இந்நேரத்தில்… ஒரு மாற்று ஒம்னிவெர்ஸில்
மாற்று ஒரு ஒம்னிவெர்ஸில், படைப்பாளர் ஒரு பெண் தெய்வீக உயிர்.
அவள் உருவாக்கிய ஒம்னிவெர்ஸில் எல்லா கடவுள்களும் அமைதியில் வாழ்ந்தனர் —
ஒவ்வொருவரும் தங்களது கடமையினைப் பூர்த்தி செய்து, மல்ல்டிவெர்ஸ், ஹைபர்வெர்ஸ், மற்றும் மேலான பரிமாணங்களைக் காத்து வந்தனர்.
எல்லாம் அமைதியாக இருந்தது… ஒரு நாள்வரை.
அந்த நாளில், வெளி வெற்றிடத்திலிருந்து ஒரு பயங்கரமான உயிர் தோன்றியது —
அவன் chaos மற்றும் அழிவை பரப்பினான்.
எல்லா கடவுள்களும் வீரமாய் எதிர்த்தனர், ஆனாலும் ஒருவருக்கு ஒருவர் தோற்கடிக்கப்பட்டனர்.
இறுதியாக, அந்த ஒம்னிவெர்ஸின் படைப்பாளி தானே அவனை எதிர்கொண்டாள் —
ஆனால் அவளும் அவனை சமாளிக்க முடியவில்லை. அவள் தோல்வி அடைந்து வீழ்ந்தாள்.
அவன் அவளை அளிக்கப் போகும் முன் , அவள் தாழ்மையுடன் வேண்டினாள்:
> “தயவுசெய்து… . எனது ஒம்னிவெர்ஸை விட்டுவிடு. இதுக்கு பதிலாக நீ என்ன சொன்னாலும் செய்கிறேன்
அவன் அவளை சிரித்தபடி சொன்னான்:
> “சரி. உன் ஒம்னிவெர்ஸை நான் அழிக்க மாட்டேன்…
ஆனால் இதுபோல இன்னொரு ஒம்னிவெர்ஸை எனக்குத் தர முடியுமா?”
அதிர்ச்சியுடன் அவள் சொன்னாள்:
> “என்ன சொல்கிறாய்? இங்கே ஒரு ஒம்னிவெர்ஸே இருக்கிறது — அது என்னுடையது! அப்படி இருக்கும்போது
நான் எப்படி இன்னொன்றை குடுக்க முடியும்?”
அவன் அவள் கிட்டை எதுவும் பேசாமல் , அவன் அவள் தலை முடியை பிடித்து இழுத்து, வெளிப்புற வெற்றிடத்திற்குள் இழுத்துச் சென்றான்.
அங்கு, அவளது கண்முன் எண்ணற்ற ஒம்னிவெர்ஸ்கள் தீப்பொறிகள் போல மிதந்து கொண்டிருந்தன.
> “இந்த வெற்றிடம் அனைத்து உண்மைகளையும் கருத்துக்களையும் மீறி உள்ளது.
இந்த ஒம்னிவெர்ஸ்களைப் பார்கிறாயா?
அவற்றுள் ஒன்றிற்குச் சென்று, அதன் ஆட்சியாளரை இந்த பெட்டிக்குள் சிறை பிடி
அவன் ஒளிரும் சீலிங் பெட்டியை அவளிடம் கொடுத்தான்.
> “அங்கு இருக்கும் சர்வலோக ஆட்சி ஆளர் எச்சரிச்சலோ உதவி கேட்க முயன்றாலோ—
உன் முழு சர்வ லோகத்தையும் நாசமாக்கி விடுவேன்.”
பின்னர், அவன் ஒரு ஒம்னிவெர்ஸுக்கான வாயிலைத் திறந்தான்.
அவள் அச்சத்தோடு, , தன் மக்களை காப்பாற்றும் தீர்மானத்துடன் அந்த வாயிலில் நுழைந்தாள்.
இது நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் இந்த பக்கம்
அடுத்த நாள் காலை
எல்லா கடவுள்களும் இயல்புகளின் மண்டபம் எனப்படும் இடத்தில் ஒன்று கூடியிருந்தனர்.
அடோனை மற்றும் ஏதியன் மேடைக்கு வந்தனர்.
