ஒருத்தன்...
காதலை ஒரு விளையாட்டா நினைக்கிறான். 😏
ஒருத்தி...
காதலை உயிரா நினைக்கிறாள். ❤️
ஆதிரன் × ஆருத்ரா
அவளை சாய்க்க நினைத்தவன்...
கடைசியில் அவளிடமே சாய்ந்தால்? 🫠❤️
ஈகோ... மோதல்... ஈர்ப்பு... காதல்... கோவம் பொறாமை என்று கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல்
அவர்களுக்குள் நடக்கப்போகும்
ஒரு அழகான காதல் மோதல்! 🔥
என்னை சாய்த்தாலே... ❤️🔥
ஹீரோ அறிமுகம்
லண்டன் மாநகரின் மையப்பகுதியில், வானத்தை முத்தமிடுவது போன்ற அந்தப் பிரம்மாண்டமான கண்ணாடி கோபுரத்தின் முப்பதாவது மாடி.
உள்ளே ஏர்-கண்டிஷனர் சத்தம் கூட கேட்காத அளவுக்கு அமைதி. அந்த அறையின் மையத்தில் இருந்த கருப்பு நிற பளிங்கு மேஜையைச் சுற்றி, உலக நாடுகளின் பெரும் தொழிலதிபர்கள் அமர்ந்திருந்தனர்.
அறையில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அந்தத் திறந்திருந்த கதவையே உற்று நோக்கின. அங்கே ஒருவனைக் எதிர்பார்த்து அந்த மௌனம் நீடித்தது.
கீழே, கட்டிடத்தின் முகப்பில் அந்த கருப்பு நிற சொகுசு கார் வந்து நின்றது. முதலில் வெளியே வந்தது அவனது பளபளக்கும் இத்தாலியன் ஷூக்கள்.
ஆறு அடி உயரம்! நேராகச் செதுக்கியது போன்ற உடல்வாகு, ஜிம்முக்குப் போய் மெருகேற்றிய அந்தத் தோள்கள், அவனது காஸ்ட்லியான இத்தாலியன் ஷர்ட்டைத் தாண்டித் தெரிந்தன.
மாநிறம் கலந்த வெள்ளை நிறம், துருதுருப்பான கண்கள், எப்போதும் ஒரு குரூரமான புன்னகையோடு இருக்கும் உதடுகள்.
அவன் தான் நம் நாயகன்
ஆதிரன்!
அந்தப் பெரிய கண்ணாடிச் சுவர்களுக்குப் பின்னால், தனது சாம்ராஜ்யத்தை ஆட்டிப்படைக்கும் ஒரு வேட்டையாடி போல அவன் நடை போட்டு உள்ளே நுழைந்தான்.
அவன் நடந்து வந்த அந்த சில நொடிகள், அறையில் இருந்த அத்தனை தொழிலதிபர்களும் தங்களை அறியாமலே எழுந்து நின்று மரியாதை செய்ததைக் கவனித்த ஆதிரன், ஒரு சிறிய ஏளனச் சிரிப்பை உதிர்த்தான்.
அவன் தனது இருக்கையில் அமர்ந்ததும் அறையின் கதவுகள் தானாகவே மூடிக்கொண்டன..
அவனுக்கு முன்னால் இருந்த ஒவ்வொரு தொழிலதிபரும், அவன் அடுத்தது என்ன சொல்லப் போகிறானோ என்று பதற்றத்தோடு காத்திருந்தனர்
யார் முதலில் அவனிடம் கேள்வி கேட்பது என்று தயங்கிய படி இருக்க எப்படியோ தைரியம் வந்து ஒருவன்..
மிஸ்டர் ஆதிரன்! இது நியாயமே இல்ல. எங்களுடைய ஷேர்களை (Shares) எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எப்படி நீங்கள் ரத்து செய்யலாம்? எங்களை நடுத்தெருவில் நிறுத்துறதுக்கு இது என்ன விளையாட்டா? இதற்குச் சரியான காரணத்தைச் சொல்லுங்கள்! வி வான்ட் எ ரீசன் (We want a reason)!" என்று அனைவரும் ஆக்ரோஷமாகவும், ஆதங்கத்தோடும் கத்தினர்.
ஆதிரன் எழுந்து நின்றான். அவனது அந்த கம்பீரமான ஆறடி உயரம், அந்த அறையையே ஆக்கிரமித்தது. அவன் மெதுவாகத் திரும்பி, அவனது துருதுருப்பான கண்களால் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு ஏளனப் பார்வையில் அளவெடுத்தான்.
