் நிம்மதி அடைந்தான். ஜானுவிடம் வாரண்ட் துரிதப்படுத்த கேட்டுக்கொண்டான். ரேவதியை வீடியோ கேட்டு மிரட்டி இருக்கிறார்கள் என்றும் சொன்னான்.ஜானு நான் நிச்சயம் விசாரிக்கிறேன் என்றாள் . அதற்கு அடுத்த நாள் ஜானுவுக்கு வந்த செய்தி இடி போல இறங்கியது. ஜானு நீ அந்த வீடியோவை எங்களிடம் கொடுத்துவிட்டு ரேவதியை கூட்டிப்போ என்றான் அவன். எந்த வீடியோ என்றாள் . எல்லாம் எங்களுக்கு தெரியும் நீ வீடியோவோடு வந்தால் ரேவதி உயிரோடு கிடைப்பாள் என்றான்.அந்த வீடியோ காபி எடுத்து வைக்கலாம் என்று நினைத்தாலும் ரேவதியை நாங்கள் நிச்சயம் கொன்று விடுவோம் என்றான். வேண்டாம் நான் வீடியோவோடு வருகிறேன் இடத்தை சொல்லுங்கள் என்றாள் ஜானு.
ராமுக்கு இந்த விஷயம் தெரிந்ததும் பயங்கர டென்ஷன் ஆனான். நான் கவனமாக இருந்திருக்க வேண்டும். என்னை யாரோ ஃபாலோ பண்ணுகிறார்கள் அது தெரியாமல் நான் ரேவதியை மாட்டி விட்டுவிட்டேன் என்றான். ராம் சார் நீங்க கவலைப்படாதீங்க எப்படியும் ரேவதியை காப்பாத்திடலாம் என்றாள் ஜானு.அதே சமயம் நாம இப்போ அவர்களை விட்டு பிடிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கிறோம் என்றும் சொன்னாள். ராம் நானும் வருகிறேன் ஜானு உங்களோடு என்றான். சரி வாங்க ஆனால் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றாள் .அந்த பில்டிங் நல்ல வெளிச்சத்துடன் இருந்தது. ஜானுவை மட்டும் மேலே வர சொல்லி கூப்பிட்டார்கள் . அந்த ஃபோன் வைத்துவிட்டு ரேவதியை அழைத்து போக சொன்னார்கள். ரேவதி எங்கே என்ற கேள்விக்கு அதெல்லாம் வருவாள். நீ போனை மட்டும் வைத்துவிட்டு போ என்றான். ஜானு ஃபோனை அங்கிருந்த டேபிள் மேல் வைத்தாள் . ரேவதி லிப்ட்டில் மயங்கிய நிலையில் இருந்தாள். அவளை உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து ஹாஸ்பிடல் அழைத்து சென்றாள் ஜானு.
பயப்பட ஒண்ணுமில்லை பதட்டத்துல வந்த மயக்கம்தான். இன்னும் ஒரு டூ ஹவர்ஸ் ல கண் விழிப்பாங்க என்றார் டாக்டர். கதிரும் ஹாஸ்பிடல் வந்திருந்தான். கதிர், தீபு, ஜானு, ராம் எல்லோரும் ரேவதி கண் திறக்க காத்திருந்தனர். அவள் அப்பா அழுதபடி இருந்தார். எப்படி ஆறுதல் சொல்லுவதென தவித்தான் ராம். என் பொண்ணு உயிருக்கு உலை வைக்க பார்த்தீங்களே ராம் சார் என்றார். ஜானு அவரை ஏதோ சொல்லி சமாதானப்படுத்தினாள் .அவள் கண் விழித்ததும் அவள் அப்பாவிடம் பேசினாள். நமக்கு இவங்க சாவகாசமே வேண்டாம்மா வீட்டுக்கு போலாம் வா என்றார். இருங்க அப்பா அவங்க யாருன்னு எனக்கு தெரியும் அவங்களை சும்மா விடக்கூடாது என்றாள். ராம் ரேவதியிடம் அவங்களை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா என்றான். நிச்சயமா நான் அவன் பேசுனதை கேட்டேன் என்றாள் . ராம் தீபுவிடம் சொல்லி ரேவதி அப்பாவை வெளியில் அழைத்து போக சொன்னார். அவர் வரவேற்பறையில் ரேவதிக்காக காத்திருந்தார். ஜானு அந்த நபர்களின் போட்டோக்களை காட்டினாள். சில பேரை உற்று பார்த்தாள். இல்லை இவர்கள் இல்லை மேடம்.
