Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

தேடி வந்த பேரன்பே....?? - 7

பகுதி 7

எத்தனையோ விதமாக பேசியும் கடைசிவரை சர்வேஸ்வரன் ஒத்துக் கொள்ளாத காரணத்தால்,


அவன் குடும்பத்தில் இருப்பவர்கள் அவன் மீது கோபமாகத்தான் சுற்றி திரிந்தனர்… 

அந்த கோபம் முழுவதும் முல்லையிடம் திரும்பி இருந்தது. 

அதிலும் குறிப்பாக சர்வேஸ்வரனின் அம்மாவிற்கு…

அவள்தான் ஏதோ கூறி இந்த பிரச்சனையை இந்த அளவிற்கு திசை திருப்பி உள்ளாள் என்று 

அவர் உள் மனம் அடித்துக் கூற, 

அதை நேரடியாக கேட்க முடியாமல், 

மற்ற விதங்களில் அவளிடம் தன்னுடைய கோபத்தை முழுவதுமாக காண்பித்தார்.. 

பலமுறை அவளின் எளிமையான பிறந்த வீட்டைப் பற்றி சுட்டிக்காட்டி, 

தன் மூத்த மகனுக்கு எத்தனையோ செல்வ செழிப்பான குடும்பத்திலிருந்து பெண்கள் வந்தும் 

இவளை போல் ஒருத்தியை மணமுடித்து வைத்தது தவறு என்று மறைமுகமாக கூறினார். 

எந்த இடத்திலும் அவர் முல்லை என்ற பெயரை உபயோகிக்காததால் நேரடியாக அவளால் கேள்வி கேட்க முடியாமல் போனது…

முல்லைக்கு சர்வேஸ்வரனிடம் அந்த விஷயத்தில் என்ன ஆனது..? 

பண்ணை வீடு, அந்த சொத்து விற்பனை ஆகிய விஷயங்களில் அவனுடைய முடிவு என்ன..? 

அவன் அம்மாவிடமும், தம்பிகளிடமும் என்ன கூறினான் என்று அறிந்து கொள்ள வேண்டிய ஆவல் இருந்தாலும், 

அவனிடம் நெருங்கி எவ்வாறு கேட்பது என்று தயங்கி இருந்தாள்…

ஏற்கனவே ஒரு முறை இதைப் பற்றி அவனிடம் பேசியதற்கு 

என் மேல் உனக்கு ஏன் இந்த திடீர் அக்கறை என்று கேட்டிருக்க, 

அதற்கு விடை தெரியாத காரணத்தாலும் அவனிடம் கேள்வி கேட்க தயங்கி இருந்தாள். 

ஆனால் சர்வேஸ்வரன் அம்மாவின் கோபத்தை பார்க்கும் பொழுது 

அவர்கள் நினைத்த காரியம் நல்லபடியாக முடியவில்லை. 

சர்வேஸ்வரன் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று புரிந்து போனது… 

அதேபோல் தான் கூறிய ஒரே வார்த்தைக்காக சர்வேஸ்வரன் இந்த அளவிற்கு,

இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்திருப்பது மனதின் ஓரம் ஏதோ ஒரு உணர்வை தோற்றுவித்தது… 

இதுவரை சர்வேஸ்வரன் அவன் குடும்பத்தாரால் ஏமாற்றப்படுவது, நிச்சயமாக அவனுக்கு தெரிந்திருக்கும் என்று முல்லைக்கு ஏற்கனவே பல சமயங்களில் தோன்றியிருந்தது… 

அதன் காரணம் இவ்வளவு வெற்றிகரமாக ஒரு தொழிலை நடத்துபவனால்,

தன் வீட்டில் இருப்பவர்களை கணிக்க முடியாமல் போகுமா என்று கேள்வி எப்போதுமே அவள் மனதில் உண்டு….

எனினும் இப்போது தனக்காக அவன் ஒரு முயற்சி செய்திருப்பது மனதிற்கு மகிழ்வை ஏற்படுத்த, 

அதே நேரம் இதேபோல் அவன் வாழ்க்கை முழுவதும் யாரிடமும் ஏமாறாமல் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒரு நொடி மனதில் தோன்றியது… 

மறு நொடியே அந்த எண்ணத்திற்காக திகைத்தாள்… 

அப்படி என்றால் சர்வேஸ்வரன் ஏமாறாமல் இருப்பதும் அவன் வாழ்வில் எந்த துயரமும் அடையாமல் இருப்பதற்கும், 

தான் விரும்ப ஆரம்பித்து விட்டோமா…?

அப்படி என்றால் மனதார அவனை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டோமா என்ற கேள்வி அவள் மனதில் சுழன்று அடித்தது..‌ 

ஆனால் அதைப் பற்றி மேற்கொண்டு எந்த ஆராய்ச்சியும் செய்யாமல், 

நடப்பது நடக்கட்டும் என்பது 
போல் வளைய வந்தாள்‌..