அவன் முகத்தில் துளி கூட சலனம் இல்லை.
அவன் கையில் இருந்த கோப்பைத் தன் பாதுகாவலனிடம் கொடுத்தான். அவனது உதடுகளில் அந்த வழக்கமான குரூரமான புன்னகை தவழ்ந்தது.
"காரணமா?" என்று அவன் கேட்ட விதம், அறையையே அதிர வைத்தது.
அவன் மெதுவாக அவர்களை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்து, "நான் பிசினஸ் பண்ண வந்திருக்கேன், தொண்டு செய்ய இல்லை. கடந்த ரெண்டு குவார்ட்டரா நீங்க காட்டிய லாபத்தை விட, நீங்க பண்ணின குளறுபடிகள் தான் அதிகம்.
தோல்வியைத் தழுவுற பார்ட்னர்கள் எனக்குத் தேவையில்லை. வெற்றியை என் பாதத்துல கொண்டு வந்து வைக்கிறவங்க கூட மட்டும் தான் நான் பயணம் செய்வேன்.
அந்தத் தகுதி உங்களுக்கு இல்லைன்னு தெரிஞ்சப்போ, என் நேரத்தை வீணடிக்க எனக்கு விருப்பமில்லை. இதுதான் ரீசன். இனி இதைப் பத்தி என்கிட்ட யாரும் பேசாதீங்க," என்று அவன் அதிகாரமாகக் கூறிவிட்டு, அவர்களைக் கடந்து கம்பீரமாக நடந்தான்.
அவன் பேசின அந்தத் தொனி, அவர்களை மீண்டும் பேச விடாமல் மௌனமாக்கியது. அவன் அறையை விட்டு வெளியேறும்போது, அவனது ஒவ்வொரு அடியும் ஒரு தோல்வியடைந்த கூட்டத்தை மிதித்து முன்னேறுவது போல இருந்தது.......
என்ன டா கடல முத்து ரொம்ப ஸ்ரிக்டா இருக்காருனு பாக்குறீங்களா பிஸ்னஸ்ல பய கொஞ்சம் ஸ்ரிக்ட் தான்...........
ஆதிரன் தன் பிரத்யேக சொகுசு கப்பலுக்குச் சென்றான். அவன் உள்ளே நுழைந்ததும், மந்தமான வெளிச்சம், மெல்லிய இசை, காற்றில் கலந்திருந்த விலை உயர்ந்த பெர்ஃப்யூம் வாசனை அவனை வரவேற்றன.
ஒரு வெளி நாட்டு பெண் வந்து
அவன் கறுப்பு நிற கோட்டை கழற்றி எறிய, அவனது கட்டுக்கோப்பான உடல் அந்தத் தாழ்ந்த ஒளியில் இன்னும் எடுப்பாகத் தெரிந்தது.......
வாரம் முழுக்க பிஸ்னஸ் என்று ஓடுபவன் சனி ஞாயிறு அவன் சந்தோசத்திற்காக பெண்களோடு நேரம் செலவிடுவது வழக்கம்.......
ஒவ்வொருதர்க்கு ஒவ்வொரு போதை இவனுக்கு பெண்கள் போதை....
அது வெறும் உடல் ரீதியான ஈர்ப்பு மட்டுமே தன்னைக் கட்டுப்படுத்த யாராலும் முடியாது என்கிற அவனது அதிகாரத்தின் ஒரு பகுதிதான் அந்தப் பெண்களும்....
அவன் ரூமிற்கு வர ஜன்னல் ஓரம் அழகு ஓவியமாக நின்று இருந்தாள் ஒருத்தி அவள் பின்னால் சென்று நிற்றவன் இடுப்பில் தன் கைகளைச் சுருக்கி, அவளைத் தன் அருகில் இழுத்தான்.
யூ ஆர் சோ செக்ஸி பேபி என்று சொல்ல யூ டூ ஆதி என்றாள் அவள்.....
அவள் கையில் இருந்த மது 🍷 கோப்பையை வாங்கியவன் தன் தொண்டையில் சரித்தான் ஆதீரன்....
மது போதையும் மாது போதையும் சேர்ந்து அவன் ஆண்மையை கிளர்ச்சி அடைய செய்ய......
அவளது கழுத்தில் தன் முகம் புதைத்து, அவளது கழுத்தை மெல்ல வருடினான். அந்தப் பெண்ணின் மூச்சு சீரற்றதாக மாறியது.
ஆதிரனின் அந்த ஆக்ரோஷமான தொடுதலில் அவள் தன்னை மறந்து மயங்கினாள்.....