ராம் காட்டிய சில போட்டோக்கள் பார்த்தாள். அதில் அவள் அவனை அடையாளம் காட்டினாள். முனீர்தான் இந்த வேலையை செய்திருந்தான். என்னை கொல்ல ஃபாலோ பண்ணி வந்தவன் இப்போது இப்படி ஒரு வேலையை பார்த்திருக்க வேண்டும் என்றான். ஜானு இப்போது முனீர் அந்த ஜி ஆரிடம் பேரம் பேசிக்கொண்டிருப்பான் என்றாள் . நிச்சயமாக. ரேவதியை வீட்டி விட்டாள் ஜானு. ரேவதி இப்போது புது தெம்பு வந்தவளாக இருந்தாள். முனீர் ஜி ஆருக்கு ஃபோன் செய்தான் என்ன சார் கொலையெல்லாம் பண்ணிட்டு சைலன்ட் ஆ பெரிய பதவியில இருக்கீங்க என்றான்.யாருடா நீ என்ன வேணும் உனக்கு. பரிதி கேசுல நீங்க பண்ண எல்லா வேலையும் வீடியோவா என்கிட்ட இருக்கு. ஒரு 60 லட்சம் கொடுத்தீங்க அப்படின்னா குளோஸ் பண்ணி விடலாம் என்றான். என்ன விளையாடுறியா ? வீடியோ அனுப்பியிருக்கேன் பாருங்க என்று சொன்னான். அதை பார்த்த ஜி ஆர் பதறி போனான். இப்போ என்ன வேணும் உனக்கு அதான் சொன்னேனே பணம் என்றான்.
எனக்கு ரெண்டு நாள் டைம் குடு. எதுக்கு என்னை போட்டுத்தள்ளவா? நீ நாளைக்கு சாயங்காலம் வந்து நான் சொன்ன இடத்துல பணத்தை செட்டில் பண்ணுற என்றான். சரி பண்ணுறேன். அப்புறம் நான் உடனே வீடியோ கொடுப்பேன் அப்படின்னு எதிர்பார்க்க கூடாது. நான் சேஃப்டி அப்படின்னு தெரிஞ்சாத்தான் கொடுப்பேன் என்றான். இது என்ன திட்டம் என்றான் ஜி ஆர். அதெல்லாம் நீ கொலை பண்ணுறதுக்கு முன்னாடி யோசிச்சி இருக்கணும். நான் பணத்தோட வரேன். நீ அதுவரை எதுவும் பண்ணாதே என்றான். ராம் முத்துவிற்கு ஃபோன் செய்தான். எனக்கு ஒரு ஹெல்ப் வேணுமே என்றான். சொல்லுங்க சார். உங்கப்பா கொலை சம்பந்தமா ஜி ஆர் மேல சின்ன டவுட் இருக்கு நீ அவர் எங்க போனாலும் அவரை ஃபாலோ பண்ண முடியுமா? என்றான். இல்லை எனக்கு அப்டேட் பண்ணினாலும் சரி என்றான். நிச்சயமா பண்ணுறேன் சார். ஆனா ஜி ஆர் இந்த கொலை பண்ணியிருப்பார் அப்படின்னு தோணலை என்றான். சரி சார் நானே உங்களை கூப்பிடுகிறேன் என்றான்.
அதே சமயம் ஜி ஆர் அக்கவுண்ட் ட்ரான்ஸ்சாக்சன்களை கண்காணிக்கும்படி ஜானுவை கேட்டுக்கொண்டிருந்தான் ராம். அவன் மொத்தமாக பணம் எடுப்பான் என எதிர்பார்த்தான். 60 லட்சம் பணம் அவன் அக்கவுண்ட்டில் இருந்து எடுத்திருப்பதாக தகவல் கிடைத்தது. ராம் அலர்ட் ஆனான். முத்து ஜி ஆர் இப்போது வெளியே கிளம்பி விட்டார். நான் அவரோடு மற்றொரு காரில் போகிறேன் என்றான்.சிறிது நேரம் கழித்து திரும்ப ஃபோன் செய்தவன் அவர் பில்டிங் மேலே போகிறார் சார். எந்த லொகேஷன் உடனடியாக அனுப்பு என்றான். ராம் அடுத்த அரைமணியில் அங்கு இருந்தான். ஜி ஆர் பணத்தை அங்கு வைத்துவிட்டு ஃபோன் எடுத்து போகும்படி சொன்னான் முனீர்.