சர்வேஸ்வரனுக்கும் தன் அம்மாவின் கோபம் முல்லையின் பக்கம் திரும்பி இருப்பது நன்கு புரிந்ததால் 

பல சமயங்களில் அவளை அரணாக காப்பதற்காக அவன் முன் நின்றான்…

ஆனால் அவளிடம் தானாக சென்று வலிய பேச அவனுக்கு மனம் ஒப்புதல் அளிக்கவில்லை…

ஏதோ ஒரு நிமிடத்தில் அவளுக்கு தங்கள் திருமணம் பிடிக்கவில்லை என்பதும், 

கட்டாயத்தின் பேரில் தன்னை மணந்து கொண்டிருப்பதும் அவன் மனதில் ஆழப் பதிந்ததால்,

தன்னால் மேற்கொண்டு அவளுக்கு எந்த மன பிரச்சனையும் ஏற்பட்டு விடக்கூடாது என்று அமைதி காத்தான். 

ஆனால் அவன் அதில் கவனிக்க தவறிய ஒரு விஷயம்

மற்ற விஷயங்களிலேயே தன் குடும்பத்தார் இவ்வளவு பொய்கள் சொல்லும் போது 

தன் திருமண விஷயத்தில் ஏதேனும் பொய் கூறியிருந்தால் என்பதை யோசிக்க தவறியிருந்தான்.. 

ஒருவேளை அது போல் அவன் யோசித்து இருந்தால்,

பின்னால் ஏற்பட போகும் நிறைய பிரச்சனைகளை அவனால் அப்போதே தவிர்த்து இருக்க முடியும்… 

ஆனால் என்ன செய்வது 

இங்கு பல சமயம் மனிதனின் திட்டங்களையும், மனிதனின் புத்திசாலித்தனங்களையும் கடவுளின் விளையாட்டால் தோற்கடித்து விடுகிறது… 

ஆனால் இந்த தம்பதிகள் தங்களை அறியாமலேயே நிறைய மாற்றங்களுக்கு ஆளாகினர்..

இந்த சம்பவத்திற்கு பிறகு சர்வேஸ்வரன் எத்தனை மணிக்கு வீடு திரும்பினாலும் முல்லையின் ஏதோ ஒரு அருகாமை அவனுக்கு இயற்கையாகவே கிடைத்தது.. 

அது இருவரும் திட்டமிட்டு செய்த செயலா..? மனதில் அவர்கள் ஒருவரை அறியாமல் மற்றொருவர் உள் வந்ததால் ஏற்பட்ட விளைவா என்று தெரியவில்லை. 

ஆனால் சர்வேஸ்வரன் வீடு திரும்பி இரவு உணவு உண்ணும் போது முல்லை அங்கே ஏதேனும் ஒரு சாக்கு வைத்து

அதன் சாப்பாடு அறையிலேயே சுற்றி வந்தாள்.

 உதாரணமாக தண்ணீர் குடிக்க வருவது போலவும், தலை வலிக்கிறது மாத்திரை போட வருவது போலவும் 
காபி வேண்டும் என்று பால் காய்ச்ச வருவது போலவும் 

ஏதோ ஒரு காரணம் சொல்லி அவனின் அருகிலேயே இருந்தாள்.. 

அன்று ஒரு நாள் அவன் யாருமின்றி இரவு உணவை அமைதியாக தனிமையில் வலியோடு உட்கொண்டது அவள் நினைவில் இருந்து அழியவில்லை…

சாதாரணமாக வேறொரு உயிர் ஏதேனும் கஷ்டப்படும் போது மனிதர்களால் பார்த்துக் கொண்டிருப்பது இயலாத காரியம்..

இங்கு தன் கணவன் அப்படி ஒரு வலியோடு இருக்கும் போது அதை எப்படி அவளால் சாதாரணமாக கடந்து போக முடியும்…

அதற்காக மறுநாளே இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு, நேசத்தை பரிமாறிக் கொண்டார்களா என்றால் நிச்சயமாக இல்லை… 

ஆனால் இருவருக்கிடையும் இடையேயும் நேசம் நூல் இலையாக ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தது.. 

இதுவரை ஏதோ பேயைக் கண்டு ஓடுவது போல் அவனை கண்டு அவள் விலகி ஓடுவதும், 

அவள் தன்னை கண்டு விலகுகிறாள் என்பதாலேயே இவன் இன்னும் நான்கு அடி தள்ளி நிற்பதும் குறைந்திருந்தது…

இது அவர்கள் இருவருக்கும் கருத்தில் பதியாமல் போனாலும், 

வீட்டிலிருந்த மற்றவர்களுக்கு வேலையாட்கள் உட்பட அனைவருக்கும் புரிய ஆரம்பித்தது…

கடைசிதம்பி சொத்து எழுதிக் கொடுத்த ஆள் மறுநாளே வீட்டில் வந்து சத்தம் போட 

சர்வேஸ்வரன் அம்மா ஏதேதோ சொல்லி சமாளித்து அனுப்பி வைத்திருந்தார்…

அதன்படி இன்னும் ஒரு வாரத்திற்குள் தனக்கு ரிஜிஸ்ட்ரேஷன் ஆக வேண்டும் என்ற கண்டிஷனோடு அவன் கிளம்பிச் சென்றிருக்க…

அடுத்து என்ன செய்து சர்வேஸ்வரனை இதற்கு ஒத்துக்கொள்ள வைப்பது என்று மூவரும் தங்களுக்குள் மண்டையை உடைத்துக் கொண்டனர்….