அடோனையின் கைகளில் இரண்டு புனித பொருட்கள் இருந்தன —
– வாயிரென் ஆயுதம்
– ஒரு மர்மமான சிறிய பெட்டி
சில கடவுள்கள் உற்சாகத்தோடு பார்த்தனர்.
மற்ற சிலர் மறைமுகக் கோபத்தோடு இருந்தனர்
ஏதியன் முன் வந்து பேச தொடங்கினான்:
> “நான் தான் உங்கள் சக்தி சமநிலையை குலைத்தவன் என்று எனக்குத் தெரியும்.
சிலர் என்னை வெறுக்கிறார்கள், சிலர் ஆதரிக்கிறார்கள்.
ஆனால் நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்.
நீங்கள் என்னை வெறுத்தாலும் சரி ஆதரித்தாலும் சரி, —
நான் என்னைக்கும் கீழே விழ மாட்டேன், மேலேதான் எழுவேன்.
நான் உங்களை எல்லாம் காக்க என் சக்தியையே அர்ப்பணிக்கிறேன் என்று வாக்குறுதி தருகிறேன்.”
மண்டபம் முழுவதும் அமைதி.
சிலர் கைத்தட்டினர்.
சிலர் இல்லை.
அடோனை பின்னர் முன்னே வந்து கேட்டார்:
> இதில் ஏதோ யாருக்கோ ஆட்சிபனம் இருக்கிறதா!
யாரும் பதிலளிக்கவில்லை.
ஒரு குரலும் இல்லை.
அடோனை வாயிரென் ஆயுதத்தை உயர்த்தி, ஏதியனிடம் வழங்கத் தயாரானார்.
ஏதியன் கையை நீட்டினான்…
ஆனால் திடீரென அவன் கை நடுவே நின்றது. அவன் உறைந்தான்.
> “ஏதோ தவறாக நடக்கிறது…” அவன் மெல்ல முனங்கினான்
“இங்கே இல்லை… வேறெங்கோ…”
அடோனை அவனைப் பார்த்து
> “ஏதியன்…?” என்று கூப்பிட்டார்
அவர் அவனது பெயரை மீண்டும் சொல்லப் போவதற்குள்—
> “ஏதி—”
அந்த நொடியே—
எல்லா கடவுள்களும் திரும்பிப் பார்த்தனர்.
அவர்களின் கண்கள் பெரிதாகின.
அனைவரும் ஒரே நேரத்தில் உணர்ந்தனர்:
> “ஒரு அறியப்படாத இருப்பு எங்கோ நுழைந்திருக்கிறது…”
அடோனை கட்டளையிட்டார்:
> “தாலூனா, அது யார் என்பதைப் பார்த்து வா!”
தாலூனா தாழ்மையுடன் வணங்கி சொன்னாள்:
> “ஆம், என் ஆண்டவரே.”
அவள் வெற்றிடத்தில் மறைந்தாள்.
மணிநேரங்கள் கடந்தன — தாலூனா திரும்பி வரவில்லை.
முடிவுரிமை விழா தொடங்கி கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி எல்லாம் மோசமாக நடந்து கொண்டிருக்கிறதை நினைத்து
அடோனை மற்றும் ஏதியன் கவலையடைந்தனர்.
அந்த நேரத்தில், இரண்டு கடவுள்கள் — கைராக்ஸ் மற்றும் க்செராதிஸ் — முன்னே வந்தனர்.
> “என் ஆண்டவரே, எங்களை அனுமதி செய்யுங்கள். நாங்கள் சென்று அவளைத் தேடிக் கண்டுபிடித்து கூட்டிட்டு வருகிறோம்”
அடோனை தலைஅசைத்து ஒப்புக்கொண்டார்.
> “போங்கள்.”
ஆனால் அவர்கள் புறப்படும் முன்—
தாலூனாவின் ஹோலோகிராம் வானில் ஒளிர்ந்தது.
அவளது குரல் நடுங்கியது:
> “ஒரு உயிர்… அது மூன்று பெரிய சக்திகளை வைத்திருக்கிறது!
என்னால் அவளை நிறுத்த முடியவில்லை… எச்சரிக்கையா இருங்கள்—!”