"ஆதீரன்... என்று உச்சரிக்க அவளைத் தழுவிக்கொண்டு மெத்தையில் கிடத்தியவன் அவள் இதழில் முத்தம் இட்டு முத்து குளித்து அவளை அரசனாக ஆண்டு அந்த இரவை உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றான்.
அந்த அறையில் அவன் வன்மை தாளாமல் அவள் முனகும் சப்தமும் இருவரின் முத்த சத்தமும் சுவரில் பட்டு எதிரொலித்தது......
தன் மோகத்தை தீர்த்தவன் பெட்டில் சரிந்தான் ஆதீரன் .....
அவன் அந்தப் பெண்ணோடு இருந்த அந்தத் தருணங்கள், அவனது மனதின் இறுக்கத்தைத் தணித்தன.
என்ன தான் பிஸ்னஸ் பார்ட்டி பணம் சுகம் என்று வாழ்ந்தாலும் .....
அவன் மனதில் ஏதோ ஒரு வெற்றிடம் இருந்தது. அந்த வெற்றிடத்தை அவன் அந்த ஆடம்பரமான போதை மற்றும் பெண்களின் அருகாமையினால் நிரப்பிக் கொண்டிருந்தான்.
அவள் அவனிடம் தஞ்சம் புகுந்து,உங்க கூட இப்படியே இருக்க ஆசையா இருக்கு ஆதி என்றவள்
வி வொன்னா மேரிட்" என்று அவள் கிசுகிசுக்க,
அவள் சொல்ல வருவருதை முழுசாக கேக்காமல் அவள் இதழில் கை வைத்தான் ஆதிரன்
அவள் இதழ்களைப் பார்த்தபடி ஒரு குரூரமான புன்னகையை உதிர்த்தான்.
"வெறுப்பு, அன்பு, ஈர்ப்பு காதல் கல்யாணம்... இது எதுவுமே எனக்குக் கிடையாது பேபி. அந்த நேரத்து சுகம், அவ்வளவுதான்," என்று சொல்லி விட்டு மீண்டும் தன் வேட்டையை தொடங்கினான் ...
அவனைத் தன்வசப்படுத்த நினைத்தாள். ஆனால், ஆதிரன் அவளுக்குக் கொடுத்தது அந்த நேரத்து சுகத்தை மட்டுமே; அவனது இதயத்தின் கதவுகள் அவளுக்காக மட்டும் இல்ல எந்த பெண்ணிற்கும் எப்போதும் பூட்டப்பட்டே இருந்தன.
அந்த இரவு கழிய, அந்தப் பெண் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். ஆதிரன் மட்டும் ஜன்னல் அருகே நின்றான். கப்பலின் இஞ்சின் சத்தமும், கடலின் அலைகளும் ஒருவித அமைதியை உருவாக்கின. அவன் கையில் இருந்த கிளாஸை உயர்த்தி, அந்த இருண்ட கடலைப் பார்த்துப் பேசினான்.
"கல்யாணம், குடும்பம்... இதெல்லாம் பலவீனமானவங்களுக்கானது. நான் வாழ்ற இந்த ராஜாங்கத்துல எனக்குத் துணையா வர யாராலும் முடியாது.என்னோட அதிகாரம் மட்டும்தான் எனக்குத் துணை," என்று முணுமுணுத்தவன்.......
தன் தேவை தீர்ந்ததும் அந்த பெண் கேட்டு இருந்த பிராஜெக்டை சைன் செய்து விட்டு வேறு ஒரு அறைக்கு சென்று விட்டான்....
கண்களை திறந்தவள் அவன் கை எழுத்து இட்ட படிவத்தை பார்த்து புன்னகை உடன் அங்கு இருந்து கிளம்பினாள் அந்த பெண்....
அந்த ஆதிக்கவாதி லாபம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டான் அவனுக்கு தேவை சுகம் அவளுக்கு தேவை பிராஜெக்ட் அதற்கான டீலிங்கை தான் அவனுக்கு தெரிந்த வழியில் கொடுத்து விட்டு சென்று உள்ளான் ஆதிரன்....
அந்தப் பெண்ணுக்குத் தேவை அந்தப் பிராஜெக்ட், ஆதீரனுக்குத் தேவை அந்த ஒரு இரவு போதை. இருவருமே தங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக்கொண்டார்கள்..........
ஆதீரனுக்கு அப்பா கிடையாது அப்பா இறந்ததும் அம்மா வேறு ஒருவரை கல்யாணம் செய்து கொண்டார்
தன் தாத்தாவின் பாதுகாப்பில் வளர்ந்தவன்.....