அவள் சொல்லி முடிக்குமுன், அந்த ஹோலோகிராம் துகள்களாக சிதறி மறைந்தது.
அடுத்த நொடியே—
ஒரு மிகப்பெரிய வெடிப்பு நிஜத்தை உலுக்கியது.
ஒம்னிவெர்ஸ் நுழைவாயில்கள் உடைந்தன.
அந்த சிதைவு வழியே— எலாரியா வெளியில் வந்தாள்.
அவளது இருப்பு கனமாக இருந்தது — தெய்வீகமும், உறுதியும், ஆபத்தும் கலந்தது.
அவளது குரல் முழு பரப்பையும் அதிர வைத்தது:
> “யாராவது அசைந்தால்… எல்லோரையும் கொன்று விடுவேன்.
எனக்கு இந்த ஒம்னிவெர்ஸின் ஆட்சியாளர் மட்டும் வேண்டும்.”
ஏதியன் அமைதியாக முன்னே வந்து கூறினான்
> “நான் தான் அந்த ஆட்சியாளர்.”
அடோனை அதிர்ச்சி அடைந்தார்.
> “ஏதியன்!!”
ஆனால் ஏதியன் பின்னாடி கை நீட்டி சொன்னான்:
> “ இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க. அப்பா. இத நான் பாத்துக்குறேன்
எலாரியா ஒளிரும் சீலிங் பெட்டியை உயர்த்தினாள்.
அது காற்றில் மிதந்தது — மெதுவாக — ஏதியனை நோக்கி நகர்ந்தது.
அவன் எதிர்ப்பு காட்டவில்லை.
பெட்டி செயல்பட்டது.
தங்க நிற தெய்வீக சங்கிலிகள் வெடித்து, ஏதியனைச் சுற்றி சுரண்டின.
அவன் சீல் செய்யப்பட்டான்.
பெட்டி மெதுவாக எலாரியாவின் கைகளில் விழுந்தது.
அவள் கண்களை மூடிய அடுத்த நிமிடமே .
மறைந்தாள்.
அவள் வெளிப்புற வெற்றிடத்திற்கு டெலிபோர்ட் செய்யப்பட்டாள்.
---
வெளிப்புற வெற்றிடத்தில்
அங்கே… வார்குர்தால் காத்திருந்தான்.
அவன் சிரித்தான் — குளிர்ந்த, இருண்ட சிரிப்பு.
> “ உன் வேலையை நன்றாக செய்தாய். உன் பணி முடிந்தது.”
அவன் கையை அசைத்தான்.
சீலிங் பெட்டி இவன் இடத்தின் இடது பக்க நிழல்களுக்குள் மிதந்து சென்றது.
எலாரியா முன்னே வந்து, எச்சரிக்கையுடன் கேட்டாள்:
> “இப்போ… எனது சர்வ லோகத்தையும் விடுவிப்பாயா?”
வார்குர்தாலின் சிரிப்பு இன்னும் விரிந்தது — கொடிய சிரிப்பாக.
> “ஆம்… நிச்சயமாக. உன் ஒம்னிவெர்ஸை விடுவிப்பேன்…
ஆனால் உன்னை அல்ல.”
அவள் குழம்பினாள்.
> “அதுக்கு என்ன அர்த்தம்?”
அவன் அருகே வந்தான், விஷம் கலந்த குரலில் சொன்னான்:
> “நான் சொன்னேன் — உன் சர்வஉலகத்தை விடுவிப்பேன்.
ஆனால் நீ இப்போ என் சொத்து. என் ஆசை. சொல்லப்போனால் இப்போது நீ எனது இன்ப ஆசையே நிறைவேற்றும் பொம்மை
அவனது சிரிப்பு வெற்றிடத்தைக் கிளிக்கும் அளவுக்கு , சத்தமாக சிரித்தான்.
அவன் முன் நோக்கி வந்தான் —
எலாரியா பயத்தில் பின் நோக்கி நடந்தாள், கண்களில் பயத்துடன்
அந்த நேரத்தில்—
மௌனத்தை சிதறடிக்கும் அளவுக்கு ஒரு மாபெரும் வெடிப்பு வெற்றிடத்தின் பின்புறம் வெடித்தது.