அவர் இந்தியாவில் தமிழ்நாட்டின் இதயமான சென்னையில் தான் இருக்கிறார்...
பரம்பரை பரம்பரையாக பணகாரர்கள் எல்லாம் இல்லை ஆதிரனின் அப்பாவின் உழைப்பு இன்று சென்னையில் இரண்டு மூன்று கப்பெனி இருக்கிறது.......
ஆதீரன் கல்லூரி படிப்பை முடித்ததும் லண்டன் வந்தவன் இங்கே தனக்கு என்று ஒரு அடையாளத்தை உருங்காக்கி முடி சூட்டா அரசனாக இருக்கிறான்......
தாத்தா எவ்வளவு கெஞ்சி கேட்டும் அவன் இந்தியா வரவே இல்லை கடந்த ஐந்து வருடங்களாக..........
வந்தாலும் தாத்தாக்கு பிறகு சொல்லி கொள்ளும் அளவு சொந்தம் அவனுக்கு அங்கு யாரும் இல்லை அதை விட இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் தனக்கு நரகம் என்ற எண்ணம் அவனுக்கு அதான் மொத்தமாக அங்கையே தங்கி விட்டான் ஆதீரன்...
இங்கே சென்னையில் அந்த பிரம்மாண்டமான வீட்டில் எல்லா விளக்கும் எறிந்து கொண்டு இருக்க....
அங்கே சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு இருந்தார் ஆதீரன் தாத்தா ரகுவீர்.......
பல முறை ஆதீரனுக்கு அழைத்து சோர்ந்தவர் தன் கை பேசியில் இருந்த தன் பேரனை பார்த்து வரவே மாட்டியா டா என்று ஏக்கத்தோடு புலம்பிய படி இருக்க......
சமையல்காரர் ஜவகர் என்கிற ஜக்கு கையில் பால் உடன் வந்தார்...
ஐயா இந்தாங்க பால் என்று கொடுக்க வேண்டாம் ஜக்கு என்றார் தாத்தா...
என்ன ஐயா ஆதி தம்பிய நினச்சு வருத்த படுறீங்களா வருவாரு ஐயா வராம எங்க போவாரு அவரு வரும் போது நீங்க எழும்பும் தோலுமா இருந்தா என்ன பத்தி என்ன நினைப்பாரு சமைக்கிறத எல்லாம் நானே சாப்புட்டு உங்கள பட்னி போட்டுடேனு சொல்லி என்ன வேலைய விட்டு அனுப்பிட்டா நான் என்ன பண்றது என்று கேக்க.....
சின்ன புன்னகை உடன் எழுந்து அமர்ந்தவர் வரவர நல்லா பேசுற டா என்று சொல்ல வேற யாரு திட்டு வாங்குறது என்று கேக்க குடு டா என்று வாங்கி குடித்தார் ரகுவீர் தாத்தா...
போய் ரூம்ல படுங்க ஏதாவது தேவனா குறள் கொடுங்க ஓடி வந்துடுவே என்று ஜக்கு சொல்ல..
எழுந்தவர் உள்ளே போக அந்த வீட்டின் நடு ஹாலில் இருந்த ஆள் உயர ஆதீரன் ஃபோட்டோவை தன் கையால் வருடியபடி சிறிது நேரம் பார்த்து விட்டு சென்று படுத்தவருக்கு..
எத்தனை காலம் தான்டா இப்படித் தள்ளி இருப்பே? உன் அப்பா கட்டிக் கொடுத்த இந்தச் சாம்ராஜ்யத்தை நீ வந்து பார்க்க வேண்டாமா?" என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தார்.
தூக்கம் தான் வர வில்லை பேரனை பாக்க வேண்டும் என்ற ஏக்கத்தில்....
அந்த வீட்டுச் சுவர்கள் கூட ஆதிரனின் வருகைக்காகக் காத்துக் கிடப்பது போலிருந்தது..
மீண்டும் வருவாள்.........
இந்த கதை சும்மா டிரை பண்ணி பாத்தே நல்லா இருக்கா இல்லையானு கமெண்ட் பண்ணுங்க........
மறக்காம என் பேஜ பாலோ பண்ணுங்க பா உங்களின் கருந்து தான் வெற்றியின் முதல் படி சோ சைலண்டா படிச்சிட்டு போகாம ஒரு கமெண்ட போட்டுட்டு போங்க...
பூவி பூஜா.........